25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சமையல்

Dec 13, 2024

உருளைக்கிழங்கு பஜ்ஜி

தேவையான பொருட்கள் - உருளைக்கிழங்கு (சற்று பெரியதாக )-2.கடலை மாவு -ஒரு கப், மைதாமாவு - ஒரு டேபிள்ஸ்பூன். இட்லி மாவு - 2 டேபிள்ஸ்பூன். இஞ்சி -பூண்டு விழுது -ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் -ஒரு டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு. ஆப்ப சோடா - அரை சிட்டிகை.செய்முறை: கிழங்கை தோல் சீவி சற்று மெல்லிய வில்லைகளாக நறுக்குங்கள். எண்ணெய் நீங்கலாக மாவுடன் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். உருளை வில்லைகளை ஒவ்வொன்றாக மாவில் போட்டு எடுத்து காயும் எண்ணெயில் போட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து. சூடாகப் பரிமாறுங்கள்.

Dec 13, 2024

ஆப்பிள் பஜ்ஜி

தேவையான பொருட்கள் ஆப்பிள் -1, கடலைமாவு ஒரு கப், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், மிளகாய்தூள் (விருப்பமானால் ) -ஒரு டீஸ்பூன், ஆப்ப சோடா சிட்டிகை, உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் தேவையான அளவு.செய்முறை: ஆப்பிளை கழுவி நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கி விதையை நீக்குங்கள். மாவுடன், மஞ்சள்தூள், உப்பு. ஆப்ப சோடா தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் சுரையுங்கள். எண்ணெயை காய வைத்து, ஆப்பிள் துண்டுகளை மாவில் தனைத்தெடுத்து எண்ணெயில் போட்டு நன்கு வேகவிட்டு எடுங்கள்.

Dec 13, 2024

கத்திரிக்காய் பஜ்ஜி

தேவையான பொருட்கள் - பெரிய கத்திரிக்காய் - 1, கடலைமாவு - ஒரு கப், மைதாமாவு ஒரு டீஸ்பூன், அரிசிமாவு 2 டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு. ஆப்ப சோடா - அரை சிட்டிகை.அரைக்க : இஞ்சி ஒரு துண்டு, பூண்டு 3 பல், சோம்பு ஒரு டீஸ்பூன், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்.செய்முறை: கத்திரிக்காயைக் கழுவித் துடைத்து மெல்லிய வட்டங்களாக நறுக்குங்கள். அரைக்கும் பொருட்களை ஒன்றாக அரைத்து, பாதியை வைத்து விட்டு மீதமுள்ளதில் சிறிது உப்பு சேர்த்து கலக்குங்கள். இந்த விழுதை ஒவ்வொரு கத்தரிக்காய் துண்டின் மீதும் சிறிது தடவுங்கள். கடலைமாவுடன் உப்பு, அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரைத்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, ஒவ்வொரு துண்டையும் மாவில் அமிழ்த்தி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுங்கள்.  

Dec 13, 2024

பேபிகார்ன் பஜ்ஜி

தேவையான பொருட்கள் பேபிகார்ன் - 12.கடலை மாவு ஒரு கப், அரிசிமாவு - ஒரு டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் -ஒரு டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கு, ஆப்ப சோடா -சிட்டிகைஅரைக்க : பச்சை மிளகாய் -3. இஞ்சி -ஒரு துண்டு,பூண்டு - 3 பல்.செய்முறை: பேபிகார்னை மேல் பட்டை நீக்கி, கொதிக்கும் நீரில் 8 நிமிடம் போட்டு எடுங்கள். மாவு, அரைத்த விழுது, உப்பு, தண்ணீர், ஆப்ப சோடா சேர்த்து ,இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொரு கார்னையும் மாவில் நனைத்து எடுத்து, எண்ணெயில் போட்டு பொரித்து எடுங்கள்.

Dec 13, 2024

பனீர் பஜ்ஜி

தேவையான பொருட்கள் - பனீர் 200 கிராம். கடலைமாவு -ஒரு கப்.மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, ஆப்ப சோடா ஒரு சிட்டிகை. எண்ணெய் - தேவையான அளவு.பொடிக்க : சீரகம் -அரை டீஸ்பூன், மிளகு - கால் டீஸ்பூன், கருப்பு உப்பு - கால் டீஸ்பூன்.செய்முறை: பனீரை சிறு சதுரத் துண்டுகளாக்குங்கள். மாவுடன்எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி இட்லிமாவு பதத்தில் கரையுங்கள். எண்ணெயை காய வைத்து, பனீர் துண்டுகள் ஒவ்வொன்றையும் மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு நன்கு பொரித்து எடுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு பொடித்து சூடான பஜ்ஜியின் மேல் தூவி பரிமாறுங்கள். ருசி அபாரமாக இருக்கும்.. 

Dec 13, 2024

புடலங்காய் பஜ்ஜி

தேவையான பொருட்கள் - புடலங்காய் (சிறியதாக)2.கடலைமாவு ஒன்றரை கப், இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகாய்தூள் - ஒன்றரை டீஸ்பூன், ஆப்ப சோடா -ஒரு சிட்டிகை, உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.பச்சை மிளகாய் 2. இஞ்சி ஒரு துண்டு. மஞ்சள்தூள்ஸ்டஃப் செய்ய: உருளைக்கிழங்கு 2. பெரிய வெங்காயம் - 1, கால் டீஸ்பூன், உப்பு சுவைக்கேற்ப, கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து மசியுங்கள்.வெங்காயம், மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து கடுகு. உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம், மிளகாய், இஞ்சி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி. உருளைக்கிழங்கை சேருங்கள். நன்கு கிளறி இறக்குங்கள். புடலங்காயை கழுவி, வட்டமாக சிறு துண்டுகளாக நறுக்கி விதையை நீக்குங்கள். உப்பு கலந்த கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டெடுங்கள். அதனுள் உருளைக்கிழங்கு மசாலாவை அடையுங்கள். கடலை மாவுடன் மற்ற பொருட்களை ஒன்றாக சேர்த்து கரையுங்கள். மிதமான தீயில் எண்ணையைக் காயவைத்து. புடலங்காய் துண்டுகளை மாவில் போட்டு எடுத்து, எண்ணெயில் பொரித்து எடுங்கள். 

Dec 12, 2024

கார்த்திகை தீபப் பொரி

நெல் பொரி அல்லது அரிசிப் பொரியை நெய்யில் வறுத்து, முறுவலான வெல்லப்பாகில் ஏலக்காய் தூள் கலந்து, பொரியினை கொட்டி, கிளறி உருண்டையாக பிடித்தால் சுவையான கார்த்திகை தீபப் பொரி தயார்.

Dec 06, 2024

கசகசா குருமா

தேவையான பொருட்கள் :  காய்கறி கலவை - 2 கப் (பொடியாக நறுக்கியது). பெரிய வெங்காயம் -1, தயிர் (சற்று புளிப்புள்ளது)- அரை கப், உப்பு -தேவைக்கு. அரைக்க: இஞ்சி ஒரு துண்டு,பூண்டு 5 பல், பச்சைமிளகாய் - 5, முந்திரி -6, கசகசா - 2 டேபிள்ஸ்பூன். தேங்காய் துருவல் - கால் கப். தாளிக்க: பட்டை- ஒரு துண்டு, லவங்கம் -1. ஏலக்காய்-2 எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்.செய்முறை: நறுக்கிய காய்கறிகளை சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து ஒரு குக்கரில் போட்டு மூடி அடுப்பில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்குங்கள். ஒரு நிமிடம் கழித்து திறந்தால் நிறம் மாறாமல் காய் வெந்திருக்கும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக நன்கு அரைத்தெடுங்கள். வெங்காயத்தை பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து வெங்காயத்தை சேருங்கள்.வெங்காயம் வதங்கியதும் அரைத்த மசாலாவை சேர்த்து சிறு தீயில் வைத்து வாசனை போக வதக்கி காய்கறிகளையும், உப்பையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடுங்கள். தயிரைக் கடைந்து சேர்த்து கிளறி இறக்குங்கள்.

Dec 06, 2024

ரைஸ் மஞ்சூரியன் க்ரேவி

தேவையான பொருட்கள் : சாதம் - ஒரு கப், கேரட் - 1, பீன்ஸ் - 6, சோயா சாஸ் - 2 டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கு, மல்லித்தழை சிறிது, எண்ணெய் - தேவைக்கு.க்ரேவி: வெங்காயம் - 2, சோயா சாஸ் -2 டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 2 டேபிள்ஸ்பூன், ஆரஞ்சு கலர் - சிறிது, எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன், உப்பு -தேவைக்கு, மல்லித்தழை - தேவைக்கு. நசுக்க: இஞ்சி ஒரு துண்டு,பூண்டு - 6 பல், பச்சை மிளகாய் -6.செய்முறை: சாதத்தை நன்கு குழைவாக பிசைந்துகொள்ளுங்கள். காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்குங்கள். நசுக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு நசுக்குங்கள். சாதத்துடன் காய்கறி, மல்லித்தழை, சோயாசாஸ், உப்பு, நசுக்கிய விழுதில் சிறிது, கார்ன்ஃப்ளார் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். இக்கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொரித்தெடுங்கள்.பிறகு வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து நசுக்கிய விழுது, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி சோயாசாஸ், உப்பு சேர்க்கவும். 2 கப் தண்ணீரில் கார்ன்ஃப்ளாரையும் ஆரஞ்சு கலரையும் கரைத்து வெங்காயக் கலவையில் ஊற்றி 5 நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள். பரிமாறும் போது உருண்டைகளை சேர்த்து பரிமாறுங்கள்.நூடுல்ஸுக்கும் ஃப்ரைட் ரைஸுக்கும் இந்த கிரேவி பிரமாதமான ஜோடி.

Dec 06, 2024

ஸ்டஃப்டு புடலை தால்

தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு - ஒரு கப், சற்று மெல்லிய, சிறிய புடலை -1, தேங்காய்பால் - ஒரு கப், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்), ஸ்டஃப்பிங் செய்ய: உருளைக்கிழங்கு - 2, கேரட் - 1, பீன்ஸ் - 5, பச்சை மிளகாய் 2,இஞ்சி ஒரு துண்டு, எலுமிச்சம்பழச் சாறு - 2 டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, உப்பு தேவைக்கு, எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன். தாளிக்க: பெரிய வெங்காயம் -1, காய்ந்த மிளகாய் -2, கறிவேப்பிலை -சிறிது,நெய் ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை.செய்முறை: பாசிப்பருப்பை வெறும் கடாயில் வாசனை வரும்வரைவறுத்தெடுங்கள். பின்பு மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளுங்கள். மிளகு, சீரகத்தை நன்கு அரைத்து அதில் சேருங்கள். அதோடு உப்பையும் சேர்த்து பச்சை வாசனை போகக் கொதித்தபின் இறக்கி, தேங்காய் பாலை ஊற்றுங்கள். வெங்காயத்தை பொடியாக நறுக்கி, மிளகாயை இரண்டாக கிள்ளுங்கள். நெய், எண்ணெயைக் காயவைத்து, மிளகாய் சேர்த்து வறுத்து. வெங்காயம். கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி பருப்பில் சேருங்கள்.இதுதான் தால்.புடலையை 2 அங்குல நீளத்துக்கு முழுதாக வெட்டிக்கொள்ளுங்கள். அதனுள்ளிருக்கும் விதையை நீக்கிவிடுங்கள். உப்பு கலந்த நீரில் வேகவைத்து எடுங்கள். (உடையாதபடி கவனமாக கையாள வேண்டும்). உருளை, கேரட்டை, தோல் சீவி, பீன்ஸுடன் சற்று பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து எடுத்து கையால் மசித்துவிடுங்கள். பச்சை மிளகாய், இஞ்சியை கரகரப்பாக அரைத்து எண்ணெயில் தாளித்து, காய்கறியில் சேருங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய மல்லித்தழை, எலுமிச்சம்பழச் சாறு. உப்பு சேர்த்து பிசைந்து புடலையினுள் அடைத்துவிடுங்கள். பரிமாறும் பாத்திரத்தில் இதனை அடுக்கி அதன்மேல் தாலை ஊற்றி, மல்லித்தழை தூவிப் பரிமாறுங்கள்.

1 2 ... 52 53 54 55 56 57 58 ... 72 73

AD's



More News