25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Sep 25, 2025

ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் நத்தம் இலவச வீட்டுமனை ஒப்படை ஆணைகள் பெற்று, இதுவரை இணைய வழிபட்டா கிடைக்கப்பெறாதவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இணையவழி பட்டாக்களை பயனாளிகளுக்கு நேரில் சென்று வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம் மூவரை வென்றான் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த  41 குடும்பங்கள் கடந்த 24 வருடங்களுக்கு முன் ஆதிதிராவிடர் நத்தம் இலவச வீட்டுமனை ஒப்படை ஆணைகள் பெற்று, இதுவரை இணைய வழிபட்டா கிடைக்கப்பெறாதவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள்  இணையவழி பட்டாக்களை பயனாளிகளுக்கு நேரில் சென்று வழங்கினார்.தமிழ்நாடு அரசு சொந்தமாக வீடு இல்லாமல் அரசின் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி வாழ வேண்டும் என்பதற்காக  இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம்  என்ற உன்னதமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் மூலம் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் ஏழை குடும்பங்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்க்கையை வாழ வழிவகை செய்யப்படுகிறது.இலவச மனை பட்டா வழங்கும் திட்டத்தின்  கீழ் வீடு இல்லாமல் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்ந்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு வீட்டு மனை வழங்கப்படுகிறது.  மேலும், ஆக்கிரப்பு நிலத்திற்கு உண்டான பட்டாவையும் அரசே இலவசமாக வழங்கி வருகிறது.அதன் ஒரு பகுதியாக வத்திராயிருப்பு வட்டம் மூவரை வென்றான் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 41 குடும்பங்கள் கடந்த 24 வருடங்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் நத்தம் இலவச வீட்டுமனை ஒப்படை ஆணைகள் பெற்று, இதுவரை இந்த இடங்களுக்கான இணைய வழிபட்டா இல்லை என்பதால், அதற்கான பட்டாக்களை வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.அதனடிப்படையில், அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து   41 குடும்பங்களுக்கு இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் அவர்கள் நேரில் சென்று வழங்கினார்.எங்களுக்கு இந்த இடத்திற்கான ஒப்படை ஆணைகள் 24 வருடங்களுக்கு முன்பாக வழங்கப்பட்டிருந்தாலும், அரசு பட்டா இல்லாமல் சிரமப்பட்டு இருந்தோம். தற்போது எங்கள் அனைவருக்கும் இணைய வழியிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களே எங்களைத் தேடி வந்து வழங்கியது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது எனவும், இலவச பட்டா வழங்கியதன் மூலம் எங்களுக்கு இந்த இடத்திற்கான அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளதால், நாங்கள் எந்த வித தயக்கமின்றி எங்களுக்கான இடங்களில் வீடுகள் கட்டி குடியேற முடியும். எங்களுடைய பலவருட பயத்தையும், பதட்டத்தையும் எங்களுக்கு இந்த பட்டாக்கள் வழங்கியதன் மூலம் தமிழ்நாடு அரசு மகிழ்ச்சியாக மாற்றியிருக்கிறது. அதற்காக தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.பாலாஜி, வட்டாட்சியர் மற்றும்  அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 25, 2025

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் (24.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அதன்படி, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியார் அணையின் சீரமைப்பு பணிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பூங்கா சீரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு,  மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசு அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.அதனை தொடர்ந்து, வத்திராயிருப்பு வட்டம், தம்பிபட்டி மற்றும் பெரியகுளம் கண்மாய்கள் தூர்வாரும் பணிகள், கரைகளை பலப்படுத்தக்கூடிய பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், வத்திராயிருப்பு வட்டம், ரெங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.3.50 இலட்சம் மதிப்பில் அரசு மானியத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று வழங்கினார். மேலும், இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Sep 25, 2025

தமிழ்வளர்ச்சித்துறை சார்பாக 31.10.2025 அன்று நடைபெறும் 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறமைகொண்ட தகுதியான மாணவர்கள் திருக்குறள் முற்றோதல் செய்யும் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்.

மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும் உலகப்பொதுமறையாம் திருக்குறளின் சீரிய கருத்துகளை இளம் தலைமுறையினரின் மனதில் பதியச் செய்து அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து முழுமையாக ஒப்பிக்கும் திறன் கொண்ட பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறையால் குறள் பரிசாக ரூ.15000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) வழங்கப்படவுள்ளது.அந்தவகையில்   2025-26 ஆம் ஆண்டிற்கான குறள்பரிசு வழங்கும் பொருட்டு தகுதியான மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் மாணவர்களுக்குப் பரிசுத்தொகையாக ரூ.15000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) வழங்கப்பெறும்.விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ / www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ பெற்றுக் கொள்ளலாம்.மேலும், விண்ணப்பங்களை 31.10.2025 க்குள் “தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் மாவட்டம்” என்ற முகவரிக்கு நேரிலோ /அஞ்சல் மூலமாகவோ/ tamilvalar.vnr@tn.gov.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 24, 2025

தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முடிவுற்ற 5 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 9 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (23.9.2025) விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் 25.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 5 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 124.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 837 பயனாளிகளுக்கு 10.84 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகள்        இந்த நிகழ்ச்சியில்  தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 5.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருவில்லிப்புத்தூர் வட்டாட்சியர் அலுவலகம், நீர்வளத்துறையின் சார்பில் திருச்சுழி வட்டம், கீழ்செம்பூர் கிராமத்தில் 9.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிருதுமால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு, ராஜபாளையம் நகராட்சியில் உரம் தயாரிக்கும் தளத்தின் மேற்கு, கிழக்குப்பகுதிகளில் தலா 85.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள், 40 இலட்சம்  ரூபாய் மதிப்பீட்டில்  ஸ்ரீரெங்கப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள இணைப்பு சாலை, 2.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிங்கராஜகோட்டை பெரிய தெரு-பழையபாளையம் குமரன் தெரு- ஐவஹர் மைதானம் –மலையடிப்பட்டி- ஆர்.ஆர்.நகர் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை, 58.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருவனந்தபுரம் 6, 5வது தெருக்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை, 31.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஸ்ரீரெங்கபாளையம் சாலை – சங்கரன் கோவில் 7வது குறுக்குத் தெரு ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை, 22.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாரதியார் நகரில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை, 3.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டி.பி.மில்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலைகள், 33.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் த்ரௌபதியம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை, ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சியில் 71.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பிடுமினஸ் சாலை – அசோக்நகர் தெரு – பள்ளிவாசல் தெரு – அசோக் நகர் முதன்மை சாலை – கல்லணை ஓடைத் தெரு ஆகியவற்றில் சீரமைக்கப்பட்ட சாலைகள், விருதுநகர் நகராட்சியில் 35.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தங்கமை பெரியசாமி நாடார் மகளிர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் சீரமைக்கப்பட்ட கலையரங்கம், 32.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரயில்வே பீடர் ரோடு – கே.ஆர். கார்டன் குறுக்குத் தெரு 1வது காலனி – மதுரா கோட்ஸ் காலனி – கணேஷ்நகர் 2 ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட தார்சாலைகள், 58.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கணேஷ் நகர் 4,5,7 – லட்சுமி காலனி குறுக்குத் தெரு 1- கே.ஆர்.கார்டன் குறுக்குத் தெரு 3 – லட்சுமி காலனி குறுக்குத் தெரு ஆகியவற்றில் அமைக்கப்பட்ட தார்சாலைகள், 50.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கே.ஆர் கார்டன் குறுக்குத் தெரு1 – கணேஷ்நகர் 3 – குட்செட்ஸ் சாலை – பட்டேல் சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்ட தார் சாலைகள், 12.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் A.S.P.C.C உயர்நிலைப் பள்ளியில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் என மொத்தம் 25.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.அடிக்கல் நாட்டப்படவுள்ள பணிகள்        இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சார்பில் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், ஜோகில்பட்டி ஊராட்சி,  இராஜபாளையம் வட்டம், மேலப்பாட்டம் கரிசல்குளம் ஊராட்சி, அருப்புக்கோட்டை வட்டம், செட்டிக்குறிச்சி ஊராட்சி ஆகிய 3 இடங்களில் தலா 3 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் சிறுவிளையாட்டு அரங்கம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.           மேலும், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் விருதுநகர் மாவட்டம், செட்டிக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 74.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று வகுப்பறை கட்டடம் கட்டும் பணி, நாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 59.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் மற்றும் ஒரு கழிப்பறை கட்டடம் கட்டும் பணி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் படந்தால் கிராமத்தில் 35.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடம் கட்டும் பணி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் அருப்புக்கோட்டை தலைமை மருத்துவமனையில் 38.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் யோகா இயற்கை முறை பிரிவு கட்டடம் கட்டும் பணிகளுக்கும், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் விருதுநகர் கிருஷ்ணாபுரம் சாலையை 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16 கி.மீ நீளத்திற்கு பாவு தளத்துடன் கூடிய இருவழித்தடமாக மாற்றி அமைக்கும் பணிக்கும், சிவகாசி மாநகராட்சியில் 58.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6.7 கி.மீ நீளத்திற்கு இரண்டாம் கட்டமாக சுற்றுவட்டச்சாலை அமைக்கும் பணிக்கும் என மொத்தம் 124.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.நலத்திட்ட உதவிகள்இந்நிகழ்ச்சியில்  தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 5.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 400 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 219 நபர்களுக்கு ஆதிதிராவிடர் நல இலவச வீட்டுமனை இ – பட்டாக்களையும், கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 2 நபர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளையும்,தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதா தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கு 31.50 இலட்சம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 16 நபர்களுக்கு 3.13 கோடி ரூபாய்க்கான வங்கி கடன் இணைப்புகளையும், சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் அட்டைகளை 50 நபர்களுக்கும்,  புதிய குடும்ப அட்டை 20 நபர்களுக்கும்,மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 நபர்களுக்கு ஆவின் பாலகம் அமைக்க தலா ரூ.50,000 மும், 9.45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 9 நபர்களுக்கு மின்கலத்தால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளையும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் கலைஞர் கைவினைத் திட்டத்தின் 4 நபர்களுக்கு 1.75 இலட்சம் ரூபாய்க்கான மானிய உதவிகளையும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 5 நபர்களுக்கு 27.58 இலட்சம் ரூபாய் மானிய உதவிகளையும், வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 4 நபர்களுக்கு 4.48 இலட்சம் ரூபாய் மானிய உதவிகளையும், புதிய தொழில் முனைவோர்கள் திட்டத்தின் கீழ் 1 நபருக்கு 4.40 இலட்சம் ரூபாய் மானிய உதவியையும் உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் 837 பயனாளிகளுக்கு 10.84 கோடி ரூபாய்க்கான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு, பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், திரு.எஸ்.தங்கபாண்டியன், திரு.ஜி.அசோகன், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., சீர்மரபினர் நலவாரிய துணைத் துணைத்தலைவர் திரு.இராசா அருண்மொழி, காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர், திரு.இரா.ராஜேந்திரன் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Sep 23, 2025

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற , கட்டுமானத் தொழிலாளர்களுக்கான  திறன் பயிற்சியினை  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், சூலக்கரை, அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில்  (22.09.2025) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற, கட்டுமானத் தொழிலாளர்களுக்கான 7 நாட்கள் திறன் பயிற்சியினை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,  I A S., அவர்கள் தொடங்கி வைத்தார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களால் 09.04.2025 அன்று கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தொழில் சார்ந்த நவீன தொழில்நுட்பங்களில் பயிற்சி அளித்து அவர்களின் திறனை மேம்படுத்த, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு, கட்டுமான வேலை, கம்பி வளைப்பு வேலை, தச்சு வேலை, மின்பணியாளர் வேலை, பிளம்பர், வெல்டர், வர்ணம் பூசுதல்,  ஏசி மெக்கானிக், கண்ணாடி அறுத்தல், சலவைக்கல் ஒட்டுதல் உள்ளிட்ட 11 கட்டுமான தொழில் இனங்களில், 7 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி, நாள் ஒன்றுக்கு ரூ.800  ஊதியத்துடன், 50,000 பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூபாய் 45 கோடியே 21 இலட்சம் செலவில் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.                        அதனைத் தொடர்ந்து, அரசாணை வெளியிடப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மேற்குறிப்பிட்ட 11 தொழிற்பிரிவுகளின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.மேலும், மஸ்தூர் தொழிற்பிரிவில்  தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள்  நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள்  11 தொழிற்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பயிற்சி பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில்  11 தொழிற்பிரிவுகளில் பதிவு செய்துள்ள 1100 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான திறன் பயிற்சி வழங்கிட சூலக்கரை அரசு தொழிற்பயிற்சி நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.முதற்கட்டமாக கொத்தனார் தொழிற்பிரிவில்  விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு 7 நாட்கள் திறன் பயிற்சி வழங்கப்படுகிறது.அதனைத் தொடர்ந்து வரும் வாரங்களில் இதர தொழிற்பிரிவு இனங்களில் பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு வேலை இழப்பீட்டுத் தொகை நாள் ஒன்றிற்கு ரூ.800/- வழங்கப்படும். 7 நாட்களுக்கான வேலை இழப்பீட்டுத் தொகை ரூ. 5600/- பயிற்சி நிறைவடைந்த மறுநாள் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.மேலும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் தொழிலாளர்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவடைந்தவுடன் பயிற்சியில் கலந்து கொண்ட தொழிலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.                        எனவே, விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் மேற்கண்ட 12 பிரிவுகளில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் விருதுநகர், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் திறன் பயிற்சிக்கான விண்ணப்பத்தினை பெற்று நலவாரிய அட்டை நகல், வங்கி கணக்கு முதல் பக்கம் நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் கடவுச்சீட்டு புகைப்படத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) திரு.ஜெ.காளிதாஸ், விருதுநகர், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் திரு.ஆ.செல்லக்கனி மற்றும் உதவி இயக்குநர்,  (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை)  திரு.மகேஸ் சுப்பிரமணியம் மற்றும் அரசு அலுவலர்கள, பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 23, 2025

சமூக நல அலுவலகத்தின் கீழ் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் / தட்டச்சர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

  விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்-2005 ன் கீழ்; இளநிலை உதவியாளர் / தட்டச்சர் (JUNIOR ASSISTANT CUM TYPIST) பணியிடத்தினை நிரப்புவதற்கு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கீழ்க்காணும் தகுதியுடைய மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடம் நேர்முகத்தேர்வு மூலம் நிரப்பப்படும் என்ற விபரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.           விண்ணப்பிக்க தேவயான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் (முதுநிலை) தட்டச்சு தேர்ச்சி (Both Higher Typing) பெற்றிருக்கி வேண்டும், மேலும், கணினி பயன்பாட்டியல் (Computer on Office Automation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.எனவே,விண்ணப்பிக்க தகுதியுடைய (பெண்கள் மட்டும்) 30.09.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் மேற்கண்ட தகுதிச்சான்றுகளுடன் நோில் விண்ணப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 23, 2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில்  (22.09.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள்.  இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு.காளிமுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 22, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை  நிதி, சுற்றுச்சூழல்  மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், முத்துராமலிங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்  (20.09.2025) “நலம் காக்கும் ஸ்டாலின்”  திட்டத்தின் கீழ்,  பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் துவக்கி வைத்தார்.முதலமைச்சர் அவர்களால்,   நலம் காக்கும் ஸ்டாலின் திட்டமானது 02.08.2025 அன்று துவக்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.தமிழகம்  முழுவதும் ”நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின்கீழ் 1256 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள், 17 சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 36 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.இத்திட்டத்தின்கீழ் நடைபெறும் பல்நோக்கு மருத்துவமுகாமில், உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவுநோய் கண்டறிதல்,மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம்,   நீரழிவுநோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத  மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.                அதனடிப்படையில்,  விருதுநகர் மாவட்டத்தில்,  விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் சத்திரெட்டிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முதலாவது பல்நோக்கு மருத்துவ முகாமில் 444 ஆண்கள்,  703 பெண்கள் என மொத்தம் 1204 பயனாளிகளும், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், குல்லூர் சந்தை ஸ்ரீ வீரப்ப வித்யாலயா உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இரண்டாவது முகாமில் 335 ஆண்கள்,  686  பெண்கள் என மொத்தம் 1088 பயனாளிகளும், திருத்தங்கல்,  கலைமகள் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மூன்றாவது முகாமில் 549 ஆண்கள்,  764  பெண்கள் என மொத்தம் 1436 பயனாளிகளும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் மகாராஜபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நான்காவது முகாமில் 429 ஆண்கள்,  566  பெண்கள் என மொத்தம் 1097 பயனாளிகளும், காரியாபட்டி அமலா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஐந்தாவது முகாமில் 456 ஆண்கள், 898  பெண்கள் என மொத்தம் 1518 பயனாளிகளும், நரிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஐந்தாவது முகாமில் 608 ஆண்கள்,  843  பெண்கள் என மொத்தம் 1640 பயனாளிகளும் என இதுவரை நடைபெற்ற 6 முகாம்கள்  மூலம் மொத்தம் 7, 983  பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் பல்வேறு மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டதோடு, பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.            அதனைத்தொடர்ந்து, 7-ம் கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில்,  திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், முத்துராமலிங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் (20.09.2025) நடைபெற்ற  பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில், மக்களைத் தேடி மருத்துவத்தின் கீழ்  பொதுமக்களுக்கு மருத்துவ முதலுதவி உபகரணங்கள் அடங்கிய பெட்டகங்களும்,  மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களையும்  அமைச்சர் அவர்கள் வழங்கினார்.மேலும், இம்முகாமில் மேற்கொள்ளப்படும் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை முறைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகளை நிதி, சுற்றுச்சூழல்  மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.இம்முகாம்கள் மூலம்,  அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் உரிய நேரத்தில் தகுந்த மருத்துவ சிகிச்சைகளும், பல்வேறு வகையான நலத்திட்டங்களும்   மக்களைத் தேடி எளிதில் சென்று சேர்வதால் அதனை பயன்படுத்தி தங்களின் நோய்களுக்கு உரிய தீர்வுகளை காண முடிகிறது எனவும்,  எங்கள் இருப்பிடம் தேடி வந்து எங்களுக்கு மருத்துவ உதவிகளை இத்திட்டத்தின் மூலம் ஏற்படுத்தி தந்த தமிழக அரசுக்கு  நன்றி தெரிவிக்கும் விதமாக தங்களது கருத்துக்களை பொதுமக்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, மருத்துவத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 22, 2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், விருதுநகர் மாவட்ட  விளையாட்டு அரங்க மைதானத்தில் குளிரூட்டப்பட்ட ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சி மையத்தினை, உரிய சந்தா கட்டணம் செலுத்தி பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

 தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையின்போது,  மாவட்ட விளையாட்டு வளாகங்களில் தற்போதுள்ள உடற்பயிற்சி கூடங்கள் ரூ.10 கோடி செலவில் குளிர்சாதன வசதிகளுடன் நவீனமயமாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதனடிப்படையில்  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்த உடற்பயிற்சி கூடமானது தற்போது நவீனமயமாக்கப்பட்டு குளிரூட்டப்பட்ட ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சி மையமாக மாற்றி அமைக்கப்பட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் 30.08.2025 அன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.  அனைத்து வயதினரின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்திடும் நோக்கத்துடன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் மேம்படுத்தப்பட்ட உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தினை பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்துவதற்கு எதுவாக உறுப்பினர் சந்தா கட்டணம் ஒரு மாதத்திற்கு ரூ.944/மும், மூன்று மாதங்களுக்கு ரூ.2549/மும், ஆறு மாதங்களுக்கு ரூ.4248/- மும், ஒரு வருடத்திற்கு ரூ.6797/- மும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் இந்த நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தினை பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா,I A S,. அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 22, 2025

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM -YASASVI - Top Class Education in Schools for OBC, EBC,  & DNT Students  கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal)  விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S ,. அவர்கள் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:இதர பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNC) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் PM -YASASVI - Top Class Education in Schools for OBC, EBC, & DNT students மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது.  2025-26 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க  பட்டியலிடப்பட்ட ( Top Class Schools)  பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.                இத்திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ. 2.50 இலட்சம்                இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்:30.09.2025                கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கடைசி நாள்:15.10.2025புதுப்பித்தல்:                இத்திட்டத்தின் கீழ் கடந்த  நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்களின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (htts://scholarships.gov.in) (National   Scholarship Portal) Renewal Application  என்ற இணைப்பில் (Link)   சென்று OTR  Number (One Time Registration) பதிவு செய்து 2025--26 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை புதுப்பித்தல்  ( Renewal)  மேற்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது. புதியது:                இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள், தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் தங்களது கைப்பேசி எண் (Mobile Number) மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் OTR  Number & Password  பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரப்பெறும்.                மேற்படி OTR Number பயன்படுத்தி 2025-26 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதியது (Fresh Application)  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.                மேலும் பட்டியிலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிந்திட தொடர்புடைய  முதன்மை கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறும், இத்திட்டம் தொடர்பான கூடுதல்  விபரங்கள் அறிந்திட  National Scholarship Portal (htts://scholarships.gov.in) இணையதளத்தினை அணுகி  கல்வி உதவித்தொகை பயன்களைப்  பெறுமாறு  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்தெரிவித்துள்ளார்.

1 2 ... 45 46 47 48 49 50 51 ... 121 122

AD's



More News