முடக்கத்தான் கீரை வீக்கத்துக்கு எதிரான குணங்கள் கொண்டது.இது மூட்டுவலி, மூட்டுவீக்கம் மற்றும் ருமட்டாய்ட் ஆர்த்ரட்டிஸ் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வாகும்.கால்களில் ஏற்படும் இறுக்கம் மற்றும் வாதநோய் ஆகியவற்றுக்கு இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.சளி, நரம்பு கோளாறுகள், இடுப்பு வலி நோய் ஆகியவற்றுக்கு சிறப்பாக சிகிச்சையளிக்கிறது.ஆர்த்ரிட்டிஸ், மூட்டு வலி மற்றும் கீல்வாத நோயாளிகளுக்கு குறிப்பிட்ட அளவு நிவாரணம் கொடுக்கிறது.இதன் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் ருமட்டாய்ட் ஆர்த்ரிட்டிஸ் மற்றும் நரம்பியல் கோளாறுகளுக்கு சிறப்பான சிகிச்சையளிக்கிறது.காது வலி, சளி மற்றும் இருமலைப் போக்குவதற்கும் முடக்கத்தான் கீரை பயன்படுத்தப்படுகிறது.இதில் உள்ள சிறப்பான வாயுத்தன்மை, மிதமான மலமிளக்கியாக செயல்படுகிறது.
பல வகையான நோய்களைத் தடுக்கவும் கட்டுப் படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எலுமிச்சை இலைகளை நீரில் கொதிக்க வைத்து டீயாகவும் அருந்தலாம். இலைகளைப் பொடி செய்தும் உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம்.எலுமிச்சை இலைகளில் மிகுந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் உடலின் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது. இது ஒற்றைத் தலைவலி மற்றும் மனநலப் பிரச்சனைகளை வெகுவாக குறைக்கிறது.இதில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் ஆல்கலாய்டுகள் தூக்கமின்மை மற்றும் தூக்கம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது. \மேலும், சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுப்பதில் மிகச் சிறப்பாக செயலாற்றுகிறது.இதில் காணப்படும் பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து எடையைக் குறைப்பதில் திறம்பட செயல் படுகிறது.
மோர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சிலர் இதை இரவு உணவோடு குடிக்க விரும்புகிறார்கள், மற்றவர்கள் மாலையில் குடிக்கிறார்கள். ஆனால் மோர் குடிக்க சரியான நேரம் ?ஒரு கிளாஸ் மோர் குடிப்பதால் கால்சியம், வைட்டமின்கள், பொட்டாசியம், புரோபயாடிக்குகள், பாஸ்பரஸ், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.மோர் செரிமானத்தை ஊக்குவிக்க உதவுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் ஆரோக்கியமான பாக்டீரியா மற்றும் லாக்டிக் அமிலம் உள்ளது, இது உங்கள் குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கிறது.கோடை வெயிலில் மோர் குடித்தால் புத்துணர்ச்சி பெறலாம். இது உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது.உடல் ஆரோக்கியமான தசைகள், தோல் மற்றும் எலும்புகளை உருவாக்க மோர் உதவுகிறது. இதில் பாலை விட குறைவான கலோரிகள் மற்றும் அதிக கால்சியம், வைட்டமின் பி12 மற்றும் பொட்டாசியம் உள்ளது. நாளின் எந்த நேரத்திலும் நீங்கள் குடிக்கலாம்.உண்மையில், இந்த பானத்தை நாளின் எந்த நேரத்திலும் நீங்கள் குடிக்கலாம். ஆனால் யாராவது வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட்டால் வெறும் வயிற்றில் மோர் குடிப்பது நல்லது என்று கருதப்படுகிறது.இதற்கு, தயிரை ஒரு பிளெண்டரில் போட்டு மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை கலக்கவும். அதில் குளிர்ந்த நீரை சேர்த்து மீண்டும் குறைந்த வேகத்தில் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை கலக்கவும். இப்போது அதனுடன் கருப்பு உப்பு, புதினா தூள், சீரகத்தூள் சேர்த்து கலந்து குடிக்கவும்.
சளி, இருமல்: மழைக்காலங்களில் தண்ணீரில் 3, 4 தூதுவளை போட்டுக்கொதிக்க வைத்து குடித்தால் இருமலை கட்டுப்படுத்தும். இருமல் உண்டாகும்போது, சிறிதளவு தூதுவளை இலையை கழுவ, மென்று சாப்பிட, இருமல் குறையும். ஆவி பிடிக்கப் பயன்படுத்தப்படும் மூலிகைகளுள் தூதுவளை முக்கியமானது.தூதுவளையின் மருத்துவ குணங்களை பார்த்தால், இருமல், சளியை விரட்டியடிக்கக்கூடியது.. தண்ணீரில் தூதுவளை இலைகளை போட்டுக் காய்ச்சி குடித்துவந்தால், நம்மை சளி, காய்ச்சல் என்றுமே அண்டாது.குறிப்பாக மழைக்காலங்களிலும், குளிர்காலங்களிலும் இந்த செடியின் தேவை நிச்சயம் இருக்கும்.. இந்த இலையின் சாற்றை எடுத்து, அதனுடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து குடித்தால், சளி, இருமல் குணமாகும். தூதுவளை இலைகளை தண்ணீரில் சேர்த்து குடித்தால், பசி உணர்வு அதிகமாகும்.. உடலின் கெட்ட கழிவுகளும் நீங்கும்...
கீரைகளில் மணத்தக்காளி கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட வேண்டும். வயிற்றுப்புண், வாய்ப்புண்களுக்கு இந்த கீரை மிகவும் நல்லது.. அதேபோல, அகத்திக்கீரையை சாப்பிடலாம். அகம் + தீ + கீரையே அகத்திக்கீரையாகும். அதாவது உடலுள்ள உஷ்ணத்தை விரட்டக்கூடியது இந்த அகத்திக்கீரைகள்.. இந்த 2 கீரைகளையும் சமைக்கும்போது, காரம் அதிகம் சேர்க்காமல், வாரம் 2முறையாவது சாப்பிட வேண்டும். எந்த கீரை செய்தாலும், பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.
அடிக்கடி கை உரிதல், வறண்ட சருமம், சூரிய ஒளி தாக்குதல், சொரியாசிஸ், கெமிக்கல் நிறைந்த சோப், க்ரீம்கள், பருவ மாற்றம், அலர்ஜி, அரிப்பு போன்ற காரணங்களால்தான் கைகளில் தோல் உரிகிறது. வறண்ட சருமத்தால் அடிக்கடி தோல் உரிகிறதெனில் வெதுவெதுப்பான நீரில் கைகளை10 நிமிடங்கள் மூழ்க வையுங்கள். இதனால் கைகள் மென்மையாகும். வறட்சி நீங்கும்.விட்டமின்E எண்ணெய்யைகைகளில் தடவி மசாஜ் செய்தால் ஈரப்பதம் தக்க வைக்கப்படும். கைகளும் பளபளக்கும்.கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி கைகளில் மசாஜ் செய்து காயவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவி தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள்.தேங்காய் எண்ணெய்யைகைகளில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்தால் கைகள் பளபளக்கும்.
அன்னாசி பழம் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை எரிக்கும் ஆற்றலும் உண்டு. பேரிக்காய் கரையும் நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட பழங்களில் ஒன்று என்பதால், இவை உடலில் கொழுப்பு சேருவதைத் தடுக்க உதவும். வாழைப்பழத்தில் நார்ச்சத்துக்களும் பொட்டாசியமும் அதிகமாக இருப்பதால், நம்முடைய உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்க உதவும். அவகேடோ உடலில் உள்ள கெட்ட கொலஸ்ராலைக் குறைத்து நல்ல கொலஸ்டிராலின் அளவை அதிகரிக்கச் செய்யும். திராட்சையில் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருப்பதால் உடலின் ரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்க உதவி செய்யும். டிராகன் பழம் நார்ச்சத்துக்கள் மிக அதிக அளவில் இருப்பதால் ரத்தத்தில் ஏற்கனவே கடினமாக படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்ற முடியும். ஆப்பிளில் வைட்டமின் சி, பொட்டாசியம், கரையும் நார்ச்சத்துக்கள் ஆகியவை அதிக அளவில் இருப்பதால் இது உயர்கொலஸ்ட்ராலை குறைக்கும் வேலையை செய்கிறது.
கோடையில் நீர்ச்சத்து குறைபாடு பிரச்சனை அதிகம். சுற்றுச்சூழலில் அதிக வெப்பநிலை காரணமாக, உடலில் நீர் பற்றாக்குறை உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நமக்கு அதிக வாந்தி, மயக்கம் அல்லது செரிமான பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கும். எனவே, கோடையில் திரவங்களை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.கோடையில் நமக்கு நிவாரணம் என்றால் அது பழங்களிலும், பழச்சாறிலும் தான் இருக்கிறது. பலரும் ஜூஸ்ஸைகுடிப்பார்கள். ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு அப்படி இல்லை. இரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்யும்.மாம்பழ ஜூஸ்,தர்பூசணி சாறு,கரும்பு சாறு ஜூஸ்கள் குடிக்கக் கூடாதுஉடலில் நீர் பற்றாக்குறை தவிர்க்க சர்க்கரை நோயாளிகள் கோடையில் இளநீர் , சப்ஜா விதைகள் தண்ணீர் , எலுமிச்சை நீர் , மோர் குடிக்கலாம்சர்க்கரை நோய்க்கு இளநீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவு. இது உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். இளநீர் உடல் சூட்டு பிரச்சனைக்கும் நிவாரணம் அளிக்கும்.சப்ஜா விதை நீர் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இதன் நுகர்வு சோர்வு மற்றும் பலவீனத்தையும் குறைக்கிறது.எலுமிச்சை நீரும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க ஒரு நல்ல வழி. இதனால் உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கலாம். ஆனால் இனிப்புக்காக நீங்கள் எதையும் சேர்க்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.நீரிழிவு நோயாளிகளுக்கு மோர் ஒரு ஆரோக்கியமான உணவாகும். இதில் புரோபயாடிக்குகள் உள்ளன, இது செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தினசரி உணவில் மோர் சேர்த்துக்கொள்ளலாம்.இதில் ஏதேனும் சந்தேகமோ அல்லது உங்கள் உடலில் வேறு ஏதும் தீவிரத்தன்மையோ இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏற்படக்கூடிய (PCOS) வராமல் தடுக்க, காய்கறி சாலட் சாப்பிட்டு வரலாம் . வேகவைத்த இனிப்பு உருளைக்கிழங்கு, வேகவைத்த காளான், வேகவைத்த ப்ரோகோலி, துருவிய பீட்ரூட் மற்றும் மாதுளை சேர்க்கவும் இந்த காய்கறி சாலட்டை தொடர்ந்து சாப்பிட்டு வர, கர்ப்பப்பை ஆரோக்கியமடையும், நீர்க்கட்டி உருவாகாமல் தடுக்கும் மேலும் ஊற வைத்த சியா விதைகளை பாதாம் பாலுடன் சேர்த்து பருகி வரலாம்" அவகேடோ பழத்தை பிரட் டோஸ்டில் வைத்து சாப்பிட்டு வந்தால் (PCOS) A வராமல் தடுக்கும் . வெள்ளரிக்காய், கேரட் மற்றும் குடமிளகாய் போன்ற காய்கறி கருப்பைக்கு மிகவும் ஆரோக்கியமானவை .
குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படும்போது, ஓமவள்ளி இலை சாற்றைக் குழந்தைகளின் மார்புப் பகுதியில் மென்மையாகத் தடவி விடலாம்.. அதேபோல, வயிறு உப்பி மலம் சரியாக வெளியேறாமல் இருக்கும் குழந்தைகளுக்கு, இதன் இலைச்சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொடுக்கலாம். இலைச்சாறு சற்றுக் காரமாக இருக்கும் என்பதால், தேன் கலந்து சாப்பிடலாம். இந்த கற்பூரவல்லி இலைகளை கஷாயம் போல தயாரிக்கலாம்.. அதாவது, கொத்தமல்லி விதை, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை எடுத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து பொடித்து கொள்ள வேண்டும். பிறகு, ஒரு வாணலியில் 2 கப் தண்ணீரை ஊற்றி ஒரு கைப்பிடி கற்பூரவல்லி இலைகளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு, மிக்ஸியில் அரைத்த பொடிகளை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து கொதிக்க விட்டு சுண்ட காய்ச்ச வேண்டும். இறுதியில், வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்தால், கற்பூரவல்லி கஷாயம் தயார். இருமல், சளி, தொண்டை வலி, போன்றவற்றுக்கு மிகவும் நல்லது..