25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அழகுக் குறிப்பு

Sep 27, 2023

கண்களில் இருக்கும் சோர்வு நீங்க

வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக உட்கார்ந்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும்.எனவே தான் இப்போதும். எந்த ஒரு அழகு நிலையங்களுக்கு சென்றாலும். முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்ட பின், கண்களுக்கு வெள்ளரிக்காய் துண்டுகளை வைக்கின்றனர். எனவே கண் அழகை அதிகரிக்க தினமும் கண்களில் வெள்ளரிக்காயை வைத்து சிறிது நேரம் அப்படியே அமர்த்திருங்கள். பின்பு கண்களை கழுவிவிடுங்கள்.கண்களை பாதிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது சரியான தூக்கமின்மை. எனவே தினமும் குறைந்தது எட்டு மணி நேரம் தூங்குவது மிக முக்கியம்.கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் கண்களுக்கு நல்லது. பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள், ஆரஞ்சி நிறப் பழங்கள் மற்றும் காய்கள், கண்களின் அழகை பராமரிக்கும் முக்கிய பொருட்கள். போதிய அளவு தண்ணீர் அருந்த வேண்டும் இது கண்களுக்கு புத்துணர்வை அளிக்கும்.

Sep 26, 2023

கொத்தாக தலைமுடி கொட்டுவதற்கு என்ன காரணம் ?

தலைமுடி கொட்டுவது என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.. இதற்கென்று எளிய தீர்வுகள் ,முதலில், முடி கொட்டுவதற்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.. முடி கொட்ட பல காரணங்கள் இருக்கலாம். ஹார்மோன் குறைபாடுகள் முக்கிய காரணமாக திகழ வாய்ப்புள்ளது..அடர்த்தியான முடி: ஹார்மோன்கள் சரியாக இருந்தால், முடிகள் அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.. ஹீமோகுளோபின் அளவை சரியாக வைத்து கொள்ள வேண்டும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுகள் காரணமாகவும், முடி கொட்டலாம்.. இதற்கும், சத்தான உணவு சாப்பிடுவது அவசியம்..மன அழுத்தம் காரணமாகவும் முடி கொட்டலாம்.. அதேபோல, இளம்பெண்களுக்கு பிசிஓடி எனப்படும், நீர்க்கட்டிகள் பிரச்சனைகள் இருந்தாலும், முடி கொட்டலாம். இதனால், தலைமுடியின் வேர்க்கால்களும் பலவீனமாகிவிடும். அளவுக்கு அதிகமாக உடலில் உஷ்ணம் ஏற்பட்டுவிட்டாலும், முடி கொட்டலாம். நம்முடைய தலைமுடிக்கும், மனதுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. எனவே, ஆரோக்கியமான உணவு + மகிழ்வான மனநிலை + போதுமான உறக்கம் போன்றவையே தலைமுடி வளர்ச்சியை தீர்மானிக்கின்றன. இதில், கீரைகள் முதலிடத்தை பிடிக்கின்றன.. அதிலும் முருங்கைக்கீரையையும், கறிவேப்பிலையையும் எந்த காரணம் கொண்டும் தவிர்க்க கூடாது. எலுமிச்சம் சாறு: முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும்.. அதை வடிகட்டி, எலுமிச்சை பழச்சாறு, தேன் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது இரவு உணவு சாப்பிட்ட அரை மணிநேரம் கழித்துக் குடிக்கலாம்.. அதேபோல, முருங்கையின் ஈர்க்குச்சியில் சூப் செய்து குடிக்கலாம்..கறிவேப்பிலையை  எப்படி சாப்பிட்டாலும் நல்லதுதான். தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்கு தடவி வரலாம்.. செம்பருத்தி பூக்களையும், செம்பருத்தி இலைகளையும் கழுவி அதை ஈரமில்லாமல் அரைத்து, ஒரு பாத்திரத்தில், தேங்காய் எண்ணெய் ஊற்றி லேசாக சூடானதும், அதில், இந்த செம்பருத்தி விழுதை கொட்டி காய்ச்ச வேண்டும். சிறிது வெந்தயத்தை பொடி செய்து போட்டு, கொள்ளலாம். இந்த எண்ணெய்யை வடிகட்டி வைத்து தேய்த்து வந்தால், தலைமுடி கொட்டாது. 

Sep 25, 2023

பற்கள்  வெண்மையாக ஜொலிக்க

 பற்களுக்கு இடையில் சிக்கிய உணவு மற்றும் பிளேக்கிலிருந்து விடுபட ஒரு நாளைக்கு ஒரு முறை பல் ஃப்ளோஸ் மூலம் ஃப்ளோஸ் செய்யுங்கள். பல் துலக்குவதற்கு முன் ஃப்ளோஸ் செய்வது அதிக பிளேக் நீக்குகிறது. மென்மையான முட்கள் கொண்ட பல் துலக்குதல் மற்றும் ஃவுளூரைடு பற்பசை மூலம் பற்களை இரண்டு நிமிடங்கள் துலக்கவும், ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது துலக்குவது நல்லது.சாப்பிட்ட அல்லது குடித்த உடனேயே துலக்க முடியாவிட்டால்,  சர்க்கரை இல்லாத பசையை பயன்படுத்துங்கள். முடிந்தவரை சர்க்கரை மற்றும் மாவுச்சத்துள்ள உணவுகள் மற்றும் பானங்களை கட்டுப்படுத்தவும் அல்லது தவிர்க்கவும். அதற்கு பதிலாக தயிர், பாலாடைக்கட்டி, பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடுங்கள்.ஆயில் புல்லிங் என்பது ஒரு பாரம்பரிய தீர்வாகும். இது வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது.  வாயில் எண்ணெய் வைத்து கொப்பளிப்பது மூலம் பிளேக்காக மாறும் பாக்டீரியாக்களை அகற்றி  பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதை தடுக்கும்.ஆயில் புல்லிங் செய்ய மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் எண்ணெய் சூரியகாந்தி மற்றும் நல்லெண்ணெய் ஆகியவை.பேக்கிங் சோடா இயற்கையாகவே வெண்மையாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதனால் பற்பசையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மூலப்பொருளாக இது பயன்படுத்தப்படுகிறது. இது பற்களில் உள்ள கறைகளை துடைக்க முடியும். இது வாயில் கார சூழலை உருவாக்க உதவுகிறது. இது பாக்டீரியாக்களை வளரவிடாமல் தடுக்கிறது.

Sep 22, 2023

ஆரோக்கியமான முடிக்கு நட்ஸ்

அக்ரூட் பருப்புகள் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டி மட்டுமல்ல, அவை முடி ஆரோக்கியத்தை அதிகரிக்க ஒரு இயற்கைதீர்வாகவும் செயல்படுகின்றன.பாதாமில் மெக்னீசியம் நிறைந்துள்ளது, இது சிறந்த முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பொடுகு மற்றும் முடி சேதத்தைத் தடுக்கவும் உதவும்.தேங்காய் ஒரு இயற்கையான முடி பராமரிப்பு தீர்வாகும், இது உங்கள் தலைமுடியின் தரத்தை மேம்படுத்த உதவும்.பயோட்டின் நிறைந்த பிஸ்தா முடி உதிர்வை எதிர்த்துப் போராடவும், உலர்ந்த கூந்தலுக்கு ஊட்டமளிக்கவும் உதவும்.எள் விதைகளில் இரும்பு மற்றும் கொழுப்பு அமிலங்கள்நிறைந்துள்ளன, இது உங்கள் முடி வேர்களுக்கு ஊட்டமளித்து புதிய முடி வளர்ச்சியைத் தூண்டும்.சியா விதைகள் சிறந்த முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் முடி உதிர்வதைத் தடுக்கும்.

Sep 16, 2023

தலையில் முடி  கொட்டினால்....

தலையில் முடி  கொட்டினால்கொஞ்சம் சின்ன வெங்காயம் உரித்து |அதை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து வடி கட்டி அதில் சாறு பிழிந்து எடுத்துதலையில் தேய்த்து ஒரு1/2 மணி நேரம் கழித்து குளிக்கலாம் இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால் கொட்டிய இடத்தில் புது முடி வளர ஆரம்பிக்கும் சின்ன வெங்காயம் உடம்புக்கு நல்ல குளிர்ச்சி தரும் இந்த மாதிரி செய்து பாருங்க முடி கொட்டுவது நின்று வளர ஆரம்பிக்கும் முடி கொட்டுவது ஒரு முடி இரண்டாக பிளந்து இருக்கும் தலை சீவினால் குட்டி குட்டி முடி வணங்காமல் நிற்கும் இதற்கு காரணம் முடிக்கு சத்து இல்லை தலையில் பக்கு இருந்தால் முடி கொட்டும் இதற்கு வாரம் ஒருமுறை கொஞ்சம்தயிர் ,ஒரு எலுமிச்சம் பழச்சாறு எடுத்து கலக்கி தலையில் தேய்த்து குளிக்கலாம் .கரப்பான் இலை சாறு எடுத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் வாரம் ஒருமுறை நல்ல எண்ணெய் தேய்த்து குளிக்கலாம் இப்படி செய்தால் ,முடி கொட்டுவது நின்று வளர ஆரம்பிக்கும்

Sep 14, 2023

சருமத்திற்கு கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய்

கற்றாழை சரும நன்மைக்கு மிகவும் நன்மை பயக்கும் தேங்காய் எண்ணெய் (CoconutOil) சரும கறைகளை நீக்க பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது.அத்தகைய சூழ்நிலையில், கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெயைக்கலந்து சருமத்தில் தடவி வந்தால், அது சருமத்திற்கு ஒரு வரத்திற்குகுறைவில்லாமல் இருக்கும். இதனால் பருக்கள் மறைந்து பொலிவு வரும்.சருமத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும்.சம அளவு கற்றாழை ஜெல்லை இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கலக்கவும். இந்த கலவையை நன்றாக கலந்து, தூங்கும் முன் முகம்மற்றும் கழுத்து முழுவதும் தடவி, இரவு முழுவதும் முகத்தில் விட்டு,காலையில் முகத்தை கழுவவும்.

Sep 12, 2023

உதடுகளின் வறண்ட தன்மை நீங்க...

உதடுகள் கருமையாவதற்கு மிக முக்கிய காரணம் சூரிய ஒளியின் தாக்கமாக இருக்கிறது. அதிகம் வெயிலில் சுற்றி திரிபவர்களுக்கு உதடு கருப்பாகத் தான் இருக்கும். கீமோதெரபி செய்பவர்கள், அனிமியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், விட்டமின் பற்றாக்குறை உள்ளவர்கள், போன்றவர்களுக்கும் உதடுகள் கருமையாக மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு.கற்றாழையில் இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து பேஸ்ட் போல ஆக்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்டுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து உதடுகளில் லேசாக தடவி பத்திலிருந்து 15  நிமிடங்கள் அப்படியே உலர விட்டு விடுங்கள். அதன் பிறகு மெல்லிய ஈரத்துணியால் துடைத்துக் கொள்ளுங்கள். இதனால் உதடுகளில் மெலனின் உற்பத்தி குறைந்து கருமை நீங்கும்.தேன் மற்றும் பன்னீர் இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து உதடுகளில் தினமும் மசாஜ் செய்ய வேண்டும். தொடர்ந்து ஏழு நாட்கள் மென்மையாக மசாஜ் செய்து கொடுத்தால்,பட்டு  போன்ற உதடுகள் உங்களுக்கு கிடைக்கும் வறண்ட தன்மையிலிருந்து மீண்டு ஈர பதத்துடன் இருக்கும். கருப்பான உதடுகளும் குழந்தையின் உதடுகள் போல மிருதுவாக மாறும்.மாதுளை மற்றும் பீட்ரூட் இவற்றின் சாறுகளை அடிக்கடி ஃபிரஷ் ஆக உதடுகளின் மீது தடவி உலர விட்டு விட வேண்டும். பிறகு ரோஸ் வாட்டர் கொண்டுஉதடுகளைமசாஜ் செய்யுங்கள். இது போல தொடர்ந்து செய்து வந்தால் உதடுகளின் கருமை மிக விரைவாகவே நீங்கும். மேலும் ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுப்பதாலும் உதடுகளின் வறண்ட தன்மையை நீங்கும்.

Sep 08, 2023

துளசிஃபேசியல்

ஃபேசியல் என்பது தற்போது கெமிக்கல் கலந்த பொருட்களினால் செய்யப்பட்டு வருவதால் சில சமயம் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது.  துளசி போன்ற இயற்கையான பொருட்களை வைத்து ஃபேசியல் செய்தால் எந்தவித பக்க விளைவும் வராது .துளசி இலையில் ஆன்ட்டி செப்டிக் தன்மை இருப்பதால் அது சரும பிரச்சனைகளை தடுப்பதோடு முகத்தில் முகப்பருக்கள், தழும்புகள்  இல்லாமல் செய்துவிடும். துளசி இலையை நன்றாக அரைத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து15 நிமிடம் முகத்தில் பூச வேண்டும் அதன் பிறகு குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளபளப்பாக இருக்கும். மேலும் இதனால் எந்த விதமான பக்க விளைவும் இருக்காது .

Sep 07, 2023

தலைமுடி வலுவடைய கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய்

 தலைமுடி உயிரற்றதாகவும், வறண்டதாகவும், நீளம் அதிகரிக்காமலும் இருந்தால், நீங்கள் கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதனால் கூந்தல் மிருதுவாகவும், பட்டுப் போலவும் இருக்கும். இதனுடன், முடி வலுவடைகிறது (Hair Growth) மற்றும் அவற்றின் வளர்ச்சியும் வேகமாக மாறும்.5 ஸ்பூன் கற்றாழை ஜெல்லில்3 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை கலந்துபேஸ்ட்டை தயார் செய்யவும். இப்போது முடியின் வேர்கள் முதல் நுனி வரை விரல்களின் உதவியுடன் இதை நன்கு மசாஜ் செய்யவும். நன்றாக தடவிய பின் ஷவர் கேப்பால் தலையை மூடி வைக்கவும். அரை மணி நேரம் கழித்து ஷாம்பு செய்யவும். இந்த ட்ரீட்மெண்ட்டை நீங்கள் வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம். இந்த கலவையானது கிட்டத்தட்ட அனைத்து முடி பிரச்சனைகளையும் தீர்க்க உதவும் ...உலர்ந்த மற்றும் உதிர்ந்த முடிமுடி வளர்ச்சி இல்லாமை,வழுக்கையை தடுக்கும் மற்றும் புதிய முடி வளரும்.முடி நரைப்பதை தடுக்கும்.முடியை அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் ஆக்கும்.முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, முடியை வலுவாக்கும்.பொடுகு நீக்க உதவுகிறது. (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். 

Sep 05, 2023

ஜொலிக்கும் முகத்தைபெற ரைஸ் ஃபேஸ் மாஸ்க்

 கண்ணாடி போல் ஜொலிக்கும் முகத்தைபெறுவது பெரும்பாலான பெண்களின் கனவாகவே உள்ளது.அதை பெற பல ஆயிரங்களில் பணத்தை செலவு செய்கின்றனர்.அவ்வளவு பணம் செலவு செய்வது என்பது நடுத்தரகுடும்பத்து பெண்களுக்குஇயலாது. எனவே வீட்டில்இருக்கும் பொருட்களை வைத்தே  ஜொலிக்கும் முகத்தை பெறலாம். முதலில் அரிசியை 30 நிமிடங்களுக்கு ஊற வைத்து கொள்ளவும். பிறகு அதனை குழையவேக வைத்துகொள்ளவும். பிறகு வேக வைத்த அரிசியில் தேன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும். அவ்வளவு தான் இந்த மாஸ்க்கை சிறிது நேரம் முகத்தில் தடவி விட்டு கழுவி விட வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகம் கண்ணாடி போன்ற பொலிவை பெறும்.

1 2 ... 12 13 14 15 16 17 18 ... 21 22

AD's



More News