தேவையான பொருட்கள்1கப் ராஜ்மா பீன்ஸ்,3 பெரிய வெங்காயம்,4 சிறிய தக்காளி,2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1ஸ்பூன் மல்லி தூள்,அரை அல்லது 1 ஸ்பூன் மிளகாய் தூள், காரத்திற்கு,அரை ஸ்பூன் கரம் மசாலா,கால் ஸ்பூன் மஞ்சள் தூள்,1ஸ்பூன் கஸ்தூரி மெதி,சிறிதளவு மல்லிதழை,தேவையானஅளவு உப்பு,தேவையான அளவு வெங்காயம் ,பொரிக்க எண்ணெய் - 3டேபிள் ஸ்பூன் எண்ணெய் .செய்முறை :தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.ராஜ்மா பீன்ஸ் ஐ 8மணி நேரம் ஊற வைத்து,2தம்ளர் தண்ணீர் ஊற்றி 8விசில் விட்டு வேகவைக்கவும்.இந்த கிரேவி நன்கு 'திக்'-க்காக இருக்கும்.இதில் சேர்க்கும் அளவுகளுக்கு 1-2 கப் அளவில் ராஜ்மாபீன்ஸ் சேர்க்கலாம். நான் 1கப் எடுத்துள்ளேன்.வெங்காயத்தை மெல்லியதாக அரிந்து,தேவையான அளவு எண்ணெயில் பொரித்துக்கொள்ளவும். 3 பகுதிகளாக பொரித்துக் கொள்ளலாம். தக்காளியை விழுதாக அரைக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி,பின் அரைத்ததக்காளி விழுதுசேர்த்துவதக்கவும்.வதங்கியதும்,மல்லி,மிளகாய்,மஞ்சள்,கரம் மசாலா தூள்மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்..வதங்கியதும்,வேக வைத்த தண்ணீர் மற்றும் ராஜ்மா சேர்த்து,தேவையான அளவு தண்ணீரும்சேர்த்து 15-20நிமிடங்கள் நன்கு மூடி போட்டு கொதிக்க வைக்கவும்.பச்சை வாசம் போக கொதித்து,தேவையான கிரேவி பதம் வந்ததும் கஸ்தூரி மெத்தி மற்றும்மல்லித்தழை தூவி மேலும் 2நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை அனைத்து பரிமாறவும்.இது சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். சுவையான,ராஜ்மா கிரேவி ரெடிபுரோட்டீன் மிகுந்தது. வெயிட் லாஸ் விரும்புபவர்கள்,இந்த கிரவி சாப்பிட்டால், புரோட்டீன்மற்றும் இதர சத்துக்கள் கிடைப்பதுடன் குறைந்த அளவில் எடுத்துக் கொண்டாலும் வயிறுநிரம்பும்.
தேவையான பொருட்கள்பன்னீர் - 150 கிராம் (துண்டுகளாக நறுக்கியது)காளான் - 200 கிராம் (சுத்தம் செய்து நறுக்கியது)பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது அல்லது விழுது)தக்காளி - 2 (அரைத்தது)இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்முந்திரி பருப்பு - 8 முதல் 10 (சூடான நீரில் ஊறவைத்து அரைத்தது)எண்ணெய் அல்லது நெய் - 3 மேஜைக்கரண்டிபிரியாணி இலை, கிராம்பு, பட்டை - சிறிதளவுமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டிமிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)மல்லித்தூள் (தனியா தூள்) - 1.5 தேக்கரண்டிகரம் மசாலா - 1/2 தேக்கரண்டிகசூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக் கீரை) - 1 தேக்கரண்டிஉப்பு - தேவையான அளவுமல்லித்தழை – சிறிதளவுசெய்முறை :கடாயில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி, நறுக்கிய காளான்களை சேர்த்து வதக்கிதனியாக எடுத்துக் கொள்ளவும்.விருப்பப்பட்டால் பன்னீர் துண்டுகளையும் லேசாக வதக்கி வெதுவெதுப்பான நீரில் போட்டுஎடுக்கலாம் (இது பன்னீரை மென்மையாக மாற்றும்).அதே கடாயில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை தாளிக்கவும்.பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.அதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நன்குவதக்கவும்தக்காளி கலவை வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலாசேர்த்து நன்றாகக் கிளறவும்.அதனுடன் அரைத்து வைத்துள்ள முந்திரி விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 2நிமிடங்கள் வதக்கவும்.மசாலாக்களில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும்போது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துகிரேவி பதத்திற்குக் கொதிக்க விடவும்.கிரேவி சற்று கொதித்ததும் வதக்கி வைத்துள்ள காளான் மற்றும் பன்னீர் துண்டுகளைச்சேர்க்கவும்.மிதமான தீயில் 5 நிமிடங்கள் மூடி வைத்து வேகவிடவும்.இறுதியாக கசூரி மேத்தியை கைகளில் கசக்கி தூவி, மல்லித்தழை சேர்த்து அடுப்பைஅணைக்கவும். சுவையான பன்னீர் காளான் கிரேவி தயார்.
தேவையான பொருட்கள்:குடமிளகாய் - 2 (நறுக்கியது)பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)தக்காளி - 2 (நறுக்கியது அல்லது அரைத்தது)இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டிமிளகாய் தூள் - 1 தேக்கரண்டிமல்லி தூள் (தனியா தூள்) - 1.5 தேக்கரண்டிமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டிகரம் மசாலா - 1/2 தேக்கரண்டிசீரகம் - 1 தேக்கரண்டிஎண்ணெய் - தேவையான அளவுஉப்பு - தேவையான அளவுமல்லி தழை – சிறிதளவுஅரைக்க வேண்டியவை (விருப்பப்பட்டால்)தேங்காய் - 2 மேசைக் கரண்டிமுந்திரி - 4 முதல் 5 (கிரேவி கெட்டியாக இருக்க)செய்முறைகடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் தாளிக்கவும்.பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.நறுக்கிய தக்காளி அல்லது தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.நறுக்கி வைத்துள்ள குடமிளகாய் துண்டுகளை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.தேங்காய் மற்றும் முந்திரி விழுதைச் சேர்த்து (தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி)மிதமான தீயில் கொதிக்க விடவும்.கடைசியாக கரம் மசாலா மற்றும் மல்லித் தழை தூவி இறக்கினால் சுவையான குடமிளகாய் கிரேவி தயார்.
தேவையான பொருட்கள்:உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து நறுக்கியது)வெந்தயக்கீரை (Methi) - 1 கப் (பொடியாக நறுக்கியது)பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)தக்காளி - 2 (அரைத்தது அல்லது பொடியாக நறுக்கியது)இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டிசீரகம் - 1 டீஸ்பூன்மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்மல்லித்தூள் (தனியா தூள்) - 1.5 டீஸ்பூன்கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவுஉப்பு - தேவையான அளவுதண்ணீர் - தேவையான அளவுசெய்முறைகடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெந்தயக்கீரையைச்சேர்த்து அதன் வாசனை போகும் வரை லேசாக வதக்கி தனியாக வைத்துக்கொள்ளவும்.அதே கடாயில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி, சீரகம் தாளிக்கவும். பின்பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாகவதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் தக்காளி விழுது சேர்த்து, எண்ணெய் பிரியும் வரைவதக்க வேண்டும்.அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து சிலவினாடிகள் கிளறவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். மசாலாவின் பச்சைவாசனை போனதும், வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் வதக்கி வைத்துள்ளவெந்தயக்கீரையைச் சேர்க்கவும்.கரம் மசாலா தூவி, மிதமான தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.சுவையான ஆலு மேத்தி கிரேவி தயார்.
தேவையான பொருட்கள்காலிஃபிளவர் - 1 கப் (சுத்தப்படுத்தி சூடான நீரில் உப்பு, மஞ்சள் தூள் போட்டு எடுத்தது)வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)தக்காளி - 2 (நறுக்கியது அல்லது அரைத்தது)இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்மல்லித் தூள் - 1.5 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்கரம் மசாலா - அரை ஸ்பூன்சீரகம் - 1 ஸ்பூன்எண்ணெய், உப்பு - தேவையான அளவுகொத்தமல்லி தழை - சிறிதளவுசெய்முறைகடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளிக்கவும்.நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிய பின் மசாலா தூள் வகைகளைச் சேர்க்கவும்.காலிஃபிளவர் துண்டுகளைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர்ஊற்றவும்.மூடி போட்டு மிதமான தீயில் காலிஃபிளவர் வெந்து கிரேவி கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.கரம் மசாலா மற்றும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்ற எளிய காலிபிளவர் கிரேவி தயார்.
தேவையான பொருட்கள்:காய்கறிகள் (கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி) - 1 கப் (பொடியாகநறுக்கியது)பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)தக்காளி - 2 (நறுக்கியது அல்லது அரைத்தது)இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டிமிளகாய் தூள் - 1 தேக்கரண்டிமல்லித் தூள் (தனியா தூள்) - 1.5 தேக்கரண்டிமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டிகரம் மசாலா - 1/2 தேக்கரண்டிஎண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவுஉப்பு - தேவையான அளவுகொத்தமல்லி தழை - சிறிதளவுஅரைக்க வேண்டியவை (பேஸ்ட் செய்ய)தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டிமுந்திரி பருப்பு - 5 அல்லது சோம்பு - 1 தேக்கரண்டிசெய்முறைகடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து மசிய வதக்கவும்.அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்துஎண்ணெய் பிரியும் வரை கிளறவும்.நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் மற்றும் தேவையான அளவு தண்ணீர்சேர்த்துகாய்களை நன்றாக வேக வைக்கவும்.காய்கறிகள் வெந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய்-முந்திரி விழுதை ஊற்றிகொதிக்க விடவும்.இறுதியாக கரம் மசாலா மற்றும் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால்,சுவையான வெஜிடபிள் கிரேவி தயார்.பூரி மற்றும் சப்பாத்திக்கு ஏற்றது.
தேவையான பொருட்கள்:கோதுமை மாவு – 2 கப்,பாலக் கீரை (Pasalai keerai) – 1 கப் (சுத்தம் செய்து வேக வைத்தது),பச்சை மிளகாய் – 2,சீரகத்தூள் – அரை டீஸ்பூன்,ஓமம் – கால் டீஸ்பூன்,உப்பு – தேவையான அளவு,எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.செய்முறை:வேகவைத்த பாலக் கீரை மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த கீரை விழுது, சீரகத்தூள், ஓமம், உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும்.சப்பாத்தி மாவை விட கொஞ்சம் கெட்டியாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டவும்.சிறு வட்டங்களாகத் தேய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். ஆரோக்கியமான மற்றும் சுவையான பாலக் பூரி தயார்.
தேவையான பொருட்கள்:கோதுமை மாவு – 1.5 கப்,ரவை – 2 ஸ்பூன் (மொறுமொறுப்புக்கு),மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,கரம் மசாலா – கால் டீஸ்பூன்,பெருங்காயத்தூள் – சிட்டிகை,எண்ணெய் மற்றும் உப்பு – தேவையான அளவு.செய்முறை:ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை மற்றும் அனைத்து மசாலாப் பொடிகளையும் உப்பையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.சிறிதளவு எண்ணெய் அல்லது சூடான நெய் சேர்த்து மாவை கெட்டியாகப் பிசையவும்.சிறிய பூரிகளாகத் தேய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இது ஊருக்குச் செல்லும் பொழுதும் ஸ்நாக்ஸாகவும் சாப்பிட அருமையாக இருக்கும். காரசாரமான சுவை தரும் மொறுமொறுப்பான பூரி.
தேவையான பொருட்கள்:மைதா மாவு - 1 கப் (250 கிராம்),ரவை - 2 ஸ்பூன்,சோள மாவு - 1 சிறிய ஸ்பூன் (விரும்பினால்),நெய் அல்லது டால்டா - 2 ஸ்பூன்,சர்க்கரை - 1 கப் (பாகு காய்ச்ச),ஏலக்காய் தூள் - சிறிது,எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,உப்பு - ஒரு சிட்டிகை.செய்முறை:ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ரவை, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் உருக்கிய நெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசைந்து, 20 நிமிடங்கள் மூடி வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து காய்ச்சவும். கம்பி பதம் வந்தவுடன் ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.பிசைந்த மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டி, மெல்லிய பூரிகளாகத் தேய்க்கவும். பூரியின் மேல் பகுதியில் லேசாகக் குத்திக் கொள்ளவும் (உப்பாமல் இருக்க).கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தேய்த்த பூரிகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.பொரித்தெடுத்த பூரிகளைச் சூடான சர்க்கரை பாகில் 1 முதல் 2 நிமிடங்கள் வரை போட்டு எடுக்கவும்.சுவையான ஸ்வீட் பூரி தயார்.
தேவையான பொருட்கள்:பூரி செய்ய:கோதுமை மாவு அல்லது மைதா - 1 கப்,உப்பு - ஒரு சிட்டிகை, நெய் அல்லது எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.பால் தயாரிப்புக்கு: பால் - 1 லிட்டர்,சர்க்கரை - ½ கப், பாதாம் மற்றும் முந்திரி - தலா 10 (பாலில் ஊறவைத்தது,)குங்குமப்பூ பால் - 3 தேக்கரண்டி,ஏலக்காய் தூள் - ¼ தேக்கரண்டி.செய்முறை:ஒரு பாத்திரத்தில் 1 கப் கோதுமை மாவு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு சிறிதுகெட்டியாகப் பிசைந்து, 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.பின் சிறிய உருண்டைகளாக உருட்டி, மெலிதாக பூரி போல தேய்த்து எடுக்கவும்.கடாயில் எண்ணெய் சூடானதும் தேய்த்து வைத்துள்ள பூரிகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.மற்றொரு பாத்திரத்தில் 1 லிட்டர் பாலை ஊற்றி மிதமான தீயில் 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.ஊறவைத்த பாதாம் மற்றும் முந்திரியைச் சிறிதளவு பால் சேர்த்து விழுது போல அரைத்துக் கொள்ளவும்.கொதித்த பாலில் அரைத்த முந்திரி-பாதாம் விழுது மற்றும் ½ கப் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.அதனுடன் குங்குமப்பூ பால் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து மேலும் 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.தயாரித்து வைத்துள்ள சூடான சுவையான பாலைப் பொரித்த பூரிகளின் மீது ஊற்றி, 10 நிமிடங்கள் ஊறவிட்டுப் பரிமாறவும்.