விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தந்தை பொியார் பிறந்த நாளான (17.09.2025) ‘சமூக நீதி நாள்” உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.முன்னதாக, தந்தை பொியார் அவர்களின் 147 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னாரது படத்திற்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர், சிவகாசி மாநகராட்சி மேயர், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.தமிழக சட்டபேரவையில் தமிழக முதலமைச்சர் அவர்கள் பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் -17 ம் தேதி ஆண்டுதோறும் ‘சமூக நீதி நாளாக“ கொண்டாடப்படும் என அறிவித்தார்.அதன்படி, சாதி ஏற்றதாழ்வுகள், தீண்டாமை கொடுமைகளை, மத வேறுபாடுகளை உதறி தள்ளி பெண்களை சம நிலையில் மதித்திடும் கொள்கையை உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் மாதம் 17-ம் நாள் ஆண்டுதோறும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘சமூக நீதி நாள்” உறுதிமொழியை எடுத்து கொள்ள வேண்டுமென அரசின் ஆணையின்படி,‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும்-யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும்எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைபிடிப்பேன்சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடையசெயல்பாடுகள் அமையும்.சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகியகொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக்கொள்வேன்.மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன்.சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திடஇந்த நாளில் உறுதியேற்கிறேன்”.என்ற உறுதிமொழியினை அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.இந்த நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.கேசவதாசன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிரதௌஸ் பாத்திமா மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உட்பட பலர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கன்னிச்சேரி புதூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் (17.09.2025) பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் ஆரோக்கியமான பெண்கள் வலுவான குடும்பங்களின் ஆதாரம் இயக்கத்தின் (SWASTH NARI SASHAKT PARIVAR ABHIYAAN) கீழ் நடைபெற்ற மருத்துவ முகாமினை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.பின்னர், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.ஆரோக்கியமான பெண்கள் வலுவான குடும்பங்களின் ஆதாரம் இயக்கம்(SWASTH NARI SASHAKT PARIVAR ABHIYAAN) என்பது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதுடன், தரமான மருத்துவ வசதிகள் மற்றும் விழிப்புணர்வை அதிகரிப்பது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.இத்திட்டத்தின் மூலம் 17.09.2025 முதல் 02.10.2025 வரை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் குறிப்பிட்ட சுகாதாரத் தேவைகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.மேலும் இந்த 16 நாட்கள் தொற்று அல்லாத நோய்கள், புற்றுநோய்கள், ரத்த சோகை, காசநோய் உள்ளிட்ட நோய்களுக்கான சுகாதார பரிசோதனைகள் குறித்த விழிப்புணர்வும், பரிசோதனை முகாம்களும், தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவைகள்;, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும்; ஏற்படுத்தப்படவுள்ளது.அதன்படி, கன்னிச்சேரி புதூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் ஆரோக்கியமான பெண்கள் வலுவான குடும்பங்களின் ஆதாரம் இயக்கத்தின் கீழ் நடைபெற்ற மருத்துவ முகாமினை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.இந்த திட்டத்தில் மாவட்ட முழுவதும் மருத்துவ வல்லுநர்கள், அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கே வந்து, பெண்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான பரிசோதனைகள், ஸ்கிரீனிங், இரத்த சோகை பரிசோதனை செய்வதோடு, ஊட்டச்சத்து குறித்தும் ஆலோசனைகள் வழங்குவார்கள். இதன் மூலம் மகப்பேறுக்கு முந்தைய மற்றும் பிந்தைய குழந்தை இறப்பு விகிதம் குறைக்கப்படும்.அதுபோல மாவட்டத்தில்; நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டம் மூலம் பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம் நடத்தப்பட்டு வருகின்றன.எனவே, இது போன்ற திட்டங்கள் மூலமாக மக்கள் பயனடைந்து தங்களது ஆரோக்கியத்தை பேணிக்காக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.17.09.2025 முதல் 02.10.2025 வரை ஒவ்வொரு வட்டாரத்திலும் இதுபோன்ற முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம்களுடைய நோக்கம் என்னவென்றால் வளமான பெண்கள், தாய்மார்களால் தான் வளமான இந்தியாவை உருவாக்க முடியும் என்பதற்காக தான்.பெண்கள் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைகளை முறையாக செய்ய வேண்டும். இப்பொழுது இருக்கின்ற நவீன அறிவியல் பரிசோதனைகளில் நம்முடைய ரத்த பரிசோதனைகளிலேயே அனைத்தும் தெரிந்து விடுகிறது.நோய் வருவதற்கு முன் நம்மை காத்துக் கொள்ள வேண்டும். சிறிய அளவில் இருக்கும் போது அதனை கண்டுபிடித்து அதற்கான மருத்துவ முறைகளை செய்வது முக்கியமானது.தமிழகத்தில் சுகாதாரத்தினுடைய வளர்ச்சி என்பது பிரம்மாண்டமாக இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசின் கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் மிகப்பெரிய அளவிலே தமிழக மக்களின் ஒவ்வொருவருடைய சுகாதாரம் மேம்பட்டு வருகிறது. இந்த முன்னேற்றம் தொடர்ந்து பல வருடங்களாக நடைபெற்று இருக்கக்கூடிய முன்னேற்றம். அதற்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிற மருத்துவ குழுவுக்கும், செவிலியர்களுக்கும், சுகாதாரத்தைச் சார்ந்த மற்ற அலுவலர்கள், பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, மருத்துவர்கள், பணியாளர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் சென்னிலைக்குடி ஊராட்சியில் (17.09.2025) புதிதாக தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் ரூ.6.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, கட்டுமான பணிகள் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனையில் (16.09.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அடிப்படை வசதிகள், மருந்து பொருட்களின் இருப்பு, மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் சேவைகள் குறித்தும், அங்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் அணுகுமுறை உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சேலத்தில் (16.09.2025) நடைபெற்ற அரசு விழாவில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு ரூ.3500 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், இன்று (16.09.2025) நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 992 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 10,996 மகளிர்களுக்கு ரூ.95.69 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்புகள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் வழங்கினார். அதன்படி, தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், ஊரக பகுதி அளவில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களில், அருப்புக்கோட்டை வட்டாரத்தில், 60 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.513.39 இலட்சம் மதிப்பிலும், காரியாபட்டி வட்டாரத்தில், 53 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.500.06 இலட்சம் மதிப்பிலும், நரிக்குடி வட்டாரத்தில் 118 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1166.00 இலட்சம் மதிப்பிலும், இராஜபாளையம் வட்டாரத்தில், 55 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ602.32 இலட்சம் மதிப்பிலும், சாத்தூர் வட்டாரத்தில் 52 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.511.00 இலட்சம் மதிப்பிலும், சிவகாசி வட்டாரத்தில் 71 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.794.94 இலட்சம் மதிப்பிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் 58 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.537.58 இலட்சம் மதிப்பிலும், திருச்சுழி வட்டாரத்தில் 50 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.523.89 இலட்சம் மதிப்பிலும், வெம்பக்கோட்டை வட்டாரத்தில் 48 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 503.24 இலட்சம் மதிப்பிலும், விருதுநகர் வட்டாரத்தில் 74 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.689.93 இலட்சம் மதிப்பிலும், வத்ராயிருப்பு வட்டாரத்தில் 41 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.506.25 இலட்சம் மதிப்பிலும், சமுதாய முதலீட்டு நிதி 100 குழுக்களுக்கு ரூ 109 இலட்சம் மதிப்பிலும், வட்டார வணிக வள மையத்தில் உள்ள 72 உறுப்பினர்களுக்கு ரூ. 37 இலட்சம் மதிப்பிலும், வணிகக் கடன் உதவியாக 233 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ. 254.70 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் 780 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 8736 மகளிர்களுக்கு ரூ. 72.49 கோடி மதிப்பிலும், நகராட்சி மற்றும் பேரூராட்சி அளவில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களில், அருப்புக்கோட்டை நகராட்சியை சேர்ந்த 28 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.355.70 இலட்சம் மதிப்பிலும், இராஜபாளையம் நகராட்சியை சேர்ந்த 21 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.251.15 இலட்சம் மதிப்பிலும், காரியாபட்டி பேரூராட்சியை சேர்ந்த 04 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.36.00 இலட்சம் மதிப்பிலும், சாத்தூர் நகராட்சியை சேர்ந்த 10 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.139.68 இலட்சம் மதிப்பிலும், சிவகாசி நகராட்சியை சேர்ந்த 19 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.242.75 இலட்சம் மதிப்பிலும், சுந்தரபாண்டியம் பேரூராட்சியை சேர்ந்த 04 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.36.45 இலட்சம் மதிப்பிலும், செட்டியார்பட்டி பேரூராட்சியை சேர்ந்த 04 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.63.24 இலட்சம் மதிப்பிலும், சேத்தூர் பேரூராட்சியை சேர்ந்த 12 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.153.92 இலட்சம் மதிப்பிலும், திருத்தங்கல் நகராட்சியை சேர்ந்த 16 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.223.34 இலட்சம் மதிப்பிலும், திருவில்லிபுத்தூர் நகராட்சியை சேர்ந்த 43 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.448.04 இலட்சம் மதிப்பிலும், மம்சாபுரம் பேரூராட்சியை சேர்ந்த 8 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.74.00 இலட்சம் மதிப்பிலும், மல்லாங்கிணறு பேரூராட்சியை சேர்ந்த 01 மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.6.00 இலட்சம் மதிப்பிலும், வ.புதுப்பட்டி பேரூராட்சியை சேர்ந்த 2 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.17.00 இலட்சம் மதிப்பிலும், வத்திராயிருப்பு பேரூராட்சியை சேர்ந்த 03 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.32.00 இலட்சம் மதிப்பிலும், விருதுநகர் நகராட்சியை சேர்ந்த 18 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.229.00 இலட்சம் மதிப்பிலும், சுழல் நிதியாக 19 குழுக்களுக்கு ரூ.8.35 இலட்சம் மதிப்பிலும், சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், தனிநபர் தொழில் வங்கி கடனாக 5 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.3.00 இலட்சம் மதிப்பிலும், என மொத்தம் 212 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 2260 மகளிர்களுக்கு ரூ. 23.19 கோடி மதிப்பிலும், ஆக மொத்தம் மாவட்டத்தில், ஊரகம், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 992 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 10,996 மகளிர்களுக்கு ரூ.95.69 கோடி மதிப்பிலான வங்கி கடன் உதவிகள் மற்றும் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.கேசவதாசன், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாண்டி செல்வம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.ஜெகதீசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு.சுப்பிரமணியன், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திருமதி வசுமதி, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கல்லமநாயக்கன்பட்டி ஊராட்சியில் (16.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது.அந்த வகையில் இன்று(16.09.2025) இராஜபாளையம் நகராட்சி வைத்தியநாதபுரம், சிவகாசி மாநகராட்சியில் ஜே.ஏ.போஸ் மஹால், திருவில்லிபுத்தூர் நகராட்சியில் மாரியம்மன் கோவில் தெரு, வெம்பக்கோட்டை வட்டம் வெம்பக்கோட்டை, விருதுநகர் வட்டம் மூளிப்பட்டி, சாத்தூர் வட்டம் சிறுகுளம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற்றன.அதன்படி, வெம்பக்கோட்டை வட்டம், கல்லமநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.அதனை தொடர்ந்து, இம்முகாமில் குடும்ப அட்டை வேண்டி மனு அளித்தவர்களுக்கு, மின்னணு குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.முன்னதாக, வெம்பக்கோட்டை வட்டம், கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அடிப்படை வசதிகள், மருந்து பொருட்களின் இருப்பு, மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் சேவைகள் குறித்தும், அங்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் அணுகுமுறை உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.இந்த “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து தங் களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 19.09.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ADYAR ANANDHA BAVAN, TVS SUNDARAM BRAKE LININGS, BALASANKA TVS,DEVENDRAN PLASTICS, ELEVATE DIGI TECHNOLOGIES போன்ற25-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு I.T.I. டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள்.இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 19.09.2025 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை நேரிலோ அல்லது vnrjobfair@gmail.comஎன்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
2025-ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற் பிரிவுகளில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை (Spot Admission) 30.09.2025 வரை சேர்க்கை நடைபெறுகிறது.எனவே ஏற்கனவே விண்ணப்பித்து ஒதுக்கீடு கிடைக்கப் பெறாதாவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவ மற்றும் மாணவிகள், அரசு நிர்ணயித்துள்ள 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு கீழ்க்கண்ட அரசு சலுகைகள் வழங்கப்படுகிறது. மாதாந்திர உதவித்தொகை ரூ.750- வழங்கப்படும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000- உதவித் தொகை வழங்கப்படும்.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படும். மேலும், 2 செட் சீருடை தையற்கூலியுடன் வழங்கப்படும், பாடநூல்கள் மற்றும் வரைபடக்கருவிகள் வழங்கப்படும், விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும், மூடு காலணி வழங்கப்படும், கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும், அடையாள அட்டை வழங்கப்படும், தேர்வுக்கு கட்டண விலக்கு வழங்கப்படும்.மேலும்,பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முடிவில், வளாக நேர்முகத்தேர்வு நடத்தி (கேம்பஸ் இன்டர்வியூ) மூலம் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். ஊதியம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை தொழிற்நிறுவனங்களின் தகுதி நிலைக்கேற்ப வழங்கப்படும்.இந்த அரிய வாய்ப்பினை மாணவ மாணவியர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு பயனடைய வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், (15.09.2025) பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய் ஈட்டும் பெற்றோர்கள் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற மாணவர்களுக்கு கல்வி பராமரிப்பு செலவினத்திற்கான நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் 105-பள்ளி மாணவர்களுக்கு ரூ.76 இலட்சத்துக்கான வைப்பு நிதிக்கான பத்திரங்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள். மேலும், விருதுநகர் மாவட்டத்தில் நூறாண்டுகளை கடந்த அரசுப்பள்ளிகளில் நூற்றாண்டு திருவிழாவினை கொண்டாடிய 31-அரசுப் பள்ளிகளை சேர்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் பெருமக்கள் அவர்கள் வழங்கினார்கள்.அதன்படி, விபத்து காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகள் அல்லது நிரந்தர முடக்கம் காரணமாக வருவாய் ஈட்ட இயலாத பெற்றோரின் குழந்தைகளுக்கு அவர்களின் கல்வியினை இடைநிற்றல் இன்றி தொடர்வதையே முதன்மை நோக்கமாக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதனடிப்படையில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களில், பெற்றோரை இழந்த அல்லது நிரந்த முடக்கம் அடைந்த பெற்றோரின் குழந்தைகளுக்கு தலா ரூ.75 ஆயிரம் அனுமதி அளிக்கப்பட்டு, அந்த நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக வழங்கப்படுகிறது.மேலும், அம்மாணவ/மாணவியர்களின் தங்களின் கல்வியினை, வைப்புத் தொகையிலிருந்து பெறப்படும் வட்டித் தொகையிலிருந்தும், முதிர்வுத் தொகையிலிருந்தும் தொடரும் வண்ணம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தொடக்கக்கல்வி பயிலும் 33 மாணவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் வீதமும், பள்ளிக்கல்வி பயிலும் 11 மாணவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதமும் மற்றும் 61 மாணவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் வீதமும் என மொத்தம் 105 மாணவர்களுக்கு ரூ.76 இலட்சத்துக்கான வைப்பு நிதிக்கான பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளிகள் சிறப்பினையும், கல்விக்கு அரசுப் பள்ளிகள் ஆற்றிய பங்களிப்பினை கொண்டாடும் வகையில் “நூற்றாண்டு திருவிழா” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இத்திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் நூறாண்டுகளை கடந்த அரசுப்பள்ளிகளில் நூற்றாண்டு திருவிழாவினை கொண்டாடிய 24 அரசு தொடக்கப் பள்ளிகள், 5-அரசு நடுநிலைப்பள்ளிகள் மற்றும் 02-அரசு மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 31-அரசுப் பள்ளிகளை சேர்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.கேசவதாசன், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், முதன்மை கல்வி அலுவலர்திரு. மதன்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (15.09.2025) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் பெற்றோரை இழந்த 23 குழந்தைகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகைரூ.4.46இலட்சம்மதிப்பிலானஆணைகளைவருவாய்மற்றும்பேரிடர்மேலாண்மைத்துறைஅமைச்சர்திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 10.11.2024 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, பட்டாசுத் தொழிற்சாலைகளில், ஏற்படுகின்ற விபத்துகளில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர்கல்வி வரையிலான அனைத்துக் கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும் என்றும், இந்த உதவிகளை மாவட்ட அளவிலேயே முடிவு செய்து வழங்கக்கூடிய வகையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் கீழ், இதற்கான ஒரு தனி நிதியம் ஒன்று உருவாக்கப்படும் என்றும் இதற்கான முதற்கட்ட உதவியாக ரூ.5 கோடி ரூபாயை அரசு வழங்கும் எனவும் அறிவித்தார்.அதனடிப்படையில், பட்டாசுத் தொழிற்சாலை விபத்துக்களில் தாய், தந்தை இருவரில் எவரேனும் ஒருவர் மரணமடைந்த நிகழ்வில் பராமரிப்பு உதவித்தொகையாக (18 வயது பூர்த்தியாகும் வரை) மாதந்தோறும் ரூ.2000/-மும் மற்றும் தாய், தந்தை இருவரும் மரணமடைந்த நிகழ்வில் பராமரிப்பு உதவித்தொகையாக (18 வயது பூர்த்தியாகும் வரை) ரூ.4000/- மும் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், முதற்கட்டமாக கட்டமாக, பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் பெற்றோரை இழந்த 79 குழந்தைகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.10.82 இலட்சம் மதிப்பிலான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து, இன்று இரண்டாம் கட்டமாக கடந்த பட்டாசு விபத்துக்களில் பெற்றோரை இழந்த 23 குழந்தைகளுக்கு நவம்பர் 2024 முதல் ஆகஸ்ட்-2025 வரையிலான மாதங்களுக்கான மாதாந்திர உதவித்தொகையாக ரூ.4.46 இலட்சத்திற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.இதுபோன்று பட்டாசு தொழிற்சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர்கல்வி வரையிலான கல்வி செலவுகளுக்கு தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என அமைச்சர் பெருமக்கள் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.கேசவதாசன், திட்ட இயக்குநர் ( தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குநர்கள் திரு.ஆர்.ரவிச்சந்திரன், திரு.பி.ராஜ்குமார், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.மாதவன், பட்டாசு தொழிலாளர்களுடைய குழந்தைகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.