25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பூரி ஜெகந்நாதர் கோயில் வளாகத்தில் பறந்த மர்ம ட்ரோன்.. பாதுகாப்பு அதிகரிப்பு..!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பூரி ஜெகந்நாதர் கோயில் வளாகத்தில் பறந்த மர்ம ட்ரோன்.. பாதுகாப்பு அதிகரிப்பு..!

ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோயில் வளாகத்தில் நேற்று மர்ம ட்ரோன் ஒன்று பறந்ததை அடுத்து, கோவில் வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.06/01/2025அதிகாலை4 மணிக்கு பூரி ஜெகநாதர் கோயில் வளாகத்தை சுற்றி மர்ம ட்ரோன் பறந்ததாகவும், சுமார்100 அடி உயரத்தில் பறந்த அந்த ட்ரோன் கோயிலை வட்டம் அடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதனை சிலர் வீடியோ மற்றும்புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஏற்கனவே பூரி ஜெகநாதர் கோயில் வளாகத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடையை மீறி ட்ரோன் பறந்தது. இதற்கு யார் காரணம் என்ற என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் வரும்8ஆம் தேதி முதல்10ஆம் தேதி வரை வெளிநாட்டு இந்தியர் தினம் கொண்டாடப்பட இருக்கின்றது.9ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அதில் கலந்து கொள்ள உள்ள நிலையில், பூரி ஜெகநாதர் கோயிலை சுற்றி மர்ம ட்ரோன் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News