சொத்து வாங்கும்போது 'EC' மட்டும் பார்த்தால் போதாது!
சொத்து வாங்கும் முன் 'EC' (Encumbrance Certificate - வில்லங்கச் சான்று) இல் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதால் மட்டும், அந்த சொத்தின் தலைப்பு (Title Clear) உறுதியானது என்று சொல்லிவிட முடியாது.
சொத்து வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை:
தாய் ஆவணங்கள் (Parent Documents): முதலில் முந்தைய ஆவணங்களை முழுமையாகப் பார்க்க வேண்டும்.
அடிப்படை ஆவணங்கள்: பட்டா, எப்.எம்.பி (FMB), சர்வே எண் மற்றும் எல்லைகளைச் சரிபார்க்க வேண்டும்.
முந்தைய பத்திரங்கள்: Sale Deed, Settlement Deed, Partition Deed போன்ற முந்தைய ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
வழக்குகள்: சொத்தின் மீது ஏற்கனவே வழக்கு, அடமானம் (Mortgage) அல்லது வேறு ஏதேனும் உரிமைப் பிரச்சனை உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
0
Leave a Reply