25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jun 27, 2025

ஆக்டோபஸ் மீன்

ஆக்டோபஸ் மீனுக்கு அருகில் திமிங்கலம், சுறா போன்றவை வந்தால் உடனே கருப்பு நிறத் திரவத்தை சுரக்க ஆரம்பிக்கும். அது பாதுகாப்பு கவசம் போல செயல்படும் .அந்த நேரத்தில் இவை விரைவாக தப்பித்து விடுகின்றன . ஆக்டோபஸ் எட்டுக் கைகளைக் கொண்டு நண்டு, சிப்பி போன்றவைகளைப் பிடித்து அதன் ஒட்டை உடைத்து உணவை விழுங்கும். ஆக்டோபஸின் ஒவ்வொரு கைக்கு அடியிலும் வட்ட வட்டமான தசைகள் இருக்கும். இவை உணவைப் பிடிக்க வும் உறிஞ்சி விழுங்கவும் உதவுகின்றன.

Jun 27, 2025

இமய மலைத்தொடரின் ஒரு பகுதியான 'ஹிந்து குஷ் மலைத்தொடரில் உள்ள பனிப்பாறைகள்.

புவி வெப்பமய மாதலால் இமய மலைத்தொடரின் ஒரு பகுதியான 'ஹிந்து குஷ் மலைத்தொடரில் உள்ள பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருவதாகச் சூழலியலாளர்கள் கூறியுள்ளனர். இந்த வேகத்தில் உருகினால் இந்த, நுாற்றாண்டின் இறுதிக்குள் 75 சதவீத பனிப்பாறைகள் உருகிவிடும். இது ஆசியாவில் வாழும் 100 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடும்.

Jun 26, 2025

மது அருந்துவதால் மறதி நோய், அதிகமாவது தெரியவந்துள்ளது.

மது அருந்துவதால் பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமீபத் திய ஆய்வுகளில் இது வரை வெளிவராத பல தகவல்கள் வெளிவந்துள்ளன.வயதாவதால் ஏற்படுகின்ற ஞாபகம் மறதி நோய், அல்சைமர்ஸ். மது அருந்துவதால் இந்த நோயின் பாதிப்பு அதிகமாவது தெரியவந்துள்ளது.இந்த நோயின் பல் வேறு நிலைகளில் இருந்த 75 நோயாளிகளை ஆய்வுக்கு உட்படுத்தினார்கள் விஞ்ஞானிகள். அவர்களது மூளையில் ஏற்பட்டுள்ள செல் இறப்பு, செல்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தில் இருக்கின்ற குழப்பம், ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆகியவற்றை மது அருந்துவதால் ஏற்படுகின்ற பாதிப்புகளோடு ஒப்பிட்டுப் பார்த்தார்கள்.இரண்டு பாதிப்புகளும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருப்பது தெரிய வந்துள்ளது. குளிர் பிரதேசங்களில் குறைந்த அளவு மது அருந்துவது என்பது அத்தியாவசியத் தேவையாக உள்ளது.ஆனால் இந்த அளவு அதிகரிக்கும் போது அது பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும். அதிக மது அல்சைமர் நோயைத் தீவிரப்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Jun 26, 2025

வேகமாக அழியும் பவளப் பாறைகள்

 சுற்றுச்சூழல் மாசுபாட்டால் கடலில் அமிலத்தன்மை அதிகரித்து வருவதால் பவளப் பாறைகள் வேகமாக அழிகின்றன. இதனால் பவளப் பாறைகளை நம்பி வாழும் 25 சதவீத கடல் வாழ் உயிரினங்கள் ஆபத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Jun 23, 2025

இணையத்தில் அவ்வப்போது பயணர்களின் தகவல்கள் திருடப்படுகின்றன .1600 கோடி 'லாகின்' தகவல் கசிவு. பாஸ்வேர்டை மாற்றுங்கள்'

உலகளவில், 'ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான்' உட்பட பல் வேறு இணைய சேவை பயணர்களின், 1,600 கோடி 'லாகின்' தகவல்கள் திருடப்பட்டுள்ளன. அதில் பலவற்றில் உள்நுழைவதற்கானபாஸ்வேர்டு தகவல்களும் அடங்கியுள்ளதாக ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.அந்த தகவல்கள்  'சைபர்' குற்றங்கள் மற்றும் வியாபார உத்திகள் வகுக்க பயன்படுத்தப்படுகின்றன. உலகளவில் மிகப்பெரிய தகவல் திருட்டு நடந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.பல்வேறு  இணைய சேவைகளுக்கு பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரிகள், பாஸ்வேர்டு போன்றவற்றின், 1,600 கோடி விபரங்கள், 'டார்க் வெப்' எனப்படும் மறைமுக இணைய சர்வரில் விற்பனைக்கு வந்துள்ளன.இவை, தனித்தனி தரவு தொகுப்புகளாக கசிந்துள்ளன. ஒவ்வொரு தொகுப்பிலும், பல கோடி தகவல்கள் இடம் பெற்றிருக்கலாம் என சர்வதேச இணைய ஆய்வு நிறுவனங்களான, 'சைபர்நியூஸ்' மற்றும் 'கீப்பர் செக்யூரிட்டி' கூறியுள்ளது.. 'ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட்' பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் போன்ற நிறுவனங்களின் பயணர் தகவல்கள்  ,ஆன்லைன் சேவைகள், மற்றும் செயலிகளில் இருந்து திருடப்பட்டவை.இதில் அடங்கி உள்ளன. இந்திய பயணர்களின் தகவல்களும் இதில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இணைய கணக்குகளின் விபரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்படியும் ,உடனடியாக பாஸ்வேர்டுகளை புதிதாக மாற்றும்படியும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Jun 23, 2025

ஆப்பிரிக்க யானைகள், ஆசிய யானைகளை விட அளவில் பெரியவை

 ஆசிய யானைகளை விட அளவில் பெரியவை ஆப்பிரிக்க யானைகள். ஜெர்மனியைச் சேர்ந்த பெர்லின் பல்கலை ஆய்வாளர்கள்  சமீபத்தில் ஆய்வு ஒன்றில் இரு யானைகளின் மூளையையும் ஒப்பீடு செய்தார்கள். இதில் ஆசிய யானைகளின் மூளை ஆப்பிரிக்க யானைகளின் மூளையை விடப் பெரிதாக இருப்பது தெரியவந்துள்ளது.

Jun 21, 2025

உலகம் முழுவதும் வரவேற்பு உள்ள ஆடைகளுக்கு அழகூட்டும் கலைஆரி ஒர்க்' என்னும் ஒருவகை எம்பிராய்டரி கலை.

ஆடைகளில் பல்வேறு நுணுக்கமான வேலைகளை செய்து ஒரு துணியின் அல்லது ஆடையின் தோற்றத்தை மேம்படுத்தும் ஒரு கலையாக ஆரி ஒர்க்' என்னும் ஒருவகை எம்பிராய்டரி கலை உள்ளது. இந்தியாவின் பாரம்பரிய கலை வடிவமாக கருதப்படும் ஆரி வேலைப்பாடுகள் கொண்ட துணிகளுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது.இந்த தையல் கலையானது 12-ம் நூற்றாண்டில் இருந்து தொடங்கியதாக கூறப்படுகிறது.மேற்கு இந்திய மாநில மான குஜராத்தில் தோல் தொழி லாளர்கள் காலணிகளை அழகுபடுத்த இந்த ஆரி வேலைப்பாட்டை செய்ததாகவும், பிற்காலங்களில், முகலாய அரசர்களால் இந்த கலை வளர்க்கப்பட்டு, பட்டு மற்றும் பருத்தி துணிகளில் இந்த வேலைகள் செய்யப்பட்டதாகவும் வரலாற்று தகவல்கள் கூறுகின் றன. துணிகளில் முத்துக்கள், மணிகள், கற்கள் போன்றவை வைத்து தைக்கப்பட்டன.எம்பிராய்டரி தையல் என்பது துணியில் நேரடியாக கலை வடிவ வேலைகளை செய்வது. ஆனால் ஆரி வேலைப்பாடு என்பது ஒரு மரச்சட்டம் மீது துணியை இறுக்கமாக பிடித்து வைத்து, தனித் துவமான ஒரு ஊசி மூலம் செய்யப்படும் ஒரு வகை எம்பிராய்டரி வேலைப்பாடு ஆகும். இதற்கு பயன்படும் ஊசி, பின்னல் வேலைக்கு பயன்படும் ஊசியை போன்றிருக்கும்.இக்கலையில் வடிவமைக்கப்படும் சித்திரங்கள் என்பவை இலை கள்,கொடிகள், பூக்கள், மரங்கள், பறவைகள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை சார்ந்த வடிவங்கள்தான்.பட்டு, பருத்தி, சந்தேரி மற்றும் பல்வேறு இயற்கை சார்ந்த துணிகளில் செய்யப்படும் ஆரி வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடைகளுக்கு உலக அளவில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

Jun 21, 2025

Shriram Groupன் நிறுவனர் திரு R Thyagarajan தமிழ்நாட்டு  ஏழை மக்களின்  நேர்மையாளர்.

ஆடம்பர அம்பானிகளுக்கு நடுவில், தான் உழைத்து சேர்த்த 6000+ கோடி சொத்து மு ழுவதையும் தன் நிறுவன ஊழியர்களுக்கும் Trustக்கும் வழங்கியவர் Shriram Groupன் நிறுவனர் திரு R Thyagarajan. ஏழை மக்கள் நேர்மையாளர்கள் அவர்களுக்கு கடன் கொடுப்பதற்கு எந்த Credit Scoreரும் தேவையில்லை என்று 1974 Shriram Group உருவாக்கிய இந்த நல்ல மனிதர், எந்த புகழ் வெளிச்சதையும் விரும்பாமல் எளிமையான வீட்டில் கைபேசி கூட இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

Jun 21, 2025

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் கருணையுள்ள பில் கேட்ஸ்,

தனது செல்வத்தில் 99%, ₹16 லட்சம் கோடியை நன்கொடையாக  பில் கேட்ஸ், அளித்துள்ளார்.அவர்கள் தங்கள் செல்வத்தை ஆப்பிரிக்காவில் உள்ள குழந்தைகளின், ஆரோக்கியம் மற்றும் கல்விக்காக நன்கொடையாக வழங்கியுள்ளனர்

Jun 21, 2025

மரபணு மாற்ற CRISPR-Cas9 நுட்பம் 

அறிவியல் வரலாற்றில் இதுவரை மரபணு மாற்ற CRISPR-Cas9 நுட்பம், பல விலங்குகள், தாவரங்கள் ஏன் பாக்டீரியா மீது கூட பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல்முறையாக ஜெர்மனியில் உள்ள பெய்ரூட் பல்கலை, சிலந்திகள் மீது பயன்படுத்தி உள்ளது. மரபணு மாற்றப்பட்ட சிலந்தி ஒளிர்கின்ற சிவப்பு நிற வலையைப் பின்னுகிறது. சிலந்திகளின் வலை நூல் பல துறைகளில் பயன்படுகிறது.

1 2 ... 86 87 88 89 90 91 92 ... 118 119

AD's



More News