முள்ளங்கி பொரியல் .
தேவையான பொருட்கள் - வெள்ளை முள்ளங்கி கால் கிலோ,வெங்காயம் 2,தக்காளி 2, மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன்,தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன்,உப்பு தேவைக்கு, எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, கடுகு,சோம்பு தலா அரை டீஸ்பூன்,உளுந்து 1 டீஸ்பூன்,பூண்டு 4 பல்.
செய்முறை: முள்ளங்கியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்குங்கள். நறுக்கிய முள்ளங்கியை தண்ணீரில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். பூண்டை நசுக்கி வையுங்கள். எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் கிளறி பிறகு முள்ளங்கி, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்துச் சுருளக் கிளறி இறக்குங்கள்.
0
Leave a Reply