25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


நலம் வாழ

Aug 27, 2023

பெருங்கடல்களில் ஆழமானது பசிபிக் பெருங்கடல்

ஐந்து பெருங்கடல்களில் பெரியது, ஆழமான பசிபிக் பெருங்கடல். இக்கடலுக்கு பெயரிட்டவர்  போர்ச்சுக்கலின் மெகல்லன். இவர் 1519ல் ஸ்பெயினில்  இருந்து ஐந்து கப்பல்களில் 280 மாலுமிகளுடன் கிழக்கு  நோக்கி பயணித்தார். ஒவ்வொரு பகுதியாக  கண்டறிந்த இவர், அமெரிக்க கண்டத்துக்கு அப்பால்  மேற்கே உள்ள கடலுக்கு 'பசிபிக் கடல்' என பெயர்  வைத்தார்.  இதன் பரப்பளவு 16.25  சதுர கி.மீ. இதன் சராசரி ஆழம் 14,040 அடி. அதிகபட்ச ஆழம் 35,797 அடி. பூமியின் மொத்த நீர் பரப்பளவில்  46% இக்கடலில் உள்ளது.

Aug 25, 2023

NO ஹை ஹீல்ஸ் NO ,NO,NO.

பெண்கள் அழகுக்காகச் செய்யும் எத்தனையோ விஷயங்கள் பல நேரத்தில் ஆபத்தில் முடிந்திருக்கிறது.ஹை ஹீல்ஸ் அணிவதால் ஏற்படும் அபாயங்கள்நாம் காலணிகள் தேர்வு செய்யும்போது அது நம் பாதத்தை காக்குமா என பார்த்துத்தான் தேர்வு செய்ய வேண்டும்அழகாகக் காட்டுமா என்பதைப் பார்த்து வாங்குவது நிச்சயம் விபரீதத்தில்தான் போய் முடியும்குதிகால் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளதுகால் தடுமாறும் நேரங்களில் தசை நாண்களில் அதிகளவு பாதிப்பு, தசை முறிவு போன்ற பிரச்னைகள் ஏற்படும்நம் உடலின் மொத்த எடையும் முதுகெலும்பு மூலமாகச் சமன் செய்யப்படும்ஹீல்ஸ்அணியும்போது குதிகால் சற்று உயரமாக இருக்கும்.தொடர்ந்து ஹீல்ஸ் அணியும்போது மூட்டு ஜவ்வில் தேய்மானம் ஏற்படலாம்.ப்ளாட் காலணிகளைத் தேர்வு செய்து உடலின் ஆரோக்கியம் காப்போம்.

Aug 24, 2023

கல்லீரலைச் சரிசெய்யும் விளாம்பழம்

விளாம்பழத்தில் உள்ள சத்துக்கள் :- விளாம்பழங்களில் 70 சதவிதம்  ஈரப்பதம், 7.3 சதவிதம் புரத சத்து, 0.6 சதவிதம் கொழுப்பு சத்து, 1.9 சதவிதம் தாது உப்புக்கள், 100 கிராம் பழத்தில் 70 மி.கி. ரிபோபிளேவின் மற்றும் 7.2 சதவிதம் சர்க்கரைச் சத்து ஆகியன அடங்கியுள்ளன.விளாம்பழம் சாப்பிடுவதால் ரத்தம் அதிகரித்து, ரத்தத்தில் உள்ள கெட்ட செல்களை அழிக்கிறது.உடலில் உண்டாகும் அஜீரண குறைபாடு, பசியின்மை, கோழை அகற்றுதல், பல் எலும்பு உறுதிபட, உடல் உள் உறுப்புகள் வலுப்பட என பல வகைகளில் விளாம்பழம் சிறப்பாக பலன் தருகிறது.விளாம்பழத்தை தினமும் சாப்பிடுவதால், மூட்டு வலி, உடல் வலி போன்றவற்றை போக்கும். மேலும் இதய துடிப்பை ஒரே சீராக வைத்திருக்கும்.இருமல், கோழை, காசநோய், தொண்டைப்புன், ஆஸ்துமா நோய் இருப்பவர்கள் விளாம்பழத்துடன் திப்பிலிப்பொடி சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது.அடிக்கடி விக்கல் பிரச்னை இருப்பவர்கள், விளாம்பழம் சாப்பிட்டுவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை கூடவே இல்லை என வருத்தப்படுபவர்கள், விளாம்பழ டானிக் சாப்பிட்டுவந்தால், உடல் எடைகூடும்.கல்லீரலைச் சரிசெய்யும் ஆற்றல். விளாம்பழத்துக்கு உண்டு. கல்லீரல் சுருக்க நோயில் இருந்து கல்லீரவைக் காக்கும் ஆற்றல் இருப்பதால், குடிநோயில் இருந்து மீண்டவர்கள் கல்லீரலில்  ஏற்பட்ட புண்கள் ஆற விளாம்பழத்தை சாப்பிடலாம்.

Aug 22, 2023

  இருமல்,சளி  வெளியேற வால் மிளகு

வால் மிளகு.காரத்தன்மை உடையது.இதை சாப்பிடும் பொழுது சிறுநீரை பெருக்கும், வாயு பிரச்சினை சரிசெய்யும், கோழையை அகற்றும் இது போன்ற பிரச்சினைகள் சரி செய்யும். பல் சம்பந்தபட்ட பிரச்சினைகள் குணமாக கறிவேப்பிலைப் பொடி, லவங்கம், கடுக்காய், நெல்லிவற்றல், வால்மிளகு சேர்த்துத் தயாரித்தபல்பொடியில்பல்துலக்கினால்குணமாகும்.உடலில் HEATஉண்டாக்கி சளியை வெளியேற்றக்கூடியது. வயதான காலத்தில் சிலருக்கு சளி சேர்ந்து மிகுந்த தொல்லையை உண்டாக்கும் அப்படிப்பட்ட நேரங்களில் வால் மிளகுத்தாள்5 சிட்டிகை எடுத்து தேனுடன் கலந்து தினமும்2 வேளை சாப்பிட்டால்" சளித்தொல்லை நீக்கி குணம் கிடைக்கும்..வால் மிளகு எண்ணெய்ப்பசையும், காரமான விறுவிறுப்பும், நறுமணமும் கொண்ட இது நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்..

Aug 21, 2023

தைராய்டு ஹார்மோன்களை சீராக வைத்துக்கொள்ள உதவும் ஒரு மூலிகை நீர்

முடி உதிர்தல், வறண்ட சருமம், வளர்ச்சிதை மாற்றம், கருவறுதல், சுழற்சி மற்றும் பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் TSH, T3, T4 போன்ற தைராய்டு ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.தைராய்டு ஹார்மோன்களை சீராக வைத்துக்கொள்ள உதவும் ஒரு மூலிகை நீரை  பற்றிய தகவல்களை ஆயுர்வேத நிபுணரான தீக்ஷா பவ்சர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.தேவையான பொருட்கள்தண்ணீர் - 1 கிளாஸ்தனியா – 2 டேபிள் ஸ்பூன்கறிவேப்பிலை 9-12உலர்ந்த ரோஜா இதழ்கள் - 1 டீஸ்பூன்செய்முறைதனியா, கறிவேப்பிலை மற்றும் உலர்ந்த ரோஜாஇதழ்களை தண்ணீரில் சேர்த்து 5-7 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். இதை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மற்றொரு முறை ஒரு டீஸ்பூன் தனியா விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் இதை பாதி அளவு வற்றும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும். இந்த அருமையான பானம் உங்கள் மனநிலை மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும்.நன்மைகள்தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்தும்தைராய்டு ஹார்மோன்களை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். சரும வறட்சி குறையும் முடி உதிர்வை தடுக்கலாம்.

Aug 20, 2023

இளைத்த உடல் தேற

அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும்.அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாக சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும்  தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.ஆக்ஸிஜனேற்றங்கள், ஃபோலேட்  மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது.அவரைக்காய் நன்மைகள் எடை இழப்பை ஊக்குவித்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், பார்கின்சன் நோயின் அறிகுறிகளைக் குறைத்தல் மேலும் பிறப்புக் குறைபாடுகளை நிர்வகித்தல் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதலும் அடங்கும்.அவரைக்காயில் கனிசமான அளவு உடலுக்கு அவசிமான ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. அவரைக்காயில் நிறைவுற்ற கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரால்  இல்லை.

Aug 18, 2023

முடவாட்டுக்கால் கிழங்கு ரசம்

முடவாட்டுக்கால் கிழங்கு ரசம் வைத்துக் குடித்தால் முடக்குவாதம், மூட்டுவலி, மூட்டு வீக்கம்,கழுத்துவலி, தோள்பட்டை வலி, முதுகுவலி சரியாகும். காய்ச்சல், செரிமானக்கோளாறுகள் போன்றவை சரியாவதுடன் ஆண்மைக்கோளாறு விலகும். ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு அடர்த்திக்குறைவு பிரச்சினை உள்ளவர்களுக்கும் இதுஅருமையான மருந்தாகும்.

Aug 16, 2023

 நன்மைகளைத் தரும் வாழைப்பூ

வாழை மரத்தில் உள்ள வாழைப்பூ, வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பழம் என அனைத்துமே நல்லது மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கோளாறுகளை வாழைப்பூ சரி செய்யும். ரத்தத்தில் தேவையில்லாத கொழுப்பு சத்துக்களை இருந்தால் சரி செய்யும் வாழைப்பூ ரத்த ஓட்டம் சீராகவும் உதவி செய்யும்.  வயிற்று வலி உள்ள வயிற்று பிரச்சனை உள்ளவர்கள் உடல் வெப்பநிலையை குறைக்க நினைப்பவர்கள், மலட்டுத்தன்மை பிரச்சனை உள்ளவர்கள், ரத்த அழுத்தம்,  ரத்தசோகை  உள்ளவர்கள் வாழைப்பூ சாப்பிடலாம்.  சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்து வாழைப்பூ என்று சொல்லலாம், வாழைப்பூ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராக இருக்கும்.  வாழைப்பூவில் உள்ள நரம்பை நீக்கிவிட்டு நன்றாக வேக வைத்து, உப்பு போட்டு அவித்தோ அல்லது பொறியல் செய்தோ சாப்பிடலாம். வாழைப்பூவை வேகவைத்த சாறையும்  அருந்தலாம். 

1 2 ... 36 37 38 39 40 41 42 43 44 45

AD's