25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


தெரிந்து கொள்ளுங்கள்

Sep 02, 2025

நம்ம ₹100 நோட்டுல இருக்கும் இந்த மலை எங்க இருக்குனு தெரியுமா?

ஒரு ஜெர்மன் டூரிஸ்ட்₹100 நோட்டை காட்டி"இந்த மலை உங்க நாட்டுல எங்கே இருக்கு தெரியுமா?" என்று5-6 இந்தியர்களிடம் கேட்டாராம். ஆச்சர்யமா,யாருக்கும் பதில் தெரியல! அது தான் காஞ்செஞ்ஜங்கா மலை.உலகில் மூன்றாவது உயரமான மலை. இந்தியா (சிக்கிம்) மற்றும் நேபாளத்தில் இரண்டும் சேர்ந்த இடத்தில் இந்த மலை  உள்ளது .

Sep 02, 2025

இந்தியாவிற்கு பெரு மையான தருணம்.

ராஜஸ்தானைச் சேர்ந்த மாணிகா விஸ்வகர்மா, 2025 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்ட த்தை வென்ற புதியவர். 

Sep 01, 2025

'கேட்போர் வட்டம்' (Audience Enclave)

குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே கேட்கும் வகையில், அல்ட்ராசோனிக் அலைகளை குவித்து அனுப்பக் கூடிய, 'கேட்போர் வட்டம்' Audience Enclave)என்ற  தொழில்நுட்பத்தை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த நுட்பம், பொது இடங் களில் ஹெட்போன்கள் இல்லாமல் தனிப்பட்ட முறையில், இசை, உரைகளை கேட்க உதவும்.காது இரைச்சலை ஆங்கிலத்தில் 'டின்னிடஸ் ' என்பர். இந்த தொந்தரவுக்கு திட்டவட்டமான  சிகிச்சை இல்லை .சமீபத்திய ஆய்வு ஒன்று, பழங்கள், நார்ச்சத்து, பால் பொருட்கள், காபி போன்றவை, டின்னிடசை தடுக்கக்கூடும் என்று கூறுகிறது.

Aug 30, 2025

எல்.ஐ.சி இன்சூரன்ஸ் பாலிசி காலாவதி ஆகிவிட்டதை ,புதுப்பிக்கும் திட்டம்

 இந்த திட்டம் ஆகஸ்ட் 18 முதல் அக்டோபர் 17 வரை 2 மாத காலத்திற்கு அமலில் இருக்கும். இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ், பங்குச்சந்தையுடன் தொடர்பில்லாத  தனிநபர் பாலிசிகளுக்கு தாமத கட்டணத்தில் 30% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியின் அதிகபட்ச வரம்பு ரூ. 5,000 ஆகும். மைக்ரோ இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான தாமத கட்டணத்தில் 100% தள்ளுபடி வழங்கப்படும். பிரீமியம் செலுத்தப்படாமல் ஐந்து ஆண்டுகள் ஆன, குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட பாலிசிகளை இந்தத் திட்டத்தின் கீழ் புதுப்பித்துக் கொள்ளலாம். பிரீமியம்செலுத்தமுடியாததால்காப்பீட்டுபாதுகாப்பைஇழந்தவாடிக்கையாளர்களுக்குமீண்டும் பாதுகாப்பை அளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்என்றுஎல்ஐசிதெரிவித்துள்ளது. லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்  நிறுவனம், காலாவதியான பாலிசிகளை புதுப்பிப்பதற்காக ஒரு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.

Aug 30, 2025

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடல்.  (Flex Magic Pixel)

உலகின் மிகவும் பிரபலமான ஃபிளாக்ஷிப்  ஆண்ட்ராய்டு ஃபோன்களில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S சீரிஸ் ,ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில், சாம்சங் தனது புதிய தலைமுறை ஸ்மார்ட்போன்களை வெளியிடுவது வழக்கம். சாம்சங் நிறுவனம் அதன் Flex Magic Pixel தொழில்நுட்பத்தை வரவிருக்கும் கேலக்ஸி S26 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் பயன்படுத்தலாம் என்று தெரிகிறது. இந்த தொழில்நுட்பம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. Flex Magic Pixel தொழில்நுட்பம், பயனர்கள் பொது இடங்களில் வங்கி செயலிகள் போன்ற ரகசியமான செயலிகளை திறக்கும்போது, ஃபோனின் திரையின் பார்வை கோணங்களை மாற்றியமைக்க AI-ஐப் பயன்படுத்துகிறது. இதன் மூலம், அருகில் இருப்பவர்கள் திரை என்ன காட்டுகிறது என்பதை பார்க்க முடியாமல் தடுத்து,பயனர்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது.

Aug 30, 2025

ஒரு ஜப்பானிய நிறுவனம், தங்கள் மூளை அலைத் தரவை வாங்கி, (1,000 ஜப்பானிய யென்) வழங்கி அதை பல்வேறு வடிவங்களாக மாற்றி, பின்னர் அதை கலையாக விற்க வாடிக்கையாளர்களை அழைக்கிறது. 

டோக்கியோவை தளமாகக் கொண்டBWTC என்ற நிறுவனம், மக்களின் உள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் நவீன கலைப் படைப்புகளாக மாற்றும் சலுகைக்காக சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது.பங்கேற்பாளர்கள் தலைநகரின் சியோடா மாவட்டத்தில் உள்ள BWTC மெட்டாவர்ஸ் ஸ்டோருக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், அங்கு அவர்களுக்கு 100 வினாடிகள் மூளை அலை ஸ்கேனிங்கிற்கு ரூ.590(1,000 ஜப்பானிய யென்) வழங்கப்படுகிறது. இது முடிந்ததும், கலைப்படைப்பு விற்கப்படுகிறது, மூளை அலை சேகரிப்புக்கான செயல்முறை எளிதானது. பங்கேற்பாளர்கள் கடைக்குச் சென்று, சிறப்பு மூளை அலைஸ்கேனிங் சாதனத்தை தங்கள் தலையில் வைத்து, இயந்திரம் அதன் வேலையைச் செய்யும் வரை காத்திருக்க வேண்டும். ஒவ்வொரு பங்கேற்பாளரின் தனித்துவமான மூளை செயல்பாடும் கைப்பற்றப்பட்டு உடனடியாக ஒரு தனிப்பயனாக்கப்பட்ட கலைப் படைப்பாக மாற்றப்படுகிறது."நாங்கள் 1,853 பேரிடமிருந்து 185,300 வினாடிகள் மூளை அலைகளை வாங்கினோம்" என்று நிறுவனம் தனது வலைத்தளத்தில் கூறுகிறது.இந்த நிறுவனம் ஏற்கனவே தைவான் மற்றும் பிற ஜப்பானிய மாகாணங்களில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் கலை இடங்களில் நிகழ்வுகளை நடத்தி, அதன் மூளை அலை கலைப்படைப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், கலைப்படைப்புகள் அவற்றின்"அழகியல் மதிப்பு, தரவு ஏற்ற இறக்கங்களின் தனித்துவம் மற்றும் ஸ்கேன் செய்யும் போது பங்கேற்பாளரின் மனநிலை" ஆகியவற்றால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.உதாரணமாக, ஸ்கேன் அமர்வின் போது டிராமின் வீடியோவைப் பார்க்கும் ஒரு நபரின் மூளை அலை கலைப்படைப்பு ரூ.8,201 (13,900 ஜப்பானிய யென்) விலையில் இருந்தது, அதே நேரத்தில் உணவில் கவனம் செலுத்திய மற்றொருவரின் துண்டின் மதிப்பு ரூ.4,608 (7,810 யென்) என்று கண்டறியப்பட்டது.

Aug 29, 2025

3000 இந்திய ஊழியர்களை அமெரிக்காவின் ஆரக்கிள் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

இந்தியாவில் உள்ள சுமார் 3,000 ஊழியர்களை அமெரிக்க மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் பணிநீக்கம் செய்துள்ளதாக வெளியான தகவல் தொழில்நுட்ப துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பணிநீக்க நடவடிக்கையால், சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட், வாடிக்கையாளர் மேலாண்மை மற்றும் கிளவுட் சேவைகள் போன்ற துறைகளில் உள்ள ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரக்கிள் நிறுவனம் ஓப்பன் ஏஐ நிறுவனத்துடனான ஒப்பந்தத்திற்கு பிறகு, இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு துறையில் ஆரக்கிள் நிறுவனம் அதிக கவனம் செலுத்துவதால், பல ஊழியர்களின் பங்களிப்பு இனி தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல ஊழியர்கள் பணிநீக்கத்தால்,  தங்கள் வேலையை இழந்துள்ளனர். இது தகவல் தொழில்நுட்ப துறையில் ஒரு நிலையற்ற சூழலை உருவாக்கியுள்ளது. ஆரக்கிள் போன்ற ஒரு பெரிய நிறுவனம் இந்த முடிவை எடுத்தது, மற்ற ஐடி நிறுவனங்களுக்கும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, மனித ஊழியர்களின் வேலைவாய்ப்பை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Aug 29, 2025

யானைகளின்  திறன் மிக்கவாசனை உணர்வு.

யானைகள் வாசனை உணர்வு திறன் மிக்கவை. அவை கிட்டத்தட்ட 2 ஆயிரம் வாசனை நுகர்வு திறன் மரபணுக்களை கொண்டுள்ளன. அதனால் வாசனை நுகர்வதில் மனிதர்கள், நாய்களை விட வலிமையானவை. வறட்சியான காலகட்டங்களில் கூட அவைகளால் 12 மைல் (19 கி.மீ.) தூரத்தில் தண்ணீர் இருப்பதை அறிய முடியும். 

Aug 27, 2025

மின் வாகனங்கள் பயன்பாடு தமிழ்நாட்டில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுற்றுசூழல்மாசுபாட்டை குறைக்கும்வகையில் மின்வாகனங்களை ஊக்குவிக்கும்பொருட்டு தமிழகஅரசு பல்வேறுமுயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இதற்காகதிருத்திய மின்வாகனகொள்கை வெளியிடப்பட்டநிலையில், மின்வாகனங்களுக்கு சாலைவரி விலக்கு, பதிவுக்கட்டணம் மற்றும்அனுமதி கட்டணத்தில்சலுகை எனபல கவர்ச்சிகரமானஅறிவிப்புகள் வெளியிடப்பட்டது.மாநகரபோக்குவரத்திலும் முதற்கட்டமாகசென்னையில் மின்சார பேருந்துகள் அறிமுகம்செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பலமுக்கிய நகரங்களில்மின்சார பேருந்துகள்அடுத்தடுத்த கட்டமாகபயன்பாட்டிற்கு வரஉள்ளது.மாநிலம்முழுவதும் மின்வாகனங்களின் பயன்பாடுஅதிகரித்து வரும்நிலையில், அவற்றிற்குசார்ஜ் செய்வது,பேட்டரி மாற்றுவதுஉள்ளிட்ட வசதிகளுக்காகசார்ஜிங் நிலையங்கள்அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மின்வாரியஅதிகாரிகள் பேசியபோது,“தமிழ்நாட்டில் மின்சாரவாகனங்கள் அதிகரித்துவருவதை கருத்தில்கொண்டு நகர்புறங்கள்மற்றும் நெடுஞ்சாலைகளில்500 இடங்களில் சார்ஜிங்நிலையங்கள் அமைப்பதற்கானசாத்தியக் கூறுகள்ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. ஆட்டோ,கார்கள் உள்ளிட்டபயன்பாட்டிலும்மின் வாகனபயன்பாட்டை அதிகரிக்கும்விதமாக பேட்டரிமாற்றும் நிலையங்கள்அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர். 

Aug 26, 2025

எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் கார் ஷோரூமை தொடங்க உள்ளது.

மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸில்எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் கார் ஷோரூம் ஸ்டோர் திறக்கப்படவுள்ளது. டெஸ்லா இந்தியாவின் சந்தையில் அதிகாரப்பூர்வமாக நுழைவது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.டெஸ்லா இந்திய சந்தைக்கு புதுப்பிக்கப்பட்ட மாடல்Y காரை வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாம்பல் நிறத்தில், கருப்பு அலாய் வீல்களுடன், நேர்த்தியான, கூபே போன்ற வடிவமைப்பில் இருக்கும் இந்த மாடல் லாங் ரேஞ்ச் RWD (Long Range RWD) மற்றும் லாங் ரேஞ்ச் AWD (Long Range AWD) ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கும். மாடல் Y ஆனது இரட்டை வண்ண கருப்பு மற்றும் வெள்ளை கேபினுடன் குறைந்தபட்ச வடிவமைப்பை கொண்டுள்ளது. இதில் 15.4 அங்குல மைய தொடுதிரை, வயர்லெஸ் சார்ஜிங்,USBC போர்ட்கள், குரல் கட்டளைகள், இணைய இணைப்பு மற்றும் செயலி அடிப்படையிலான வாகன அணுகல் போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. டெஸ்லா மாடல்Y இன் விலை ரூ.60 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 2 ... 16 17 18 19 20 21 22 ... 57 58

AD's



More News