25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு போட்டிகள்.18th april
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள்.18th april

குண்டு எரிதல்,

இந்தியாவின் நிஷ்சே ஆசிய சாம்பியன்ஷிப் (18வயது) குண்டு எறிதலில் வெள்ளி வென்றார். துவக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்ட நிஷ்சே, ஐந்தாவது வாய்ப்பில் அதிகபட்சம் 19.59 மீ., துாரம் எறிந்து இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளி வென்றார். இத்தொடரில் இவர் கைப்பற்றிய இரண் டாவது பதக்கம் இது.  

செஸ் 

 ('பிடே') சார்பில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரி ' செஸ் தொடர் நடத்தப்படுகிறது. ஐந்தாவது தொடர் புனேயில் நடக்கிறது.நேற்று ஐந்தாவது சுற்று போட்டி நடந்தன. இந்தியாவின் வைஷாலி, மங்கோலியாவின் பக்குயாக்கை எதிர்கொண்டார். இதில் 52வது நகர்த்தலில் வைஷாலி வெற்றி பெற்றார். 

ஐந்து சுற்று முடிவில் சீனாவின் ஜு ஜினெர் (4.0) முதல் இடத்தில் தொடர்கிறார். இந்தியாவின் ஹம்பி (3.5), திவ்யா (3.5), வைஷாலி (2.5), ஹரிகா (2.5) அடுத்த நான்கு இடங்களில் உள்ளனர். 

வட்டு எரிதல்.

 இந்தியாவின் லக்சித்தா பெண்களுக்கான வட்டு எறிதலில் (41.30 மீ.,) வெண்கலம் கைப்பற்றி னார். மா சென்யி (53.81, சீனா), ஜாவோ அன்கி (47.89, சீனா) தங்கம், வெள்ளி வென்றனர். 

பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டத்தில் இந்தியாவின் சவுரியா (13.80 வினாடி) வெண்கலம் வசப்படுத்தினார். 

பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் ஆர்த்தி, 24.31 வினாடி நேரத்தில் கடந்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். 

இந்திய அணி 3 வெள்ளி, 5 வெண்கலம் என 8 பதக்கம் வென்று உள்ளது. 

பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 

 உலக கோப்பை கிரிக்கெட் ,இந்தியாவில் நடக்க உள்ள தொடரில் பங்கேற்க, பாகிஸ்தான் பெண்கள் அணி தகுதி பெற்றது.

ஐ.சி.சி., பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) இந்தியாவில் (செப். 29-அக். 26) நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டி பாகிஸ்தானில் நடக்கின்றன. 6 அணிகள்  மோதுகின்றன. 'டாப்-2' இடம் பெறும் அணிகள் உலக கோப்பை தொடருக்கு முன்னேறும்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News