நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளியில் (13.09.2025) நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் தொடங்கி வைத்தார்.நலம் காக்கும் ஸ்டாலின் என்கின்ற மாபெரும் மருத்துவ முகாம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிந்தையில் உதித்த முத்தான திட்டங்களிலே ஒன்றாக அமைந்து தமிழ்நாட்டில் கடைக்கோடியில், பட்டி தொட்டிகளில் இருக்கக்கூடியவர்களை நாடி சென்று அவர்களுக்கு பரிசோதனைகள் வழங்கும் திட்டமாக இன்றைக்கு உருவாகி இருக்கிறது.
இந்த 4 ஆண்டுகால ஆட்சியில் நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்கள் குறிப்பாக கல்வி, சுகாதாரம் இரண்டிலும் மிகப்பெரிய ஒரு பாய்ச்சலை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் நரிக்குடியில் இந்த முகாமில் பார்க்கின்ற பொழுது இந்த கிராமத்தில் இருந்து மட்டுமல்ல, இந்த ஒன்றியத்தினுடைய பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் இன்று கூடியிருக்கக் கூடிய காட்சியை பார்க்க முடிகிறது.இந்த முகாமில் பல்வேறு துறையினுடைய வல்லுனர்கள் இங்கே இருக்கிறார்கள். உங்களின் மருத்துவ பரிசோதனைக்காக விருதுநகர், அருப்புக்கோட்டை நகர்ப்பகுதி மருத்துவமனையில் கிடைக்கக்கூடிய வசதிகள் நம்முடைய கிராம பகுதியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.மேலும் சிறப்பு சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் அது குறித்து, அந்த கிசிச்சைக்கான காப்பீடுகள் உடனே கிடைக்கும் வசதிகளை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவத்துறையிலே இது மாபெரும் திட்டம். நம்மைக் காக்கும் 48, இன்னுயிர் காப்போம் திட்டம், நலம் காக்கும் மருத்துவம் போன்ற திட்டங்கள் கோடிக்கணக்கான மக்களை சென்றடைவதாக உள்ளது. இந்த திட்டங்கள் மக்களிடம் பாராட்டை பெற்று மக்களிடையே நம்பகமான திட்டமாக இந்தியாவிலே முதன்மை இடம் பெற்றுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக நமது முதலமைச்சர் அவர்கள் திகழ்கிறார். எனவே இந்த முகாமினை இப்பகுதிகள் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.நலம் காக்கும் ஸ்டாலின் முகாமானது 02.08.2025 அன்று முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.தமிழகம் முழுவதும் ”நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின்கீழ் 1256 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள், 17 சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 36 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.
இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவுநோய் கண்டறிதல்,மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம், நீரழிவுநோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
, இன்று (13.09.2025) ஆறாவது கட்டமாக நடைபெறும் இம்முகாமில் குறிப்பிட்டுள்ள பரிசோதனைகள் மட்டும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தல், மாற்று திறனாளிகளுக்கான அரசு அடையாள அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வருவாய்துறையினர் மூலமாக வருமானச் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.அதன்படி, இன்று நரிக்குடி, மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டையினை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.
0
Leave a Reply