மின் வாகனங்கள் பயன்பாடு தமிழ்நாட்டில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுற்றுசூழல்மாசுபாட்டை குறைக்கும்வகையில் மின்வாகனங்களை ஊக்குவிக்கும்பொருட்டு தமிழகஅரசு பல்வேறுமுயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இதற்காகதிருத்திய மின்வாகனகொள்கை வெளியிடப்பட்டநிலையில், மின்வாகனங்களுக்கு சாலைவரி விலக்கு, பதிவுக்கட்டணம் மற்றும்அனுமதி கட்டணத்தில்சலுகை எனபல கவர்ச்சிகரமானஅறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
மாநகரபோக்குவரத்திலும் முதற்கட்டமாகசென்னையில் மின்சார பேருந்துகள் அறிமுகம்செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பலமுக்கிய நகரங்களில்மின்சார பேருந்துகள்அடுத்தடுத்த கட்டமாகபயன்பாட்டிற்கு வரஉள்ளது.மாநிலம்முழுவதும் மின்வாகனங்களின் பயன்பாடுஅதிகரித்து வரும்நிலையில், அவற்றிற்குசார்ஜ் செய்வது,பேட்டரி மாற்றுவதுஉள்ளிட்ட வசதிகளுக்காகசார்ஜிங் நிலையங்கள்அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மின்வாரியஅதிகாரிகள் பேசியபோது,“தமிழ்நாட்டில் மின்சாரவாகனங்கள் அதிகரித்துவருவதை கருத்தில்கொண்டு நகர்புறங்கள்மற்றும் நெடுஞ்சாலைகளில்500 இடங்களில் சார்ஜிங்நிலையங்கள் அமைப்பதற்கானசாத்தியக் கூறுகள்ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. ஆட்டோ,கார்கள் உள்ளிட்டபயன்பாட்டிலும்மின் வாகனபயன்பாட்டை அதிகரிக்கும்விதமாக பேட்டரிமாற்றும் நிலையங்கள்அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர்.
0
Leave a Reply