25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

May 11, 2025

சத்துமிகு தானியங்கள் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான சிறுதானியத் திருவிழா

விருதுநகர் மாவட்ட மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில்(10.05.2025) வேளாண்மைத்துறை சார்பில்  உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு இயக்கம் - சத்துமிகு தானியங்கள் திட்டத்தின் கீழ்  மாவட்ட அளவிலான சிறுதானியத் திருவிழாவினை   சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டம் என்பது சிறுதானியங்களுக்கு புகழ்வாய்ந்த மாவட்டம் ஆகும். ஏறத்தாழ ஒரு லட்சத்து இருபதாயிரம் ஹெக்டர் பரப்பளவில் 52854 ஹெக்டர் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் சோளம் 11,040 ஹெக்டர், கம்பு 1765 ஹெக்டர், வரகு 265 ஹெக்டர், குதிரைவாலி 1514 ஹெக்டர், மக்காச்சோளம் 38,257 ஹெக்டேர் பயிரிடப்பட்டு வருகிறது.  சிறுதானியங்களின் முக்கியத்துவத்தினை அனைவரும் அறிந்திடும் நோக்கில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் சத்துமிகு தானியங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறு தானியங்களின் முக்கியத்துவத்தினை உணர்த்திடும் வகையில் மாவட்ட அளவில் சிறுதானியங்கள் திருவிழா  ஒவ்வொரு மாவட்டத்திலும்   நடைபெற்று வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் சிறுதானிய திருவிழா  நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறுதானியங்கள் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து விருதுநகர், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி.க.விஜயா அவர்கள் வரவேற்புரையாற்றினார். விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி.ஆ.நாச்சியார் அம்மாள் அவர்கள் திட்டம்  தொடர்பான விவரங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.விவசாயிகளுக்கு சிறுதானியங்களின் முக்கியத்துவம் மற்றும் அதன் ஊட்டச்சத்தினால் ஏற்படும் நன்மைகள், சிறுதானியங்கள் மதிப்பு கூட்டுதல், புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை எளிதாக அறிந்திடும் நோக்கத்தில் அனைத்து தொழில்நுட்பங்களும் எடுத்துரைக்கப்பட்டது.மேலும், வேளாண் அறிவியல் நிலைய வேளாண் விஞ்ஞானிகள் முனைவர் செல்வி இரமேஷ், பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை அறிவியல் நிலையம், கோவிலாங்குளம், முனைவர் ஆ.ஷீபா அவர்கள், இணைப்பேராசிரியர் (பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல்),வேளாண்மை அறிவியல் நிலையம், கோவிலாங்குளம், முனைவர் ஜட்டாகவிதா, இணைப்பேராசிரியர் (பூச்சியியல் துறை) வேளாண்மை அறிவியல் நிலையம், கோவிலாங்குளம் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் பற்றிய தொழில் நுட்ப கருத்துக்களை மிக தெளிவாக எடுத்துரைத்தனர். விருதுநகர், வேளாண்மை துணை இயக்குநர் (மத்தியதிட்டம்) திருமதி.மு.சுமதி அவர்கள், வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத்திட்டம்) திருமதி.ல.முத்துலட்சுமி அவர்கள், வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சிநிலையம்) திருமதி.ஆர்.லதா அவர்கள், விதை ஆய்வு துணை இயக்குநர் திருமதி.த.வளர்மதி அவர்கள் மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வணிகம்) திருமதி.எம்.செல்வி அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தொழில் நுட்ப உரையாற்றினர்.சிறுதானியங்கள் உற்பத்தியில் தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட உழவர் உற்பத்தியாளர் குழு நிறுவனப் பிரதிநிகள் தங்களது வேளாண் சம்மந்தப்பட்ட அனுபவங்களை எடுத்துரைத்தனர்.சிறுதானிய மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.சிறுதானியங்கள் திருவிழாவில் அமைக்கப்பட்ட கருத்துக் காட்சி மற்றும் தமிழ்நாடு அரசின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த கண்காட்சிகளை  விவசாயிகள் பார்வையிட்டு விவசாயிகள் தங்களது சந்தேகத்தினை கேட்டு தெளிவு பெற்றனர்.இறுதியாக அருப்புக்கோட்டை, வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி.ப.சுந்தரவள்ளிஅவர்கள் நன்றியுரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் விருதுநகர் வேளாண்மைத்துறையிலுள்ள அனைத்து தொழில்நுட்ப அலுவலர்கள், மாவட்டத்திலுள்ள 11 வட்டாரங்களிலிருந்து சுமார் 1000 க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

May 09, 2025

“காபி வித் கலெக்டர்” என்ற 175-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (09.05.2025) அரசுப் பள்ளிகளில் பயின்று பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பள்ளி மாணவர்களுடனான 175 ஆவது சிறப்பு காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் உயர்கல்வி வாய்ப்புகள், தலைசிறந்த கல்லூரிகள், உரிய பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பது குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையிலும் மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விகடன் குறித்த தகவல்களும் எதிர்கால வேலைவாய்ப்புகள், உயர்கல்வி பிரிவுகள் மற்றும்  படிப்புகள், வாய்ப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்களுக்கு தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.மேலும், மாணவர்களுக்கு தங்களுக்கான வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து அறிந்து இருக்கவேண்டும். இந்திய அளவில் பல்வேறு தலைசிறந்த உயர்கல்வி கல்லூரிகள் உள்ளன. அவற்றை பற்றி அரசு பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் உள்ள வாய்ப்புகளையும், அதற்கான நுழைவுத் தேர்வு, உதவித்தொகை, சலுகைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்துகொள்ளவேண்டும்.தமிழக அரசு மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலமும், தமிழ் புதல்வன் திட்டம் மூலம் கீழ் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. 6 முதல் 12-ஆம் வகுப்பு அரசு பள்ளியில் படித்தவர்கள் தமிழ்நாடு அரசு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டில் எந்த தொழிற்கல்விக்கு சென்றாலும் கட்டணம் இலவசமாக அளிக்கப்படுகிறது.எனவே, மாணவ, மாணவிகள் அரசு தங்களுக்காக செயல்படுத்தும் திட்டத்தின் நோக்கத்தினை புரிந்துகொண்டு, நல்ல கல்வியறிவு பெற்று,தங்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்து நன்கு அறிந்துகொண்டு, பயணிக்கும் போது நிச்சயமாக வெற்றியடையலாம்.நீங்கள் அனைவரும் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு  தேவையான  விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.

May 09, 2025

“காபி வித் கலெக்டர்” என்ற 176-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (09.05.2025) அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பள்ளி மாணவர்களுடனான 176 ஆவது சிறப்பு காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் உயர்கல்வி வாய்ப்புகள், தலைசிறந்த கல்லூரிகள், உரிய பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பது குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.மேலும், இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.மேலும், மாணவர்களுக்கு தங்களுக்கான வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து அறிந்து இருக்கவேண்டும். இந்திய அளவில் பல்வேறு தலைசிறந்த உயர்கல்வி கல்லூரிகள் உள்ளன. அவற்றை பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் உள்ள வாய்ப்புகளையும், அதற்கான நுழைவுத் தேர்வு, உதவித்தொகை, சலுகைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்துகொள்ளவேண்டும்.எனவே, மாணவ, மாணவிகள் அரசு தங்களுக்காக செயல்படுத்தும் திட்டத்தின் நோக்கத்தினை புரிந்துகொண்டு, நல்ல கல்வியறிவு பெற்று,தங்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்து நன்கு அறிந்துகொண்டு, பயணிக்கும் போது நிச்சயமாக வெற்றியடையலாம்.நீங்கள் அனைவரும் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு  தேவையான  விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், மாணவர்கள் அனைவரும் தங்களுடைய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் வழிகாட்டுதலோடு, நல்ல கல்லூரியை தேர்ந்தெடுத்து, நன்கு படித்து முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

May 08, 2025

டயாலிசிஸ் டெக்னீசியன் (Dialysis Technician) பணியிடத்திற்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் (CMCHIS)  கீழ் டயாலிசிஸ் டெக்னீசியன் (Dialysis Technician) பணியிடத்திற்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ள தகுதியான நபர்கள் 20.05.2025 (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை 5.45 மணிக்குள் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதிச் சான்று நகல்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும், டயாலிசிஸ் டெக்னீசியன் (Dialysis Technician)  காலிப் பணியிடம் ஒன்று உள்ளது. அதற்கான கல்வித்தகுதி - Diploma in Dialysis Technician  பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான மாத ஒப்பந்த ஊதியம் ரூ.12,000- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.எனவே, விண்ணப்பங்களை முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விருதுநகர் என்ற முகவரிக்கு 20.05.2025 அன்று மாலை 05.45.மணிக்குள் சமர்பிக்க வேண்டும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 08, 2025

விருதுநகர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதி (பி.எம்.கிஸான்) திட்டத்தில் தகுதியுடைய அனைத்து விவசாயிகள் பயன்பெற மே-31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது

கௌரவ நிதி திட்டத்தின் கீழ், தகுதியுடைய அனைத்து விவசாயிகள் விடுபாடின்றி பயன்பெற சிறப்பு முகாம் விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் அலுவலகம், இந்திய அஞ்சல் கட்டண வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் 02.05.2025 முதல் நடைபெற்று வருகிறது.இத்திட்டத்தில் 20 வது தவணை வரும் சூன் 2025 மாதத்தில் வழங்க உள்ளதால், இந்த முகாமில் தகுதியுடைய விவசாயிகளின் நிலம் தொடர்பான விபரங்கள், வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பது e-kyc  போன்ற அனைத்து முழுமையற்ற விபரங்களை சரி செய்து விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இத்திட்டத்தில் சேர விடுபட்ட விவசாயிகள் பி.எம்.கிஸான் வலைதளத்தில் நில உடமைகளை பதிவேற்றம் செய்த அடையாள எண்ணுடன் பதிவு செய்து பயன்பெறலாம்.மேலும், நமது மாவட்டத்தில் ஏற்கனவே பி.எம்.கிஸான் 19-வது தவணைத்தொகை பெற்று வந்த விவசாயிகளில் 16493 விவசாயிகள் நில உடமை பதிவுகளை மேற்கொள்ளவில்லை. 20-வது தவணை தடையின்றி பெற நில உடைமை பதிவுகளை பதிவு செய்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.இறந்த பயனாளிகளின் இறப்பு சான்றினை சமர்ப்பித்து, அவர் பெற்று வரும் நிதியை நிறுத்தவும் மற்றும் வாரிசுதாரர்கள் இத்திட்டத்தில் பயன்பெற தேவையான நிலஆவணங்களை பி.எம்.கிஸான் திட்ட முகாமில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்   முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

May 08, 2025

மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் பிரிவு இளங்கலை பட்டப் படிப்பிற்காக இணையதளம் வாயிலாக 07.05.2025 முதல் 27.05.25 வரை விண்ணப்பிக்கலாம்.

விருதுநகர் மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் விருதுநகர் மாவட்ட அரசு கலை மற்றும் அறிவியல் பிரிவு இளங்கலை பட்டப் படிப்பிற்காக https://www.tngasa.in/   என்ற இணையதளத்தில் 07.05.2025 முதல் 27.05.25 வரை விண்ணப்பிக்கலாம்.விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன.அரசு கலைக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- கல்வித் தொகை கிடைக்கும்.விருதுநகர் மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து படித்து பட்டம் பெறுவதற்கு முன் வரவேண்டும். பெற்றோர்களும், உறவினர்களும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.எனவே, விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://www.tngasa.in/   என்ற இணையதளத்தில் 07.05.2025 முதல் 27.05.25 வரை விண்ணப்பித்து உயர்கல்வி சேர்க்கை பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 08, 2025

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு மக்கள் குறைதீர்க்கும் முகாம்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-இன்படி பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை நடைபெறும்.மே-2025 மாதத்திற்கான குறைதீர் முகாம் வருகின்ற 10.05.2025 சனிக்கிழமை அன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் செயல்பட்டு வரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி குடும்ப அட்டை தொடர்பான குறைகளுக்கு மனு செய்து தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என்பது தெரிவிக்கப்படுகிறது.

May 07, 2025

"Coffee With Collector” என்ற 174-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (07.05.2025) இராஜபாளையம், காசா டி மிர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 12 -ஆம் வகுப்பு பயிலும் 35-ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடனான "Coffee With Collector”  என்ற 174- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்  குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு,  174-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மத்திய மாநில அரசுகளின் மூலம் நடத்தப்பெறும் பல்வேறு போட்டித்தேர்வுகள் குறித்து தெரிந்து கொண்டு, அதில் முழு ஈடுபாட்டுடன் அந்த இலக்கை நோக்கி சென்றால் வெற்றி பெற முடியும். மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது  தொடர்பாக மாணவ, மாணவிகளிடையே மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இந்த சந்திப்பில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

May 07, 2025

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச்சேவைகள் துறையின் மூலம் குழந்தைகளுக்கு எதிராக பாலியல்வன் கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S, அவர்களின் தலைமையில் 05.05.2025 அன்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் தொடர்பான மீளாய்வு கூட்டம் நடைபெற்றது.அதன்படி, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012-ன்கீழ் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிராக பாலியல்வன் கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ)-ன் கீழ் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வழக்குகளில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மரணத்தண்டனை வரை விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. கடந்த ஆண்டு 271 வழக்குகள் வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கெதிராக பாலியல்வன் கொடுமை நடைபெற்றதாக அறியும் நிலையில் அனைவரும் உடனடியாக குழந்தைகள் உதவிமைய எண் 1098 மற்றும் பெண்களுக்கான உதவிமைய எண் 181 என்ற எண்ணிற்கும் புகார் அளிக்கலாம்.புகார் அளிப்பவர்களின் பற்றிய விபரங்கள் ரகசியம் காக்கப்படும். பாலியல் குற்றவழக்குகள் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள நடைமுறைகளை அனைத்து காவல்துறையினரும் பின்பற்ற வேண்டும். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான எந்த விபரங்களையும் பொது வெளியில் வெளியிடக் கூடாது. பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்டு மருத்துவப் பரிசோதனை மற்றும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொண்டு, அக்குழந்தைகளை குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டு மறுவாழ்வு நடவடிக்கைகள் மற்றும்  ஆற்றுப்படுத்துதல் வழங்கப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ- மாணவியருக்கும், கல்லூரி மாணவியருக்கும், பொதுமக்கள் ஆகியோருக்கு பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ) குறித்து விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. கோடை விடுமுறை நாட்களில் பெற்றோர் அனைவரும் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்தும், குழந்தைகளுக்கு கெதிராக பாலியல் குற்றங்கள் நடைபெற்ற விபரங்கள் அறிந்தால் உடனடியாக புகார் அளிக்கும் பட்சத்தில் குற்றம் புரிவோர் மீதுகடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் போக்சோசட்டத்தின் கீழ்பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் போக்சோ சிறப்பு நீதி மன்றத்தின் மூலம் 188 நபர்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 07, 2025

விருதுநகர் மாவட்டம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் 2024-25 கீழ் சூரிய ஒளியில் இயங்கும் மின்வேலி அமைக்கும் திட்டத்தில் 22 விவசாயிகள் மானியம் பெற்று பயன்பெற்றுள்ளனர்

விருதுநகர் மாவட்டத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் 2024-25 கீழ் சூரிய ஒளியில் இயங்கும் மின்வேலி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.விவசாய நிலங்களில்  வன  விலங்குகளால் பயிர் சேதம் அதிகரித்து வருகிறது. விவசாய நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்தி மகசூல் இழப்பு ஏற்படுகிறது. விவசாயிகளுக்கு அதிக அளவு இழப்பு ஏற்பட்டு பொருளாதாரம் பாதிப்பு அடைகிறது.விவசாய நிலங்களில் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தினை தடுப்பதற்கு வேளாண்மை பொறியியல் துறையின் கீழ், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் சூரிய ஒளியில் இயங்கும் மின் வேலி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சூரியசக்தியால் இயங்கும் சுற்றுவட்டப் பாதுகாப்பு மின்வேலி அமைப்பதன் மூலம், விலங்குகளால் பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். ஒரு விலங்கு வேலியைத் தொட நேரிட்டால் அதற்கு லேசான அதிர்வு ஏற்படும். ஆனால் உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு மின்சாரம் தாக்காது இதன் காரணமாக விலங்குக்கு வேலியிடப்பட்டுள்ள இடத்திற்கு மீண்டும் வருவதைத் தவிர்க்கும் மனநிலை உருவாகும், இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் என்பதே இந்த திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாகும்.இத்திட்டத்தில், மாவட்டத்தில் விவசாய நிலங்களுக்கு  சூரிய மின்வேலி 50 சதவிகித மானியத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.அதன்படி 2021-2022 - ஆம் ஆண்டில் 5 விவசாயிகள் ரூ.5,21,000/- மானியத்திலும்,2022-2023 - ஆம் ஆண்டில் 15 விவசாயிகள் ரூ.14,72,000/- மானியத்திலும்,2024-2025 - ஆம் ஆண்டில் 22 விவசாயிகள் ரூ.26,54,000/- மானியத்திலும்   பயன்பெற்றுள்ளனர்.அதன்படி, இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, ரூ.1,12,160/-   மானியம் பெற்று, சூரிய  ஒளியில் இயங்கும் மின்வேலி அமைத்து பயன்பெற்று வரும் விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் அ.புதுப்பட்டி ஊராட்சியில் உள்ள  திரு.வைரமுத்து என்பவரின் நிலத்தை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, இத்திட்டத்தின்  பயன்கள் மற்றும் கருத்துக்களை கேட்டறிந்தார்.இத்திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள மின்வேலி மூலம் எங்களது பயிறுகள் வனவிலங்குகள் சேதப்படுத்துவதிலிருந்து பாதுகாக்கப்படுகிறது எனவும், இதனால் பொருளாதார இழப்பு இல்லாமல், நல்ல முறையில் மகசூல் கிடைக்கிறது எனவும், சூரிய மின்வேலி என்பதால் மின்சார செலவும் மிச்சமாகிறது எனவும், இதை அமைப்பதற்கு அரசு மானியம் வழங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எனவும்  பயனாளி தெரிவித்தார்.இந்த நிகழ்வில், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் திருமதி இந்திரா, உதவி செயற்பொறியாளர் திரு.ஜெகதீசன்  மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

1 2 ... 88 89 90 91 92 93 94 ... 121 122

AD's



More News