25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


சமீபத்திய நிகழ்வுகள்

Sep 03, 2025

ராஜபாளையத்தில் மக்காச்சோளம் பயிர்கள் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி ..

 ஆயிரக்கணக்கான ஏக்கரில், ராஜபாளையம் அருகே கோபாலபுரம், வடகரை, நரிக்குளம், கலங்காபேரிபுதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரியாக மக்காச் சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.பயிரிடப்பட்ட நாளில் இருந்து போதுமான மழை இல்லாமல் இருந்தது. தற்போது கிணறுகளில் போதுமான அளவில் உள்ள தண்ணீரை மக்காச்சோளத்திற்கு பாய்ச்சி வருகின்றனர். இதன் காரணமாக பயிர்கள் நன்கு விளைந்து ,பல இடங்களில் மக்காச்சோளம் கதிர் வீட்டு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. சில இடங்களில் காட்டுப்பன்றிகள் தாக்குதல் இருந்தாலும் பயிர்கள் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Aug 30, 2025

பள்ளி ஆண்டு விழா , முத்தமிழ் மன்ற விழா.

ராஜபாளையம் நவபாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வித்யா பவன் நர்சரி பள்ளிகளின் ஆண்டு விழா நடந்தது. ராஜபாளையம் எ.கா.த தர்மராஜா மேல்நிலைப் பள்ளியில் முத்தமிழ் மன்ற விழா நடந்தது.

Aug 27, 2025

விநாயகர் சதுர்த்தி பூஜை

சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோவில், அருள்மிகு சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேச்வரர் திருக்கோவில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ பர்வதவர்த்தினீ ஸமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வரஸ்வாமி திருக்கோவில், இராஜபாளையம்.விநாயகர் சதுர்த்தி பூஜை.நிகழும் மங்களகரமான விஸ்வாவஸு வருடம் ஆவணி மாதம் 11ம் தேதி 27.08.2025 புதன்கிழமைஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதீச்வர அனந்த ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகள் அவர்களின் பரமானுக்ரஹத்துடன் விநாயகர் சதுர்த்தி பூஜை கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெற உள்ளது.நிகழ்ச்சி நிரல்காலை 6.00 மணி-அனுக்ஞை, சங்கல்பம், விக்னேஸ்வரபூஜை, புண்யாகவாசனம் கணபதி ஹோமம்.காலை 7.15 மணி-பூர்ணாஹுதி, தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம்காலை 08.35 மணி-தீபாராதனை ப்ரசாதம்.இப்படிக்குபி.ஆர். வெங்கட்ராம ராஜாசேர்மன் - ராம்கோ குரூப். 

Aug 22, 2025

நெடுஞ்சாலை துறை சார்பில் சங்கரன் கோவில் முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரையி லான 1.4 கி.மீ., துாரத்தை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராக விரிவாக்கம் செய்ய ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு.

ராஜபாளையம் சங்கரன்கோவில்  முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரையிலான சாலை விரிவாக்க பணிக்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் சாலையோர மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து சப்கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.சங்கரன்கோவில் முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரை ரோட்டில் அடிக்கடி விபத்து உயிர் பலி ராஜபாளையம் திருநெல்வேலி மாநில நெடுஞ்சாலையில் ஏற்பட்டு வருகிறது. இதில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய்  உடைப்பு, பாதாள சாக்கடை குழாய் களில் ஏற்படும் கசிவு போன்றவைகளால் சாலை சேதம் ஆகி காணப்படுகிறது.சங்கரன் கோவில் முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரையிலான 1.4 கி.மீ., துாரத்தை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராக புதிதாக சாலைப் பணிகளை மேற்கொள்வதுடன் சாலையை விரிவாக்கம் செய்ய பரிந்துரையின் பேரில் நெடுஞ்சாலை துறை சார்பில் விரிவாக்கம் செய்ய ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Aug 19, 2025

இருதயம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மருத்துவ முகாம்.

ராஜபாளையம் ஜவுளி வர்த்தகர்கள் சங்கம், மதுரை அப்பல்லோ மருத்துவ மனை சார்பில் இருதயம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மருத்துவ முகாம் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு ஜவுளி வர்த்தக சங்க தலைவர் குமார் தலைமை வகித்தார். செயலாளர் பாலகுமார் வரவேற்றார்.டிரஸ்டிகள் சுப்பிரமணிய ராஜா, செங்குட்டுவன் முன்னிலை வகித்தனர். ராஜபாளையம் மூத்தோர் நல சங்க நிர்வாகிகள், ஜவுளி வர்த்தக சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.முகாமில், ஹீமோகுளோபின், இ.சி.ஜி, ரத்த அழுத்தம்,சர்க்கரை அளவு, உள்ளிட்ட மருத்துவபரிசோதனை செய்யப்பட்டு பரிந்துரைகள் வழங்கப்பட்டன.200க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். 

Aug 19, 2025

சதுர்த்தி விழாவை முன்னிட்டு ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் ,விநாயகர் சிலைகள் பந்தலுக்கு கொண்டுவரப்பட்டன.

 விநாயகர் சதுர்த்தி விழா விற்காக மாயூரநாதசுவாமி கோயில் முன்பு ராஜபாளையம் தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் சிலைகள் தயாரிப்பு பணி கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. ராஜபாளையம் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் முன்பு உள்ள அலங்கார பந்தலில் நேற்று மாலை 5.30 மணிக்கு மங்கள கணபதி, விஜய கணபதி, மேல் பொருள் அருளும் கணபதி,  நர்த்தன கணபதி , ஆனந்த கணபதி, சயன கணபதி ஆகிய விநாயகர் சிலைகள் மக்கள் பார்வைக்காக டிராக்டர்கள் மூலம் கொண்டு வரப்பட்டது.

Aug 05, 2025

"ஆடிப்பட்டம் " விவசாய பணிகள் ராஜபாளையம் பகுதியில் தொடங்கின

சேத்தூர் பிர்க்காவில் உள்ள நகரகுளம், வாண்டையார்குளம், பெரியகுளம், வாழவந்தான் கண்மாய், நச்சாடபேரி ஆகிய கண்மாய் பகுதிகளில் தக்கை பூண்டு செடி விதைப்பதற்கு பணிகள் நடந்து வருகிறது. தற்போது கண்மாய்கள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் வற்றியுள்ளன. இதனால் விவசாயிகள் நெற்பயிர் நடுவதற்கு நிலத்தடி நீர்மட்டத்தை நம்பி பல்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் வருகிற புரட்டாசி மாதம் நடவு பணிகளுக்காக தற்போது விவசாய நிலத்தில் கொழிஞ்சி செடிகளை போட்டு உழவு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு விவசாய பணிகள் நடைபெறுகிறதுவிவசாயிகளுக்கு தட்டுப் பாடு இல்லாமல் உரங்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தற்போது தெற்கு தேவதானம், வடக்கு தேவதானம், கோவிலூர் ஆகிய பகுதியில் நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் உழவு பணிகளை தொடங்கி உள்ளனர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் கடந்த ஆண்டு பெய்த மழையால் பல்வேறு கண்மாய்கள் நிறைந்தன. இதனால் ஏராளமான விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டனர். முதல் போக அறுவடை பணிகள் முடிந்த நிலையில் தற்போது விவசாய பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது. கால நடவு பணிகளை ஆரம்பிக்க வயல்களை சீரமைக்கும் பணி நிலத்தை உழுது சமன் செய்யும் பணி போன்றவை நடந்து வருகின்றன.மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள தெற்கு தேவதானம், வடக்குதேவதானம், கோவிலூர், சாஸ்தா கோவில் பகுதியில் ஆடிப்பட்டம் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

Aug 02, 2025

ராஜபாளையம் பகுதியில் பலத்த காற்று தென்னை, வாழை மரங்கள் பாதிப்பு , மின் இணைப்பு துண்டிப்பு .

மலைப்பகுதியில் இருந்து பலத்த சூறைக்காற்று சேத்துார், தேவதானம் ராஜபாளையம் அய்யனார் கோயில் அருகே பல பகுதிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜபாளையம், சேத்துார், தேவதானம், கோவிலுார் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது.பல இடங்களிலும் முதிர்ந்த மரங்கள் பக்க வாட்டு கிளைகள் உடைந் துள்ளதுடன், வாழை விவசாயிகள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளனர். தென்னை மரங்களில் இளம் மட்டைகள் முறிந்தும், இளநீர் காய்கள், மா மரங்களில் எஞ்சியுள்ள காய்கள் காற்றை எதிர்கொள்ள முடியாமல் சேதமடைந்துள்ளன.விவசாய பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து மின் கம்பிகள் அறுந்து இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.ஆட்கள் பற்றாக்குறையை காரணம் கூறி மின் வாரியத்தினரும் முன்னுரிமை பகுதியில் பணிகளை செய்து வருவதால் தாமதம் ஏற்படுகிறது. தேங்காய்க்கு நல்ல விலை இருந்தும் இளநீர் பருவத்தில் உதிர்ந்ததால் தென்னை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதுராஜபாளையம் சுற்று வட்டாரத்தில் கடந்த மூன்று நாட்களாக அடிக்கும் பலத்த காற்றில் தென்னை சாகுபடி பயிர்கள் பாதிப்பிற்கு உள்ளானதுடன் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிப்பிற்கு உள்ளானதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

Jul 21, 2025

ராஜபாளையம் தென்றல் நகர் பகுதிக்கு 14 ஆண்டுகளுக்கு பின் மினி பஸ் வசதி தொடங்கியுள்ளது.

ஆட்டோவை மட்டும் நம்பி, அதிக கட்டணத்துடன் தனியார் வாகனம், இப்பகுதியில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை, சென்று வந்தனர். பல்வேறு அரசியல் காரணங்களால் 2011 வரை இயங்கி வந்த மினி பஸ் தடைப்பட்டது.மக்கள் பயன்பாட்டிற்காக மினி பஸ் இயக்க தொடர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, பழைய பஸ் ஸ்டாண்ட், பஞ்சு மார்க்கெட், தாலுகா அலுவலகம் வழியாக சமத்துவபுரம் மற்றும் ராஜூக்கள் கல்லுாரிக்கு மினி பஸ் சேவை இயங்க தொடங்கியுள்ளது.ரயில்வே ஸ்டேஷனில் காலை 5:30 மணிக்கு துறையின் சேவை இரவு 8:00 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு தொடர்ச்சியாக இயங்க உள்ளது. இதனால் தென்றல் நகர் ரோட்டில் குடியிருந்து வரும் 20க்கும் அதிகமான கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், நோயாளிகள், மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் காலை முதல் இரவு வரை தொடர்ச்சியான சேவை பெற வழி கிடைத்துள்ளது. 

Jul 19, 2025

ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் ஜூனியர் சப்ஜூனியர் கபடி போட்டிகள். மூன்று நாட்கள் நடைபெறும்.

போட்டிகள் ராஜபாளையம் ஊர்க்காவல் படை மைதானத்தில் தொடங்கியது.மாவட்ட அளவிலான கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் ராஜபாளையம் பி.ஏ. சி.ஆர் நினைவு விளையாட்டு மன்றம், விருதுநகர் மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் சார்பில் தொடங்கியது. ராஜபாளையம் டி.எஸ்.பி., பஸினா பீவி போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் சிறுவர் சிறுமிகள், பள்ளிகள், கிளப் என 60 அணிகளை சேர்ந்த 600 க்கும் ஏற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ.43 ஆயிரம் பரிசு கேடயத்துடன் சிறந்த வீரர்கள் மாநில அளவு போட்டிகளுக்கு தேர்வு பெறுவர்.விருதுநகர் மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர், சுப்ரமணிய ராஜா தலைமையில் ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர். 

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 19 20

AD's



More News