25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


உலகம் முழுவதும் வரவேற்பு உள்ள ஆடைகளுக்கு அழகூட்டும் கலைஆரி ஒர்க்' என்னும் ஒருவகை எம்பிராய்டரி கலை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகம் முழுவதும் வரவேற்பு உள்ள ஆடைகளுக்கு அழகூட்டும் கலைஆரி ஒர்க்' என்னும் ஒருவகை எம்பிராய்டரி கலை.

ஆடைகளில் பல்வேறு நுணுக்கமான வேலைகளை செய்து ஒரு துணியின் அல்லது ஆடையின் தோற்றத்தை மேம்படுத்தும் ஒரு கலையாக ஆரி ஒர்க்' என்னும் ஒருவகை எம்பிராய்டரி கலை உள்ளது. இந்தியாவின் பாரம்பரிய கலை வடிவமாக கருதப்படும் ஆரி வேலைப்பாடுகள் கொண்ட துணிகளுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது.

இந்த தையல் கலையானது 12-ம் நூற்றாண்டில் இருந்து தொடங்கியதாக கூறப்படுகிறது.மேற்கு இந்திய மாநில மான குஜராத்தில் தோல் தொழி லாளர்கள் காலணிகளை அழகுபடுத்த இந்த ஆரி வேலைப்பாட்டை செய்ததாகவும், பிற்காலங்களில், முகலாய அரசர்களால் இந்த கலை வளர்க்கப்பட்டு, பட்டு மற்றும் பருத்தி துணிகளில் இந்த வேலைகள் செய்யப்பட்டதாகவும் வரலாற்று தகவல்கள் கூறுகின் றன. துணிகளில் முத்துக்கள், மணிகள், கற்கள் போன்றவை வைத்து தைக்கப்பட்டன.

எம்பிராய்டரி தையல் என்பது துணியில் நேரடியாக கலை வடிவ வேலைகளை செய்வது. ஆனால் ஆரி வேலைப்பாடு என்பது ஒரு மரச்சட்டம் மீது துணியை இறுக்கமாக பிடித்து வைத்து, தனித் துவமான ஒரு ஊசி மூலம் செய்யப்படும் ஒரு வகை எம்பிராய்டரி வேலைப்பாடு ஆகும். இதற்கு பயன்படும் ஊசி, பின்னல் வேலைக்கு பயன்படும் ஊசியை போன்றிருக்கும்.

இக்கலையில் வடிவமைக்கப்படும் சித்திரங்கள் என்பவை இலை கள்,கொடிகள், பூக்கள், மரங்கள், பறவைகள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை சார்ந்த வடிவங்கள்தான்.பட்டு, பருத்தி, சந்தேரி மற்றும் பல்வேறு இயற்கை சார்ந்த துணிகளில் செய்யப்படும் ஆரி வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடைகளுக்கு உலக அளவில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News