25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தெரிந்து கொள்ளுங்கள்

Apr 01, 2025

வலிமை தரும் வைட்டமின்கள்.

மனித உடலின் வலிமைக்கு வைட்டமின்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதில், வைட்டமின்-டி மிகவும் முக்கியமானது. இது சூரிய ஒளி வைட்டமின், கால்சிய வைட்டமின், ரிக்கெட் தடுப்பு வைட்டமின் போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. உடலை தாங்கி நிற்கும் எலும்புகளின் வலிமைக்கு வைட்டமின்-டி அவசியம். இது எலும்பின் வளர்ச்சிக்கு உதவுவதோடு பலவித எலும்பு நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இது உடலில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களின் வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகிறது. இரைப்பை உணவு பாதையில் கால்சியம் உறிஞ்சப்படுவதை அதிகரிக்கிறது. இது உடலில் குறையும்போது குழந்தையின் கால்கள் மெலிந்து, மார்பு எலும்பு கூடு போன்று குறுகி காணப்படும். கால் மூட்டுகள் ஒடுங்கி நடை, ஓடும் வேகம் குறையும். உடல் இணைப்பு எலும்புகளின் முனைகள் அகன்று, இடுப்பு எலும்பு பரப்பு குறைந்தும் காணப்படும். இந்த வைட்டமின் குறைந்தவர்களின் கால்களின் உறுதித்தன்மை குறையும்.வெயில் உடலில் படும்போது தோல் தானாகவே வைட்ட மின்-டியை உற்பத்தி செய்கிறது. வெயிலில் செல்லாத குழந்தைகள், சிறுவர்களிடையே இந்த வைட்டமின் குறைந்து காணப்பட இதுவும் ஒரு காரணம். விலங்குக ளின் ஈரல், முட்டை மஞ்சள் கரு, பால், பால் புரதங்கள். வெண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின்-டி காணப்படு கிறது. மாலை நேரங்களில் சூரிய வெப்பம் குறைவாக இருக்கும். எனவே அப்போது வெளியே சென்றால், உடலுக்கு ஓரளவு வைட்டமின்-டி கிடைக்கும். எனவே இந்த வெயிலை தவற விடக்கூடாது. 

Apr 01, 2025

35 கோடி ஆண்டுகளுக்கு முன், செவ்வாய் கிரகத்தில் கடல் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்

சீனாவைச் சேர்ந்த விஞ் ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் உள்ள சில தாதுப் படிமங்களைக் கொண்டு, 35 கோடி ஆண்டுகளுக்கு முன், அங்கு கடல் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர். 

Apr 01, 2025

மஞ்சள் சிறந்த கிருமிநாசினி.

 மஞ்சள் சிறந்த கிருமிநாசினி. மஞ்சளில் உள்ள குர்குமினைக் கொண்டு ஆன்டி பயாடிக் மருந்துகளால் கூட கொல்ல இயலாத, நுண்ணுயிரிகளைக் கொல்ல முடியும் ,என்று அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலை கண்டறிந்துள்ளது.

Apr 01, 2025

சோலார் கூட்டமைப்பு

சூரிய ஒளி அதிகமாக கிடைக்கும் நாடுகளில்  மின்சார உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தி சர்வதேச சோலார் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. பிரான்சில் 2015ல் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இதை வலியுறுத்தியவர் பிரதமர் மோடி. இக்கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், , பிரான்ஸ், பிரேசில் உள்ளிட்ட நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன. இதில் 100வது நாடாக பராகுவே சமீபத்தில் இணைந்தது . இந்த அமைப்பின் அலுவலக மொழி பிரெஞ்சு, ஆங்கிலம். தலைமையகம் ஹரியானாவின் குருகிராமில் உள்ளது.

Mar 31, 2025

வயிற்றில் உள்ள குழந்தை தனது செல்களை அனுப்பி தன் அம்மாவின் சேதமடைந்த உறுப்பை சரி செய்யும்.

ஒரு பெண் கர்ப்பமாக  இருக்கும்போது  அந்தப் பெண்ணில் உடம்பில் எதாவது உறுப்பு சேதமடைந்தால், அவளின் வயிற்றில் உள்ள குழந்தை தனது செல்களை அனுப்பி தன் அம்மாவின் சேதமடைந்த உறுப்பை சரி செய்யும்.உலகில் வேறு எந்த உறவும்தாய்-பிள்ளை உறவுக்கு ஈடே ஆகாது.

Mar 31, 2025

பெண்கள் சிக்கனம் வீட்டைக் காக்கும் .

1.சில்லரைக்கு காய்கறி வாங்காமல் வாரம் ஒரு முறை, மார்க்கெட்டில் மொத்தமாக வாங்குவது. 2 எண்ணெய் பலசரக்கு சாமான்களை,மொத்த கடைகளில் வாங்கலாம். 3. அதிகமாக சாப்பாடு குழம்பு வைக்காமல் அளவாக வைப்பது. 4 அரிசி பருப்பு போன்றவைகளை சமைக்கும் முன், அரை மணி நேரம் ஊறவைத்து, சமைத்தால் எரிபொருள் மிச்சமாகும் 5. வீட்டில் மின்சாரத்தை சிக்கனமாக பயன் படுத்தி, மின்சார செலவை மிச்சம் பண்ணலாம். 6.ஸ்நாக்ஸ் வகைகளை வெளியே வாங்குவதை குறைத்து ,ஆரோக்கியமாக வீட்டில் செய்து சாப்பிடலாம். 7. பத்து ரூபாய் பணம் இருந்தால், அதில் ஒரு ரூபாய் எடுத்து சேமிக்கும் முறையை பழக்கபடுத்தினால் ,நிச்சயம் வாழ்க்கையில் ஜெயித்து காட்டலாம்.சின்ன சின்ன விஷயத்தில் சிக்கனம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.

Mar 31, 2025

நிதி திவாரி பிரதமரின் தனிச்செயலராக நியமனம்.

பிரதமர் நரேந்திர மோடியின் தனிச்செயலராக ஐ. எப். எஸ்., எனப்படும் இந்திய வெளியுற வுத் துறை பெண் அதிகாரி நிதி திவாரி நியமிக்கப் பட்டுள்ளார்.உத்தர பிரதேசத்தின் வாரணாசி அருகே உள்ள மெஹமுர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் நிதி திவாரி, வணிக வரித்து றையில் உதவி கமிஷன ராக பணியாற்றி வந்தார். கடந்த 2013ல் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, ஐ.எப்.எஸ்., அதி காரியாக தேர்வானார். 2014ல் ஐ.எப்.எஸ்.,பயிற்சியின்போது சிறந்த பயிற்சி அதிகாரிக்கான விருதையும் நிதி திவாரி பெற்றார். முன்னதாக வெளியு றவு அமைச்சகத்தின் சர்வ தேச பாதுகாப்பு விவகார பிரிவின் துணைச்செய லராக நிதி திவாரி பணி யாற்றிய போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் கீழ் செயல்பட்டு வந்தார்.கடந்த 2014 பேட்ச் ஐ.எப்.எஸ்., அதிகாரி யான நிதி திவாரி, 2022 முதல் பிரதமர் அலுவலகத்தில் துணைச்செயலராக பணியாற்றி வருகிறார். தற்போது இவரை, பிரதமரின் தனிச்செயலராக நியமிக்க, மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் அளித் துள்ளது. இதுகுறித்து அரசாணையும் நேற்று வெளியிடப்பட்டது.பிரதமர் மோடிக்கு, தற்போது விவேக் குமார் மற்றும் ஹர்திக் சதீஷ்சந் திர ஷா ஆகிய இரண்டு தனிச்செயலர்கள் உள்ள நிலையில், நிதி திவாரியும் தனிச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார் .

Mar 30, 2025

குவைத் மன்னர் ஷேக் ஜாபர்

1984 ஆம் ஆண்டில் ஒரு சட்டத்தை இயற்றினார். உலக வரைபடத்தில் குவைத் இருக்கும் வரை, ஒரு சாண்டவிச்சின் விலை குவைத்தின் 100 ஃபில்ஸ் (17 ருபாய்) ஆக இருக்கும். எவ்வளவு பணவீக்கம் நடந்தாலும், அதன் விகிதம் அதிகரிக்காது. இதற்குப் பின்னால் இருந்த ஒரே நோக்கம், தனது நாட்டில் உள்ள எந்த ஏழையும், ஒருபோதும் பசியுடன் தூங்கக்கூடாது என்பதுதான். இந்தியாவிலும் இப்படி ஒரு சட்டம் வர வேண்டும் .

Mar 30, 2025

30 வயதுக்கு பிறகு இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வலம் வர....

ஒரு நாளைக்கு 2 பழங்கள்  உட்கொள்வது ,ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடிப்பது,வாரத்தில்  4 தடவை  எடைப் பயிற்சி, ஒரு நாளைக்கு 5 நிமிடங்கள் ஸ்ட்ரெச்சிங்.வாரத்தில் 6 மணி நேரம் குறையாமல் உடற்பயிற்சி,தினமும் 7000 படிகள் நடப்பது. ஒரு நாளைக்கு 8  மணிநேரம் தூங்குவது என கவனத்தில் கொண்டால் 30 வயதுக்கு பிறகும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வலம் வர முடியும்.

Mar 28, 2025

மிர் உஸ்மான் அலிகான் ஹைதராபாத்தின் 7வது நிஜாம் இந்தியாவிற்கு 5000 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளித்தார் .

.மிர் உஸ்மான் அலிகான் ஹைதராபாத்தின்7வது நிஜாம் ர் இந்திய அரசாங்கத்திற்கு5000 கிலோகிராம் தங்கத்தை நன்கொடையாக வழங்கியதாக ஒரு வதந்தி பரவியது, அது நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டது. இருப்பினும், இந்தியா சுதந்திரம் அடைந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்மை வெளிப்பட்டது.ஹைதராபாத் நிஜாம், அவர்களின் அரச வாழ்க்கை முறை பற்றிய கதைகளின் மையமாக அடிக்கடி உள்ளனர். 1965 ஆம் ஆண்டு இந்தியபாகிஸ்தான் போரின் போது,நாட்டின் இராணுவ முயற்சிகளை ஆதரிப்பதற்காக மிர் உஸ்மான் அலி கான் இந்திய அரசாங்கத்திற்கு5000 கிலோகிராம் தங்கத்தை நன்கொடையாக அளித்ததாக வதந்தி பரவியது. இந்தியாவின் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தைக் கருத்தில் கொண்டால், நிஜாம்கள் மிகவும் பணக்காரர்களாக இருந்தனர், அவர்களின் செல்வம் மிகப் பெரியது. அவர்களின் செல்வத்தில் தங்கம் மற்றும் வைரங்கள் உள்ளன.1965 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இரண்டாவது போர் இந்தியாவிற்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது. நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த பங்களிப்புகளை வழங்குமாறு பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி குடிமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இந்த காலகட்டத்தில், நாட்டிற்கு பணம் தேவைப்படும்போது அரசாங்கத்திற்கு உதவ நிஜாம் அணுகப்பட்டார்.2019 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(RTI) கோரிக்கை மூலம் விசாரணையில் தெரியவந்தபோது உண்மை உறுதி செய்யப்பட்டது. வதந்தி போல நிஜாம்5000 கிலோகிராம் தங்கத்தை நன்கொடையாக வழங்கவில்லை. ஆனால் போரின் போது இந்திய அரசு அறிமுகப்படுத்திய தேசிய பாதுகாப்பு தங்கத் திட்டத்தில்425 கிலோகிராம் தங்கத்தை முதலீடு செய்தார். அதற்கு ஈடாக, அவருக்கு6.5% வட்டி விகிதம் கிடைத்தது.2020 ஆம் ஆண்டில், நிஜாமின் பேரன் நவாப் நஜாப் அலி கான்,5000 கிலோகிராம் நன்கொடை என்ற கட்டுக்கதையை முறியடித்து, இந்தக்கணக்கைஉறுதிப்படுத்தினார்.நிஜாமின் செல்வம் மிர் உஸ்மான் அலி கான் வரலாற்றில் மிகப் பெரிய பணக்காரர்களில் ,இந்தியாவின் முதல் கோடீஸ்வரர் என்று குறிப்பிடப்படுகிறார்.1937 ஆம் ஆண்டில், அவர் உலகின் மிகப் பெரிய பணக்காரராக டைம் பத்திரிகையின் அட்டைப் பக்கத்தில் தோன்றினார்.1886 ஆம் ஆண்டு பிறந்த நிஜாம், பிரிட்டிஷ் இந்தியாவின் மிகப்பெரிய சுதேச மாநிலமான ஹைதராபாத் இளவரசர் மாநிலத்தை ஆட்சி செய்தார். ஹைதராபாத்தின் நவீனமயமாக்கலுக்கும் அவர் பங்களிப்பு செய்தார். மாநிலத்திற்கு மின்சாரத்தை அறிமுகப்படுத்தினார், உஸ்மானியா பல்கலைக்கழகம், உஸ்மானியா பொது மருத்துவமனை, ஹைதராபாத் ஸ்டேட் வங்கி, பேகம்பேட்டை விமான நிலையம் மற்றும் ஹைதராபாத் உயர் நீதிமன்றம் ஆகியவற்றை நிறுவினார்.5000 கிலோகிராம் தங்கத்தை தானம் செய்த கதை ஒரு கட்டுக்கதையாக இருந்தாலும், நிஜாம்கள் பரோபகார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அவர் இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பல்வேறு வழிகளில் பங்களித்தார்.1967 இல் மிர் உஸ்மான் அலி கான் காலமானபோது,அவரது இறுதிச் சடங்கில் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.

1 2 ... 87 88 89 90 91 92 93 ... 103 104

AD's



More News