25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அழகுக் குறிப்பு

Sep 04, 2023

முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுத்து இளமைத் தோற்றத்தைத் தரும் உருளைக்கிழங்கு 

உருளைக்கிழங்கு முகம் மற்றும் உடலின் மற்ற பகுதிகளில் உள்ள தோலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். உருளைக்கிழங்கை வேகவைத்து அரைத்து பசும்பாலில் கலந்து முகத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகத்தில் உள்ள எண்ணெய்ப் பசை நீங்கும். இது முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை முற்றிலும் தடுத்து முகத்திற்கு அழகு சேர்க்கிறது. முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுத்து இளமைத் தோற்றத்தைத் தரும். சரும வறட்சியைத் தடுக்கிறது மற்றும் சருமத்தை ஈரப்பதமாகவும் மிருதுவாகவும் வைத்திருக்கும்

Sep 02, 2023

வயதான தோற்றத்தை தடுக்க....

சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள் தடுத்து இளமை தோற்றம் பெற உதவும் மூலிகைகள். இலவங்கப்பட்டை மூலிகை சருமத்தில் நெகிழ்ச்சி இழப்பை தடுக்க உதவுகிறது. இது சருமத்தில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பதோடு முகப்பருவுக்கு காரணமான பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கிறதுதுளசி இலைகள் வயதான அறிகுறிகளைத் தடுக்க செய்கிறது. குறிப்பாக, சூரிய ஒளியின் புறா ஊதாக் கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறதுகிராம்பு ஃப்ரீ ரேடிக்கல் எதிர்க்கும் பண்புகளைக் கொண்டிருக்கும். அதிலுருக்கும் ஆன்ட்- ஆக்ஸிடண்ட் சுருக்கம் மற்றும் கோடுகளை குறைத்திட பெரிதும் உதவுகிறது.இஞ்சியில் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் பினாலிக் கலவைகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் தவிர, அதிகளவு ஆக்ஸிஜனேற்றம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.குக்குலு சக்திவாய்ந்த மூலிகை சுருக்கங்கள் மற்றும் கோடுகளை தடுக்க உதவுகிறது. இதுதவிர, ஃப்ரீ ரேடிக்கல் எதிர்க்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.அஸ்வகந்தாவில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும் பண்புகள் உள்ளது. இதிலுள்ள ஆல்கலாய்டுகள், சரும செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறதுஆர்கனோ ஆன்டிஆக்ஸிடண்ட்மற்றும் ஃபிளாவனாய்டுகள் அடங்கிய சக்தி வாய்ந்தமூலிகையாகும். இது ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தைத் தடுப்பதில் பெரிதும் உதவுகிறதுசேஜ் இலையில் பிளாவனாய்டுகள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன. இவை சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் போன்ற வயதான அறிகுறிகளை மாற்ற பெரிதும் உதவுகிறது.

Sep 01, 2023

உடலை அழகாக வைத்துக் கொள்ள வெந்தயக் கீரை

உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் வெந்தயக் கீரையை அடிக்கடி சாப்பிடலாம். உடலை அழகாக வைத்துக் கொள்வதிலும், வனப்பை தக்க வைப்பதிலும், வெந்தயத்தின் பங்கு அலாதியானது.. தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் + சிறிது கொழுந்தாக இருக்கும் கறிவேப்பிலை இரண்டையும் உப்பு சேர்த்த தயிரில் கலந்து ஊற வைத்து, தினமும்சாப்பிட்டாலே தோலில் மினுமினுப்பு வரும். ஒரு ஸ்பூன் வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பிறகு பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம். தீக்காயங்கள்: இந்த கீரையை பச்சையாகவே, அரைத்து தீக்காயங்களுக்கு பற்றுப்போட்டால் காயம் குணமாவதோடு குளிர்ச்சியாகவும் இருக்கும்.நாள்பட்ட சொறி, சிரங்கு உள்ளிட்ட அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் இந்த கீரையை அரைத்து பற்று போடலாம்.

Aug 31, 2023

சுருட்டை முடி பராமரிக்க

சுருட்டை முடி உள்ளவர்கள்  வாரத்திற்கு ஒருமுறையாவது தலைமுடியை ஆழமாக கண்டிஷனிங் செய்ய வேண்டும்.கூந்தலை அலசுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள்.இது முடி வறண்டு போவதை தடுக்கிறது. முடிக்கு எண்ணெய் கொண்டும் மசாஜ் செய்து வரலாம்.சுருள் கூந்தல் இருப்பவர்கள் ஷாம்பு பயன்படுத்தும் முன்பு, கூந்தலுக்கு ஈரப்பதத்தை அளிக்க, நிச்சயமாக எண்ணெய் அல்லது ஹேர் மாஸ்க் ஏதாவதை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வது, ஷாம்பு போட்டு ஹேர்வாஷ் செய்த பிறகு கூந்தல் வறண்டு போகாமல் தடுக்க உதவும். கிளிசரின், கற்றாழை, ஷியா பட்டர் உள்ளிட்ட மைல்டான ஷாம்பு வகைகள் கிடைக்கின்றன. இவை ஸ்கால்ப்பை சுத்தமாக வைத்திருக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் சுருள் முடிக்கு தேவையான ஈரப்பதத்தையும் அளிக்கிறது. வழக்கமான கூந்தலை விட சுருள் கேசத்துக்கு கூடுதலாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். கண்டிஷனரை நேரடியாக உள்ளங்கையில் ஊற்றி, கூந்தலின் நீளத்துக்கு அப்ளை செய்ய வேண்டும். முதலில், கூந்தலில் சிக்கு நீக்கி விட்டால், கண்டிஷனரை எளிதாக அப்ளை செய்ய முடியும். நீங்கள் எந்த பிராண்டு ஷாம்பூவை பயன்படுத்துகிறீர்களோ, அதே பிராண்டு கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள். சில கண்டிஷனர்களில், தேங்காய் எண்ணெய், ஷியா பட்டர் போன்ற இயற்கையாக டீ-டாங்கில் செய்ய உதவும் பொருட்களோடு வருகிறது. ஏற்கனவே கூறியது போல, உங்கள் முடியை வறட்சியாக்கும் சல்பேட், பாராபென் உள்ளிட்ட ரசாயனங்கள் இல்லாத கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள்.தலைக்கு குளித்து வந்த பின்னர், பருத்தி துணி அல்லது டவல் பயன்படுத்தி, தலையை உலர்த்தவும். சுருள் சுருளான கூந்தல் அப்படியே இருக்க, தற்போது பலவிதமான ஜெல் பொருட்கள் கிடைக்கின்றன. லைட்வெயிட் கர்லிங் ஜெல்லை வாங்கி நீங்கள் ஹேர் வாஷ் செய்யும் போதெல்லாம் பயன்படுத்தலாம். இது உங்கள் சுருள் கேசத்திற்கு அதிக ஹைட்ரேஷன் வழங்கி, 2 நாட்கள் வரை ஈரப்பதத்தை நீட்டிக்கச் செய்யும்.

Aug 30, 2023

மாதுளம் பழத் தோல் பொடி

மாதுளை பழத்தை உரித்து சாப்பிட்டு விட்டு அதன் தோலை இனி தூக்கி வீசாதீர்கள். அதை நன்கு கழுவி சுத்தம் செய்து வெயிலில் நன்கு உலர்த்தி, பொடி செய்து அதை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.மாதுளம்பழத் தோலைப் பொடி செய்து, அதனுடன் சம அளவு பயத்தம் பருப்பைக் கலந்து, குளித்தாலோ, உடலில் பூசிக்கொண்டாலோ, வியர்வை துர்நாற்றம் நீங்கும்; உடலுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.இந்தப் பொடியை நீருடன் கலந்து கொப்பளிக்க, வாய் துர்நாற்றம் நீங்கும்..மாதுளம்பழத் தோலின் பொடியுடன், பால், ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் ஃபேஸ்பேக் போடலாம். மாதுளம்பழத் தோலைப் பொடித்து,தண்ணீர்விட்டுக் குழைத்து, சருமம், தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளித்தால், முகப்பரு உள்ளிட்ட சருமப் பிரச்னைகள், முடி உதிர்தல் நீங்கும்.சருமப் பிரச்சினைகள் பலவற்றிற்கும் மாதுளைப் பொடியைப் பயன்படுத்தலாம். குறிப்பாக ஒரே மாதிரி நிறம் இல்லாமல் (uneven skin tone) இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் மாதுளை பொடியுடன் சிறிது தேன் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.பிக்மண்டேஷன் உள்ளவர்கள் இதை வாரம் இரண்டு முறை முயற்சி செய்து பார்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.வழக்கமாகக் குடிக்கும் தேநீருக்கு பதிலாக இந்த பொடியைச் சேர்த்து டீ வைத்துக் குடிக்கலாம்.கஷாயம் போட்டு, அல்லது சுடுநீரில் கலந்தும் குடிக்கலாம். வயற்றில் உள்ள புழுக்கள் முதல் பல பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்.

Aug 29, 2023

கழுத்தைச் சுற்றிலும் இருக்கும் கருமை மறைய சில TIPS

உடல் வெப்பம், வியர்வை, ஒவ்வாமை காரணமாக கழுத்தைச் சுற்றிலும் கருப்பாக இருக்கலாம்.2 ஸ்பூன் ஆப்பில் சிடார் வினிகருடன் நான்குஸ்பூன் தண்ணீர் கலந்துகொள்ளவும்..பஞ்சில் நனைத்து கழுத்தைச் சுற்றிலும் தேய்து வர கருமை நீங்கும்.2 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து பேஸ்ட் போல் கரைத்து, கழுத்தில் பேக் போல் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.உருளைக்கிழங்கை அரைத்து அதை சாறு பிழிந்து ,கழுத்தை சுற்றிலும் தேய்த்து வர கருமை நீங்கும்.2  tsp கடலை மாவு, 1/2tsp மஞ்சள், எலுமிச்சை சாறு 1/2 tsp, ரோஸ் வாட்டர் எனஅனைத்தையும் பேஸ்ட் போல் கலந்து ,கழுத்தை சுற்றிலும் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள்.தயிருடன் எலுமிச்சை சாறு பிழிந்து அதை கழுத்தை சுற்றிலும் தடவுங்கள் நல்ல பலன் தெரியும்.

Aug 28, 2023

சருமத்தை ஜொலிக்க செய்யும் வெள்ளரிக்காய் டோனர் 

சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க டோனர் பயன்படுத்த வேண்டும். வெள்ளரிக்காய் உதவியுடன் வீட்டிலேயே எளிதாக டோனர் தயாரிக்கலாம்.வெள்ளரிக்காய்  டோனர் தயார் செய்வது :-முதலில் வெள்ளரிக்காயின் தோலை நீக்கி அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.பின்பு வெள்ளரிக்காய் துண்டுகளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் குறைந்த தீயில் வைத்து 5-7 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இந்த கலவையை ஆற வைத்து மிக்ஸியில் மைய அரைத்து எடுத்து கொள்ளவும். பின்பு இதை வடிக்கட்டி சாறை மட்டும் தனியாக எடுக்கவும். இந்த சாறை பாட்டிலில் ஊற்றி வைத்து டோனராக பயன்படுத்தலாம். தேவைப்பட்டால் இதில் ரோஸ் வாட்டர் மற்றும் விட்ச் ஹசல் சாறையும் சேர்த்து பயன்படுத்தலாம். முகத்திற்கு பல நன்மைகளை வழங்கும் வெள்ளரிக்காய் டோனர் தயார். எப்படி பயன்படுத்துவது- முதலில் முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும். இப்போது வெள்ளரிக்காயில் செய்யப்பட்ட இந்த டோனரை முகத்தில் தடவவும். இதை பயன்படுத்தினால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.குறிப்பு: வெள்ளரிக்காயில் செய்யப்பட்ட இந்த டோனரை 2-3 நாட்களுக்கு மேல் பயன்படுத்த கூடாது.

Aug 26, 2023

அழகுப் பொருள் முல்தானி மட்டி

,எண்ணெய் பசை சருமம், முகப்பருவால் பொலிவை இழந்த சருமம், வறண்ட சருமம் என அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது முல்தானி மெட்டி. ஃபுல்லர்ஸ் எர்த் என்றழைக்கப்படும் முல்தானி மட்டி, பலரது விருப்ப தேர்வாகவும் இருக்கிறது.சருமத்திற்கு இதை பயன்படுத்துவதால் எந்தவொரு பக்கவிளைவையும் ஏற்படுத்தாது.குறிப்பாக முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகளிது, முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள், எண்ணெய் பசை ,தழும்புகள் பருக்களை அகற்றவும் செய்கிறது.முல்தானி மட்டியை எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள துளைகளையும் அழுக்குகளையும் நீக்கி சருமத்தை சுத்தப்படுத்தி எண்ணெய் வடியும் பிரச்சனைகளுக்கு முற்று புள்ளி வைக்கிறது.முல்தானி மட்டியை தண்ணீரில் குழைத்தோ அல்லது சந்தனம், ரோஸ் வாட்டர் போன்றவற்றுடன் கலந்தோ முகத்தில் ஃபேஸ் பேக்காக போடலாம்.வாரத்தில் இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ செய்து வரும்போது முகத்தில் உள்ள எண்ணெய் பசை வடியும் பிரச்சனை குறையும்.இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின் சுத்தமான நீரால் முகத்தை கழுவவும், வாரம் இருமுறை இதனை செய்து வரலாம்.முகத்தை பளபளப்பாக்க முல்தானி மட்டியுடன் சேர்க்க வேண்டியவை..,முல்தானி மெட்டி மற்றும் எலுமிச்சை சாறுமுல்தானி மட்டி மற்றும் முட்டை வெள்ளைக்கரு கலவை.முல்தானி மட்டி மற்றும் இளநீர் கலவை.முல்தானி மட்டி மற்றும் கேரட் கலவை.முல்தானி மட்டி மற்றும் பப்பாளி கலவை.முல்தானி மட்டி மற்றும் சந்தன பவுடர் கலவை.முல்தானி மட்டி மற்றும் தேன் கலவை.முல்தானி மட்டி மற்றும் ரோஸ் வாட்டர் கலவை,அழகை அதிகரிக்க உதவும்  அற்புதமான அழகுப் பொருள் முல்தானி மட்டி.

Aug 25, 2023

நரை முடியை கருப்பாக்க கருவேப்பிலை டை

இன்றைய காலத்தில் இளம் வயதினருக்கே நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. இதனை கருப்பாக மாற்றுவதற்காக கெமிக்கல் நிறைந்த எண்ணைகளையும், டையையும் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் அவ்வப்போது வேண்டுமானால் நரை முடி பிரச்சனை ஏற்படாமல் இருக்கலாம். ஆனால் நாள் ஆனதும் நரை முடி மீண்டும், வந்து விடும். அதனால் இயற்கையான முறையில் நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். கருவேப்பிலை டை செய்முறை  - முதலில் கருவேப்பிலையை எடுத்து நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும்.அதன் பிறகு அடுப்பில் இரும்பு கடாய் வைத்து அதில் கழுவி வைத்த கருவேப்பிலையை சேர்த்து வதக்க வேண்டும். எண்ணெய் ஏதும் ஊற்றாமல் வெறுமென வறுக்க வேண்டும்.அதன் பிறகு வறுத்து வைத்த கருவேப்பிலையை பொடியாக அரைத்து ஒரு பவுலில் சேர்த்து கொள்ளவும். இதனுடன் வைட்டமின் ஈ மாத்திரையின் ஜெல்லை 1 சேர்த்து கொள்ளவும். பின் அதில் தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சிறிதளவு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். தண்ணீரை அதிகமாக ஊற்ற வேண்டாம். மிக்ஸ் செய்யும் போது டை பதத்திற்கு வர வேண்டும்.அப்ளை செய்யும் முறை  -  செய்து வைத்துள்ள டையை கையில் கிளவுஸ் அணிந்து அதன் மூலம் டையை எடுத்து தலை முடி முழுவதும் அப்ளை செய்து 1 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பை பயன்படுத்தி தலை தேய்த்து விட்டு அலசி விட வேண்டும். இது போல் நீங்கள் வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து 1 மாதத்திற்கு அப்ளை செய்து வந்தால் நரை முடி கருப்பாக மாறிவிடும்.கருவேப்பிலையை வைட்டமின் சி, புரத சத்து, கால்சியம், அயன், கெரோட்டின் போன்றசத்துக்கள்நிறைந்துள்ளது,இந்தசத்துக்களானது முடி உதிர்வை தடுத்து முடி வளர உதவி செய்கிறது. மேலும் நரை முடியை கருப்பாக மாற்றவும் உதவி செய்கிறது.

Aug 23, 2023

சருமத்தை பொலிவாக்க பாசிப்பயறு மாவு

பாசிப்பயிரை மாவு போல அரைத்து ,சீயக்காய் தூள் போல தலையில் தேய்த்து குளிப்பது  முடி வளர்ச்சிக்கு இது உதவுகிறது.முகத்திற்கு இந்த பச்சைபயறுமாவைதேய்த்துகுளிப்பது மூலம்சருமத்தையும்,ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கும்.முகத்தில் சிதைந்த செல்களைபுதுப்பிப்பதற்கு பாசிப்பருப்பு உதவுகின்றது.பாசிப்பயறு மாவை தினமும் முகத்திற்கு  பயன்படுத்தினால், முகத்தில் ஆங்காங்கு உள்ள முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து, முகம் பொலிவாகும். 1 ஸ்பூன் பாசிப்பயறு மாவை, எடுத்து அதனுடன் 1/2 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.பாசிப்பயறு மாவை முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும். மேலும் பாசிப்பயறு பொடியை 1 ஸ்பூன் எடுத்து அதனுடன் ரோஸ் வாட்டரை கலந்து கொள்ளுங்கள். இதனை முகம், கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.சில பெண்களுக்கு முழங்கை மற்றும் கழுத்துகளில் கருமையாக இருக்கும். இத்தகைய கருமையைப் போக்குவதற்கு ஒரு அருமையான மாஸ்க் என்றால் அது  பாசிப்பயறு மாவு மாஸ்க் தான். அதற்கு பாசிப்பயறு மாவில் தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி 30 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும். பின்னர் நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் கருமை விரைவில் போய்விடும்பெண்களுக்கு முகம் மற்றும் வாய்க்கு மேலே மீசை போன்று முடி வளரும். அத்தகைய முடியின் வளர்ச்சியை தடுப்பதற்கு பாசிப்பயறு மாவில் மஞ்சள் தூளை  சேர்த்து நீர் ஊற்றி பேஸ்ட் செய்து தினமும் காலை மற்றும் மாலையில் முடி வளரும் இடத்தில் தடவி ஊறவைத்து கழுவி வந்தால் நாளடைவில் முடியின்  வளர்ச்சி தடைபடுவதை உணரலாம்.1 ஸ்பூன் பாசிப்பயறு பொடியுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் மாஸ்க் போட்டு, 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தினமும் இதனை செய்து வந்தால் சரும நிறம் அதிகரிக்கும். உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறுக்கு பதிலாக பால் கலந்து  பயன்படுத்தலாம். 

1 2 ... 13 14 15 16 17 18 19 20 21 22

AD's



More News