இராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், வனத்துறை, ராம்கோ கம்யூனிட்டி சர்வீசஸ், வார்அமைப்பு, இந்திய வன அறக்கட்டளை சார்பில் மேற்கு தொடர்ச்சி மலையும், மேகமலையும் என்ற தலைப்பில் சுற்றுச்சூழல்பாதுகாப்பு கருத்தரங்கு நடந்தது.ராம்கோ கம்யூனிட்டி சர்வீசஸ் சுற்றுச்சூழல், ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணிய ராஜா வரவேற்றார். தலைமை செயல்பாட்டு அதிகாரி கிரிதரன் வாழ்த்தினார். கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து பேசினார். மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் முன்னிலை வகித்து பேசினார். கிரீன் ப்யூச்சர் பவுன்டேசன் இயக்குனரான ஐஸ்டஸ் ஜோஸ்வா மேற்கு தொடர்ச்சி மலை குஜராத்தில் துவங்கி, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு வரை செல்கிறது. இந்தியாவின் பரப்பில் 5 சதவீதம் உள்ளது. இதில் 51-வது புலிகள் சரணாலயமாக ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 149 வண்ணத்து பூச்சி வகைகளும், 252 பறவை வகைகளும், 63 பாலூட்டி வகைகளும், 100 ஊர்வன வகைகளும், 44 நீர் ,நில வாழ்வனவும், உள்ளன.விலங்குகள் நம்மை விட நுண்ணுணர்வு கொண்டவை. அவை ஒரு போதும் இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தியது இல்லை. இயற்கையை பாதுகாக்க தான் செய்யும், அதே போல் மனிதர்களான நாமும் மலையை பாதுகாக்க வேண்டும் என்றார்.சிவகங்கை பசுமை குழுஉறுப்பினர் மணிவண்ணன் மேற்கு தொடர்ச்சி மலை நமக்கு பல வற் றாத ஜீவ நதிகளை தரு • கிறது. இன்று மதுரையின் வைகையும், விருதுநகர் மாவட்டத்தின் வைப்பா றும் வறண்டு காணப்படுகின்றன. நீர் நிலைகளை காக்க மேற்கு தொடர்ச்சி மலை அவசியம் .இதை பாதுகாத்தால் வைகை, வைப்பாறு நதிகள் புத்துயிர் பெற்று 5 மாவட்டங்களுக்கான குடி நீர் தேவை பூர்த்தி ஆகும், என்றார்.
மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய நீர்வரத்து பகுதிகளை ஒட்டி பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நெல் விவசாயம் நடந்து வருகிறது. நீர் இருப்பை பொறுத்து ஒவ்வொரு பகுதியாக நெல் நடவு பணிகளை இப்பகுதி விவசாயிகள் செய்து வருகின்றனர்.தேவதானம், சாஸ்தா கோவில் ஒட்டிய பகுதிகளில் விவசாய பணிகளை முதலில் தொடங்கியதும், சேத்தூர், அயன் கொல்லங்கொண்டான், முகவூர், இராஜபாளையம் பகுதி விவசாயிகள் கிணற்று நீர் இருப்பு, கண்மாய் நீர் வரத்தை பொறுத்தும், பணிகளை தாமதித்து தொடங்கியுள்ளனர். இந்நிலையில் விவசாய பணிகளுக்கு முன்பு போல் ஆட்கள் கிடைக்காததுடன் கூலியும், அதிகரித்து வருகிறது. இதற்கு மாற்றாக இயந்திரம் நடவுக்கு பரவலாக பலரும் மாறி வருகின்றனர்
ராஜபாளையத்தில் மதுரை மீனாட்சி புக் ஷாப், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிட் இணைந்து காந்தி கலை மன்றத்தில் நடத்தும் புத்தக கண்காட்சி (நவ. 6) முதல் துவங்கி நவ. 20 வரை தினசரி காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம் ஞாயிறும் விற்பனை உண்டு. அறிவியல் புனைவு கதைகள், இலக்கியம், நாவல்கள், சிறுகதைகள், வர லாற்று கதைகள், போட்டி தேர்வு உள்ளிட்ட வகையான பல புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது. இங்கு தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிட் புத்தகங்கள் 10 சதவீத தள் ளுபடியில் கிடைக்கும்.
தொடர்மழையால் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.வெள்ள நீர் ஆற்றில் செல்வதை கண்டுகளித்து குளித்து மகிழ சிவகாசி, விருதுநகர், சேத்தூர் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன், இராஜபாளையம் அய்யனார் கோயில், அணைத்தலை ஆறு, ராக்காச்சி அம்மன் கோயில் பகுதிகளில் இரண்டு நாளாக குவிந்து வருகின்றனர்.ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் மற்றும் கன மழையால் வனத்துறையினர் ஆற்றில் குளிக்க தடை விதித்துள்ளனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் வனத்துறையினரின் தடையை மீறி குளிக்க முற்பட்டு வருகின்றனர். தடுப்பவர்களிடம் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இராஜபாளையத்தில் வனத்துறையினரின் உத்தரவை மீறி வனப்பகுதி ஆறுகளில் விபரீதம் தெரியாமல் குளிப்பதற்காக குவியும் சுற்றுலா பயணிகளை கண்காணித்து கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு வனத்துறையினர் ஆளாகியுள்ளனர்.
ராஜபாளையம் அக்டோபர் 28 2024 எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு கல்லூரி தாளாளர் எ.கே.டி .கிருஷ்ணமராஜு அவர்கள் தலைமை தாங்கினார் .சிறப்பு விருந்தினராக மாவட்ட மாநாட்டு தலைவர் ரோட்டரியன் சண்முக நடராஜ் அவர்கள் கலந்து கொண்டு ரோட்டரி அறக்கட்டளையின் உண்மையான நோக்கத்தை தெளிவாக விளக்கி ,இது எவ்வாறு அவரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி சமூக நலனுக்காக பணியாற்றும் வழியை அமைத்தது என்பதை மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார் .ராஜபாளையம் ரோட்டரி கிளப் தலைவர் ஆனந்தி அவர்கள் எங்கள் கல்லூரி மாணவி ஸ்ரீராஜலட்சுமியை ரோட்ராக்ட் கிளப்பின் தலைவராக நியமித்து கௌரவபதக்கத்தை அணிவித்தார் .இதனை தொடர்ந்து தலைவரின் ஏற்கும் உறையும்,குழு உறுப்பினர்களின் அறிமுகமும் நடைபெற்றது .ரோட்டரி கிளப் செயலர் கார்த்திகேயன் ரோட்டரி பிரார்த்தனையை நிறைவேற்றினார் .கல்லூரி முதல்வர் முனைவர்.ஜமுனா அவர்கள் வரவேற்புரையாற்றினார் .ரோட்ராக்ட் கிளப்பின் செயலர் காயத்ரி லட்சுமி நன்றியுரை கூறினார் .
இராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூ.40 கோடி மதிப்பில் 227 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிட பணிகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது பொது மருத்துவ பிரிவு கண்சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் தரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் மதிப்பீடு மற்றும் மாதிரி வரைபடங்கள் குறித்து கேட்டிறிந்தார். இராஜபாளையத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனையின் கூடுதல் கட்டிடம் கட்டி பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. டிசம்பர் இறுதிக்குள் கட்டிடத்தின் பணிகள் முடிக்கப்பட்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களானல் திறந்து வைக்கப்படும்.
.187 மாணவர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர். ஒய்வு கல்வி அலுவலர் பொன்னம்பலம்,தாசில்தார் ராமசுப்பிரமணியம், ஆர்.ஐ. சுந்தர்ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். தாளாளர் திருப்பதி செல்வன் வரவேற்றார் முதல்வர் அருணா தேவி முன்னிலை வகித்தார். இரண்டு நாள் நடந்த கண்காட்சியை எம்.எல்.ஏ தங்கபாண்டியன் துவக்கி வைத்தார் ரோட்டரி சங்க தலைவர் ஆனந்தி, முன்னாள் தலைமை ஆசிரியர் ராமசாமி ,வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச சைக்கிள் , இராஜபாளையம் வட்ட சட்டப்பணிகள் குழு, வேர்ல்ட் விஷன் இந்தியா சார்பில் வழங்கப்பட்டது. சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர், சார்பு நீதிபதி சண்முக வேல் ராஜ் ஊட்டச்சத்து பொருட்கள், இலவச சைக்கிள் வழங்கினார். வேர்ல்ட் விஷன் திட்ட இயக்குனர் செல்வின் அலுவலர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் செய்திருந்தனர்.
வெயிலின் தாக்கத்தால் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் சுட்டெரித்தது. இதையடுத்து மாலையில் திடீரென குளிர்ந்தகாற்று வீசத்தொடங்கியது.பின்னர் சிறிது நேரத்தில் இடியுடன் பலத்தமழை பெய்தது. பஞ்சு மார்க்கெட் நேரு சிலையில் இருந்து பழைய பஸ் நிலையம், மலையடிப்பட்டி கணபதியாபுரம். அரசு மகப்பேறு மருத்துவமனை, காந்தி கலை மன்றம், சங்கரன்கோவில் முக்கு, புதிய பஸ் நிலையம், சொக்கர்கோவில், ரெயில்வே மேம்பாலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவ , பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இராஜபாளையத்தில் மதுரை காமராஜ் பல்கலை மண்டலங்களுக்கு இடையே கல்லூரி மாணவியர்க்கான வாலிபால் போட்டியில் மதுரை லேடி டோக் கல்லூரி முதலிடம் பெற்றுள்ளது.இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் காமராஜ் பல்கலை மண்டலங்களுக்கிடையே வாலிபால் போட்டி நடந்தது. 16 கல்லூரிகள் பங்கேற்றதில் இறுதி சுற்றுக்கு மதுரையில் லேடி டோக் கல்லூரியும், யாதவா கல்லூரியும் மோதின. இதில் மதுலை லேடி டோக் முதலிடமும்,யாதவா கல்லூரி இரண்டாவதும், மங்கையர்க்கரசி கல்லூரி மூன்றாமிடமும், வி.சி. வன்னிய பெருமாள் கல்லூரி நான்காம் இடம் பெற்றன.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி தாளாளர் கிருஷ்ணமராஜு பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கினர். முதல்வர் ஐமுனா வரவேற்றார்.