முடி உதிர்தல், வறண்ட சருமம், வளர்ச்சிதை மாற்றம், கருவறுதல், சுழற்சி மற்றும் பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் TSH, T3, T4 போன்ற தைராய்டு ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.தைராய்டு ஹார்மோன்களை சீராக வைத்துக்கொள்ள உதவும் ஒரு மூலிகை நீரை பற்றிய தகவல்களை ஆயுர்வேத நிபுணரான தீக்ஷா பவ்சர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.தேவையான பொருட்கள்தண்ணீர் - 1 கிளாஸ்தனியா – 2 டேபிள் ஸ்பூன்கறிவேப்பிலை 9-12உலர்ந்த ரோஜா இதழ்கள் - 1 டீஸ்பூன்செய்முறைதனியா, கறிவேப்பிலை மற்றும் உலர்ந்த ரோஜாஇதழ்களை தண்ணீரில் சேர்த்து 5-7 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். இதை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மற்றொரு முறை ஒரு டீஸ்பூன் தனியா விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் இதை பாதி அளவு வற்றும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும். இந்த அருமையான பானம் உங்கள் மனநிலை மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும்.நன்மைகள்தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்தும்தைராய்டு ஹார்மோன்களை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். சரும வறட்சி குறையும் முடி உதிர்வை தடுக்கலாம்.
அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும்.அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாக சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.ஆக்ஸிஜனேற்றங்கள், ஃபோலேட் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது.அவரைக்காய் நன்மைகள் எடை இழப்பை ஊக்குவித்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், பார்கின்சன் நோயின் அறிகுறிகளைக் குறைத்தல் மேலும் பிறப்புக் குறைபாடுகளை நிர்வகித்தல் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதலும் அடங்கும்.அவரைக்காயில் கனிசமான அளவு உடலுக்கு அவசிமான ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. அவரைக்காயில் நிறைவுற்ற கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரால் இல்லை.
முடவாட்டுக்கால் கிழங்கு ரசம் வைத்துக் குடித்தால் முடக்குவாதம், மூட்டுவலி, மூட்டு வீக்கம்,கழுத்துவலி, தோள்பட்டை வலி, முதுகுவலி சரியாகும். காய்ச்சல், செரிமானக்கோளாறுகள் போன்றவை சரியாவதுடன் ஆண்மைக்கோளாறு விலகும். ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு அடர்த்திக்குறைவு பிரச்சினை உள்ளவர்களுக்கும் இதுஅருமையான மருந்தாகும்.
வாழை மரத்தில் உள்ள வாழைப்பூ, வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பழம் என அனைத்துமே நல்லது மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கோளாறுகளை வாழைப்பூ சரி செய்யும். ரத்தத்தில் தேவையில்லாத கொழுப்பு சத்துக்களை இருந்தால் சரி செய்யும் வாழைப்பூ ரத்த ஓட்டம் சீராகவும் உதவி செய்யும். வயிற்று வலி உள்ள வயிற்று பிரச்சனை உள்ளவர்கள் உடல் வெப்பநிலையை குறைக்க நினைப்பவர்கள், மலட்டுத்தன்மை பிரச்சனை உள்ளவர்கள், ரத்த அழுத்தம், ரத்தசோகை உள்ளவர்கள் வாழைப்பூ சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்து வாழைப்பூ என்று சொல்லலாம், வாழைப்பூ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராக இருக்கும். வாழைப்பூவில் உள்ள நரம்பை நீக்கிவிட்டு நன்றாக வேக வைத்து, உப்பு போட்டு அவித்தோ அல்லது பொறியல் செய்தோ சாப்பிடலாம். வாழைப்பூவை வேகவைத்த சாறையும் அருந்தலாம்.