ஜனாதிபதி திரவுபதி முர்மு 'கேல் ரத்னா' விருது வழங்கினார். தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேர் விருது பெற்றனர்.
2024ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, நேற்று ஜனாதிபதி மாளிகையில், சர்வதேச விளையாட்டு அரங்கில் சாதித்த,இந்திய நட்சத்திரங்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்படுகிறது.
இளம் உலக செஸ் சாம்பியன் என சாதனை படைத்த தமிழகத்தின் குகேஷ் 18, பாரிஸ் ஒலிம் பிக் ஹாக்கியில் இந்திய அணிக்கு வெண்கலம் பெற்றுத்தந்த கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரிஸ் பாராலிம்பிக், உயரம் தாண் டுதலில் தங்கம் வென்ற பிர வீன் குமார், சுதந்திர இந்தியாவில் ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்ற துப்பாக்கிசுடுதல் வீராங்கனை மனுபாக ருக்கு 22, ஜனாதிபதி திரவு பதி முர்மு, 'கேல் ரத்னா' விருது வழங்கினார். விளையாட்டின் உயரிய மேஜர் தயான் சந்த் 'கேல் ரத்னா விருது, இம்முறை நான்கு நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்டது.
இந்திய ஹாக்கி ஜாம்பவான், மேஜர் தயான்சந்த் பெயரில், விளையாட்டின் உயரிய 'கேல் ரத்னா' விருது வழங்கப்படுகிறது. சர்வதேச போட்டி களில் சாதித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நான்கு ஆண்டு செயல்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஒலிம்பிக், பாராலிம்பிக், உலக சாம்பியன் ஷிப், ஆசிய விளையாட்டு, உலக கோப்பையில் வென்ற பதக்கம் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும். தகுதியானவர்களை, விருதுக் குழுவினர் தேர்வு செய்வர். பாராட்டு சான்றிதழ், பதக்கம், ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்படும்.கடந்த நான்கு ஆண்டுகளில் தங்களது விளையாட்டில் சிறப்பாக செயல்பட்ட நட்சத்திரங்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது. இதற்கு பாராட்டு சான்றிதழ், அர்ஜுனா சிலை, ரூ. 15 லட்சம் வழங்கப்படும்.
தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேர் விருது பெற்றனர். குகேஷிற்கு கேல் ரத்னா', பாரா பாட்மின்டன் வீராங்கனைகள் துளசிமதி, மணிஷா, நித்ய ஸ்ரீ, ஸ்குவாஷ் வீரர் அபே சிங், 'அர்ஜுனா' விருது பெற்றனர்.
0
Leave a Reply