25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


மழை காலத்தில் 'ஷாக்'கைத் தவிர்க்க….
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மழை காலத்தில் 'ஷாக்'கைத் தவிர்க்க….

மின் கம்பிகள் செல்லும் இடங்களுக்கு அருகில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் வெட்டுவது ஆபத்து. வெட்டுவதற்கு முன், அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்து, அந்த மின் பாதையில் மின்சாரத்தைத் துண்டித்த பிறகே மரங்களை வெட்ட வேண்டும்மழைக்காலத்தில் மின் மாற்றிகள், மின் பெட்டிகள் மற்றும் மின் இழுவைக் கம்பிகள் அருகில் செல்லக் கூடாது.தேவையில்லாமல் தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்பதையும், நடப்பதையும் தவிர்க்கவும். அவசியம் போக வேண்டும் என்றால், ரப்பர் காலுறைகளை அணிந்து செல்வது. பாதுகாப்பானது.

மழை பெய்யும்போது, பழமையான வீடுகள் சிலவற்றில், சில  இடங்களில் சுவர்களில் ஈரம் கோர்த்துக் கொள்ளும். அதுபோன்ற இடங்களில் சுவிட்ச் மற்றும் பிளக் பாயின்ட்டுகளைப் பொருத்த- கூடாது. அங்கே இருக்கும் மின் சாதனங்களை மழை நாட்களில்  தொடாமல் தவிர்ப்பது நல்லது.வீட்டில் பயன்படுத்தும் மின் சாதனங்கள் எதிலாவது, 'ஷாக்  அடிப்பதை உணர்ந்தால், உடனடியாக உலர்ந்த ரப்பர் செருப்பை  கால்களில் அணிந்து, வீட்டுக்கு மின்சாரம் தரும் மெயின்  சுவிட்சை அணைக்கவும். இடி, மின்னலுடன் மழை பெய்யும்போது, மிக்ஸி, கிரைண்டர்  கம்ப்யூட்டர் மற்றும் 'டிவி' போன்ற மின் சாதனப் பொருட்களை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது

வீடுகளில் மின் இணைப்பு பெறும்போதே, 'எர்த் வீக்கேஜ் ' வசதிகளைச் சரியாகச் செய்ய வேண்டும். மின் இணைப்பில்  'சர்க்யூட் பிரேக்கர்'களும் பொருத்தப்பட வேண்டும். ஒவ்வொரு  அறைக்கும் தனித்தனியாக, 'சர்க்யூட் பிரேக்கர்' பொருத்த முடியும். ஏதாவது ஓர் அறையில் மின்கசிவு ஏற்பட்டால், இந்த  சர்க்யூட் பிரேக்கர்' அந்த அறைக்கான மின் இணைப்பை மட்டும்  துண்டித்து விடும்.வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு. 'எர்த்' இணைப்புடன்  கூடிய மூன்று பின் பிளக்குகள் மூலம் மின் இணைப்பு கொடுத்தால், 'ஷாக்'கைத் தவிர்க்கலாம்.

 மழைபெய்யும்போது,வீட்டுஜன்னல்மற்றும்கதவுகளை மூடிவைக்கவேண்டும். ஈரமானகைகளோடுசுவிட்ச்களைப் போடவோ, நிறுத்தவோகூடாது.ஒரேபிளக்பாயின்ட்டில்பேன், மொபைல்போன்சார்ஜர்கம்ப்யூட்டர்என, எல்லாவற்றின்பிளக்கையும்சொருகக் கூடாது. மின்சாதனங்கள்குறிப்பிட்டஅளவுமின்சாரத்தையே தாங்கும்அளவுக்குவடிவமைக்கப்பட்டுள்ளன. அதிக பயன்பாடு, அவற்றை வெடிக்கச் செய்யும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News