சேனைக் கிழங்கு பொரியல்
தேவையான பொருட்கள் - பொடியாக நறுக்கிய சேனைத் துண்டுகள் – 2 கப்,தேங்காய் துருவல் – 1 கப்,மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,சீரகம் – 1 டீஸ்பூன்,பூண்டு – 3 பற்கள்,உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய், கடுகு- தேவையான அளவு
செய்முறை - முதலில் சேனைக் கிழங்கு, கறிவேப்பிலை உள்ளிட்ட பொருட்களை நறுக்கி வைத்து கொள்ளவும். அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணீர் சேர்த்து சேனைத் துண்டுகள் சேர்த்துசிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும் வேகவைத்த சேனைக்கிழங்கு, உப்பு, கறிவேப்பிலை சேர்க்கவும். தேங்காய் துருவல், மஞ்சள் தூள், மிளகாய் தூள், பூண்டு, சீரகம் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து கலவையை அதனுடன் சேர்க்கவும். இப்போது எல்லாவற்றையும் கிளறி, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மீண்டும் கிளறி இறக்கினால் சுவையான சேனைக் கிழங்கு பொரியல் ரெடி.
0
Leave a Reply