ஆரஞ்சுப் பழச்சாற்றை உதட்டில் தடவும் போது உதடு நிறம் மாறும்மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும்கற்றாழையை உதடுகளில் தடவும் போது கருமை மறைந்து சிவப்பழகு பெறும்மஞ்சள்தூள் உதடுகளில் தடவும்போது கிருமிகள் அழிந்துவிடுகிறது.புதினா மற்றும் நெல்லிக்காய் சாறு உதடுகளில் தடவும் போது கருமை மறைந்து சிவப்பழகு பெறும்.ஒரே அளவில் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளுங்கள்.அந்த கலவையை உங்கள் உதடுகள் மீது பூசி விட்டு, ஒரு மணி நேரம் கழித்து கழுவுங்கள்.இதனால் உலர்ந்த உதடுகளில் ஈரப்பதம் அதிகரிப்பதோடு,உதட்டின் நிறமும் மாற்றமடையும்.பீட்ரூட் எந்த அளவுக்கு நம் உடலுக்கு நல்லதோ,அதே அளவிற்கு உங்கள் உதடுகளுக்கும் நன்மையளிக்கும்.சிறிய பீட்ரூட் துண்டை எடுத்து உங்கள் உதட்டில் தடவி ஒரு மணி நேரம் காய வைத்து பின்னர் கழுவுங்கள்.இதனை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் உதட்டின் நிறம் "பிங்க்" நிறத்தில் மாறும்.சிலர் வெள்ளரி துண்டுகளை குளிர்ச்சிக்காக கண்களில் வைப்பதை பார்த்திருப்போம்.ஆனால் வெள்ளரிச் சாற்றை உதடுகளில் தடவி வர,கருஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உதடுகள் பழைய நிறத்தை பெறும்.
பாசிப்பயிரை மாவுபோலஅரைத்து சீயக்காய் தூள் போலதலையில் தேய்த்து குளிப்பதுமூலம் முடி வளர்ச்சிக்கு இதுஉதவுகிறது.மேலும் முகத்திற்கு இந்த பச்சைபயறுமாவைதேய்த்துகுளிப்பது மூலம் சருமத்தையும்ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கும்.முகத்தில் சிதைந்த செல்களைபுதுப்பிப்பதற்கு பாசிப்பருப்பு மாவு உதவுகின்றது.பாசிப்பயறு மாவை தினமும் முகத்திற்கு பயன்படுத்தினால், முகத்தில் ஆங்காங்கு உள்ள முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து, முகம் பொலிவாகும். 1 ஸ்பூன் பாசிப்பயறு மாவை, எடுத்து அதனுடன் 1/2 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
பொடுகைப் போக்க பலரும் பலவிதமான ஷாம்புகளைப் பயன்படுத்துகின்றனர் ஷாம்பூவைப் பயன்படுத்துவதால் பொடுகுத் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும், குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் கற்றாழை ஜெல்லை உச்சந்தலையில் தடவவும். லேசான [ஷாம்பு கொண்டு |முடியைக் கழுவி, கண்டிஷனரைப் | பயன்படுத்தவும்..பொடுகுக்கு காரணமான ஒரு வகை- பாக்டீரியா. இந்த கிருமிகளை அகற்ற பயன்படுத்தலாம்.வெள்ளை வினிகரை தண்ணீரில் கலந்து முடியின் வேர்களில் மசாஜ் செய்யவும். சிறிது நேரம் விட்டுவிட்டு கழுவவும். பொடுகு தொல்லை நீங்கும்.ஒரு பிடி வேப்ப இலையை தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.20 நிமிடங்கள் கொதிக்க வைத்து குளிரூட்டவும். தண்ணீரை வடித்து தனியாக வேப்ப இலைகளை பேஸ்ட் செய்து முடியின் வேர்களில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து மூலிகை ஷாம்பு கொண்டு கழுவவும். முடிவில், வேப்பம்பூ நீரை உங்கள் தலைமுடியால் கழுவவும்,
திராட்சையில்ஆல்பா ஹைட்ராக்ஸிஅமிலங்கள் உள்ளன. இவை சருமத்தைபுத்துயிர் பெறவைக்கின்றனசருமத்திற்கு தேவையானவைட்டமின்கள் சி, பி மற்றும்கே ஆகியவைதிராட்சையில் இருப்பதால்,இவை கொலாஜன்உற்பத்திக்கு உதவுகிறது முகத்தைபொலிவாகவும், அழகாகவும்வைத்துக்கொள்ள திராட்சையைஇரண்டு விதமாகபயன்படுத்தலாம். தேவையான பொருள்-திராட்சை-5,தயிர்- 1 டீஸ்பூன்,,எலுமிச்சைசாறு- 1 டீஸ்பூன் செய்முறை-திராட்சைகளைஅரைத்து கூழ்செய்து, 1 தேக்கரண்டிதயிர் சேர்த்து, நன்கு கலக்கவும்.இதில்எலுமிச்சை சாற்றைஅதில் சேர்க்கவும்.இந்த கலவையைமுகம் மற்றும்கழுத்தில் தடவிசிறிது நேரம்கழித்து சூடானநீரில் முகத்தைகழுவுங்கள்.தயிரில்இருக்கும் லாக்டிக்அமிலம், துளைகளைஇறுக்கி சுருக்கவும்,துளைகளைக் குறைக்கவும்உதவும்., இதுவறண்ட, மந்தமானசருமத்தை ஒளிசெய்யும் மற்றும்மென்மையானதாக மாற்றும்எக்ஸ்ஃபோலியேட்டிங் பண்புகளைக்கொண்டுள்ளதுதேவையான பொருள் -திராட்சை- 5,தேன்- 1 டீஸ்பூன்செய்முறை-திராட்சைகளைஅரைத்து கூழ்செய்து அதில்ஒரு தேக்கரண்டிதேன் சேர்க்கவும்.இந்தகலவையை நன்குகலந்த பிறகு,முகத்தில் தடவி20 நிமிடங்களுக்குப் பிறகுகழுவ வேண்டும்.வாரத்திற்கு2,3 முறைஇந்த ஃபேஸ்பேக்கை பயன்படுத்தலாம்.தேன்சருமத்தை ஒளிரவைக்கிறது. இதுமுகப்பரு மற்றும்தடிப்புத் தோல்அழற்சிக்கு சிகிச்சையளிக்கஉதவும், மற்றதோல் நிலைகளுக்கும்சிகிச்சை அளிக்கும்..
ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி கொட்டுதல், வழுக்கை விழுதல் என்பது ஒரு பெரும் பிரசனையாக உள்ளது. இவை மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கெமிக்கல் உபயோகங்கள் போன்றவை இருந்தால், ஒருசில இயற்கையான சிகிச்சைகளின் மூலம் வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யலாம்.பட்டையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் இதர உட்பொருட்கள்,ஸ்கால்ப்பில் நிலையை மேம்படுத்தும். மேலும் இது பாதிக்கப்பட்ட தலைமுடியை சரிசெய்வதோடு, வலிமைப்படுத்துவதுடன், தலைமுடியின் வளர்ச்சியையும் தூண்டும். ஆலிவ் ஆயிலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தலைமுடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். முக்கியமாக இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள், ஸ்கால்ப் மற்றும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். இதை செய்ய தேவையான பொருட்கள்: பட்டை, ஆலிவ் ஆயில், தேன் போதுமானது. இத்னை செய்ய முதலில் ஆலிவ் ஆயிலை சூடேற்றி, பின் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் பட்டை மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு தயாரித்து வைத்துள்ளதை, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து பின் தலையை அலச வேண்டும். இந்த மாஸ்க்கை அடிக்கடி ஸ்கால்ப்பில் தடவி வந்தால், ஸ்கால்ப்பில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்பட்டு, தலைமுடியின் வளர்ச்சி விரைவில் தூண்டப்படுவதைக் காணலாம்.இந்திய நெல்லிக்காய் என்றும் அழைக்கப்படும் ஆம்லா, வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இது கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுகிறது. கொலாஜன் உங்கள் முடியின் வேர்களை பலப்படுத்துகிறது மற்றும் உடைவதைத் தடுக்கிறது. கூடுதலாக, அம்லாவில் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை முன்கூட்டிய நரைமுடிக்கு காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. உங்கள் முடிபராமரிப்புவழக்கத்தில்நெல்லிக்காயைசேர்த்துக்கொள்வது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
ஆண்ட்டிஏஜிங் எனப்படும் வயது முதிர்வை தடுக்கும் பண்புகளை கொண்ட களாக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், சருமம் பொலிவு பெறும். இளமையை தக்க வைக்கும் களாக்காய் சருமத்துக்கு மிகச்சிறந்த பாதுகாப்பை தருகிறது. களாக்காயை பேக் போல சருமத்தில் போட்டால், சருமம் பளபளக்கும். அதோடு, தலைக்கு பேக் போட்டால், முடி உதிர்வது நின்று, நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும். மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் களாக்காய் இவ்வளவு நன்மைகளை கொண்டிருக்கிறது என்பது தெரியாததால் தான், ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு என விலை அதிகமான பழங்களை உண்கிறோம். ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து களாக்காய் உண்டுவந்தாலே உடல் மெருகு கூடுவதோடு, மருத்துவரிடம் செல்வதை. தவிர்க்கலாம்.
கூந்தல் பிரச்சனை இருப்பவர்கள் வாரம் இருமுறை சீயக்காய் தூள் போட்டு தலைக்கு குளித்து வரலாம்.சீயக்காயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால்கூந்தல் உதிர்வது, இளநரை, பொடுகு, அரிப்பு போன்ற கூந்தல் சம்பந்தமான பிரச்சனைகளும் தீரும். சீயக்காயில் பி.எச்.அளவு குறைவாக இருக்கும். இதனை பயன்படுத்தும் போதுகூந்தல் மிருதுவாக மாறும் .கூந்தலை வறட்சியாக்காது.தலைமுடியில் அழுக்குப்படிந்து சிக்கு ஆகிவிட்டால் சீயக்காயினை அரைத்துப் புழுங்கலரிசி வடித்த கஞ்சியில் குழைத்து தலை சிக்கு மீது தேய்த்து வெந்நீரில் குளிக்க சிக்குகள் விலகி முடி மென்மை பெறும். தலைமுதல் கால்வரை அழுக்குகளை நீக்கிக் சுத்தப்படுத்தும் சீயக்காய், இயற்கை தந்த இனிய ஷாம்பூ ஆகும். சீயக்காய் தூள் தயாரிக்கும் முறை : நென்னாரி வேர் - 1 பிடி ,சந்தன சக்கை - 1 பிடி ,ரோஜா மொக்கு - 5 பிடி (உலர்ந்தது) ,ஆவாரம்பூ - 5 பிடி(உலர்ந்தது) ,பச்சை பயறு - 2 பிடி ,வெந்தயம் - அரை பிடி ,சீயக்காய் - 1 கிலோ இவற்றை ஒருநாள் வெயிலில் உலர்த்திப் பின் மிஷனில் அரைத்து ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தித் தினசரி குளிக்கும்போது பயன்படுத்தலாம். சீயக்காய், ஷாம்பூபோல் நுரை வரவேண்டும் என்றால், அதனுடன் பூவந்திக் கொட்டையின் தோலினை 2 பிடி உலர்த்தி சேர்த்து அரைத்தால் ஷாம்பூபோல் நுரை வரும். இதனை சீயக்காய் தூளுடன் சேர்த்தும் உபயோகப்படுத்தலாம்.இவை யாவும் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்.
உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதன் தோலை முகத்தில் வைக்க வேண்டும். முகத்தில் வைத்து ஒரு 5 முதல் 10 நிமிடம் வரை ஊற வைத்த பின், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு உருளைக்கிழங்கை சமைக்கும் போதெல்லாம் செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாகவும், பிரகாசமாகவும் இருக்கும். உருளைக்கிழங்கில் இருந்து தோலை சீவிய பின், அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சிறிது தக்காளியையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது மஞ்சள் தூளை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒருமுறை செய்து வந்தால், கருப்பாக காட்சியளிக்கும் முகம் விரைவில் வெள்ளையாகும்.
ஆரோக்கியமான முறையில் சருமத்தின் அழகை அதிகரிக்கும் பொருட்களில் ஒன்றான ரோஸ் வாட்டரை குளிக்கும் போது நீரில் சிறிது கலந்து குளித்தால் சருமம் மென்மையாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும் மேலும் இது சருமத்தின். நிறத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அதில் ஏற்படும் சுருக்கங்களை போக்கி சருமத்தை இளமையாக காட்டும்.
தேங்காய் எண்ணெய் நீண்ட காலமாக அழகு சிகிச்சையில் பல்துறை மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முடி பராமரிப்புக்கு என்று வரும்போது, தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் அதிகம் இருப்பதால், இது தலைமுடிக்கு அதிசயங்களைச் செய்கிறது. லாரிக் அமிலம் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது. இது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தொற்றுநோய்களிலிருந்து உச்சந்தலையைப் பாதுகாக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெய் முடி தண்டுகளில் ஆழமாக ஊடுருவி, அவற்றை உள்ளே இருந்து ஊட்டமளிக்கிறது மற்றும் புரத இழப்பைக் குறைக்கிறது. மேலும், இது உங்கள் தலைமுடி நீளமாகவும், பளபளப்பாகவும் இருக்க உதவுகிறது.தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இதனால் தலையின் தோல் பகுதியை வறண்டு விடாமல் தேங்காய் எண்ணெய் பாதுகாக்கும்.தேங்காய் எண்ணெய் சருமத்தை பாதுகாப்பதில் மிகச்சிறந்த பலனைத் தருகிறது. சரும வறட்சியை போக்குவதில் சிறந்த மாய்ஸரைசராக செயல்படுகிறது. இதில் உள்ள கொழுப்புச்சத்து சரும சுருக்கத்தை போக்குகிறது. இதனால் சருமத்திற்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படுவதில்லை. சரும நலனை பாதுகாப்பதில் விலைகுறைவான பாதுகாப்பான பொருள் தேங்காய் எண்ணெயாகும்.