25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமீபத்திய நிகழ்வுகள்

Jul 02, 2024

ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன்.

நம் நகரின் அருகில் உள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சந்திரபோஷ் மனைவி சுமதி இவர்களது மூன்றாவது மகன் பார்த்தசாரதி. சுந்தரர்ராஜபுரம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு முடித்து ஜே.இ.இ. மெயின் நுழைவு தோர்வுக்கு பள்ளியில் இருந்தபடியே ஆன்லைனில் படித்து தேர்ச்சி அடைந்தார்.“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் சென்னை சைதாப்பேட்டை பயிற்சி மையத்தில் இரண்டு மாதங்கள் தங்கி இலவசமாக பயிற்சி எடுத்துள்ளனர். தேர்வு முடிவுகள் ஜீன் 9-ல் வெளியான நிலையில் 112 மதிப்பெண்கள் உடன் இந்திய அளவில் 740 வது இடம் பிடித்து தேர்ச்சிபெற்றார். சென்னை ஐ.ஐ.டி. யில் விண்வெளி துறை தொடர்பான படிப்பிற்கு இடம் கிடைத்துள்ளது. இம் மாணவனை இராஜபாளையம் டைம்ஸ் சார்பில்  பாராட்டி ,வாழ்த்துகிறோம்.

Jun 29, 2024

சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி.

அகடமிக் இன்சைட்ஸ் அமைப்பால் தமிழ்நாட்டில் உள்ள தலை சிறந்த பொறியியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு சதவிகிதம், ஆளுமை மேம்பாடு, போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிகள் ஆங்கிலப்புலமை உள்ளிட்ட அளவீடுகளை கொண்டு ஏராளமான செய்தது. நாடு முழுவதுமிருந்து பல்வேறு கல்லூரிகள் பங்கேற்றன. இதில் ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி 25 சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக தேர்வு பெற்றுள்ளது. விருது பெற்றதற்காக ராம்கோ குருப் சேர்மேன் பி.ஆர். வெங்கட்ராமராஜா முதல்வர், ஆசிரியர், மாணவர்களை பாராட்டினார். இராஜபாளையம் டைம்ஸ் சார்பாக மாணவர்களை பாராட்டுகின்றோம்.

Jun 21, 2024

ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை

ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனைஜூன் - 21 - 23, 2024வைர நகைகளுக்குஒரு காரட்டிற்கு10,000 தள்ளுபடி*கண்காட்சி நடைபெறும் இடம்- இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் காமராஜ் நகர், இராஜபாளையம் 

Jun 15, 2024

குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12

இராஜபாளையம் வட்ட சட்டப் பணிகள் குழு, தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை, குற்றவியல் நடுவர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி ப்ரீத்தி பிரசன்னா தலைமை வகித்து, வேல்டு விஷன் சார்பில் நடந்த தேசிய குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின ஊர்வலத்தை துவக்கினார்.  ஊர்வலத்தில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், பள்ளி மாணவர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Jun 11, 2024

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

ஜீன் 1-ம் தேதி முதல் வாரத்தில் திறக்கப்பட வேண்டிய பள்ளி 10-JUNE தேதி திறப்பதாக அறிவிக்கப்பட்டது. ஒன்றரை மாத கோடை விடுமுறைக்கு பின், நேற்று மாணவர்கள் மகிழ்ச்சியோடு வருகை தந்தனர். சில பள்ளிகளில் வந்த அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் ,பூங்கொத்து  கொடுத்து வரவேற்கப்பட்டனர். எல்.கே.ஜி. யூ.கே.ஜி, மழலை வகுப்புகளுக்கும் குழந்தைகள் வந்தனர்.

Jun 07, 2024

தனியார் கரும்பு ஆலையை நிலுவைத் தொகை முழுவதும் வழங்கிய பின், ஆலையை திறக்க கரும்பு விவசாயிகள் கோரிக்கை

இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம், தேவதானம், பகுதிகளில் நீர் வரத்து காரணமாக கரும்பு சாகுபடி அதிகம். எனவே இங்கு சாகுபடியாகும் கரும்புகளை விருதுநகர். தென்காசி மாவட்ட எல்லையில் செயல்பட்ட தனியார் கரும்பு ஆலைக்கு ஒப்பந்த முறையில் வழங்கி வந்தனர்.இந்நிலையில் விவசாயிகளின் 2018 2019 ம் ஆண்டிற்கான கரும்பு அனுப்பியதில் வட்டியுடன் நிலுவைத் தொகை ரூ.30 கோடி இதுவரை நிலுவையில் இருந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் ஆலை நிர்வாகம் சார்பில் விவசாய பிரதிநிதிகளை அழைத்து அசல் தொகையான ரூ.21 கோடியில் பாதியை விவசாயிகள் கணக்கில் செலுத்தியுள்ளனர்.மீதமுள்ள தொகையை தவனை முறையில் செலுத்துவதாக கூறியதை அடுத்து அடுத்த வருடத்திற்கான ஆலை திறப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அசல் தொகை முழுவதையும் விவசாயிகளிடம் வழங்கிய பின் ஆலையை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

May 31, 2024

சாஸ்தா கோவில் அணை நீர்மட்டம் உயர்வு

 ராஜபாளையத்தை அடுத்து தேவதானம் அருகே சாஸ்தா கோவில் அணை அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் நகரியாறு தண்ணீரை கொண்டு அடிவாரத்தில் சாஸ்தா கோவில் அணை 36 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.இந்த அணையில் நீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாய பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. தேவதானம், கோவிலூர், சேத்தூர், சொக்கநாதன் புத்தூர், தளவாய்புரம் ஆகிய பகுதிகளில் அமைந் துள்ள பெரியகுளம், நகர குளம், வாண்டையார் குளம், முகவூர் கண்மாய் வரை 20-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு சாஸ்தா கோவில் அணையின் நீர் தேவைக்கு ஏற்ப திறந்து விடப்படும்.தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக அணையில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

May 29, 2024

ராஜபாளையத்தில் ரயில்வே மின் பணிமனை துவக்கம்

மதுரை கோட்டம் ரயில்வே நிர்வாகம் 'மதுரை கோட்டத்தில்12வது  ரயில் மின்தட பராமரிப்பு பணி மனை  ராஜபாளையத்தில் துவக்கப்பட்டுள்ளது' என  தெரிவித்துள்ளது. விருதுநகர் - தென்காசி பிரிவில் மின்சார இன்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த தடத்தில் மின்சார பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், திடீர் பழுதுகளை நீக்கவும் ராஜபாளையத்தில் கடந்த மே 24 ல் ரூ 1.5 கோடி செலவில் பணிமனை உருவாக்கி, துவக்கி வைக்கப்பட்டது. இந்தப் பாதையில் ஏற்படும் பிரச்னைகளை உடனுக்குடன் சரிசெய்யும் வகையில் பராமரிப்பு ரயில் பெட்டி ஒன்று நவீன உபகரணங்களுடன் எந்நேரமும் தயார் நிலையில் இருக்கும்.

May 24, 2024

ராஜபாளையம் அருகே தேவதானத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம், கோவிலூர், சேத்தூர் பகுதியில் உள்ள விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் என்றுகோரிக்கை விடுத்தனர்.  இதுதொடர்பாக மக்களின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவின்பேரில் கொள்முதல் நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் விவசாயிகள் முன்னிலையில்தேவதானத்தில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் 300 நெல் மூடைகள், கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையம் மூலம் தேவதானம், கோவிலூர் மற்றும் அதன் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்துநெல்கொள்முதல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்தஅதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

May 23, 2024

ஆறாவது மைல் நீர்தேக்கம் 17 அடியை எட்டியது.

இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்மழை காரணமாக ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இராஜபாளையம் நகராட்சி குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் ஆறாவது மைல் நீர்த்தேக்கம் மலைப்பகுதியில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் 17 அடியை எட்டி உள்ளது. இதனால் நகராட்சி நிர்வாகத்தினர், மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 14 15

AD's



More News