நேரம் : காலை 10.00 மணி - இரவு 9.30 மணி விற்பனை தேதி : 16.07.2025 - 30.07.2025ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அனைத்து ஆடைகளும்1 கிலோ: ரூ.999/- மட்டுமே, ஆண்கள் : டி.சர்ட், சர்ட், பேண்ட், ஜீன்ஸ், டிராக் பேண்ட், சார்ட்ஸ்பெண்கள் : வெஸ்டன் டாப், குர்தி, பிளாட்டோ பேண்ட், ஜீன்ஸ், P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு ஞாபகார்த்த திருமண மண்டபம்526-E2, தென்காசி ரோடு, இராஜபாளையம் - 626 117செல்: 63692 97427, 6369060032.
இக்கோயிலில் ஆனி பெருந்திருவிழா ஜூன் 30ல் கொடியேற்றத்துடன்,10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினசரி சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலாநடந்ததுவிழாவின் தொடர்ச்சியாக ஜூலை6ல்அஞ்சல் நாயகி மாயூரநாத சுவாமி திருக்கல்யாணம் நடந்தது.தேரோட்டம் நேற்று காலை10:30 க்குதொடங்கியது.சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள ,மாயூரநாத சுவாமி பிரியாவிடை உடன்பெரிய தேரிலும், அஞ்சல் நாயகி அம்மன்எழுந்தருவிய சிறிய தேரை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்தனர் . ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம்பிடித்து இழுத்தனர்.பக்தர்கள் ராஜபாளையம் டி.எஸ்.பி பஸீனா பிவி தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜேஷ், தக்கார் சர்க்கரை அம்மாள் தலைமையில் செய்திருந்தனர் .
நேற்று காலை கொடியேற்றத்துடன் ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயில் ஆனிப்பெருந் திருவிழா தொடங்கியது. ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயில் ,ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஆண்டு தோறும் இந்த கோயிலில் ஆனி மாதத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம், ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் நடைபெறும். JUNE 30 காலை 9:00 மணிக்கு இந்த ஆண்டு திருவிழா துவங்கியது. முன்னதாக அஞ்சல் நாயகி மாயூரநாத சுவாமிக்கு அபிஷேகம்,. கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடந்தது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் தினசரி சிறப்பு அலங்காரத்தில் மாலையில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது.ஜூலை 6ல் திருக்கல்யாணம் ,ஜூலை 8 காலை 9:00 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது.ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜேஷ் தலைமையில் கோயில் நிர்வாகத்தினர் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
ராஜபாளையம் நகர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மாயூரநாத சுவாமி கோவில், கருப்பஞானியார் கோவில், அருணாச்சலேசுவரர் கோவில், அம்பலப்புளி பஜார் பகுதியில் உள்ள குருசாமி கோவில், சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ள பறவை அன்னம் காத்தருளியசாமி கோவில், மதுரை சாலையில் உள்ள தாரண்யா நந்தீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் பிரதோஷத்தை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நந்தீஸ்வரருக்கு மஞ்சள், தேன், இளநீர், பால், தயிர், எலுமிச்சை, கரும்புச்சாறு, பன்னீர், சந்தனம் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதேபோல சேத்தூர் திருக்கண்ணிஸ்வரர் கோவில், சொக்கநாதன்புத்தூர், தவநந்திகண்டீஸ்வரர் கோவில், தேவதானம் நச்சாடை தவிர்த்த ருளிய சுவாமி கோவில், வாழவந்தாள்புரம் கிராமத்தில் மன்மத ராஜலிங்கேஸ்வரர் கோவில், வடகரை கிராமத்தில் சங்கிலி சித்தன் அய்யனார் கோவிலில் உள்ள நந்தீஸ்வரர் சுவாமி. தெற்கு வெங்கநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோவில், சோழபுரம் விக்கிரம பாண்டீஸ்வரர் கோவில், அயன் கொல்லங்கொண்டான் வீரபாண்டீஸ்வரர் கோவில், இளந்திரை கொண்டான் காலாஹஸ்தீஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில் களில் பிரதோஷம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ராஜபாளையம் எ.கா.த தர்மராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான கூடை பந்து போட்டிகள் மின்னொளி போட்ட களாக நடைபெறுகிறது.கும்பகோணம், துாத்துக்குடி, திண்டுக்கல், சேலம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவிகள், பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.JUNE 20 - 22 ,காலை, மாலை மூன்று நாட்கள் நடைபெறும் போட்டிகள் லீக், புள்ளி அடிப்படையில் நடைபெறுகின்றன. பள்ளியின் மேனேஜிங் டிரஸ்டி கிருஷ்ணம ராஜு தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை செண்பகவள்ளி வரவேற்றார். ராஜபாளையம் டி.எஸ்.பி., பஸினா பீவி போட்டிகளை வைத்தார். துவக்கி வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பை, சான்றிதழ், ரொக்க பரிசு வழங்கப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் வைத்திய நாத சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம் நேற்றிரவு நடந்தது. நேற்று இரவு 7:00 மணிக்கு மேல் திருக்கல்யாண மேடையில் எழுந்தருளிய வைத்தியநாத சுவாமி, சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து திருக்கல்யாண வைபவத்தை பட்டர்கள் நடத்தினர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. நாளை (ஜூன் 8)காலை 8:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
ராஜபாளையம் ரயில் நிலையத்தில் அம்ரித் ஸ்டே ஷன்திட்டத்தில் ரூ.11.70கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத்ஸ்ரீ வத்ஸவா நேற்று மாலை ஆய்வு செய்தார்." ரயில்வே சார்பில் சுரங்கப்பாதை பணிகள் முடிந்துவிட்டது. இவ்விஷயத்தில் மாநில அரசின் இடப்பிரச்சனை காரணமாக கிடப்பில் உள்ளது. ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் முதல் நடைமேடை போதிய அகலம் இல்லாததால் மலையடிப்பட்டி ரோடுவரை நீட்டிக்க முடியவில்லை. இரண்டா வது பிளாட்பார்ம் மேற் கூரை பணிகள் விரைவில் தொடங்கப்படும். பார்க்கிங் பணிகள் முடிந்துள்ளதால் ஒவ்வொன்றாக " மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கூறினார்.
ராஜபாளையத்தை அடுத்து தேவதானம் சாஸ்தா கோயில் நீர்த்தேக் கத்தை அடிப்படையாகக் கொண்டு நகர குளம், பெரியகுளம், வாண்டையார் குளம், சேர்வராயன்குளம் உள்ளிட்ட பாசன பகுதியில் மூலம்3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நெல் பாசன விவசாயம் நடை பெறுகிறது. தற்போது2ம் போக சாகுபடிக்கான அறு வடை தீவிரமடைந்து வந்த நிலையில் அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இப்பகுதியில் நான்கு இடங்களில் திறக்கப்பட்டன.ராஜபாளையம் சுற்று பகுதியில் தொடர்ந்து பெய்து வந்த சாரல் மழையால் அறுவடை பணிகள் முடங்கி இருந்த நிலையில் மீண்டும் துவங்கியது. அறுவடை இயந்திரம் வாடகை குறைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் அறுவடை பணிகள் மீண்டும் துவங்கியது. மதுரை, சோழ வந்தான், டெல்டா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் இயந்திரங்கள் குவிந்து வருவதால் ஒரு மணி நேரம் அறுவடைக்கான வாடகை பெல்ட் வண்டிக்கு கடந்த அறுவடையை விட ரூ.500 குறைந்து2,500ம், டயர் வண்டிக்கு2 ஆயிரத்தில் இருந்து,1,700க்கு- குறைந்துள்ளது.மணிக்கு ரூ.500 வரை மீதமாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இத னால் அய்யனார் கோவில், சாஸ்தா கோவில் மலை பகு திகளுக்குள் சுற்றுலா பயணிகள், பக்தர்கள், விவசாயிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித் துள்ளது.மேலும் அருவிகளிலும் நீர்வரத்து உள்ளதால் வனப் பகு திக்குள் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல நேற்றும் நகர் பகுதிகளிலும் மற்றும் சத்திரப்பட்டி, அய்ய னாபுரம், சேத்தூர், தளவாய்புரம், முகவூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன் புத்தூர் பகுதிகளிலும் சாரல் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
ராஜபாளையம் நகராட்சியில் 2.90 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட பழைய பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா நடந்தது.1969ல் கட்டப்பட்டு பழுதடைந்த நிலையில் காணப்பட்ட பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி 2023ல் தொடங்கப்பட்டது. 23 கடைகள், 2 உணவகங்கள், போலீஸ் கட்டுப்பாட்டு அறை என கட்டி புதுப்பிக்கப்பட்ட பழைய பஸ் ஸ்டாண்டை வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.தென்காசி எம் .பி., ராணி, எம்.எல்.ஏ., தங்க பாண்டியன், நகராட்சி தலைவர் பவித்ரா, சீர் மரபினர் வாரிய துணை தலைவர் ராசா அருண் மொழி முன்னிலை வகித்தனர்.