25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அழகுக் குறிப்பு

Jul 29, 2023

தலையில் முடி கொட்டுவது நின்று வளர...

அண்மையில் குழந்தை பிறந்திருந்தாலும் அக்காலத்தில் ஏற்படுகிற ஹோர்மோன் மாற்றங்களாலும் முடி உதிரக் கூடும். தலையில் பங்கஸ் தொற்று நோய் போன்ற சரும நோய்கள் இருந்தாலும் அதிகமாக முடி உதிரும். தொற்று நோயல்லாத வேறு சரும நோய்களாலும் முடி  உதிரலாம்.உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், மூட்டு நோய்கள், மனச்சோர்வு போன்ற நோய்களுக்கு உபயோகிக்கும் சில மருந்துகளும் முடி  உதிர்தலை அதிகரிக்கும். மிக நெருக்கமான பற்களை உடைய சீப்புகளைத் தவிர்த்து சற்று அதிக இடைவெளி உடைய பற் சீப்புகளை உபயோகியுங்கள். இறுக்கமான  பற்கள் உடைய சீப்புகள் முடிகளை இழுத்து பிடுங்கிவிடவும் வாய்ப்புண்டு.முடியை அலங்கரிக்கும் போது மிக இறுக்கமாக முடியைக் கட்டுவதும் கூடாது. இறுக்கமான பின்னல் இறுக்கமான போனி ஸ்டைல் போன்றவற்றை தவிர்த்து சற்று தளர்ச்சியாக முடியைச் சீவி கட்டுவது நல்லது.விட்டமின்கள், இரும்புச் சத்து, புரதம் போன்ற சத்துக்கள் உள்ள  மீன், கீரை, பருப்பு, பயறு வகைகள், காய்கறி பழவகைகள் உள்ளடங்கிய போசாக்கு உணவுகளை உண்பது அவசியம்.கொஞ்சம் சின்ன வெங்காயம் உரித்து,அதை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து வடி கட்டி அதில் சாறு பிழிந்து எடுத்துதலையில் தேய்த்து ஒரு1/2 மணி நேரம் கழித்து குளிக்கலாம் இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால் கொட்டிய இடத்தில் புது முடி வளர ஆரம்பிக்கும் சின்ன வெங்காயம் உடம்புக்கு நல்ல குளிர்ச்சி தரும் இந்த மாதிரி செய்து பாருங்க முடி கொட்டுவது நின்று வளர ஆரம்பிக்கும் .

Jul 26, 2023

முகம் புத்துணர்ச்சியுடன் இருக்க

 கேரட், உருளைக்கிழங்கு, வெள்ளரி, தக்காளி மற்றும் பூசணி போன்ற காய்கறிகளை சிறு துண்டு எடுத்து, மிக்சியில் நன்கு அரைத்து கொள்ளவும்.பின்பு அவற்றுடன் கொஞ்சம் பயத்தமாவை கலந்து முகத்தில் போட்டு 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும் இவ்வாறு செய்வதால் முகம் சோர்வடையாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்மேலும் முகத்தில் இருக்கும் பருக்களை போக்கி மேடு பள்ளத்தை சரிசெய்யும் மேலும் சருமத்திற்கு ஊட்டசத்தையும், நிறத்தையும் அதிகம் அளிக்கிறது.வாழைப்பழத்தை நன்கு மசித்து அதனுடன் தயிர் மற்றும் கொஞ்சம் தேன் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் ஃபேஷியல் செய்தால், முகம் பொலிவுடனும், மென்மையாகவும் மற்றும் பளபளப்பாகவும்  இருக்கும். மாம்பழத்தை நன்றாக மசித்து அவற்றில் சிறிது பால் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் ஃபேஷியல் செய்தால், சரும பிரச்சனைகள்  அனைத்தும் சரியாகும் மேலும் முதுமை தோற்றம் விலகும். 

Jul 24, 2023

சரும சுருக்கம் கருமை நீங்க

ஒரு தக்காளியை நன்கு புழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். பின்னர் இதனுடன் ஒருஸ்பூன் அரிசி மாவு மற்றும் ஒருஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ள, கிடைக்கும் சேர்மத்தை சருமத்திற்கு பயன்படுத்த சரும சுருக்கங்கள் மறையும்.ஆரோக்கியமான சருமத்திற்கு உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய மிக முக்கியமான பொருள் கொலாஜன் ஆகும், இது உங்கள் சருமத்தை உறுதியாகவும், சுருக்கங்கள் இல்லாமல் மற்றும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் புரதமாகும். உடலில் கொலாஜன் அளவைப் பராமரிப்பது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது இருபது வயதிற்கு பிறகு குறையத் தொடங்கிறது. இதை உங்கள் உணவில் சேர்க்க மாமிசம் சாப்பிடுபவராக இருந்தால் எலும்பு குழம்பும், செயற்கை வழியில் எடுத்துக்கொள்ள கொலாஜன் சப்ளிமெண்டும் சிறந்த வழியாகும். எலும்பு குழம்பில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன, இது தோல் தளர்வை வலுப்படுத்த உதவுகிறது. தக்காளி சாறுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகம் கழுத்து பகுதிகளில் பூச வேண்டும் 10 நிமிடம் பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பொலிவாக இருக்கும் தொடர்ந்து செய்தால் முகம் கருமை நீங்கும்.  

Jul 22, 2023

வெள்ளி கொலுசு அணிவதால்

வெள்ளி கொலுசு அணிவதால் குதிகால் நரம்பை தொட்டுக் கொண்டிருப்பதால், அதன் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளை குறைத்து கட்டுப்படுத்துகிறது.கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர் பை வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல்திறனை தூண்டி விடும் அற்புதமான அணிகலன் கொலுசு.தடிமனான கொலுசு அணிவதன் மூலம் கர்ப்பப்பை இறக்க பிரச்சனையை தீர்க்கலாம். நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கிறது, 

Jul 18, 2023

பளிச்சென்ற கண்களைப்  பெற ஜாதிக்காய்

ஜாதிக்காயைச் சிறிது பசும்பாலில்விட்டு அரைத்து மைபோல் குழைத்து இரவில் படுக்கப் போகும் முன்பு கண்களைச் சுற்றித்தடவி வர கண்கள் குளிர்ச்சி அடையும். பளிச்சென்ற கண்களையும் பெறலாம்.கால் தம்ளர் பசலைக் கீரைச் சாறுடன் முக்கால் தம்ளர் சூடான பால் கலந்து சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், நீர்க்கடுப்பு சுத்தமாகக் குறையும். பெண்களுக்கு ஏற்படுகிற கருப்பை நோய்கள் குணமாகும்.

Jul 17, 2023

பல் கூச்சம் ,ஈறு வலி சரியாக

பல் கூச்சம் என்பது பற்களின் வேர்ப்பகுதிகளில் இருக்கும் நரம்புகள் பலவீனமடைந்து, ஈறுகளில் பிரதிபலிக்கும் உணர்வாகும்.கிருமிகளின் தொற்று, பற்களின் சிதைவு, அல்லது எனாமல் போகும்படி அதிக செறிவு மிகுந்த பேஸ்ட், நிறைய அமிலங்கள் உள்ள குளிர்பானங்கள் குடிப்பது ஆகியவற்றால் இது போன்று கூச்சம் வரும்.நாம் உண்ணும் குளிர்ந்த மற்றும் சூடான உணவுகள் பற்களின் நரம்புகளுக்கு செல்லாமல் எனாமல் தடுக்கிறது.இந்த எனாமல் பாதிப்படையும் போது சூடான அல்லது குளிர்ந்த உணவுகள் பற்களின் நரம்புகளில் பட்டதும் சுரீரென்று ஒரு வலி உண்டாகிறது.தினமும் பல் துலக்கிய பின், வெதுவெதுப்பான நீரில், சிறிது கல்உப்பு சேர்த்து வாய் கொப்பளித்து வர பல் கூச்சம் குணமாகும்.பல் வலி மற்றும் ஈறு வீக்கம் உள்ள பகுதிகளில், கிராம்பு எண்ணெய், அல்லது கிராம்பு பொடியை வைத்தால், பல்வலி உடனடியாக குறையும்.தினமும் பல் துலக்கிய பின், கொய்யா இலை மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்த நீரில், வாய் கொப்பளித்து வர,பல்வலி,ஈறு வீக்கம், பல் ஆட்டம் , பல் கூச்சம் சரியாகும்.

Jul 12, 2023

தழும்புகள் மறைய.....

 நீண்ட கால தழும்புகள் கூட விளக்கெண்ணெய்சிகிச்சையால் மறையும் இரவு தூங்கும்முன் விளக்கெண்ணெயை காய்ச்சி, வெதுவெதுப்பான பதத்தில் உடலில் தழும்பு உள்ள இடத்தில் தேய்த்து மசாஜ் (செய்துகொண்டு உறங்குங்கள். இதை தினசரி செய்துவர காயங்களின் வடு, தழும்புகள் மறையும் 1 ஸ்பூன் விளக்கெண்ணெயுடன் 1 ஸ்பூன் கற்றாழை கலந்து தினசரி 10 நிமிடம் மசாஜ் செய்து வந்தாலும் சிறந்த பலன் கிடைக்கும்.பாதாம் எண்ணெய் : தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.

Jul 10, 2023

உதடுகளில் உள்ள கருமைநிறம் நீங்க.....

பீட்ரூட் சாற்றைப் பருத்தி துணியில் நனைத்து உதட்டில் தடவி 10-15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுவினால் கருமை நீங்கும்.சிறிதளவு சுத்தமான கற்றாழை ஜெல்லை உங்கள் உதடுகளில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவினால் கருமை நீங்குவதோடு, உதட்டில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.தேன் மற்றும் பாதாம் எண்ணெயை சம அளவில் கலந்து, தூங்குவதற்கு முன்பு உதடுகளில் தடவினால் கருமைநிறம் நீங்கும்.சூரிய ஒளி உங்கள் உதடுகளை மேலும் கருமையாக்கும். உதடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் UV கதிர்களிலிருந்து பாதுகாக்க  தொப்பி அல்லது தாவணி போன்றவற்றை வெளியில் செல்லும் போது முகத்தில் அணிவது அவசியம்.எலுமிச்சை சாற்றை பருத்தி துணியால் நனைத்து உதடுகளில் தடவி, சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு கழுவினால் கருமை நீங்கும்.கருமையான உதடுகள் சில நேரங்களில் நீரிழப்பு காரணமாக இருக்கலாம். உங்கள் உதடுகள் உட்பட உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீரைக் குடிப்பது அவசியமாகும்.

Jul 08, 2023

தலைமுடி உதிர்வை கட்டுபடுத்தும் வெந்தயம்

வெந்தயம்உடலுக்குள் சென்று முடி வளர்ச்சியை தூண்டும் ஹார்மோன்களை தூண்டுகின்றன. இதனால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கின்றது.வெந்தயத்தை தேங்காய் எண்ணெயில் கலந்து பயன்படுத்தும் போது பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.இத்தனை அம்சங்கள் பொருந்திய வெந்தயத்தை எப்படி தலைமுடிக்கு அப்ளை செய்யலாம். 7 நாட்களுக்கு பின்னர் நிச்சயமாக உங்களின் தலைமுடி பிரச்சினைகள் சரியாகும்.1. இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் ஒரு கப் அளவு வெந்தய விதைகளை எடுத்து பவுலில் போட்டு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.2. காலையில் எழுந்தவுடன் வெந்தயத்தை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். அந்த பேக்கை உச்சந்தலையில் மற்றும் முடியில் தடவி சரியாக30 நிமிடங்கள் வரை வைத்திருந்து விட்டு குளிக்கவும்.3. வெந்தயப் பொடி மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகிய இரண்டு பொருளை நன்றாக கலந்து தலைமுடிக்கு அப்ளை செய்ய வேண்டும்.1 மணித்திற்கு பின்னர் ஷாம்பூ கொண்டு முடியை நன்றாக அலச வேண்டும்.4. மீண்டும் வெந்தயத்தை எடுத்து ஒரு கப்பில் ஊற வைக்க வேண்டும்.5. ஊற வைத்த வெந்தயத்தை தண்ணீரில் சில நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். அந்த சாற்றை எடுத்து குளித்து முடித்த பின்னர் தலைமுடியை அந்த தண்ணீரில் அலச வேண்டும்.6. வெந்தயப் பொடி மற்றும் தயிர் ஆகிய இரண்டையும் கலந்து தலையில் பூசி சுமாராக 30 நிமிடங்கள் வரை வைத்து விட்டு நன்றாக அலசிக் கொள்ளவும். 7. மீண்டும் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும்.3,4 வாரங்களுக்கு செய்து வந்தால் நல்ல மாற்றத்தை விரைவில் பார்க்கலாம். அத்துடன் தலைமுடி வளர்ச்சியும் அதிகமாகும்.     

Jul 07, 2023

முகச்சுருக்கங்கள் மறைய....

பவுல் ஒன்றில் பாலை ஊற்றிக் கொள்ள வேண்டும்.அதில் தோல் நீக்கிய பலாப்பழ கொட்டையை ஊற வைக்க வேண்டும்.அதனுடன் தேன் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைக்க வேண்டும்.முகத்தை நன்றாக கழுவி துடைத்த பிறகு முகம் முழுவதும் அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும்.இதேபோல் வாரத்திற்கு ஒருமுறை செய்தால் சுருக்கங்கள்மறையும்.பலாக்கொட்டையை பச்சையாக அரைக்கும் போது அவ்வளவு நைசாக முடிந்தவரை அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த பலாக்கொட்டையை ஒரு காட்டன் துணியில்ஊற்றிநன்றாக பிழிந்தால் சாறு கிடைக்கும்.இந்த சாரோடு கொஞ்சமாக தேன் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். இந்த சாறை அப்படியே முகத்தில் தடவி மசாஜ் செய்து அப்ளை செய்ய வேண்டும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பின்பற்றலாம். இது  தண்ணீராக இருப்பதால் இரண்டு மூன்று முறை கோட்டிங் போல உங்கள் முகத்தில் தடவ வேண்டும். இந்த சாறை முகத்தில் தடவி, இரண்டு மூன்று நிமிடங்கள் காய விட்டு ,காய்ந்த பிறகு மீண்டும் இந்த சாறை எடுத்து உங்களுடைய முகத்தில் தடவி உலர விட வேண்டும். இதே போலத்தான் உங்களுடைய கை,கால்களுக்கும் இதை தடவி நன்றாக உலர விட்டு20 நிமிடம் கழித்து வெறும் தண்ணீரில் சருமத்தை கழுவி விட்டால் உங்களுடைய சருமம் பொலிவாக இருக்கும். இதே பலாப்பழ சாறில் கோதுமை மாவு அல்லது கான்பிளவர் மாவு சேர்த்து கலந்தால் நமக்கு ஒரு ஃபேஸ் பேக் கிடைத்துவிடும். அந்த பேக்கை  முகம் கை கால்களில் போட்டு 20 நிமிடம் கழித்து கழுவிக்கொள்ளலாம்

1 2 ... 13 14 15 16 17 18 19 20 21 22

AD's



More News