விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (29.04.2025) பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 135-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் வார விழா (ஏப்ரல் 29 முதல் மே 5 வரை) நிகழ்ச்சியின் தொடக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என அறிவித்தார். அதனடிப்படையில் இன்று, விருதுநகர் மாவட்டத்தில் தமிழ் வார விழா கொண்டாடும் வகையில், தொடக்க விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், உலகத் தமிழ்க் கழகத்தின் தலைவர் திரு.இல.நிலவழகன் அவர்கள் மற்றும் தலைவர், பாவாணர் கோட்டம் முரம்பு திரு.அ.இளங்கண்ணன் அவர்கள் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.உலகத் தமிழ் கழகத் தலைவர் திரு இல.நிலவழகன் அவர்கள் வாழ்த்திப் உரையாற்றியபோது, பிற மொழித் தாக்கத்திலிருந்து தமிழைக் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்று குறிப்பிட்டார். பாவேந்தரின் தமிழ் மணக்கும் தமிழ் வாரம் சிறக்க வாழ்த்தினார்.பின்னர், முரம்பு பாவாணர் கோட்டத்தின் தலைவர் திரு.அ.இளங்கண்ணன் அவர்கள் உரையாற்றியபோது, புரட்சிக் கவி பாரதிதாசனின் உயிர்ப் புள்ள கவிதை வரிகளைக் கூறி நம் அனைவருக்கும் தமிழ் உணர்வு இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.அனைத்து அரசு அலுவலகங்களிலும் குறிப்பாக “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்ற அரசினுடைய கொள்கையின் அடிப்படையில், அரசினுடைய அரசாணைகள், அலுவலங்கள் மூலம் பொதுமக்களுக்கு அனுப்பக்கூடிய கடிதங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தமிழில் எழுதுவதற்கு ஏற்கனவே விதிமுறைகள் நடைமுறையில் இருக்கிறது. அதை மீண்டும் உறுதிப்படுத்தவதற்காகவும், அரசு அலுவலகங்கள் தமிழில் அலுவலக நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவு கூறுவதற்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்கும், விருதுநகருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இன்றிலிருந்து சரியாக 75 ஆண்டுகளுக்கு முன்பாக 1949 ஏப்ரல் மாதம் விருதுநகரில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டுக்கு புரட்சி கவிஞர் பாரதிதாசன் அவர்களும் வந்திருந்தார். அந்த மாநாட்டில் திருக்குறள் எந்த அளவிற்கு அனைத்து மக்களுக்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டியது என்பது குறித்து அவர் மிக தீவிரமாக பேசி, திருக்குறள் அரசினுடைய வழிமுறைகளில், கல்வி நிலையங்களில், பொதுமக்களுக்கும் அதனுடைய கருத்துக்களை எல்லோருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். அதாவது ஒரு பண்டிதர் நிலையிலிருந்து பாமர நிலைக்கு எல்லோருக்கும் எடுத்து செல்ல வேண்டும் என்ற ஒரு மிகப்பெரிய மாற்றத்தை தொடங்கியது, விருதுநகரில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு தான். அந்த மாநாடு நடைபெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இன்று பாரதிதாசனுடைய பிறந்த தின விழாவை நாம் விருதுநகரில் கொண்டாடுவது என்பது பெருமைக்குரியது.பாரதிதாசன் நமக்கெல்லாம் வழிகாட்டுதலுக்குரிய ஒரு கவிஞர். பாரதிதாசனுடைய எல்லா பாடல்களும் அவர் சமூகத்திற்கு வழங்கிய 40 ஆண்டுகாலம் எழுதிய பாடல்கள், அவர்களின் கட்டுரைகள், அவர் எழுதிய கவிதைகள் அவர் பேசிய பேச்சுகள் எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் பாரதிதாசன், தமிழ்நாடு குறித்து மூன்று கனவுகளை கண்டார். தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற அவர் கண்ட கனவுகள் இன்றைக்கும் நம்மை வழி காட்டக்கூடியதாகவே இருக்கிறது. மொழி குறித்து பேசுகின்ற பொழுது, மொழி என்பது ஒரு வாழும் நிலப்பகுதியில் மக்கள் அனைவரும் பேசக்கூடிய ஒரு தகவல் தொடர்பு கருவி மட்டுமல்ல, அது ஒரு உணர்ச்சிகளின் தொகுப்பு. அவர்களுடைய பண்பாடு. அவர்கள் தங்களது வாழ்க்கையில் அனைத்து இன்ப துன்பங்களையும் பெறுவதற்கு மொழிதான் அடிப்படையாக இருக்கிறது என்று பேசி, அப்போதைய காலகட்டத்தில் மட்டுமல்ல இன்னும் பல நூற்றாண்டுகள் கழித்து இந்த சமுதாயம், இந்த நாடு தொழில்நுட்பத்தில்; முன்னேறுகின்ற பொழுது எப்படி மொழி இருக்க வேண்டும் என்பது குறித்து கனவுகளை கண்டார்.அனைத்து அரசு அலுவலக வணிக நிறுவனங்களும் தங்களுடைய பெயர்களை தமிழில் வைக்க வேண்டும் என்ற உத்தரவை தற்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்துகின்றது. இந்த பிரச்சனையை ஒரு 80 ஆண்டுகளுக்கு முன்பாக பாரதிதாசன் பதிவு செய்கிறார்.இதெல்லாம் நிச்சயமாக அரசினுடைய திட்டங்களை, அரசினுடைய கொள்கைகளை செயல்படுத்தக்கூடிய இடத்தில் இருக்கும் நம்மை போன்ற அரசு அலுவலர்கள் ஏழை எளிய மக்களுக்கு அரசினுடைய சேவைகள் கிடைக்கக் கூடிய அளவிற்கு நம்முடைய செயல்பாடுகள் இருக்கும் என்றால் அதுதான் பாரதிதாசன் கண்ட தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற மூன்று மிகப்பெரிய கனவுகளில் ஏழை எளிய மக்களை அடிப்படையாகக் கொண்டது. எளிய மனிதர்களுக்காக நாம் உழைக்க வேண்டும் என்ற தத்துவத்தை தான் இன்றைய தமிழ் வார விழாவில் அரசு அலுவலர்கள் பெற்றுக் கொள்ள வேண்டியது. அதைப் பெற்றுக் கொள்வதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், தமிழ் ஆட்சிமொழித் திட்ட செயலாகத்தில் சிறந்து விளங்கிய 5 அலுவலகங்கள் மற்றும் 5 அரசுப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
. தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக 2025ம் ஆண்டிற்குள் மாற்ற வேண்டும் என்ற இலக்கினை செயல்படுத்தும் வகையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்/தலைவர், மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்புப் படை அறிவுரையின் படி விருதுநகர் மாவட்டத்தில் தடுப்புப் படையால் கூட்டாய்வுகளும் மற்றும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் அரசுதுறை அலுவலர்களிடையே விழிப்புணர்வும் ஏற்படத்தப்பட்டு வருகின்றன.தற்போது பள்ளி தேர்வுகள் முடிவடைந்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.1. மாவட்ட தடுப்பு படை கூட்டாய்வின் போது விடுமறை நாட்களில் 18 வயது நிறைவடையாத குழந்தை மற்றும் வளரிளம்பருவ தொழிலாளர்களை பணிக்கமர்த்தியது கண்டறியப்பட்டால் பணிக்கமர்த்திய நிறுவனம் மீது அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேற்படி மாணவ/மாணவியர் பள்ளியில் பயில்வதாகவும் பள்ளிவிடுமுறை நாட்களில் மட்டுமே பணிபுரிவதாக தெரிவித்தாலும் பணிக்கமர்த்திய நிறுவனம் மீது குற்றத்திற்கேற்ப முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அதிகபட்சம் ரூ.50,000 வரை அபராதம் அல்லது 2வருடம் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.2. 18 வயது நிறைவடையாத குழந்தை மற்றும் வளரிளம்பருவ தொழிலாளர்களை பணிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.3. விளம்பரங்கள், குறும்படங்கள், திரைப்படங்கள், வர்த்தக ரீதியிலான கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் You tube, Facebook, Twitter, Instagram போன்ற வலைதள சமூக ஊடகங்களிலும் 18 வயது நிறைவடையாத குழந்தை மற்றும் வளரிளம்பருவத்தினரை ஈடுபடுத்தும்போது குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி சான்று வாங்கிய பின்னரே ஈடுபடுத்த வேண்டும் என உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறாமல் 18 வயது நிறைவடையாத குழந்தை மற்றும் வளரிளம்பருவத்தினரை ஈடுபடுத்தும் நபருக்கு குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களும் கல்வி பெறுவது அடிப்படை உரிமையாகும். 18 வயதிற்குட்பட்ட எவரும் பள்ளி அல்லது திறன் வளர் பயிற்சி பயிலாமல் பணிக்கமர்த்தப்பட்டிருந்தாலும் பள்ளி படிப்பினை தொடர்ந்து கொண்டே பணிபுரிந்து கொண்டிருந்தாலும் அது குறித்து 1098 சைல்டு லைன் உதவி எண் அல்லது pencil.gov.in என்ற வலைதளத்தில் புகார்கள் தெரிவிக்கலாம். அனைத்து பள்ளிவயது குழந்தைகளும் பள்ளி செல்வதை உறுதி செய்யவும், குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கவும் பொதுமக்களும், அனைத்து வணிகர்களும், வர்த்தகர் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து வகை சங்கங்களும் மற்றும் பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அவர்கள் தெரிவித்துள்ளார்
விருதுநகர் மாவட்டம், தேசிய சுகாதார குழுமத்தில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் கீழ்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.1.Occupational therapist -1 பணியிடம்2. Special educator for behavioral therapy -1 பணியிடம்3. Social worker -1 பணியிடம்இப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான தகுதிகள் இனசுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப்படிவம் ஆகியவை குறித்த விவரத்தினை இம்மாவட்டத்தின் http://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ 09.05.2025 பிற்பகல் 5.45 மணி வரை சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையிலும், அவர்களது தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும் ஓவியம், நாட்டுப்புற கலைகள், போஸ்டர் தயாரித்தல், கதை சொல்லி, புத்தகம் பேசுதல், கலைப் பொருட்கள் தயாரித்தல், மெகந்தி வரைதல் மற்றும் களிமண் பொருட்கள் தயாரித்தல்(Mehendi and clay Modelling) உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கோடைகால பயிற்சி முகாம்கள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றது.அதன்படி இந்த ஆண்டு கோடைகால பயிற்சி முகாமின் ஒரு பகுதியாக சிறந்த திரைப்படங்கள் திரையிடும் நிகழ்வு 25.04.2025 முதல் 01.05.2025 வரை காலை 10:30 மணி மற்றும் பிற்பகல் 2:30 மணி என இரண்டு வேளைகளில் திரையிடப்பட்டு வருகிறது.இந்த திரைப்படக் காட்சியில் 14 வயதுக்குட்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு பயனுள்ள வகையிலும், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் சிறந்த திரைப்படங்கள் 25.04.2025 மற்றும் 26.04.2025 ஆகிய இரண்டு நாட்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இதுவரை இரண்டு நாட்களில் சுமார் 2000 -ற்கும் மேற்பட்ட மாணவர்கள் சிறந்த திரைப்படங்களை மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.25.04.2025 அன்று 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை காக்கா முட்டை என்ற திரைப்படமும், 1 முதல் 3 ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 02.30 மணி முதல் 04.30 மணி வரை தி லயன் கிங் என்ற திரைப்படமும் திரையிடப்பட்டன.இன்று 26.04.2025 -- 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை தி லைப் ஆப் பி என்ற திரைப்படமும், 4 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 02.30 மணி முதல் 04.30 மணி வரை பிரோசன் 2 என்ற திரைப்படமும் திரையிடப்பட்டன.நாளை 27.04.2025 -- 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை சார்லி ஆண்ட் தி சாக்லேட் என்ற திரைப்படமும், 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 02.30 மணி முதல் 04.30 மணி வரை பேபிஎஸ் டே அவுட் என்ற திரைப்படமும் திரையிடப்படுகின்றன. அதனை தொடர்ந்து வருகின்ற 26:04.2025 வரை ஒவ்வொரு நாளும் இரண்டு சிறந்த திரைப்படங்கள் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் திரையிடப்பட உள்ளன.இந்தத் திரைப்படக் காட்சிகள் விருதுநகர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கம், திருவில்லிபுத்தூர் ஸ்ரீவி லயன்ஸ் மெட்ரிக் பள்ளி, இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி, சிவகாசி ICAI,அருப்புக்கோட்டை மினர்வா பப்ளிக் பள்ளி, காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் திரையிடப்படுகின்றது.மேலும், இந்த திரைப்படக் காட்சிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 8608204154 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் தொழிலாளர் தினமான 01.05.2025 - அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.1.கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்.(01.04.2024 முதல்31.03.2025 வரை),2. இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் குறித்து விவாதித்தல்.3. சுய சான்றிதழினை அடிப்படையாகக் கொண்டு கட்டிட அனுமதி பெறுதல் குறித்து விவாதித்தல்.4. வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல் குறித்து விவாதித்தல்.5. இதர பொருட்கள் குறித்து விவாதித்தல். எனவே, 01.05.2025 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (24.04.2025) வெம்பக்கோட்டை பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் 60 கல்லூரி மாணவர்களுடனான ""Coffee With Collector” ” என்ற 169- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் இணைய வழியில் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, 169-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மத்திய மாநில அரசுகளின் மூலம் நடத்தப்பெறும் பல்வேறு போட்டித்தேர்வுகள் குறித்து தெரிந்து கொண்டு, அதில் முழு ஈடுபாட்டுடன் அந்த இலக்கை நோக்கி சென்றால் வெற்றி பெற முடியும். மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தெரிவித்தார்.கல்லூரி மாணவ மாணவர்கள் போட்டித் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக மாணவ, மாணவிகளிடையே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இந்த சந்திப்பில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் (25.04.2025) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர் /மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.யானைகள் மற்றும் வன விலங்குகளால் பயிர் சேதம் அடைந்ததற்கு இழப்பீடு விரைந்து வழங்கிடவும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிய விபரங்களை உடனே தெரிவித்திடவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் துணை இயக்குநர், மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர் அவர்களை அறிவுறுத்தினார்கள். மேலும், கண்மாய்கள் மற்றும் நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அரசு நெறிமுறைகளை பின்பற்றி அகற்றப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு பகுதி குடியிருப்பு பகுதிகளாக இருப்பின் மென்மையான முறையே பின்பற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்கள்.பின்னர், நெகிழிப்பைகளை எரிப்பதன் மூலம் காற்று மாசுபாடு அதிகஅளவில் ஏற்பட்டு குழந்தைகளுக்கான புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்கள். காற்று மாசுபடுத்துவர்கள் மீது குற்றவியல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் எச்சரித்தார்கள்.தென்னை மற்றும் மாமரத்திற்கு பயிர் காப்பீடு மற்றும் நிவாரணம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்ட விபரத்தினை தெரிவிக்குமாறு தோட்டக்கலை துணை இயக்குநரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். இராஜபாளையம் வட்டாரத்தில் அதிக அளவு ஆக்கிரமிப்பு உள்ளதாகவும், விரைவில் ஆக்கிரமிப்பை அகற்ற சிவகாசி சார் ஆட்சியர் அவர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி க.விஜயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபா வாசுகி, விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள்; உட்ப பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தை (PHC) பார்வையிட்டு, அங்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் நாய்க்கடி தடுப்பூசி (ARV) இருப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நாரணாபுரம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 46 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.இதற்குரிய தடுப்பூசி உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் மார்ச் மாதத்தில் மட்டும் 1802 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.எனவே தெருநாய் தொல்லை உள்ள பகுதிகளிலும் தெருக்களில் நடந்து செல்லும் போதும், குழந்தைகள் தெருவில் விளையாடும் போதும் மிகுந்த எச்சரிக்கையோடும் கவனத்தோடும் இருக்க வேண்டியது அவசியம்.நாய்கடி பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடி தடுப்பு மருந்து இருப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.நாய்க்கடிக்கு எதிரான நடவடிக்கையை பலப்படுத்தும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் சுகாதாரத்துறையினர் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல், விலங்குகளின் இனப்பெருக்க கட்டுப்பாட்டுத் திட்டம் ((ABC) ) மற்றும் சாலைகளில் உள்ள நாய்களுக்கும், வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பள்ளி விடுமுறைகளில் குழந்தைகள் வெளியே அதிகமாக விளையாடுவதால், பெற்றோர்கள் எச்சரிக்கை உணர்வுடன் அதிக கவனம் செலுத்த வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ARV தடுப்பூசி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவத்துறையினர் தாமதமின்றி சிகிச்சை அளிக்க,தவறாமல் (SOP-I) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், மருத்துவத்துறை ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாய்கடிக்கு உடனடியாக சிகிச்சை பெறுவது மிக முக்கியம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே நாய் கடிக்கு ஆளானவர்கள் எந்த தயக்கமும் இன்றி உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.மேலும், கால்நடை பராமரிப்பு துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் விரிவான கூட்டம் நடத்தப்பட்டு, சட்டத்திற்குட்பட்ட வழிமுறைகளின்படி நாய்களால் ஏற்படும் தொந்தரவுகளை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (25.04.2025) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில், வணிக நிறுவங்களுக்கு தமிழில் பெயர் சூட்டிய பைந்தமிழ் பற்றாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம் 1956 இன் கீழ் அரசு அமைப்புகள், வங்கிகள், தனியார் பள்ளிகள், கடைகள், உணவு நிறுவனங்கள் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ் மொழியின் பயன்பாட்டை அதிகப்படுத்துவதற்கு எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்னும் திட்டத்தின் கீழ் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வங்கிகள், கடைகள், உள்ளிட்ட வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் அனைத்து வகை தொழிற்சாலைகளில் அவற்றின் பெயர் பலகைகள் தமிழில் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து கடைகள் நிறுவனங்கள் உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் 100 சதவிகிதம் மேற்கூறியவாறு அமைக்கப்படுவதை உறுதி செய்ய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.தொழிலாளர் நலத்துறை, தமிழ் வளர்ச்சி துறை, நகர மற்றும் கிராம உள்ளாட்சி துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு வர்த்தகர் மற்றும் வேலை அளிப்போர் சங்க பிரதிநிதிகளை கொண்ட இக்குழுவின் வாயிலாக வரும் 15.05.2025 வரை தமிழில் பெயர் பலகை அமைக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறித்து விழிப்புணர்வு கூட்டங்களும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று, விருதுநகர் மாவட்டத்தில் சட்டப்படி தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டதற்கு இணங்கிய உடனே தமிழில் பெயர் பலகை அமைத்த 100 வணிகர்களுக்கு அவர்களின் இந்த தமிழ் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக தமிழ் "பைந்தமிழ் பற்றாளர்கள்" என பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அமைப்புகள், வங்கிகள், தனியார் பள்ளிகள், கடைகள், உணவு நிறுவனங்கள் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மற்றும் வணிக நிறுவனங்கள் தமது நிறுவனங்களில் சட்டப்படி தமிழ் மொழியில் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளதா என்று சுய பரிசோதனை செய்து, தாமாக முன்வந்து தமிழில் சட்டப்படி பெயர் பலகை அமைத்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். “ தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள் சட்ட விதிகள், விதி 15, தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்ட விதி 42 B, மற்றும் தொழிற்சாலைகள் சட்ட விதிகள் 113 ஆகியவற்றில் அனைத்து கடைகள் நிறுவனங்கள் உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் அவற்றின் பெயர் பலகைகள் தமிழ் மொழியில் முதன்மையாகவும், பிரதானமாகவும் அமைக்க வேண்டும். பிற மொழிகளிலும் எழுத வேண்டும் எனில் தமிழ் மொழிக்கு கீழ் ஆங்கிலத்தில் இரண்டாவது இடத்திலும், இதர மொழிகளில் மூன்றாவது இடத்தில் அதற்கு கீழேயும் எழுதப்பட வேண்டும் என வரையறை செய்யப்பட்டுள்ளது”.மேலும், 15.05.2025 ம் தேதிக்கு பின்னரும் தமிழில் பெயர் பலகை அமைக்காத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து நிறுவனங்களிலும் 100% தமிழில் பெயர் பலகைகள் அமைக்க அனைத்து கடைகள் உணவு நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து நிறுவன உரிமையாளர்களும் ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிரதௌஸ் பாத்திமா, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருமதி.சீ.மைவிழிச் செல்வி, விருதுநகர், இணை இயக்குனர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் விருதுநகர், உதவி இயக்குனர், தமிழ் வளர்ச்சி துறை திருமதி சுசிசலா, விருதுநகர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (25.04.2025) சி.பி.எஸ்.இ. பள்ளிகளை சேர்ந்த 35 ஆசிரியர்களுடனான "Coffee With Collector” என்ற 170- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி, தொடக்க நிலையில் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி, ஆளுமை திறன் வளர்ச்சி, எதிர்கால சிறந்த மாணவ செல்வங்களை உருவாக்குதல், அரசின் நலத்திட்டங்கள் குறித்த உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, 170-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, இன்று நடைபெற்ற 170 -வது காபி வித் கலெக்டர் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சி.பி.எஸ்.இ. ஆசிரியர்களிடம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை கண்டறிந்து, உயர்கல்வி சார்ந்து, வழங்கப்பட உள்ள பயிற்சி வகுப்புகளில் மாணவர்களை சேர்த்து, படிக்க வைப்பது குறித்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்.மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையில், உடனடி வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் புதிய பாடப்பிரிவுகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அந்த பிரிவுகளில் சேர்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் செய்திடல் வேண்டும்.உயர்கல்விக்கு செல்லாததற்கு மாணவர்களிடையே ஆர்வமின்மையும் ஒரு காரணமாக உள்ளது. இது குறித்து மாணவர்களிடையே எடுத்துக்கூறி அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.உயர்கல்வி சேர்க்கை விகிதாச்சாரத்தினை அதிகப்படுத்தியதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானதாக இருந்தது. அதைபோல் உயர்கல்வி வழிகாட்டுதல் மூலம் மாணவர்கள் சரியான வாய்ப்புகளை அடைவதற்கும் ஆசிரியர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து ஒத்துழைப்பு நல்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.