25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


அழகுக் குறிப்பு

Aug 14, 2024

முகத்தில் உள்ள கருப்பு திட்டுக்கள் நீங்க 3 டிப்ஸ்

சிலருக்கு முகத்தில், மூக்கில், கண்ணங்களில் கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இது ஒரு நோய் அல்ல,  சிறிய மச்சம் போல் ஆரம்பித்து முகத்தில் வேகமாக பரவிவிடும்.பொதுவாக 20-35 வயதுள்ளவர்களுக்கு வரக்கூடிய தற்காலிகப் பிரச்சனையாக இருந்தாலும், சிலருக்கு மட்டும் மீண்டும் மீண்டும் வரலாம்.5-7 பாதாமை நீரில் ஊறவைத்து, தோல் நீக்கி, மைய அரைத்து, அதனுடன் தேன் கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பிறகு நீரில் முகத்தை கழுவவேண்டும், தேனும், பாதாமும் சேர்ந்த கலவை வெகு சீக்கிரத்தில் மங்கு மறைந்து விடும்.ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து சம அளவு எடுத்து நீர்விட்டு மைய அரைத்து, முகத்தில் கருப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் பசை போல் தடவவும், காய்ந்த பிறகு முகத்தை கழுவ வேண்டும், சில முறை இதை செய்து வந்தால், கருப்பு திட்டுகள் மறையும்.1 ஸ்பூன் தக்காளி சாறு, 1 ஸ்பூன் தயிர், 2 ஸ்பூன் ஓட்ஸ், இவற்றை பேஸ்ட் போல் செய்து , சருமத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள் மீது நன்றாக தேய்த்து  காய்ந்தபின்  கழுவவும், வாரத்தில் 2-3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்

Aug 08, 2024

பால்,ரோஜாப்பூ இதழ் பேஸ்ட்

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடரை எடுத்து 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து அதில் ரோஜாப்பூ இதழ்களை அரைத்து பேஸ்ட் செய்து கலந்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை முகத்தில் தடவி 15-20 நிமிடம் நன்கு காய வைத்து, குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த நல்ல பளபளப்பு கிடைக்கும்

Aug 07, 2024

கண்ணில் உள்ள கருவளையம் மறைய உருளைக்கிழங்கு பேஸ்ட்

* உருளைக்கிழங்கை தோல் சீவிய பின் தேங்காய் போல துருவி கண்களை மூடி அதில் வைத்து மேல் ஒரு துணியுடன் 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.*உருளைக்கிழங்கை மிக்சியில் போட்டு அரைத்து பேஸ்டாக கண்களின் மேலும், கீழும் அப்ளை செய்யலாம்.*உருளைக்கிழங்கு சாறை இரவில் தூங்குவதற்கு முன் கண்களின் மேலும். கீழும் தடவிவிட்டு படுக்கலாம்.*உருளைகிழங்கை வட்டமாக நறுக்கி கண்களின் மீது 15 நிமிடங்கள் வைத்து எடுக்கலாம்.

Aug 06, 2024

பருக்கள் நீங்கி முகம் பளபளவென்று இருக்க...

.தினந்தோறும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும், பருக்கள் வராமல் தடுக்கும்.சந்தன பௌடருடன் சிறிது பன்னீர் சேர்த்து கலந்து பருவின்  மேல் வைத்து உலர்ந்தவுடன் கழுவி வாருங்கள்.சில நாட்களிலேயே பரு மறைந்துவிடும்.இரவில் நன்றாகத் தூங்க வேண்டும் சரியாகத் தூங்காவிட்டால் முகப்பரு வரும் வாய்ப்பு அதிகம்.கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் தவிர்ப்பது, பருக்கள் வராமல் தடுக்கும். தினசரி சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெயைக் குறைத்தாலே பருக்களும் குறைந்துவிடும்.ஜாதிக்காயை உரசி பருக்கள் மேல்தொடர்ந்து நான்கு நாட்கள் தடவி வந்தால் கரும்புள்ளிகள், பருக்கள் நீங்கி முகம் பளபளவென்று ஆகிவிடும்.

May 28, 2024

சுருள்முடியினை நேராக்கும் இயற்கை வழி Straightening.

சுருள் சுருளாக இருக்கும் தலைமுடியினை நேராக்க இயற்கையாக நமக்கு கிடைக்கும் பொருட்கள் கொண்டு செய்யலாம்.ஒரு ஸ்பூன் தேனுடன் ஒரு ஸ்பூன் பால் மற்றும் போதுமான அளவு சேம்பு சேர்த்து கூந்தலுக்கு ஸ்ப்ரே அடிப்பது போல் பயன்படுத்தி பின்னர் தலைக்கு குளித்துவிட நல்ல பலன் கிடைக்கும்.இரண்டு முட்டையுடன் போதுமான அளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலந்து கூந்தலுக்கு தடவி சுமார் 20 நிமிடங்கள் உலர வைக்கவும். பின் குளிர்ந்த நீர் கொண்டு தலைக்கு குளித்துவிட நல்ல மாற்றம் தெரியும்.கூந்தல் ஆரோக்கியம் காக்கும் ஊட்டச்சத்துக்கள் வாழைப்பழத்தில் இருக்கும் நிலையில் இந்த வாழைப்பழத்தை கூந்தலுக்கு ஹேர் பேக் போல் பயன்படுத்தலாம். 2 ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், முட்டை ஒன்றை சேர்த்து கலந்து கூந்தலுக்கு ஹேர் மாஸ்க் போல் பயன்படுத்தவும். 30 நிமிடங்கள் விட்டு, குளிர்ந்த நீரில் குளித்துவிட நல்ல பலன் கிடைக்கும்.கால் காப் அரிசி மாவுடன் முட்டை ஒன்று, முல்தானி மெட்டி 1 ஸ்பூன் சேர்த்து பேஸ்ட் போல் தயார் செய்து, கூந்தலுக்கு பன்படுத்தவும். ஒரு மணி நேரத்திற்கு பின் கூந்தலை சுத்தம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.கூந்தல் ஆரோக்கியம் காக்கும் கற்றாழை ஜெல்லினை மிதமான சூட்டில் உள்ள ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து அரைத்து கூந்தலுக்கு பயன்படுத்தவும். பின், 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்துவிடவும்.ஒரு ஸ்பூன் தேங்காய் பாலுக்கு கால் ஸ்பூன் எலுமிச்சை சாறு என கலந்து கூந்தலுக்கு ஸ்ப்ரே போல் பயன்படுத்தவும் பின், மிதமான ஷேம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்க நல்ல பலன் கிடைக்கும்2 ஸ்பூன் தயிருக்கு 1 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் வாழைப்பழ திப்பை ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து கூந்தலுக்கு ஹேர் மாஸ்க் போல் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும்.

May 27, 2024

பொடுகு, பேன், ஈறு தொல்லை நீங்க

நாம் தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நாம் பயன்படுத்தும் தலைகாணி உறை மற்றும் சீப்பு ஆகியவை மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.ஒரு சிலருக்கு தலையில் சுத்தம் இல்லாமல் இருப்பதால் பொடுகு பேன் ஈறு ஆகியவை வந்துவிடும். பொடுகு என்பது மற்றொரு தலையில் இருந்து இன்னொரு தலைக்கு தொற்றிக் கொள்ளும் ஒரு பூஞ்சை தொற்று. தேவையான பொருட்கள்:வேப்பிலை ஒரு கைப்பிடி,செம்பருத்திப்பூ நான்கு,வெந்தயம் ஒருஸ்பூன்,இஞ்சி ஒரு துண்டு.செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.அதில் இரண்டு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அந்தத் தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு இயற்கையான வேப்பிலையை பறித்து போட்டுக் கொள்ளவும். வேப்பம் பூ இருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளலாம்.மிகவும் நல்லது. பின் அந்த தண்ணீரில் நான்கு ஐந்து செம்பருத்திப் பூவை போட்டுக் கொள்ளவும். ஒரு துண்டு இஞ்சியை எடுத்து நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.பின் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை போட்டு அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் நன்றாக காய்ச்சவும்.இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் ஆகும் வரை நன்றாக கொதிக்க வைக்கவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு நன்கு சூடு ஆற்றிக் கொள்ளவும். இதை பஞ்சில்நனைத்துவேர்க்கால்களில் படும்படி நன்றாக தேய்த்து விடவும்.அரை மணி நேரம் கழித்து மைல்டான ஷாம்பு கொண்டு தலையைக் கழுவி விடவும். இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் தலையில் இருக்கும் பொடுகு, பேன், ஈறு ஆகியவை நிச்சயமாக நீங்கிவிடும்.

May 23, 2024

பாத வெடிப்புகளை போக்க

முகத்தை பராமரிப்பதில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்களோ, அதே போல் பாதங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் தங்கள் கள பாதங்களை கவனித்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.எலுமிச்சம் பழத் தோல் கொண்டு பாதங்களை நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, கிருமிகளை அழிக்கிறது. இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யலாம்.தினமும் இரவில் படுக்கும் முன், ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர், உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் ஷாம்பு போட்டு, கால்களை 5 முதல் 10 நிமிடம் வைத்து பின் பிரஷ் மூலம் சுத்தம் செய்யவும்.பின் ஒரு காட்டன் டவலால் பாத ஈரங்களை துடைத்து, நல்லெண்ணெயை சிறிது சூடாக்கி, பாதங்களில் தடவலாம். இதை வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்யலாம்.மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து, வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் பாத வெடிப்புகள் நீங்கும்.உருளைக்கிழங்கை உலர்த்தி மாவு போல் அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வர, வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி பாதங்கள் பளபளக்கும்.பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமென்றால், பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் 5 நிமிடம் நன்றாக தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.

May 22, 2024

நரைமுடிக்கு  இயற்கை ஹேர் பேக்

இயற்கை ஹேர் பேக் மூலம் நரைமுடியை எளிதாக கருப்பாக மாற்றலாம். ஒரு கப் நீரில்2 ஸ்பூன் டீ தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு வடிகட்டி கொள்ளவும். ஒரு கைப்பிடி மருதாணி இலை, மிளகு15, கிராம்பு5, காபி தூள் ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாறு2 ஸ்பூன் மற்றும் டீ தூள் நீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். இதை தலைக்கு தடவி 30 நிமிடங்கள் கழித்து முடியை அலசலாம். இதை வாரத்திற்கு 2 முறை செய்தால் பலன் கிடைக்கும் .

May 21, 2024

தேங்காய் பால் - பாதாம் பேஸ் பேக்!

முகத்தில் உள்ள சுருக்கங்களை விரட்டி, இளைமை தோற்றத்தை மீட்டு தரும்,தேங்காய்பால், பாதாம், எலுமிச்சை சாறு பயன்படுத்தி ஒரு பேஸ் பேக்,செய்முறை –  ஒரு  கோப்பையில் போதுமான அளவு தண்ணீருடன் பாதாம் சேர்த்து 8 மணி நேரத்திற்கு நன்கு ஊற வைக்கவும்.பின் இந்த பாதாமை மட்டும் ஒரு மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தொடர்ந்து பால் பவுடரையும் சேர்த்து அரைத்து தனி ஒரு கோப்பைக்கு மாற்றிக்கொள்ளவும்.பின்னர் இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் பால் சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ள இளமையை மீட்டு தரும் பேஸ்பேக் தயார்.முறையாக தயார் செய்த இந்த பேக்கினை முகம் ,கழுத்து பகுதிக்கு தடவி 25 - 30 நிமிடங்களுக்கு உலர வைக்கவும். பின் குளிர்ந்த நீர் கொண்டு சுத்தம் செய்துவிடவும்.பேஸ் பேக்கில் நாம் பயன்படுத்தும் தேங்காய் பால், சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.  இந்த பேக் சரும வறட்சிபிரச்சனையை போக்குகிறது.பாதாம்பயன்படுத்திதயார்செய்யப்படும்இந்தபேக்ஆனது, சருமம்தளர்வடைவதைதடுக்கிறது.சருமத்தில்காணப்படும்சுருக்கங்கள், மென் கோடுகளை மறைக்கிறது.பால்பவுடர், தேங்காய்பால்உள்ளிட்டபொருட்கள்கொண்டுதயார்செய்யப்படும்இந்தபேக்கொலாஜென்தட்டுப்பாட்டைதடுத்து, பொலிவான , மிருதுவான சருமம் பெற உதவுகிறது.

May 20, 2024

 சருமத்துக்கு நன்மைகளை தரும் ஐஸ்கட்டி 

  சருமத்திற்கு ஐஸ் கட்டிகள் கொண்டு மசாஜ் செய்து வர, சருமத்தில் காணப்படும் இறந்த செல்கள் நீங்கும் அதேநேரம் புதிய திசுக்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு, சருமம் பொலிவாக மாறும்.ஐஸ் கட்டியின் அழற்சி எதிர்ப்பு பண்பு, சரும தடிப்புகள் மற்றும் சரும கொப்புளங்களை குறைக்கிறது. அந்த வகையில் பருக்கள் மற்றும் பருக்களின் தழும்புகளை மறைக்கிறது.தூக்கமின்மை காரணமாக வீக்கமடையும் கண்கள் மற்றும் கண்விழி (உஷ்ண) கட்டிகளை கரைக்க இந்த ஐஸ் கட்டிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.சருமத்தின் இறந்த செல்களைவெளியேற்றும் ஐஸ் கட்டியினை வெள்ளரிக்காயுடன் சேர்த்து அரைத்து கண்களை சுற்றி பயன்படுத்த கருவளையங்கள் மறையும்.ஐஸ் கட்டிகள் கொண்டு உங்கள் சருமத்திற்கு தவறாது மசாஜ் செய்து வர, சருமம் தளர்வடைவது தடுக்கப்படுவதோடு சருமத்தில் காணப்படும் மென் கோடுகளும் மறையும்.சருமத்தின் pH அளவை மேலாண்மை செய்யும் ஜஸ் கட்டிகளை சருமத்திற்கு தவறாது பயன்படுத்தி வர, சருத்தின் அதிப்படியான எண்ணெய் நீங்குவதோடு, சரும வறட்சி பிரச்சனையும் நீங்குகிறது.பாலில் முக்கி எடுத்த ஐஸ் கட்டிகள் கொண்டு உங்கள் சருமத்திற்கு மசாஜ் செய்து வர, சருமத்தின் இறந்த செல்களை நீங்குவதோடு, சருமத்தில் காணப்படும் கருந்திட்டுக்களும் மறையும்சிறிதளவு கிரீம் டீ தூளுடன் ஐஸ் கட்டிகளை சேர்த்து உங்கள் சருமத்திற்கு தவறாது மசாஜ் செய்து வர, சருமத்தில் காணப்படும் தழும்புகள் மறையும்.

1 2 ... 11 12 13 14 15 16 17 ... 24 25

AD's