25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


தெரிந்து கொள்ளுங்கள்

Feb 04, 2026

சாக்லெட் தயாரிப்பில் பயன்படும் கோகோ தாவரம்.

சாக்லெட் தயாரிப்பில் பயன்படுகிறது கோகோ தாவரம். தென் அமெரிக்கா அமேசான் ஆற்றுப்படுகையை தாயகமாக உடையது. இதன் தாவரவியல் பெயர் தியோபிரமா கோகோ. ஸ்டெர்குலியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. கி.மு.,2000 முதலே கோகோ தாவரம் வளர்க்கப்பட்டதாக ஆய்வுகள் வழியாக தெரியவருகிறது.இந்த தாவரத்தை சொர்க்கத்தில் இருந்து கடவுள் கொண்டு வந்ததாக மயன் நாகரிக காலத்தில் மக்கள் நம்பினர். கடவுளின் உணவு எனவும் அழைக்கப்பட்டது. கோகோவில் கிரையல்லோ, பாரஸ்டிரோ உட்பட மூன்று ரகங்கள் உள்ளன. இவற்றில் கிரையல்லோ சிவப்பு நிற காய்களை உடையது. பராஸ்டிரோ பச்சை மற்றும் மஞ்சள் நிற காய்களை கொண்டது. இந்த வகை இந்தியாவில் பெருமளவு சாகுபடி செய்யப்படுகிறது.மருந்து தயாரிப்பில் மூலப்பொருளாகபயன்படுகிறது கோகோ விதை. உலகளவில் சாக்லெட் உணவு பொருட்கள் மற்றும் சுவை மிக்க பானங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. கோகோவில் தயாரிக்கப்படும் வெண்ணெய் சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்டாக விளங்குகிறது.

Feb 03, 2026

 மருத்துவ குணங்களை கொண்ட நாவல் மரம் 

அரிய பல பல மருத்துவ மருத்துவ குணங்களை கொண்ட நாவல் மரம் சாலை ஓரங்களில், குளக்கரை, ஆற்றங்கரைகளில் காணப்படுகின்றன. தென்னிந்திய காடுகளிலும் இதனை காணலாம். நாவல் மரத்திற்கு நாக மரம், சாதலம், ஆருகதம், நேரேடு, நேரேடம் என்று பல பெயர்கள் உண்டு.ஆங்கிலத்தில்'ஜம்பலம்' என்றும் அழைக்கப்படுகிறது. நாவல் மரம் இந்தியாவில் வறண்ட நிலங்களை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் வளர்கிறது. இலங்கை, மியான்மர், மலேசியா ஆகிய நாடுகளிலும் பரவலாக காணப்படுகிறது. இலங்கையில் புத்த கோவில்களை சுற்றி நாவல் மரங்களை காணலாம். நாவல் பழங்கள் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கிடைக்கின்றன. துவர்ப்பு கலந்த இனிப்பாகவும், ருசியாகவும் இருக்கும். காய் பச்சையாகவும் பழம் கருநீல நிறத்திலும் இருக்கும். நாவல் பழம் மூளைக்கு பலம் தரும் பழம் என்கிறார்கள், இயற்கை டாக்டர்கள். இது கல்லீரல் நோயை குணமாக்கும். சிறுநீரகங்களை நன்கு இயங்க செய்து சிறுநீர் வெளியேறுவதை அதிகமாக்கும். பழத்தை உண்ண குடல் நன்கு இயங்கி ஜீரண சக்தி அதிகரிக்கும். பழத்தை கசாயமாக பிழிந்து குடித்து வந்தால் வாயுத்தொல்லை நீங்கும். மண்ணீரல் வீக்கம், நாள்பட்ட கழிச்சல் குணமாகும். பழச்சாறுடன் தேன் கலந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும். பழம் உடலுக்கும் கண்ணுக்கும் குளிர்ச்சியைத்தரும். ரத்தத்தை சுத்தம் செய்யும். பழத்தை அதிக அளவில் உண்டால் சளி, காய்ச்சல் மற்றும் தொண்டைக்கட்டுதல் ஏற்படலாம். நாவல் பழத்தை உப்பில் போட்டு சாப்பிட்டால் தொண்டைக்கட்டு ஏற்படும் வாய்ப்பு குறைவு. நாவல்பழம் கர்ப்பிணிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. நாவல் விதை பொடி நீரிழிவு பாதிப்பை குறைக்க உதவுகிறது என்பதால் இதனை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். 

Feb 03, 2026

அடர்த்தி குறைந்த இரண்டு புதிய கோள்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பூமியில் இருந்து 25 ஆண்டுகள் தொலைவில் இரண்டு புதிய கோள்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.TOI 1453 என்கின்ற நட்சத்த ரத்தை இவை சுற்றி வருகின்றன. இதில்TOI-1453b என்கின்ற கோள் பூமியை விடச்சற்று பெரியது, பாறைகளால் ஆனது. தன்னுடைய நட்சத்திரத்தை வெறும்4.3 நாட்களில் சுற்றி வருகிறது.TOI1453c என்கின்ற மற்றொரு கோள் பூமியை விட2.2 மடங்கு பெரியது. மிகக் குறைந்த அடர்த்திஉடையது.இந்த அளவில்இருக்கும் எந்தக் கோளும் இவ்வளவு குறைவான அடர்த்தி கொண்டிருக்காது. அந்த வகையில், இது விஞ் ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இதன் குறைவான அடர்த்திற்குக் காரணம்,இதனுடைய வளிமண்ட லம் ஹைட்ரஜன் வாயுவால் நிறைந்திருப்பது தான் என்பது விஞ்ஞானிகளில் ஒரு சாரார் கருத்து. இந்தக் கோள் முழுக்க முழுக்கத் தண்ணீரால் நிறைந்து இருக் கிறது. அதனால் தான் இவ் வளவு குறைவான அடர்த்தி கொண்டிருக்கிறது என்பது மற்றொரு சாரார் கருத்து.இந்தக் கோள் குறித்து ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி கொண்டு ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

Feb 02, 2026

இகுவானா எனும் பல்லி இன  ஓணான்கள், 

வட அமெரிக்கக் கண்டத்தின் தென் பகுதியிலும், தென் அமெரிக்க கண்டத்தின் வட பகுதியிலும், கரபியன் தீவுகளிலும் இகுவானா எனும் பல்லி இன ஓணான்கள், வாழ்கின்றன. இந்த இனத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட வகை பல்லி மட்டும் பிஜி தீவுகளில் காணப் படுகிறது.இந்தத் தீவு ஆஸ்திரேலிய கண்டத்திற்கும் தென் அமெரிக்கா வுக்கும் இடையே நடுக்கடலில் தனித்து இருக்கிறது. இவ்வளவு தொலைவில், கடலால் சூழப்பட் டிருக்கும் தீவிற்கு இந்த ஓணான்கள் எப்படி வந்தன என்பது விஞ்ஞானிகளே ஆச்சரியப்படுகின்றனர்.இவை, தென் அமெரிக்காவிலி ருந்து கடல் வழியே நீந்தி இந்தத் தீவுகளை அடைந்திருக்க வேண் டும் என்று சில விஞ்ஞானிகள் இதுவரை எண்ணி இருந்தனர். ஆனால், சமீபத்திய கலிபோர் னியா பல்கலை ஆய்வு வேறு ஓர் ஆச்சரியமான தகவலைத் தந்துள்ளது.அதாவது மரபணு ரீதியாக பிஜி தீவுகளில் வாழும் ஓணான்கள் தென் அமெரிக்க ஓணான்களோடு தொடர்புடையவை அல்ல. மாறாக அமெரிக்காவில் வாழ்பவையோடு  தொடர்புடையவை. எனவே இவை வட அமெரிக்காவில் இருந்து, குறிப்பாக கலிபோர்னியா  முதலிய மாகாணங்களில் இருந்து  கடல் வழியே நீந்தி இந்தத் தீவுகளை அடைந்திருக்க வேண்டும் என்று  விஞ்ஞானிகள்.  கூறுகின்றனர்.இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இவை கிட்டத்தட்ட8,000 கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடந்து இந்தத் தீவை அடைந்துள்ளன. இவ்வளவு தொலைவைக் கடலில் நீந்திக் கடக்கும் தன்மையுள்ள, முதுகெலும்புள்ள ஒரே நிலவாழ் உயிரினம் இந்த இகுவானா ஓணான் தான்.பொதுவாகவே இவற்றால் நீண்ட காலம் உணவு, தண்ணீர் இல்லாமல் வாழ முடியும். இந்த திறன் தான் இவ்வளவு தூரத்தை கடந்து வருவதற்கு உதவி இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Feb 02, 2026

அழகிய மலைவாழிடம் மாதரன் மலை .

மும்பையில் இருந்து110 கி.மீ., தொலைவில் உள்ள அழகிய மலைவாழிடம் மாதரன். இதற்கு,'காடுகளின் தலைவன்' மலையின் ஒரு பகுதியாக உள்ளது. அடர்ந்த என்ற பெயரும் உண்டு. மேற்குத் தொடர்ச்சி பசுமை காடுகளால் சூழப்பட்டு, எழில்மிகு' காட்சியை வழங்குகிறது.ஆங்கிலேயர் ஹக்மாலட் என்பவரால்,1870ல் கண்டறியப்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. மாதரன் மலை உச்சி, அரிய வகை தாவரம், விலங்கினங்களின் வாழிடமாக உள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து,800 மீட்டர் உயரத்தில் உள்ளது.இங்கு மோட்டார் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் குதிரை வண்டியில் தான் செல்ல முடியும். இதன் குளிர்ந்த காலநிலை, மூடுபனியில் மூழ்கிய பள்ளத்தாக்கு மற்றும் அழகிய நீர்வீழ்ச்சிகள், பயணியரை மயக்கும்.பிரமிக்க வைக்கும் சூரிய உதயம் மற்றும் மாலை நேர காட்சிகளை ரசிக்க, ஏராளமான பகுதிகள் உள்ளன. அவற்றில், லுாயிசா பாயின்ட், எக்கோ பாயின்ட் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இயற்கை ஆர்வலர்களுக்கும், அமைதி விரும்பிகளுக்கும் மாதரன் மலை ஒரு பொக்கிஷம்.

Jan 31, 2026

இந்திய முன்னாள் தடகள (ஓட்டம்) வீராங்கனை பி.டி. உஷா கணவர் காலமானார். பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்தார்.

கேரளாவை சேர்ந்த 'இந்திய தடகள ராணி' என்று அழைக்கப்படும்,இந்திய முன்னாள் தடகள (ஓட்டம்) வீராங் கனை ,பி.டி. உஷாவின் கணவர் ஸ்ரீனிவாசன் 67, நேற்றுகோழிக்கோடுவில் காலை, உள்ள தனது வீட்டில் ஸ்ரீனிவாசன் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற போதும் அவரை காப்பாற்ற முடிய வில்லை.  பி.டி. உஷா ஆசிய விளையாட்டு (4 தங்கம், 7 வெள்ளி), ஆசிய சாம்பியன்ஷிப் (14 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம்) போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார். கடந்த 2022, ஜூலையில் ராஜ்யசபா எம்.பி.,யான இவர், 2022, டிசம்பரில் இந்திய ஒலிம்பிக் சங்க (ஐ.ஓ.ஏ.,) தலைவராக தேர்வானார்.பி.டி. உஷாவின் கணவர் ஸ்ரீனிவாசன் 67, முன் னாள் மத்திய அரசு பணியாளர். இளம் வயதில்,   தேசிய கபடி அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஓய்வுக்கு பின், பி.டி. உஷாவின் தடகள பயிற்சி பள்ளியின் இணை நிறுவனர், பொருளாளராக இருந்தார்.பிரதமர் மோடி, பி.டி. உஷாவை தொடர்பு கொண்டு ,ஸ்ரீனிவாசனின் மறைவு செய்திக்கு ,தனது இரங்கலை தெரிவித்தார். 

Jan 31, 2026

மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் அதிக சம்பளம் வாங்கும் ஊழியர் அலெக்சாண்டர் வாங்,: 

தொழில்நுட்பத் துறையில் ஒவ்வொரு ஆண்டும் அதிக ஊதியம் பெறும் உலகில். மெட்டாவின் அதிக ஊதியம் பெறும் ஊழியராகவும், நிறுவனத்தின் தலைமைAI அதிகாரியாகவும் பரவலாகப் பேசப்படும் அலெக்சாண்டர் வாங், இளைஞர்கள் தொழில்நுட்பத்தில் வெற்றிகரமான எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்க முடியும் என்பது குறித்து சமீபத்தில் பேசினார்.செயற்கை நுண்ணறிவில் முன்னணி நபரும், தொழில்துறையின் இளைய பில்லியனர்களில் ஒருவருமான அலெக்சாண்டர் வாங், அடுத்த தலைமுறை கற்றல் மற்றும் திறன்களை வளர்ப்பது பற்றி வித்தியாசமாக சிந்திக்க வேண்டும் என்று நம்புகிறார். பாரம்பரிய குறியீட்டுக்கு அப்பாற்பட்ட தொழில்நுட்பத்தில் ஈடுபடுவதற்கான புதிய வழியை டீனேஜர்கள் ஏற்றுக்கொள்ள ஊக்குவித்த ஒரு நிகழ்வின் போது அவரது செய்தி வந்தது.அலெக்சாண்டர் வாங்கின் அறிவுரை என்னவென்றால், வைப் கோடிங் என்பது AI கருவிகளுடன் பணிபுரிவதற்கான ஒரு புதிய அணுகுமுறை. தொடரியல் மனப்பாடம் செய்வதற்கு அல்லது நிரலாக்கப் பாடங்களைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, வைப் கோடிங் என்பதுAI அமைப்புகள் என்ன செய்ய வேண்டும் என்று எளிய மொழியில் சொல்லி, கருவிகள் கடுமையான வேலைகளைச் செய்ய அனுமதிப்பதாகும்.இந்த அணுகுமுறை தொழில்நுட்பத்தை மிகவும் ஆக்கப்பூர்வமாகவும், குறிப்பாக தொடக்கநிலையாளர்களுக்கு அச்சுறுத்தலாகவும் உணர வைக்கிறது. இந்த வழியில்AI கருவிகளைப் பரிசோதிக்கும் டீனேஜர்கள் விரைவாக உண்மையான திட்டங்களை உருவாக்கலாம், செய்வதன் மூலம் கற்றுக்கொள்ளலாம், மேலும் அறிவார்ந்த அமைப்புகள் எவ்வாறு பதிலளிக்கின்றன மற்றும் மாற்றியமைக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளலாம். இந்த வகையான விளையாட்டுத்தனமான ஆய்வு பாரம்பரிய வகுப்பறைகள் செய்யக்கூடிய நம்பிக்கையையும் நடைமுறை திறன்களையும் உருவாக்குகிறது என்று வாங் கூறுகிறார்.அலெக்சாண்டர் வாங், வைப் கோடிங்கை மட்டும் விவரிக்கவில்லை, சீக்கிரமே தொடங்குவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். இளம் தொழில்நுட்ப ஆர்வலர்கள் வன்பொருள் மற்றும் மென்பொருளில் எண்ணற்ற மணிநேரங்களைச் செலவிட்ட தனிநபர் கணினிகளின் ஆரம்ப நாட்களுடன்AI இன் தற்போதைய தருணத்தை ஒப்பிட்டார். அந்த ஆரம்பகால ஆர்வம், எதிர்கால கண்டுபிடிப்பாளர்களை வடிவமைக்க உதவியது என்று அவர் கூறுகிறார்.அவரைப் பொறுத்தவரை, இன்றுAIஐப் புரிந்துகொள்வதிலும் பரிசோதனை செய்வதிலும் நேரத்தைச் செலவிடும் குழந்தைகள் நாளைய வேலைச் சந்தையில் குறிப்பிடத்தக்க நன்மையைப் பெறலாம். இந்தக் கருவிகள் பல வெற்றிகரமான தொழில்களுக்கு மையமாக இருக்கும் என்றும், அவற்றில் தேர்ச்சி பெறுவது பல்வேறு துறைகளில் அதிக ஊதியம் தரும் பதவிகளுக்கு கதவுகளைத் திறக்கும் என்றும் அவர் கூறுகிறார்“உங்களுக்கு13 வயது என்றால், உங்கள் முழு நேரத்தையும் வைப் கோடிங்கில் செலவிட வேண்டும்,” என்று அவர் தனது சமீபத்திய TBPN நேர்காணலில் கூறினார். “உங்கள் வாழ்க்கையை நீங்கள் இப்படித்தான் வாழ வேண்டும்.”வேகமாக நகரும் தொழில்நுட்பத் துறையில் இளைஞர்களுக்கு அலெக்சாண்டர் வாங்கின் செய்தி எளிமையானது: தைரியமாக பரிசோதனை செய்யுங்கள், மேலும் கருவிகள் உங்கள் எதிர்காலத்தை உருவாக்க உதவட்டும்தொழில்நுட்பம் எவ்வாறு கற்றுக் கொள்ளப்படுகிறது மற்றும் பயன்படுத்தப்படுகிறது என்பதில் அலெக்சாண்டர் வாங்கின் ஆலோசனை ஒரு பெரிய மாற்றமாகும். குறியீட்டு முறை என்பது இனி உரை வரிகளை மனப்பாடம் செய்வது மட்டுமல்ல, மனித வழிமுறைகளை விளக்கக்கூடிய அறிவார்ந்த அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதும் ஆகும். இந்தக் கருவிகளை ஆரம்பத்திலேயே கற்றுக்கொள்வதன் மூலம், புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குவதிலும் வடிவமைப்பதிலும் AI முக்கிய பங்கு வகிக்கும் எதிர்காலத்திற்காக மாணவர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளலாம்..

Jan 31, 2026

AI டெக்னாலஜிக்கு முழுக்க முழுக்க மாறப்போகும் IBM. 

IBM நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மற்றும் கிளவுட் சேவைகள் போன்ற வளர்ச்சி பிரிவுகளில் அதிக கவனம் செலுத்தும் வகையில்,2025 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் உலக அளவில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.இந்தஆட்குறைப்பு நடவடிக்கை,உலகளாவிய ஊழியர்களின்எண்ணிக்கையில் மிகப்பெரியபாதிப்பு ஏற்படுத்தும்என்றும் தெரிவித்துள்ளது. CEO அரவிந்த் கிருஷ்ணாவின்தலைமையில், பாரம்பரியவணிகங்களிலிருந்து விலகி, அதிவேக வளர்ச்சிபிரிவுகளை நோக்கி IBM திரும்பியுள்ளது. AIகருவிகள் ஏற்கனவே200 மனித வளத்துறைஊழியர்களுக்குச் சமமானபணிகளை கையாள்வதாகக்கிருஷ்ணா சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், மென்பொருள்பொறியாளர்கள் மற்றும்விற்பனை திறமையாளர்களைநியமிக்க IBM கவனம்செலுத்துகிறது. அமேசான், மெட்டா போன்ற மற்ற நிறுவனங்களை போலவே, உற்பத்தித்திறன் மற்றும் செலவின குறைப்பிற்காக AI-யைத் தழுவுவதன் ஒரு பகுதியாகவே IBM இன் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது

Jan 30, 2026

நம்பமுடியாத பொறியியல் சாதனைகளை உலகின் மிகப்பெரிய 10 அணைகள் .NO-1 - மூன்று கோர்ஜஸ் அணை (சீனா)

உலகம் முழுவதும், பெரிய அணைகள் மனிதகுலத்தின் மிகவும் லட்சிய பொறியியல் சாதனைகளில் சிலவாக நிற்கின்றன. அவை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக மட்டுமல்லாமல், வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும், விவசாயத்தை ஆதரிக்கவும், பாயும் நீரின் சக்தி மூலம் முழுப் பகுதிகளையும் மறுவடிவமைக்கவும் கட்டப்படுகின்றனநிறுவப்பட்ட நீர்மின்சாரத் திறனின் அடிப்படையில் இதுவரை கட்டப்பட்ட பத்து சக்திவாய்ந்த அணைகளை இந்தப் பட்டியல் எடுத்துக்காட்டுகிறது. இந்த மெகா கட்டமைப்புகள் ஒவ்வொன்றும் பல கால திட்டமிடல், முதலீடு மற்றும் புதுமைகளைக் குறிக்கின்றன,நவீன சமூகங்கள் எரிசக்தி தேவைகள், சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் நீண்டகால வளர்ச்சியை எவ்வாறு சமநிலைப்படுத்துகின்றன என்பது பற்றி கூறுகின்றன. மூன்று கோர்ஜஸ் அணை (சீனா) - 22,500 மெகாவாட்யாங்சே நதியின் மீது கட்டப்பட்ட மூன்று கோர்ஜஸ் அணை, இன்றுவரை நீர்மின்சார திறனால் மிகவும் சக்திவாய்ந்த அணையாக அறியப்படுகிறது. இது2,300 மீட்டருக்கும் அதிகமாக நீண்டு181 மீட்டர் உயரம் கொண்டது.1993 இல் கட்டுமானத்தைத் தொடங்கிய பின்னர்2006 இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த மிகப்பெரிய கான்கிரீட் ராட்சத நிறுவனம், பெரிய அளவிலான நீர் பொறியியல் என்ன சாதிக்க முடியும் என்பதை மறுவரையறை செய்தது.மின்சாரத்திற்கு அப்பால், மூன்று கோர்ஜஸ் அணை ஆண்டுதோறும்84 டெராவாட்மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. நாட்டின் மிகவும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் நதி அமைப்புகளில் ஒன்றாக அறியப்படும் யாங்சேயை ஒழுங்குபடுத்த இது உதவுகிறது.இந்த அணை யாங்சே நதியில் போக்குவரத்தை கணிசமாக மேம்படுத்துகிறது, கப்பல் திறனை ஆண்டுதோறும்18 மில்லியன் டன்களிலிருந்து50 மில்லியன் டன்களாக அதிகரிக்கிறது, அதே நேரத்தில் கப்பல் செலவுகளை தோராயமாக 30% குறைக்கிறது.

Jan 28, 2026

முன்னோர்கள் கூறிய மரியாதையை சம்பாதிக்கும் வழிகள்.

யாரையும் இரண்டு முறைக்கு மேல் அழைக்காதீர்கள்.தேவைக்கு அதிகமாக யாரிடமும் பழகிவிடாதீர்கள் அல்லது நெருக்கமாகிவிடாதீர்கள்.யாரும் கேட்காமல் அறிவுரைகளை வழங்க வேண்டாம்.குறைவாகப் பேசுங்கள் .ரகசியம் காக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.உங்கள் அடுத்த நகர்வு என்ன என்பதை யாருக்கும் தெரியப்படுத்தாதீர்கள்.பணம் சம்பாதிக்க வெவ்வேறு வழிகளைத் தேடுங்கள்.எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.நீங்கள் சரி என்று நினைப்பதை மட்டும் செய்யுங்கள்.உங்கள் வாழ்க்கையில் மதிப்புக் கூட்டியவரை நன்றி "சொல்ல மறக்காதீர்கள்.

1 2 ... 18 19 20 21 22 23 24 ... 84 85

AD's