25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jun 06, 2025

கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீலட்சுமி சுரேஷ் ,6 வயதில் சொந்த இணையதளம்,11 வயதில் CEO.

இளமையில் வித்தியாசமான திறமையை வெளிப்படுத்தும் சில குழந்தைகளில் ,ஒரு புத்திசாலி சிறுமி தான் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீலட்சுமி சுரேஷ். 1998 பிப்ரவரி 5ஆம் தேதி பிறந்த ஸ்ரீ லட்சுமி, மூன்று வயதில் கணினி பயன்படுத்த தொடங்கி, ஆறாம் வயதில் தனது முதல் இணையதளத்தை வடிவமைத்தார். 11வது வயதில் eDesign Technologies என்ற இணைய வடிவமைப்பு நிறுவனத்தை தொடங்கி உலகின் மிகவும் இளமையான CEOகளில் ஒருவராக விளங்கினார். ஸ்ரீலட்சுமி கோழிக்கோட்டில் உள்ள பிரெசென்டேஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் படித்து, பின்னர் சென்ட் ஜோசப் கல்லூரியில் வணிக மேலாண்மை இளங்கலை பட்டம் பெற்றார். தற்போது eDesign Technologies நிறுவனத்தின் CEO ஆக செயல்பட்டு வருகிறார்8ஆம் வயதில் தனது பள்ளிக்காக இணையதளம் வடிவமைத்து தனது திறமையை நிரூபித்தார். இவர் நிறுவனம் SEO, கிராபிக் டிசைன், இணையதள மேம்பாடு உள்ளிட்ட சேவைகள் வழங்குகிறது. மைக்ரோசாஃப்ட், நோக்கியா, கோகா-கோலா போன்ற பெரிய நிறுவனங்களும் இவரது கிளையண்டுகளாக உள்ளனர். இணைய வடிவமைப்பில் தன்னுடைய சிறப்பான சேவைக்காக 2008 ஆம் ஆண்டு தேசிய சிறுவர் விருதும், Golden Web Award (USA), Sixty Plus Education Award (Canada) போன்ற பல விருதுகளையும் பெற்றுள்ளார். ஊடக  இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.51 கோடி என்று கூறப்படுகிறது. அடுத்த தலைமுறையினருக்கு இவரது வாழ்க்கை ஒரு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது.

Jun 06, 2025

மைக்ரோசாப்ட் நிறுவனம் 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

மைக்ரோசாப்ட்நிறுவனம், சமீபத்தில்முக்கியமுடிவொன்றைஎடுத்துள்ளது.உலகளவில்உள்ளதனதுஊழியர்களில் 3 சதவீதமானவர்கள், அதாவது 6,000-க்கும் அதிகமானோர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என்று நிறுவனத்தின்அறிவிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னதாகவும், மைக்ரோசாப்ட் 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2.28 லட்சம் ஊழியர்களை வேலையிலிருந்து விலக்கியது. அதேபோல, 2023-ஆம் ஆண்டிலும் 10,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரை, நிறுவனத்தின் வருவாய் எதிர்பார்ப்பை மீறி உயர்ந்திருந்தாலும், தொழில்நுட்ப துறையில் கடும் போட்டி நிலவுவதால், செயல்திறனை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் கூறியுள்ளது.மேலும், செயற்கை நுண்ணறிவை  மையமாக கொண்டு எதிர்கால வளர்ச்சிக்கான முயற்சிகளை மைக்ரோசாப்ட் மேற்கொண்டு வருகிறது. இந்த மாற்றம் காரணமாக, நிறுவனத்துக்குள் சில வேலைகள் தேவையற்றதாகக் கருதப்பட்டு, அந்த இடங்கள் ரத்து செய்யப்படுகின்றன.பெரிய நிறுவனங்களும் கூட ஊழியர்களை குறைக்கும் நிலைக்கு சென்றுவிட்டன என்று தொழில்நுட்ப உலகில் நிலவும் நிலையினை வெளிப்படுத்துகிறது. இந்த நிலைமை, டெக் துறையில் வேலை பார்க்கும் பலரிடையே குழப்பம் மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Jun 06, 2025

தமிழ்நாடு நில அளவுகள்

1கிரவுண்ட் - 2400 சதுர அடி1சென்ட் - 435 சதுர அடி1ஹெக்டர் - 2 ஏக்கர் 47 சென்ட்1காணி - 132 ஏக்கர்1கீ.மீட்டர் - (1000 மீட்டர்1 மீட்டர் - 3281 அடி1 குழி - 44சென்ட்1 மா - 100 குழி1அடி - 12 இஞ்ச்1மைல் - 1.61 கீ. மீ 1ஏக்கர் - 100சென்ட்

Jun 05, 2025

கிரைசோபீலியா வகையை சேர்ந்த உயிரினம் பறக்கும் பாம்பு.

பச்சை நிறத்தில் பளபளப்பான தோலுடன் காணப்படும். இதனால் பச்சை மாப்பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது.கிரைசோபீலியா வகையை சேர்ந்த உயிரினம் பறக்கும் பாம்பு. கோலுகிர் நிறைந்தது.இது1.5 மீட்டர் வரை நீளமாக இருக்கும். மரங்களில் வாழும். உடல் மெலிந்து, செதில்கள் மென்மையாக இருப்பதால் மரங்களில் எளிதாக ஏற முடியும். பல்லி தவளை, சிறு பறவைகள், பூச்சிகளை உணவாக்கும். தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா கண்ட பகுதியில் இந்தியா இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா நாடுகளில் இவை காணப்படுகிறது.விஷமற்ற இந்த பாம்பு இனம் மரங்களுக்கு இடையே பறக்கும் திறனுடையதாக கருதப்படுகிறது. உண்மையில் இது பறப்பதில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள். மாறாக, உடலை தட்டையாக்கி, காற்றில்100 மீட்டர் தூரம் வரை சறுக்கி செல்லும் திறன் உடையது. முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும்.இந்த இனத்தில் கிரைசோபீலியா ஓர்னேட்டா என்ற வகையும் உள்ளது. இது, அலங்கார பறக்கும் பாம்பு என அழைக்கப்படுகிறது. மஞ்சள் கோடுகளுடன் அழகிய தோற்றம் கொண்டது. இந்த பாம்பு இனம், மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. பதுங்கி வாழும் தன்மை கொண்டது. இயற்கையின் அற்புத படைப்புகளில் இவையும் ஒன்றாக கருதப்படுகிறது.

Jun 05, 2025

92 வயதிலும் உழைத்து வரும் அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி

அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி தனது 92 வயதிலும் சொந்தமாக ,71 மருத்துவமனை 5000 மெடிக்கல்களும் வைத்து ,தினமும் காலை 16 மணி முதல் ஐந்து மணி வரை வேலையில் பணிபுரிகிறார்.

Jun 05, 2025

வல் கானிட்ரிஸ் க்ராடென்சிஸ் (Vulcanidris cratensis) எறும்பின் தொல்லெச்சம்

உலகின் மிகப் பழமையான வல் கானிட்ரிஸ் க்ராடென்சிஸ் (Vulcanidris cratensis)எனும் எறும்பு இனத்தைச் சேர்ந்த ஓர் எறும்பின் தொல்லெச்சத்தை பிரேசில் நாட்டில் தொல்லியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது 11.3 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது.

Jun 04, 2025

ரம்பூட்டான்

தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாக உடையது. ரம்பூட்டான் தாவரம். இந்தோனேஷிய மொழியில் ரம்பூட்டானுக்கு முடி அடர்ந்த எனப் பொருள். இப்பழம் இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவை உடையது. மேற்புறம் முள் காணப்படும். உடல் பருமனால் அவதிப்படுவோர் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளலாம். உடலில் கெட்ட கொழுப்பு சேர விடாமல் தடுக்கும். இதனால் மாரடைப்பு அபாயம் குறைகிறது.ஆஸ்துமா, நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். கண் ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவுகிறது. இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டால் தலைமுடி, தோல் மற்றும் கை, கால் நகங்கள் பளபளப்புடன் இருக்கும். உடல் உறுப்புகள் சீராக இயங்க செய்யும்எலும்பு மண்டல வளர்ச்சிக்கு உதவும் கால்ஷியம், பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் உள்ளன. பழத்தில் உள்ள நீர்ச்சத்து, நா வறட்சியைத் தடுக்கும். உடல் உழைப்புக்கு ஆற்றலை தரும். உடல் சீரான வளர்ச்சிக்கு இப்பழம் முக்கிய பங்காற்றுகிறது.

Jun 04, 2025

சூரியனைப் போல 5,500 மடங்கு பெரிய ஹைட்ரஜன் மூலக்கூறுகளால்ஆன மேகக் கூட்டம்.

நமது சூரியக் குடும்பத்திலிருந்து 300 ஒளியாண்டுகள் தொலைவில் பிரமாண்டமான மேகக் கூட்டத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது நமது சூரியனைப் போல 5,500 மடங்கு பெரியது. ஹைட்ரஜன் மூலக்கூறுகளால் ஆனது.

Jun 03, 2025

உலகின் மிகப் பெரிய காற்றாலை.

உலகின் மிகப் பெரிய காற்றாலையை நிறுவி சீன நாடு சாதனை செய்துள்ளது.டோங்பாங்  (Dongfang) எனும் நிறுவனத்தால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.காற்றாலை மின்சார உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு சீனா. அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்காவும், ஜெர்மனியும் உள்ளன. அதிகரித்து வரும் தன்னுடைய மின் தேவைகளை, சுற்றுச் சூழலைப் பெரிய அளவு பாதிக்காத வகையில் ஈடு செய்வதற்குச் சீனாமுயன்று வருகிறது. புஜியான் மாகாணத்தைச் சேர்ந்த பூசௌ என்னும் இடத்தில் இது நிறுவப்பட்டுள்ளது. இதன்மொத்த உயரம் 1,115 அடி. அதாவது, இது பாரிஸ் ஈபில் கோபுரத்தை விட உயரமானது. இது எளிதில் துருப்பிடிக்காதபடி அமைக்கப்பட்டுள்ளது. சூறாவளிகள் வந்தாலும் கூட இது தாக்குப் பிடிக்கும். அந்தளவுக்கு வலுவானது என்று இதன்  வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர்.இந்தக் காற்றாலை மணிக்கு 36 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகின்ற காற்றில் இருந்து 100 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.இது 55,000 வீடுகளுக்குப் போதுமானது. இந்த ஒரு காற்றாலை 30,000 டன் நிலக்கரி பயன்பாட்டையும், 80,000 டன்கரியமில வாயு உமிழ்வையும் குறைக்கும்.

Jun 02, 2025

வாகனப் போக்குவரத்துக்கு உதவும் உலகின் உயரமான சாலை

வாகனப் போக்குவரத்துக்கு உதவும் உலகின் உயரமான சாலை நம் நாட்டில் தான் உள்ளது. இது, கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்து இருக்கிறது.இதற்கு முன், இந்த பெருமையை தென் அமெரிக்க நாடான பொலிவியா தக்க வைத்திருந்தது. பொலிவியாவில், உட்டுருங்கு எரிமலையை இணைக்க, 18 ஆயிரத்து, 953 அடி உயரத்தில் சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. இது உலக அளவில் தனித்துவ அடையாளத்தோடு விளங்கியது.தற்போது, காஷ்மீர், லடாக்கில் ,19 ஆயிரத்து, 24 அடி உயரத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் வாகனப் போக்குவரத்தும் நடக்கிறது. தற்போது, காஷ்மீர், லடாக் சாலை தனித்தன்மை பெற்றதாக இருக்கிறது.உலகின் மிக உயரமான வாகனப் போக்குவரத்து சாலை என, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

1 2 ... 89 90 91 92 93 94 95 ... 118 119

AD's



More News