25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பிரிஜ் பராமரிப்பு!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரிஜ் பராமரிப்பு!

மீந்து போன உணவுகளை அந்த பாத்திரத்தோடு உள்ளே வைக்கக் கூடாது . பித்தளை, எவர்சில்வர் போன்ற கனமான பாத்திரங்களை பிரிஜ் உள்ளே வைப்பதை தவிர்த்து, தரமான பிளாஸ்டிக் டப்பாக்களை பயன்படுத்தலாம் .

காய்கறி, பழங்களை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு இறுகக்கட்டி வைப்பதால் உள்ளே ஆவியடித்து அவை அழுகிவிடக் கூடும். இதைத் தவிர்க்க அவற்றை, 'நெட் பேக்' எனப்படும் வலைப்பின்னல் பைகளில் போட்டு வைக்கலாம்.

பிரிஜ்ஜினுள் சூடான பொருட்களை வைக்கக் கூடாது. அவற்றின் வெப்பநிலை, பிரிஜ் முழுவதும் பரவி, உள்ளே சூட்டை அதிகரித்துவிடும். மின் செலவு இதனால். அதிகரிப்பதுடன், ஏற்கனவே குளிர்நிலையில் இருக்கும் பொருட்களின் குளிர்ச்சி குறைந்து அவை கெட்டுப் போக கூடும்.

பிரிஜ் கதவை அடிக்கடி திறப்பதைத் தவிர்க்க வேண்டும். அவசியம் எனில் கொஞ்சமாகத் திறந்து உடனே மூட வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News