25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அழகுக் குறிப்பு

Aug 22, 2023

முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி பளீச்சென்று ஜொலிக்க, முருங்கை இலை பொடி

முருங்கை இலையில் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த முருங்கை இலையை அரைத்து பொடியாக்கி, முகத்திற்கு  ஃபேஸ் பேக் பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி பளீச்சென்று ஜொலிக்க, முருங்கை இலை பொடியில் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்து முகத்தை வாஷ் செய்யவும்.முகத்தை வெள்ளையாக்க பெஸ்ட் வீட்டு வைத்தியம். இதற்கு பச்சை பாலில் முருங்கை இலை பொடி, தேன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்யவும். பின்பு காட்டன் துணியை நனைத்து முகத்தை துடைத்து எடுக்கவும்.முகப்பரு பிரச்சனையை சரிசெய்ய பல வைத்தியங்களை முயற்சித்தவர்கள் இந்த முருங்கை  இலை பொடியை ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள். தயிரில் பொடியை மிக்ஸ் செய்து பரு மீது தடவினால் போதும், இனி முகப்பரு பிரச்சனையே இருக்காது.முக சுருக்கத்தை தடுக்க முருங்கை இலை பொடியில் தேன் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் மதிய நேரத்தில் தடவவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை வாஷ் செய்யவும்.தழும்புகள்,முகப்பருவால் ஏற்பட்ட கருப்பு நீக்க, முருங்கை இலை பொடியுடன் எலுமிச்சை சாறு, தயிர், ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும்.

Aug 21, 2023

வீட்டில் அழகா ஒரு மினி FACIAL டிப்ஸ்

ஒரு FUNCTION கிளம்ப போகும் முன்  வீட்டில் அழகா ஒரு மினி FACIAL பண்ணி முகத்தை பளபள என செய்யலாம் வாங்க வீட்டில் உள்ள பொருள் போதும் ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் உருளை கிழங்கு சாறு கொஞ்சம் கடலை மாவு கொஞ்சம் தேன், கொஞ்சம் ரோஸ் வாட்டர், கொஞ்சம் கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி முகத்தில் தடவி  காய்ந்தவுடன், கழுவி விட்டு பார்த்தால்  முகம் பளபள என ஜொலிக்கும்.

Aug 17, 2023

வெள்ளரிக்காய் ஃபேஸ் மாஸ்க்

காய்கறிகள் மற்றும் பழங்கள் உடலுக்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அதனால்தான் பழங்கள் மற்றும் காய்கறிகள் அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக வெள்ளரிக்காய் நீர்ச்சத்து நிறைந்தது. இதனை உட்கொள்வது உடலுக்கு மிகவும் நன்மை தரும். கோடை காலத்தில் வெள்ளரிக்காயை உட்கொண்டால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு பிரச்சனையே வராது. வெள்ளரிக்காயை முக அழகை கூட்டவும் பயன்படுத்தலாம். வறண்ட சருமத்தை கொண்டவர்கள் வெள்ளரிக்காயை முகத்தில் தடவி வரவும். வெள்ளரிக்காய் தோல், சரும பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது.. வெள்ளரி சாறுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.இப்போது அதை உங்கள் முகத்தில் தடவி சிறிது நேரம் தேய்க்கவும்.கடைசியாக முகத்தை நீரால் அலசவும்.கற்றாழை பெரும்பாலான சரும வகைகளுடன் பொருந்தக்கூடியது. எனவே முகத்தை சுத்தம் செய்வதற்கு இது ஒரு சிறந்த வழியாகும் . வெள்ளரிக்காயை வைத்து ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கதேவையான பொருட்கள்- தேயிலை மர எண்ணெய்-2 சொட்டு,வெள்ளரிக்காய் சாறு – 1 கப். வெள்ளரிக்காய் சாறுடன் தேயிலை மர எண்ணெய் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். இப்போது இந்த கலவையை ஃபேஸ் மாஸ்க் போல் முகத்தில் பூசவும்.முகப்பரு மீதும் இந்த ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தலாம்.இந்த ஃபேஸ் மாஸ்க், சரும வறட்சி மற்றும் வெடிப்புகளை குறைக்கிறது.குறிப்பு: முகத்தை ஈரப்பதமாக்குவதற்கு முன்பு வெறும் சருமத்தில் தேயிலை மர எண்ணெயை தடவ கூடாது. 

Aug 15, 2023

வறண்ட உதடுகளை பளபளப்பாக்க....

கோடை காலத்தில் உதடுகள் வறட்சி, வெடிப்பு ஏற்படுவதை  தவிர்க்க,தினமும் குளித்து முடித்த பின்னர் ஆலிவ் ஆயிலால் உதடுகளை மசாஜ் செய்து வந்தால் உதடு வெடிப்புகள் குறையும்.அவ்வபோது தேங்காய் எண்ணெய்யை உதடுகளில் தடவி, மசாஜ் செய்து வந்தால் UV கதிர்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.கற்றாழை ஜெல்களை உதடுகளில் தடவி வந்தால், உதடு வறட்சி, சுருக்கம் மறையும்.எலுமிச்சை சாறில் உள்ள சிட்ரஸ் அமிலம், உதடுகளின் இறந்த செல்களை நீக்கி, உதடுகளை பொலிவுற செய்யும்.அன்னாசி பழச்சாறில் உள்ள ப்ரோமலைன் உதடு சுருக்கங்கள் மறைய உதவுகிறது.திராட்சை பழச்சாறில் உள்ள விட்டமின் இ, உதடு சுருக்கங்கள், வறட்சி சரியாக உதவுகிறது.ஆமணக்கு எண்ணெய்யை உதடுகளில் தடவி வர, உதட்டில் உள்ள சுருகங்கள் மறைந்து மென்மையாகும்.

Aug 14, 2023

முடி கொட்டுவது நின்று வளர.....

முடி கொட்டுவது, ஒரு முடி இரண்டாக பிளந்து இருக்கும் .தலை சீவினால் குட்டி குட்டி முடி வணங்காமல் நிற்கும். இதற்கு காரணம் முடிக்கு சத்து இல்லை. தலையில் பக்கு இருந்தால் முடி கொட்டும். இதற்கு வாரம் ஒருமுறை கொஞ்சம் தயிர் ஒரு எலுமிச்சம் பழச்சாறு எடுத்து கலக்கி தலையில் தேய்த்து குளிக்கலாம். கரப்பான் இலை சாறு எடுத்து, தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி, தலையில் தேய்த்து குளிக்கலாம்.தலையில் வாரம் ஒருமுறை, நல்ல எண்ணெய் தேய்த்து குளிக்கலாம் .இப்படி செய்தால் முடி கொட்டுவது நின்று வளர ஆரம்பிக்கும்.

Aug 12, 2023

சார்கோல் மாஸ்க்

சரும பராமரிப்பு விஷயத்தில் ஃபேஸ் மாஸ்க் மிக மிக முக்கியமானது. அதிலும் கரித்தூள் ஃபேஸ் மாஸ்க் சருமத்திற்கு பல நன்மைகளை தருகின்றன. முகப்பிரச்சனைகளை தொடங்கி பல சரும பாதிப்புகளை இது சரிசெய்கிறது. பற்களை வெள்ளையாக்க பயன்படுத்தப்படும் கரித்தூள் முகத்திற்கு, சருமத்திற்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன.   தேவையான பொருட்கள் : கரித்தூள்- 1 டீஸ்பூன்,புரோபயாடிக் காப்ஸ்யூல் - 1, ஆப்பிள் சைடர் வினிகர்-2 டீஸ்பூன், அத்தியாவசிய எண்ணெய் - 1 சொட்டுபயன்படுத்தும் முறை:ஒரு கிண்ணத்தில் கரித்தூள், புரோபயாடிக் காப்ஸ்யூல், ஆப்பிள் சைடர் வினிகர், அத்தியாவசிய எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். இப்போது இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் அப்படியே விடவும். உலர்ந்ததும், அதை குளிர்ந்த நீரில் கழுவவும். உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை மீண்டும் நிரப்ப மாய்ஸ்சரை தடவவும். இப்படி மாதம் 2 முறை செய்தால் போது உங்கள் முகம் பளிச்சிடும். 

Aug 08, 2023

முசுமுசுக்கை கீரை தலைமுடிக்கு மிகவும் நல்லது

 முசுமுசுக்கை கீரை  இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் 2 முறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், முடிகொட்டுவது கட்டுப்படும்.. நன்றாக வளரவும் செய்யும்.. அத்துடன் முசுமுசுக்கையானது இளநரையை கட்டுபடுத்தும்.. உடல் சூட்டை தணித்து, கண் எரிச்சலையும் போக்கும்.தலைமுடிக்கு மிகவும் நல்லது . காச நோய் உள்ளவர்கள் அடிக்கடி உணவில் இந்த கீரையை சேர்த்து கொள்ளலாம்.. பசியை அதிகரிக்க செய்யக்கூடியது.

Aug 03, 2023

தலைமுடிக்கு முசுமுசுக்கை இலைச் சாறு

தலைமுடிக்கு மிகவும் நல்லது முசுமுசுக்கை கீரை.. இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் 2 முறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், முடிகொட்டுவது கட்டுப்படும்.. நன்றாக வளரவும் செய்யும்.. அத்துடன் முசுமுசுக்கையானது இளநரையை கட்டுபடுத்தும்.. உடல் சூட்டை தணித்து, கண் எரிச்சலையும் போக்கும்... நுரையீரல்: காச நோய் உள்ளவர்கள் அடிக்கடி உணவில் இந்த கீரையை சேர்த்து கொள்ளலாம்.. பசியை அதிகரிக்க செய்யக்கூடியது

Aug 02, 2023

கரும்புள்ளி மறைய.....

முகத்தில் கரும்புள்ளி இருந்தால்,கொஞ்சம் பாசிப்பயறு மாவு,கொஞ்சம் கடலை மாவு இரண்டையும் தண்ணி ஊற்றிகலக்கி ,முகத்தில் தடவிஒரு பதினைந்து நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் கரும்புள்ளிமறையும் இதை காலை மாலைஇரண்டு வேளை போட்டால் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் முகமும் பளபள என்று மின்னும்

Jul 31, 2023

சரும சுருக்கங்கள் மறைய....

ஒருதக்காளியை நன்கு புழிந்து சாறு எடுத்து இதனுடன் ஒருஸ்பூன் அரிசிமாவு மற்றும் ஒருஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்குகுழைத்து  சருமத்திற்கு பயன்படுத்த சரும சுருக்கங்கள் மறையும்.வாழைப்பழம் சரும கோளாறுகளுக்கு நல்ல நிவாரணியாக இருக்கின்றது.. வாழைப்பழ கலவையோடு தேன், அல்லது பாதாம் எண்ணெயை சேர்த்து பயன்படுத்தலாம். அடிக்கடி தக்காளி சாற்றை முகத்தில் தேய்த்து 10 நிமிடம் உலர விட்டு கழுவி வர முக சுருக்கம் மறைய தொடங்கும்… இதனால் முகத்திற்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு, முக தோலிற்கு ஊட்டமளிக்கவும் செய்யும்.

1 2 ... 13 14 15 16 17 18 19 20 21 22

AD's



More News