25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமீபத்திய நிகழ்வுகள்

Aug 02, 2024

இராஜபாளையத்தில் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு

இராஜபாளையம் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலை வருடக்கணக்கில் குண்டும் குழியுமாக காணப்பட்டு வருவதற்கு தீர்வு காணும் வகையில் ராஜபாளையத்தில் சீரமைக்கும் பணி தொடங்கியதால் வாகன ஒட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.இராஜபாளையம் வழியே செல்லும் திருமங்கலம் ,கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இரட்டை கண்மாய் முதல் ஜானகிராம் மில் வரை குண்டும் குழியுமாக சேதம் அடைந்து காணப்பட்டது. ஏற்கனவே பாதாள சாக்கடை பணிகளுக்காக நகர்ப்பகுதி நடுவே செல்லும் இந்த ரோட்டில் தோண்டப்பட்டு முறையாக மூடாமல் இருந்ததால் பல்வேறு விபத்துக்களுக்கு காரணமாக இருந்து வந்தது.இதுகுறித்து பல்வேறு கட்சியினர், சமூக அமைப்புகள், தொழில் வர்த்தக சங்கம் சார்பில் கடையடைப்பு ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான பேராட்டம் முன்னெடுப்பின் பலனாக நான்கு வழிச்சாலை இல்லாத நெடுஞ்சாலையில் சீரமைக்கும் பணி இராஜபாளையத்தில் தொடங்கியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெறும் இப்ப பணியால் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்த நீண்டகால பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

Aug 02, 2024

மக்களுக்கு இடையூறாக உள்ள தெரு நாய் பிரச்சனை,ரோட்டோர மீன் கடைகள்

இராஜபாளையம் நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் பவித்ரா தலைமையில் நடந்தது. துணை தலைவர் கல்பனா, கமிஷனர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். பஸ் ஸ்டாண்ட் இணைப்பு ரோட்டில் இரு புறமும் உள்ள ரோட்டோர மீன் கடைகள் மக்களுக்கு இடையூறாக உள்ளதாக இராஜபாளையம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் குற்றம் சாட்டினர். தெரு நாய் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இராஜபாளையம் மாஸ்டர் பிளான் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இல்லை இது குறித்து கவுண்சிலர்களுக்கு விரிவான விளக்கம் அளிக்க வேண்டும். 42வது வார்டில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. தெருவிளக்குகள் இல்லாததால் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. பவித்ரா நகராட்சி தலைவர் இது குறித்து ஏற்கனவே கலெக்டரிடம் தெரிவித்துள்ளேன். விரைவில் கவுன்சிலர்களுக்கு மாஸ்டர் பிளான் திட்டம் குறித்து விவரிக்க ஏற்பாடு செய்யப்படும். சீனிவாசன் 42வது வார்டில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. தெருவிளக்குகள் இல்லாததால் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. பவித்ரா சாலை, மின் விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் .

Jul 31, 2024

NIT-யில் வீட்டு வேலை பார்க்கும் பெண்ணின் மகள் ஆர்த்தி  தேர்வு

 விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஒய்யம்புலி தெருவை சேர்ந்த பாக்கியராஜ் – கவிதா தம்பதியின் மகள் மாற்றுத்திறனாளியான ஆர்த்தி சேத்தூர் சேவுகபாண்டியன் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் பயின்று அங்குள்ள ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் ஜேஇஇ தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.ராஜபாளையம் வீட்டு வேலை பார்க்கும் பெண்ணின் மகளும் மாற்றுத்திறனாளி மாணவியுமான ஆர்த்தி அரசு  பள்ளியில் பயின்றஜேஇஇ (JEE) தேர்வில் 58,52% மதிப்பெண்களுடன் வெற்றிபெற்று திருச்சி NIT கல்லூரியில் உற்பத்தி பொறியாளராக படிக்கதேர்வாகியுள்ளார். ‘‘ஆர்த்தியின் தாத்தா சிறு வயது முதல் அவரை பராமரித்து ஊக்கமளித்து வந்தார். அவரது ஆசையை ஆர்த்தி நிறைவேற்றியுள்ளார். மாற்றுத்திறனாளி என்ற குறைபாடு அவருக்குத் தெரியாத அளவிற்கு கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டேன். நான் பட்ட கஷ்டத்திற்கு எனது மகள் ஆர்த்தி பெற்றுள்ள வெற்றி மிகுந்த பெரும் மகிழ்ச்சியை தருகிறது’’ என்று ஆர்த்தியின் தாய் கவிதா  கூறியுள்ளார்.மாணவி ஆர்த்தி மாற்றுத்திறனாளியாக பல்வேறு கஷ்டங்களை சந்தித்த எனக்கு, ‘‘நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றதே எனது வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது. இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளது., யுபிஎஸ்சி தேர்வு எழுதி கலெக்டராக வேண்டும் என்பதே எனது ஆசை’’ என்றார்.

Jul 26, 2024

இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில்நுகர்வோர் மன்றம் துவக்கம்

குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்தது. முதல்வர் ஐமுனா வரவேற்றார். மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அனிதா பேசினார். நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநில தலைவர் சுப்பிரமணியன் நுகர்வோர் உரிமைகள் புகார் எண் குறித்து விளக்கினார்.

Jul 20, 2024

ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

ராஜபாளையம் போக்கு வரத்து போலீஸ் சார்பில் டூவீலரில் செல்வோர்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ,காந்திசிலை ரவுண்டானா அருகே நெடுஞ்சாலை துறை இன்ஸ்பெக்டர் நவாஸ்தீன்  தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் ஹெல் மெட் அணியாமல் செல்வதால் ஏற்படும் சிக்கல்,  பாதிப்புகள், ஹெல்மெட் அணிவதால் விபத்தின் போது ஏற்படும் நன்மைகள் பற்றி விளக்கம் அளித்தார். எஸ்.ஐ கார்த்திகேயன் போக்குவரத்து  போலீசார் கலந்து கொண்டனர்.

Jul 16, 2024

இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மழைக்குப்பின் சாரல் தொடர்ந்து  பெய்து வருவதால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழலுக்கு மாறி உள்ளது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Jul 12, 2024

காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு.

காலை உணவு திட்டத்திற்கான ஆயத்த பணிகளை செய்ய அரசு எவ்வித நிதியும் ஒதுக்காமல் பணியில் இருக்கும் ஆசிரியர்களிடம் திட்டத்திற்கான பணிகளை செய்யக்கோரி கடந்த இரண்டு வாரங்களாக மிரட்டுகின்றனர்.இதனால் காலை உணவு திட்டம் ஆசிரியர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.  பல்வேறு பணிகள் காரணமாக கடும் மன அழுத்தத்தில் உள்ள நிலையில் ,தற்போது திட்டத்தை நடைமுறைப்படுத்த ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்கின்றனர். எனவே அரசு பள்ளிகளுக்கும் அனைத்து பொருட்களையும் அரசு இலவசமாக தர வேண்டும். என்றார்.காலை உணவு திட்டம் என்ற பெயரில் தினமும் பள்ளி ஆசிரியர்களை துன்புறுத்துவதாக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர். என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.

Jul 08, 2024

சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம்

இராஜபாளையம் நகர் பகுதியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைக்கு செல்லும் முடங்கியார் மெயின் ரோட்டில் ஏற்கனவே வளர்ந்திருந்த மரங்கள் சாலை அகலப்படுத்தும் பணிகாரணமாக அகற்றப்பட்டது. இப்பகுதிகளில் தற்போது நடப்படும் மரக்கன்றுகளை பேணி காத்து ,பயன்படும் மரங்களாக வளர அமைப்பின் உறுப்பினர்கள் செயல்படுகின்றனர்.ரோட்டின் ஓரம் வைக்கப்பட்டுள்ள மகிழம், புங்கை வேம்பு, நாவல் மரக்கன்றுகளுக்கு கால் நடைகள் சேதப்படுத்தவாறும் வெயில் படும் படியுமான சுற்று வேலி  அமைத்து தகுந்த இடைவெளிகளில், டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றி வளர்க்கின்றனர்.மாயூரநாதர் கோயில் சுற்றுச்சாலையில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான மரக்கன்றுகள் நட்டு பாதுகாக்கின்றனர். பச்சை மடம் ஊரணி நீர்நிலை பாதுகாக்கவும், முயற்சி எடுப்பதோடு நகரின் பல்வேறு தெருக்களில் பசுமை அதிகரிக்க காரணமாக இருந்து வருகின்றனர். அரசு இடங்கள் ரோட்டோரம் என இவர்கள் வளர்த்து பராமரிக்க, மரக்கன்றுகள் தற்போது மரங்களாக மாறி பலன் தந்து வருகிறது. பரியாவரன், சாயி பசுமை இயக்கத்தை இராஜபாளையம் டைம்ஸ் சார்பாக பாராட்டி வாழ்த்துகிறோம்.போலிசாருக்கு பாராட்டுகொலை வழக்கில் துப்பு துலக்கி திறமையாக செயல்பட்டு ,குற்றவாளிகளை கைது செய்த இராஜபாளையம் காவல் துறை அதிகாரிகளை தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் சென்னைக்கு நேரில் அழைத்து பாராட்டினார்.பிப்ரவரி 24-ல் முருகானந்த்  தம்பதியை கட்டிபோட்டு ரொக்க பணத்தை கொள்ளையடித்தனர். இந்நிலையில் கடந்த மாதம் இராஜபாளையம் புது பஸ்  ஸ்டான்ட் அருகே சந்தேக நபரை பிடித்து விசாரணையில், மதுரையை சேர்ந்த மூர்த்தி என்பவர் சம்பவத்திற்கு மூளையாக இருந்து மாநிலத்தில் 45-க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இராஜபாளையம் காவல் துறை அதிகாரிகளை இராஜபாளையம் டைம்ஸ் சார்பாக பாராட்டி வாழ்த்துகிறோம்

Jul 05, 2024

இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம்

இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் நகராட்சி குடிநீர் தேக்கம் பின்புறம் யானைகள் புகுந்து மாமரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த சில நாட்களாக வன பகுதியில் இருந்து வரும் யானை கூட்டம், மா மரங்களை தொடர்ந்து ஒடித்து சேதப்படுத்தி வருகிறது. ஏற்கனவே இப்பகுதியில் மாம்பழ விளைச்சல் ஏமாற்றியுள்ள நிலையில், மாமரங்களை யானைகள் அழித்து வருவது விவசாயிகளை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

Jul 03, 2024

ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப்

ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் இன்றைய ஆரம்ப தினத்தில் மருத்துவர் தினமும் இணைகின்றது. RTN இதயம் V.R. முத்து அவர்களின் “ரோட்டரி கர்மவீரர் காமராஜர் இதயம் பாதுகாப்பு ஊர்தி ”நம் நகருக்கு முதன் முதலில் வருகை தந்து இதயப் பிரச்சனை உள்ளவர்கள் CHECK UP செய்து கொள்ள உள்ளவர்கள், அவர்களுடைய மருத்துவ சோதனையை இன்று ஆரம்பித்துள்ளனர். தற்பொழுது P.A.C.R. நினைவு நூற்றாண்டு மண்டபத்தில் சுதர்சன் கார்டனில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சங்கத்தினரின்  சேவையை ராஜபாளையம் டைம்ஸ் சார்பில் பாராட்டி மகிழ்கிறோம். இவர்களுடைய சேவை தொடர்ந்து சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 14 15

AD's



More News