வாழைத்தண்டு பொரியல்.
தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு -1, மோர் -1டம்ளர்,உப்பு - தேவையான அளவு, வெங்காயம் -10, கடுகு.உ பருப்பு - 1தேக்கரண்டி, தேங்காய் சில் – 2,கறிவேப்பிலை – கொஞ்சம்,ப.மிளகாய் - 2 ,வேகவைத்த பருப்புடன் கூடிய நீர் -1டம்ளர்
செய்முறை - வாழைத்தண்டை, சிறு துண்டுகளாக நறுக்கி மோர் கலந்த தண்ணீரில் போட்டுக் கொள்ளவும். கறிவேப்பிலை குச்சி அல்லது வேறு ஏதேனும் ஒரு குச்சியினால் வாழைத்தண்டை கிண்டிக் கொண்டேயிருக்க நார் முழுவதும் குச்சியில் சுற்றிக் கொள்ளவும். மோர் கலந்த தண்ணீர் அல்லது பருப்புடன் கூடிய தண்ணீரில் வாழைத்தண்டை வேக விடவும். நன்கு வெந்து தண்ணீர் வற்றியவுடன்உப்புப்போடவும் .வேறுஒருபாத்திரத்தில்எண்ணெய்விட்டுகடுகு.உளுந்தம்பருப்பு,வெங்காயம், மிளகாய்,கறிவேப்பிலை போட்டு வதக்கவும். தாளிதம் செய்ததை வாழைத் தண்டில் கொட்டி, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி விடவும். வாழைத்தண்டு பொரியல் தயார்.
0
Leave a Reply