25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அழகுக் குறிப்பு

May 06, 2023

முகத்தை பளிச்சென ஆக்குவதற்கு...

முகத்தை பளிச்சென ஆக்குவதற்கு, தேன் சிறந்த தீர்வு. வெறும் தேனை தினமும் சருமத்தில் தேய்த்துக்கொள்ளலாம்.கண், மூக்கு, உதடு பகுதிகளைச் சுற்றிக் கருவளையம் இருந்தால் ,புளித்த தோசை மாவுடன், தக்காளி சேர்த்து முகத்தில் தேய்த்தால் கருவளையம் நீங்கி பொலிவான சருமத்தைப் பெறலாம்.பெண்கள், மஞ்சளுடன் கடலை மாவு சேர்த்து ஃபேஸ் பேக் போட்டுக்கொண்டால், வெயிலின் புற ஊதாக்கதிர்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.பப்பாளியை சிறு துண்டுகளாக நான்கு ஸ்பூன் எடுத்துக்கொண்டு, அதில் கொஞ்சம் பால் மற்றும் தேனை கலந்து ,ஒரு பேஸ்டை போல செய்து கொள்ளுங்கள். இதை உங்கள் முகத்தில் 15நிமிடம் வைத்து கழுவிடலாம்.பப்பாளி உங்கள் சருமத்தில் இருக்கும், டெட் செல்சை தளர விடுகிறது. மேலும் தேன் -பால்  கலவை உங்கள் வறண்ட சருமத்திற்கு சிறந்தது

May 05, 2023

வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ....

 வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பெண்கள் கருப்பு மற்றும் பிற பிரகாசமான நிறங்கள் கொண்டஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றுக்கு வெப்பத்தை கிரகிக்கும் தன்மை அதிகமாக உள்ளதால் அவைகளைத் தவிர்த்து, வெள்ளை போன்ற இளம் நிறங்களில் உடைகளை அணியலாம்.கோடை காலத்தில் பெண்கள் அதிகமாக பருத்தி ஆடைகளை பயன்படுத்துவது மிக சிறந்தது. கோடை காலத்திற்கு ஏற்ற ஆடை பருத்தி ஆடைகளே ஆகும். பெண்கள் அணியும் உடைகள் அவர்களுக்கு இதமானதாக இருக்க வேண்டுமானால் அதற்கு பருத்தி ஆடைகளே சிறந்தது.பருத்தி ஆடைகள் தான் உடலை குளிர்ச்சியாகவைத்திருக்கக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளது.கோடையில் சிந்தடிக், பாலிஸ்டர் போன்ற உடைகள் அணிவதால் சிலருக்கு தோல் அரிப்புகள் வரும், ஆனால் காட்டன் அப்படி அல்ல, பருத்தியால் தோல் அரிப்புகளோ, தோல் வியாதிகளோவராது. அதனால் தான் பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும். ஆடைகள் மற்றும் உடலைத் துடைக்கப் பயன்படுத்தப்படும் துணிகள் எல்லாம். பருத்தியிலேயே இருக்கிறது.

May 04, 2023

தோல் நோய்களுக்கு பூவரசு இலை

 சந்தனத்தைப் பன்னீர் விட்டு அரைத்துத், தேகம் முழுவதும் பூசி வந்தால்,அதிகப்படியான சூட்டினால் மேல் தோலில் காணப்படும் சிறு சிறு சிரங்குகள் குணமாகும்.மேல் தோலில் அக்கி, சொறி, தேமல், நமைச்சல் இருந்தாலும் குணமாகும்.பூவரசு இலைகளுக்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. இதன் இலையை அரைத்து, சொறி சிரங்கு, தேமல் போன்ற தோல்நோய்களுக்குப் பூசினால் நல்ல பலன் கிடைக்கும். பூக்களை அரைத்து, புண்களின் மீது பூசினாலும் பலன் கிடைக்கும். பூவரசு காய்களில் உள்ள மஞ்சள் நிற பால் சரும நோய்களுக்கும், எச்சில் தழும்புகளுக்கும் பூசினால் குணமாகும். பூவரசு இலைகள், பூக்கள், காய் ,அனைத்தும் தோல் நோய்க்கு சிறந்த நிவாரணியாகும்..

May 03, 2023

வேனல்கட்டிகள் மறைய

வியர்க்குருவிற்கு அடுத்தபடியாக கோடை காலத்தில் பலருக்கும் வரும் தொல்லை, தோலில் தோன்றும் கட்டிகளாகும். வியர்வை அதிகமுள்ள இடங்களில்தான் இக்கட்டிகள் அதிகம் வருகின்றன. தொடர்ந்து தோலில் உராய்வு இருக்கும் பகுதிகளிலும் இக்கட்டிகள் அதிகம் வரும். வேனல்கட்டிகள் வந்தால், அவற்றை பிதுக்கி சீழை வெளியேற்ற முயற்சி செய்ய வேண்டாம். சீரகத்தை தண்ணீர் விட்டு மைபோல் அரைத்து, கட்டி உள்ள இடத்தில் தடவ, கட்டிகள் மறையும். சிறிய வெங்காயம், பூண்டு இரண்டையும் சேர்த்து இடித்து சாறு எடுத்து அதை கட்டியின்மீது தொடர்ந்து தடவி வர கட்டிகள் கரையும். ஒரு நாளில் 4-5 முறை தடவவும்.  ஒரு தேக்கரண்டி பாலேடுடன் ஒரு தேக்கரண்டி வினிகர், ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கட்டிகளின் மேல் தினம் 3-4 முறை தடவினால் கட்டிகள் மறையும்.வேனல் கட்டிக்கு உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் சோப்பை எடுத்துக் கொஞ்சம் பொடி செய்து, மஞ்சள், கல் உப்பு ஆகியவற்றைச் . சேர்த்து குழைத்து கட்டி வந்த இடத்தில் போடவும், கட்டி பழுத்து உடைந்து விடும்

May 02, 2023

முடியின் வளர்ச்சி மேம்பட..

நல்லெண்ணெய் தலைமுடி வறட்சியடைவதைத் தடுக்கும். நல்லெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி தலையில் தடவி நன்கு மசாஜ். செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் சீயக்காய் போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால், முடி வறட்சியின்றி பட்டுப்போன்று இருப்பதோடு, உடல் சூடும். தணியும் நல்லெண்ணெய் பாதிக்கப்பட்ட தலைமுடிக்கு புத்துயிர் அளிக்கிறது.  நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், முடியின் வளர்ச்சி மேம்படும்.பொடுகு தொல்லை நீங்கும்.தேங்காய் எண்ணெய்யில் வெந்தயத்தை போட்டு காய்ச்சி தினமும் தலைக்கு தடவி வர பொடுகு மறையும்.பொடுகு தொல்லை நீங்க வெந்நீரில் வேப்பிலையை போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் குளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.தலைமுடி மிருதுவாக நீளமாக ஆரோக்கயமாக வளர,தயிரை மயிர்க்கால்களில் படும்படி நன்றாக மண்டையில் தேய்த்து ,இருபது நிமிடங்கள் ஊறவைத்து, பின்குளித்து வர பொடுகு நீங்கும்.

Apr 28, 2023

சருமத்தை எரிச்சலில் இருந்து விடுவிக்கும் கற்றாழை மற்றும் வாழைப்பழம்...

கற்றாழை மற்றும் வாழைப்பழம் மாய்ஸ்சரைசிங் தன்மை மற்றும் எல்ல வகையான சருமத்திற்கும் ஏற்றது.  குறிப்பாக வழக்கமான பாதிக்கும் சருமத்திற்கு ,மிகவும் எளிதில் சருமத்தை எரிச்சலில் இருந்து விடுவித்து சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை மேம்படுத்துகிறது. கற்றாழை சாறை நல்லெண்ணெயோட (சம அளவு) கலந்து காய்ச்சி தலையில தினமும் தேச்சி வந்தா.அது இருக்குறவங்களுக்குதாம்ப்பா வளரும். நீ அத தினமும் தலையில தேச்சி வந்தா, முடி நல்லா ஆரோக்கியமா வளரும்! நல்லா தூக்கமும் வரும்.

Apr 27, 2023

மருதாணி இலை

மருதாணி இலைகளை செடிகளிலிருந்து பறித்து வந்து நன்றாக கழுவிவிட்டு, மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளுங்கள். மருதாணியோடு வெள்ளை சர்க்கரை-1ஸ்பூன், கிராம்பு-2, எலுமிச்சை பழ சாறு2 டேபிள் ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். நிறைய தண்ணீர் ஊற்றி விடக்கூடாது. கையில் எடுத்து இட்டுக் கொள்ளும் அளவிற்கு கெட்டிப் பதத்தில், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். கட்டாயம் பத்து நிமிஷத்துல உங்க கை சிவக்கும் சந்தேகமே இல்லை.

Apr 26, 2023

முகத்தில் பருக்களால் வரும் தழும்புகள், அம்மை வடுக்கள், காயங்களால் உண்டான வடுக்கள் மறைய.....

முட்டையின் வெள்ளைக்கருவுடன் தேன் கலந்து நன்றாக குழைத்து வடுக்கள் இருக்கும் இடம் அல்லது முகம் முழுக்க கூட தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தை உலரவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும். வடுக்கள் தழும்புகள் அதிகமாக இருந்தால் தினமும் இதை பயன்படுத்தலாம். முகத்தில் பருக்களால் வரும் தழும்புகள், அம்மை வடுக்கள், காயங்களால் உண்டான வடுக்கள் மறையும்.வெயிலினால் ஏற்படக் கூடிய சரும எரிச்சல் போன்றவற்றை முட்டையின் ஓடு பயன்படுத்துவதால் சரி செய்து விடலாம். ஒரு கப் ஆப்பிள் சிடர் வினிகருடன், சிறிது முட்டை ஓடு பொடி சேர்த்து கலந்து நிமிடம் ஊற விடவேண்டும் பின்னர் அந்தக் கலவையை சருமத்தில் தடவி வந்தால் எரிச்சல் போன்றப் பிரச்சனைகள் சரியாகி விடும்.

Apr 25, 2023

தக்காளி ஃபேஸ் பேக்

 தக்காளி ஃபேஸ் பேக் அனைத்து விதமான சரும பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது.சருமத்தை தங்கம் போல் பிரகாசிக்க வைக்கும்  தக்காளி ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தலாம். இறந்த சரும செல்களை அகற்றும் . வெயிலினால் ஏற்பட்ட தாக்கத்தைகுறைக்கும்தக்காளியுடன் 1 டீஸ்பூன் ஜோஜோபா எண்ணெய் மற்றும் டீ ட்ரீஎண்ணெய் கலந்து முகத்திற்கு தடவி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவலாம். இது முகப்பருக்களுக்கான சிறந்த ஃபேஸ் பேக்.   2 தக்காளியை விழுதாக அரைத்து அதனுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு தடவலாம். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.3 தக்காளியுடன் 1 டீஸ்பூன் தயிர் மற்றும் ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்திற்கு தடவவும் 15நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம். இந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு பளபளப்பையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.  1 டீஸ்பூன் தக்காளி சாறுடன் 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து முகத்திற்கு தடவலாம். கண்களுக்குகீழுள்ளகருவளையங்களை சரி செய்வதற்கு இந்த ஃபேஸ் பேக் சிறந்தது.  ஒரு சிறிய துண்டு அவகேடோ மற்றும் தக்காளியை சேர்த்து விழுதாக அரைத்து இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் சுருக்கங்களில் இருந்து விடுபடலாம். 1 டீஸ்பூன் தக்காளி சாறுடன், 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்திற்கு தடவலாம். இந்த ஃபேஸ் பேக்  வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்கும்.

1 2 ... 13 14 15 16 17 18 19 20 21 22

AD's



More News