25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தமிழக அணி தேசிய பெண்கள் கிக் பாக்சிங் போட்டியில் 'சாம்பியன்'.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழக அணி தேசிய பெண்கள் கிக் பாக்சிங் போட்டியில் 'சாம்பியன்'.

சென்னையை அடுத்தபையனூரில் உள்ள விநாயகா மிஷன்ஸ் ,ஆராய்ச்சி அறக்கட்டளை வளாகத்தில் ,கேலோ இந்தியா பெண்கள் தேசிய கிக் பாக்சிங் லீக் போட்டி ,3 நாட்கள் சீனியர், ஜூனியர், சப்-ஜூனியர் ஆகிய பிரிவுகளில் நடந்த இந்த போட்டியில் தமிழக அணி 11 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆசிய போட்டியில் பதக்கம் வென்றவரான நீனா, உலகக்கோப்பை போட்டியில் பதக்கம் வென்றவரான சுபாஷினி ஆகியோர் தங்கள் பந்தயங்களில் ,தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர். மராட்டியம் 9 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம்என 16 பதக்கங்களுடன் 2-வது இடம் பிடித்தது.

இந்திய பெண்கள் கபடி அணியின் முன்னாள் கேப்டன் கவிதா செல்வராஜ், காமன்வெல்த் வலுதூக்குதல் போட்டியில் பதக்கம் வென்றவரான டாக்டர் ஆர்த்தி, ஆகியோர் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக வருகை தந்து, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News