சாமை பாயாசம்.
தேவையான பொருட்கள்-
100 gm சாமை,125 - 150 கிராம் வெல்லம் பொடித்தது,
1/2 டம்ளர் பால்,2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்,
1டேபிள்ஸ்பூன் நெய்,10 முந்திரி பருப்பு,
1/2டீ ஸ்பூன் ஏலக்காய் சுக்கு பொடி,
செய்முறை-
சாமையை நன்கு வறுத்துக் கொள்ளவும் பிறகு தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று முறைகழுவி விட்டு வேறு தண்ணீரில் அரை மணி நேரம் வரை ஊற விடவும். பிறகு மூன்று டம்ளர்அளவு தண்ணீர்விட்டு நன்கு வேகவிடவும். 15நிமிடத்தில் வெந்துவிடும். கெட்டியாகஇருந்தால் தேவைப்பட்டால் பாயாசம் வைக்கும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
வெல்லத்தை பொடித்து வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் சுக்குபொடி எடுத்து வைத்துக் கொள்ளவும். நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.ஏலக்காய் சுக்கு பொடி சேர்ப்பதால் பாயாசம் வாசமாக சுவையாக இருக்கும்..
சாமை வெந்த பிறகு வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்து விட்டு கொதிக்கவிடவும் வெல்லம்கரைந்ததும் தேங்காய் துருவல் ஏலக்காய் சுக்கு பொடி சேர்த்து கலந்து விடவும். கடைசியாகநெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு சேர்க்கவும்.சுவையான சாமை பாயசம் தயார்.
0
Leave a Reply