தைராய்டு ஹார்மோன்களை சீராக வைத்துக்கொள்ள உதவும் ஒரு மூலிகை நீர்
முடி உதிர்தல், வறண்ட சருமம், வளர்ச்சிதை மாற்றம், கருவறுதல், சுழற்சி மற்றும் பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் TSH, T3, T4 போன்ற தைராய்டு ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.தைராய்டு ஹார்மோன்களை சீராக வைத்துக்கொள்ள உதவும் ஒரு மூலிகை நீரை பற்றிய தகவல்களை ஆயுர்வேத நிபுணரான தீக்ஷா பவ்சர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தேவையான பொருட்கள்
தண்ணீர் - 1 கிளாஸ்
தனியா – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை 9-12
உலர்ந்த ரோஜா இதழ்கள் - 1 டீஸ்பூன்
செய்முறை
தனியா, கறிவேப்பிலை மற்றும் உலர்ந்த ரோஜா
இதழ்களை தண்ணீரில் சேர்த்து 5-7 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். இதை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
மற்றொரு முறை
ஒரு டீஸ்பூன் தனியா விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் இதை பாதி அளவு வற்றும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும். இந்த அருமையான பானம் உங்கள் மனநிலை மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும்.
நன்மைகள்
தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்தும்
தைராய்டு ஹார்மோன்களை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். சரும வறட்சி குறையும் முடி உதிர்வை தடுக்கலாம்.
0
Leave a Reply