25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவர் அஜய் சிங் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல உதவி செய்யப்படும்' என்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவர் அஜய் சிங் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல உதவி செய்யப்படும்' என்றார்.

உலகக்கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதி சுற்று உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில்நடந்தது.இதில் இந்தியா 9 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என 20 பதக்கங்களை வென்று குவித்தது. வீராங்கனைகள் மீனாட்சி ஹூடா, நிகாத்ஜரீன், பிரீத்தி பவார், ஜாய்ஸ்மின் லம்போரியா, அருந்ததி சவுத்ரி, நிபுர் ஷெரான், பர்வீன் ஹூடா, வீரர்கள் சச்சின் சிவாச், ஹிதேஷ் குலியா ஆகியோர் தங்கப்பதக்கத்தை முத்தமிட்டனர். உலகக் கோப்பையில் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு, இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் சார்பில் பாராட்டு விழா டெல்லியில் நேற்று நடந்தது.

இதில் கலந்து கொண்ட இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவர் அஜய் சிங் நமது வீரர்கள் ஒலிம்பிக் பதக்கங்களை வெல்வதை உறுதி செய்ய வேண்டும். , 'உலகக்கோப்பை போட்டியில் இந்திய வீரர்களின் செயல்பாடு அற்புதமாக இருந்தது. நாம் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டியது அவசியமானதாகும் அடுத்து வரும் காமன்வெல்த், ஆசிய விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் போட்டியில் நமது குத்துச்சண்டை வீரர்கள் பதக்கம் வெல்வதற்கு தேவையான எல்லா உதவிகளும், முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். வீரர்களின் பயிற்சிக்கு சிறந்த பயிற்சியாளர்களை நியமிப்பது, ஒவ்வொரு எடைப்பிரிவிலும் பல குத்துச்சண்டை வீரர்களை வளர்த்தெடுப்பது, நாடு முழுவதும் திறமையான வீரர்களை அடையாளம் கண்டு சில எடைப்பிரிவில் நமது வலிமையை அதிகரிப்பது உள்ளிட்ட விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்' என்றார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News