வாழைப்பூ துவையல்
தேவையானவை:வாழைப்பூ - ஒரு கப்,உளுத்தம்பருப்பு - அரை கப்,காய்ந்த மிளகாய் -4,புளி - 50 கிராம்,தேங்காய் துருவல் -1 ஸ்பூன்,மிளகு - ஒரு ஸ்பூன்,சீரகம் -அரைஸ்பூன்,பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்,உப்பு-- தேவையான அளவு,எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை:கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், சீரகம் தேங்காய் துருவல், வாழைப்பூ ஆகியவற்றைப்போட்டு சிறிது பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும்.
பின்னர் ஆற வைத்து புளி, தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்க வேண்டும். வாழைப்பூ துவையல் சாப்பிட சுவையாக இருக்கும்
0
Leave a Reply