25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் பொன்னகரம் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா >> ராஜபாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி புதியகட்டிடம் திறப்பு விழா . >> தைப்பூச திருவிழா முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு >> மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா >> ராஜபாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள  நகரங்கள் ,கிராமங்களில் நேற்றிரவு 9 :08 மணிக்கு 3 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் . >> ராம்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி கருத்தரங்கில் குழந்தை திருமணத்தைத் தடுக்க சமூக வலைதளங்களை கருவியாக பயன்படுத்த வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. >> சாலை விரிவாக்க ஆக்கிரமிப்பு அகற்றுவதில், முறையாக அளவீடு செய்யாமல் பணிகள் நடப்பதாக  விவசாயிகள் குற்றச்சாட்டு . >> சேத்தூர் அடுத்த கோவிலுாரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. >> தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளான ரூகோஸ் வெள்ளை ஈக்கள் . >> ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >>


முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், வடுக்கள் போன்றவை நீங்க...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், வடுக்கள் போன்றவை நீங்க...

இயற்கையிலேயே நமக்கு கிடைக்கக்கூடிய பல பொருட்கள் நம்முடைய தோலின் நிறத்தை மாற்றும் வல்லமை படைத்ததாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக வெயிலால் ஏற்படக்கூடிய கருமையை நீக்குவதற்கு மட்டுமல்லாமல் ,கரும்புள்ளிகள், சுருக்கங்கள் போன்றவற்றை நீக்கி இளமையாக தக்கவைத்துக் கொள்ள பல இயற்கையான பொருட்கள் கிடைக்கின்றன.

கருமை நிறத்தை வெண்மையாக்கும் கிரீம் முதலில் ஒரு உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் தோலை சீவி விட்டு அதை நன்றாக துருவி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகுஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் சுத்தமான பசும்பாலை ஊற்றி அதில் நாம் துருவி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு, குறைந்த தீயில் வைத்து உருளைக்கிழங்கு நன்றாக வேக விட வேண்டும். நாம் உபயோகப்படுத்தும் சோப்பை எடுத்து அதையும் துருவி வைத்துக்கொள்ள வேண்டும். மூன்று ஸ்பூன் அளவிற்கு துருவிய சோப்பு கிடைத்தால் போதும். உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும் அதை அடுப்பில் இருந்து இறக்கிவிட்டு துருவிய சோப்பை அதில் சேர்த்து சோப்பு கரையும் வரை நன்றாக கிளறி விட வேண்டும். சோப்பு அனைத்தும் நன்றாக கரைந்த பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். அரைத்த இந்த விழுதை மறுபடியும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் எலுமிச்சை பழச்சாறு அல்லது ஆரஞ்சு பழச்சாறு இவற்றில் ஏதாவது ஒரு பழத்தின் சாறை இரண்டு ஸ்பூன் ஊற்ற வேண்டும்.

இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு சோளமாவை சேர்த்து ,ஒன்றுடன் ஒன்று நன்றாக கலந்த பிறகு மறுபடியும் இதை அடுப்பில்  வைத்து கிரீம் பதத்திற்கு வரும் அளவிற்கு குறைந்த தீயில் வைத்து,கை விடாமல் கிளறி விட வேண்டும். இது கிரீம் பதத்திற்கு வந்தவுடன் அதை அடுப்பில் இருந்து இறக்கிஆற வைத்து சுத்தமான காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து விட வேண்டும். நிறத்தை வெண்மையாக்க கூடிய க்ரீம் தயாராகிவிட்டது. இந்த கிரீமை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்த வேண்டும். இந்த கிரீமை நாம் முகத்தில் தடவுவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், வடுக்கள் போன்றவை நீங்குவதோடு மட்டுமல்லாமல் முகச்சுருக்கத்தையும் நீக்குவதற்கு இது பெரிதும் துணை புரிகிறது. ஒரு முறை உபயோகப்படுத்தினாலேயே நல்ல பலனை தரக்கூடியது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News