25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தெரிந்து கொள்ளுங்கள்

May 05, 2026

த.வெ.க.வின் தேர்தல் அறிக்கை,

மகளிர் மேம்பாடு.குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500. 6 விலையில்லா சிலிண்டர்கள்: மணப்பெண்களுக்கு தங்கம் + பட்டுச்சேலை; பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; மாணவர்களின் அம்மாக்களுக்கு ரூ.15,000 கல்வி உதவி: மகளிர் குழுக்களுக்கு ரூ.லட்சம் வட்டியில்லா கடன்.உலகத்தரக் கல்வி..உறைவிட வசதியுடன் 100 காமராஜர் சிறப்புப் பள்ளிகள், ரூ.20 லட்சம் வரை உயர்கல்விக் கடன்; நவீன கட்டமைப்புடன் அரசுப் பள்ளிகள், Al மூலம் கட்டணமில்லா போட்டித் தேர்வு பயிற்சிகள்சுகாதாரமான தமிழ்நாடு.குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் மருத்துவக் காப்பிடு; நவீன கட்டமைப்புடன் கூடிய மருத்துவமனை; ஆண்டுதோறும் கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை; போதைப்பொருள் இல்லா தமிழ்நாடுசமூகப் பாதுகாப்பு.முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்தியம்: 200 யூனிட்கட்டணமில்லா மின்சாரம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு:நீண்டகாலம் பட்டா இல்லாதவர்களுக்குப் பட்டாஅரசு ஊழியர் நலன்.மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனை OPS: ஐந்தாண்டு பணியிலுள்ள ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம். அங்கன்வாடி  ஊழியர்களுக்கு ரூ.18,000,  சுகாதாரபணியாளர்களுக்கு ரூ.10,000 ஊதியம். பணி ஓய்வின் போது ரூ.15 லட்சம்இளைஞர் முன்னேற்றம்.வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வரை உதவித்தொகை; ஊதியத்துடன் கூகூடிய லட்சம் இன்டர்ன்ஷிப்: 5 லட்சம் புதிய அரசு வேலைவாய்ப்புகள்: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் கடன்: அரசுத் தேர்வுகளுக்குக் கால அட்டவணைவிவசாயிகள் நலன்.நிலமுடைய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.18,000 முதலீட்டு உதவி பயிர்க் கடன்கள்தள்ளுபடி: MSP: நெல் குவிண்டால் ரூ.3.800. கரும்பு பன்னுக்கு ரூ.4.500 5 லட்சம் சோலார் பம்புகள்: தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000; 100% பயிர்க் காப்பீடுமீனவர் நலன்.தடைக்கால நிவாரணம் ரூ.27.000; மீன்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, ரூ.25 லட்சம் விபத்துக் காப்பீடு; மீனவர்களுக்கு நிரந்தர வீடுதமிழ்நாடு வளர்ச்சி.2030-க்குள் $15 டிரில்லியன் பொருளாதாரம் Al அமைச்சகம், Al பல்கலைக்கழகம். A நகரம்: MSME-களுக்கு ரூ.15,000 கோடி ஆதரவு, மாவட்ட வாரியாக மாஸ்டர் பிளான்", தமிழ்நாட்டில் முதலீடு செய்பவர்களுக்கு 21 நாட்களுக்குள் வணிக உரிமம்நல்லாட்சி.லஞ்சமில்லா நிர்வாகத்துடன் அரசுச் சேவைகள் அனைத்தும் வீட்டு வாசலில் காலக்கெடுவுடன் கூடிய அரசு சேவைகள்: நிதி ஒதுக்கீட்டில் 10% திட்டங்களை மக்களே தீர்மானிக்கும் அதிகாரம். சட்டமன்றத்தில் மக்கள் முறையீட்டுக்காக ஒருநாள். 

May 04, 2026

NO- 1 இடத்துக்கு வர……

1 உன்னத் தவிர வேற யாரையும் முழுசா நம்பாத. 2. யாரையும் துரத்திட்டு போகாத, உன்ன தேடி வர்ற அளவுக்கு நீ மாறு. 3. குளிர்ந்த நீர் குளியல், உன் மன உறுதிய வளர்க்கும். 4.உயிரைக் கொடுத்து உடற்பயிற்சி பண்ணு. ஏன்னா உன் உயிர் அந்த உடம்புல தான் இருக்கு. 5.உன் மேல மட்டும் கவனம் வை, மத்ததெல்லாம் தேவையில்லாதது தான். 6.'வேற வழி இல்ல'-னு நினைச்சு ஒரு விஷயத்த பண்ணு, கண்டிப்பா ஜெயிப்ப. 7.எமோஷனல் ஆகாத, உன் உணர்வுகளை நீ கண்ட்ரோல் பண்ணு. 8.உன்ன செதுக்கிய குடும்பத்தையும், கூடவே இருந்தவங்களையும் என்னைக்குமே மறக்காத.

May 04, 2026

சூரிய ஒளியை பார்த்தால் கண் கூசுவது ஏன்?

நீங்கள் சூரிய ஒளியைப் பார்த்தால் மட்டுமல்ல, பிரகாசமான எந்த ஒளியைப் பார்த்தாலும் கண் கூசும். இது ஒரு வகையான பார்வைப் புலனுக்கான தகவமைப்பே ஆகும்.இந்த பிரகாசமான ஒளியைப் பார்க்கும் போது, கண்ணில் உள்ள ரெடப்சின் நிறமி செயலிழக்கப்படுகிறது. இதனால் ஒளி-வேதியியல் வினை மட்டுப்படுகிறது. அப்போது நமக்கு சில வினாடிகளுக்கு பார்வையே தெரியாது. உதாரணமாக வெளியே, வெளிச்சமான பகுதியில் இருந்து இருண்ட திரையரங்கிற்குள் நுழையும்போது இந்நிலை ஏற்படுவதை நீங்கள் காணலாம். மேலும், ஒளிச் செறி விற்கேற்ப கண்ணுக்குள் செல்லும் ஒளியின் அளவை ஒழுங்குபடுத்த கண் பார்வையின் விட்டத்தின் அளவு விழித் திரை தசைகளால் தானியங்கு நரம்பு களின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.இந்தப் பாதுகாப்பு கூறுகள் அனைத்தும் கண்களைக் காப்பதற்கே தகவமைப்பாக அமைந்துள்ளன.

May 04, 2026

புதிய ரூல்ஸ்...  KYC செய்யாத FASTag கணக்குகள் தடை செய்யப்படும்.

பெட்ரோல் பங்குகளில் இனி E20 பெட்ரோல் மட்டுமே வழங்கப்படும். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் OTP மட்டும் போதாது, PIN / Password அல்லது Fingerprint போன்ற 2 பாதுகாப்பு முறைகள் அவசியம்.  சில வங்கிகள் டெபிட் கார்டு கட்டணங்களை உயர்த்தியுள்ளன. KYC செய்யாத FASTag கணக்குகள் தடை செய்யப்படும்.  புதிய இன்சூரன்ஸ் பாலிசிகள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில் மட்டுமே வழங்கப்படும்.

May 02, 2026

ஏழை மாணவர்களுக்கு ஒரு நல்ல தகவல்

 இந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு முடித்து, 80%-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ள, ஏழ்மையான பொருளாதாரப் பின்னணியில் இருந்து வரும் திறமையான மாணவர்களை நீங்கள் அறிந்திருந்தால், தயவுசெய்து அவர்களை இன்ஃபோசிஸ் அறக்கட்டளையால் ஆதரிக்கப்படும் 'பிரேரனா' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள்.அந்தத் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒரு எழுத்துத் தேர்வை நடத்துகிறது. அந்தத்  தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் தங்கள் மேல்படிப்புக்கான நிதி உதவிக்குத் தகுதி பெறுவார்கள்.விண்ணப்பப் படிவத்தைப் பெற, மாணவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நபர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்:தொடர்பு எண்கள்: 1. திருமதி. சரஸ்வதி - 99009063382. திரு. சிவக்குமார் - 99866 303013. திருமதி. பிந்து - 99645 34667, இது யாருக்காவது தேவைப்படலாம். www.infosys.com/infosys-foundationஇதனை மற்ற குழுக்களிலும் பகிரவும். இது ஒருவருக்காவது உதவினால் கூட போதும்.இது ஏழை மாணவர்களுக்கு ஒரு நல்ல தகவல் 

May 02, 2026

தேள் பண்ணை. ஒரு லிட்டர் தேள் விஷம் 85 கோடி ரூபாய்.

தேள்களைப் பண்ணை வைத்து வளர்ப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? 1. ஒவ்வொரு தேளும் தினமும் சுமார் 2 மில்லிகிராம் விஷத்தை மட்டுமே சுரக்கும்.*2.சாமணம்(Tweezers) மற்றும் இடுக்கி (Tongs) கொண்டு மிகக் கவனமாக இந்த விஷம் கறக்கப்படுகிறது*3. இதோட விலைதான் ஹைலைட்! ஒரு லிட்டர் தேள் விஷத்தின் மதிப்பு சுமார் 10 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹85 கோடி!).*4. இது முக்கியமாக காஸ்மெட்டிக்ஸ் (Cosmetics) மற்றும் உயிர் காக்கும் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. நம்ம ஊர்ல 'தேள்'னு சொன்னா பயப்படுவோம்,  இது ஒரு மிகப்பெரிய பிசினஸ்! 

May 02, 2026

அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது.

உடல் சூட்டை தவிர்க்க செய்ய வேண்டியது. (நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்) 5 மணி நேர இடைவெளியில் தண்ணீர் குடிக்கவும். தண்ணீரில் ORS பவுடர் சேர்த்து குடிக்கலாம். தண்ணீரில் சப்ஜா விதை, பாதாம் பிசின் சேர்த்து பருகலாம். பானைத் தண்ணீரில் நன்னாரி வேர் போட்டு வைத்து பருகலாம் குளிர்ச்சி தரும் இளநீர், நூங்கு, தர்பூசணி சாப்பிடவும். வெள்ளை பூசணி, கரைக்காய் ஜூஸ்  காலை மற்றும் மாலை எடுத்துக் கொள்ளலாம். இரண்டு வேளை குளிக்கலாம். தொப்புளில் செக்கு நல்லெண்ணெய் தடவலாம். உடலை காக்கும் நல்ல பழக்கங்கள். ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிகாட்டும்.

May 02, 2026

புதிய போக்குவரத்து விதிகள் (ஏப்ரல் 2026 முதல் அமலில்).

உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் 25,000 RC (பதிவு சான்று) இல்லாமல் ஓட்டுதல் 23,000 - 25,000 இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டுதல் ₹2,000 (முதல் முறை), ₹4,000 (மீண்டும்) ஹெல்மெட் இல்லாமல் -₹1,000 + உரிமம் இடைநீக்கம் சீட் பெல்ட் அணியாமல் - ₹1,000 மூவர் பயணம் (பைக்) -₹1,000 – DL இடைநீக்கம் அதிக வேகம் (கார்/LMV)-₹1,000 – 2,000 அதிக வேகம் (பெரிய வாகனங்கள்)-₹2,000-4,000.

May 02, 2026

MISSION VATSALYA குழந்தைகளுக்கு மாதம்  ₹4,000.

மத்திய அரசின் மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ், ஒரு  குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு மாதம் தலா ₹4,000 மூன்று ஆண்டுகள் வழங்கப்படுகிறது. வருமானச் சான்றிதழுடன் இ-சேவை மையம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

May 02, 2026

ஒரு தேக்கரண்டி DNA-வில் சேமிக்கப்படும் இணையத் தரவுகள்.

ஹார்டுடிஸ்க்குகளையும்,பென்டிரைவ்களையும்மறந்துவிடுங்கள். எதிர்காலத்தில்,தரவுகள் DNAவில்சேமிக்கப்படும்.விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, உலகின் ஒட்டுமொத்த இணையத் தரவுகளையும் வெறும் ஒரு தேக்கரண்டி DNA-வில் சேமிக்க முடியும். இயற்கை, மிகப்பெரிய மெமரி கார்டை நமது உடல்களில் பொருத்தியுள்ளது.

1 2 ... 17 18 19 20 21 22 23 ... 104 105

AD's



More News