கிராண்ட் செஸ் டூர்: முதல் முறையாக சாம்பியன் ஆன பிரக்ஞானந்தா.
அமெரிக்கா: ‘கிராண்ட் செஸ் டூர்’ தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்தார்.
‘கிராண்ட் செஸ் டூர்’ தொடரின் 11வது சீசன் 5 சுற்றுகளாக நடைபெற்றது. இதில் சிறப்பாக செயல்பட்ட ‘டாப்-4’ வீரர்கள், அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
முதலில் அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானா, சக வீரர் வெஸ்லி சோவை தோற்கடித்தார்.
இறுதிப்போட்டியில் 4 ‘பிளிட்ஸ்’ ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் ‘டிரா’ ஆனது. 2வது ஆட்டத்தில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்ததால் இருவரும் 12-12 என சமநிலையில் இருந்தனர்.
3வது ஆட்டத்தில் வெள்ளைக் காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 48வது நகர்த்தலில் வெற்றி பெற்று 14-12 என முன்னிலை பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற கடைசி ஆட்டம் ‘டிரா’ ஆனது.
இதன் மூலம் பிரக்ஞானந்தா 15-13 என்ற புள்ளிக்கணக்கில் ‘திரில்’ வெற்றி பெற்று, கிராண்ட் செஸ் டூர் தொடரில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
0
Leave a Reply