4TH APRIL விளையாட்டு போட்டிகள் .
ஹாக்கி .
இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) ஹாக்கி இந்தியா அமைப்பு (எச்.ஐ.,) சார்பில் ஐ.பி.எல்., பாணியில் ஹாக்கி தொடர் கடந்த 2013 துவக்கப் பட்டது. ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பின், இத் தொடரின் ஆறாவது சீசன், சமீபத்தில் நடந்தது. இதை டிவி, இணையத ளத்தில் பார்த்தவர்கள் விபரம், ஒட்டுமொத்தமாக 4.08 கோடி பேர் கண்டு ரசித்துள்ளனர் ஆண்களுக்கான பைனலை 30.7 லட்சம் பேர், பெண்கள் பைனலை 29.2 லட்சம் பேர் பார்த்தனர். ஹாக்கி விளை யாடும் 18 நாடுகளில், இத் தொடரை 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
குத்து சண்டை
உலக குத்துச் சண்டை கோப்பை தொடர் பிரேசிலில் . 19 நாடு களில் இருந்து 130 பேர் பங் கேற்றுள்ளனர். 70 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஹிதேஷ் பிரான்சின் மக்கான் டிரவோர் மோதினர். இதில் ஹிதேஷ், 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் தேசிய சாம்பி யன் ஜடுமானி சிங் (50 கிலோ), முன்னாள் ஆசிய சாம்பியன், உஸ்பெகிஸ்தானின் அசில்பெக் ஜலிலோ விடம் 2-3 என தோல்வி யடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.
0
Leave a Reply