25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சமீபத்திய நிகழ்வுகள்

Jan 13, 2026

இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம்.

குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தரங்கம்  இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, விருதுநகர் மாவட்டம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சைமா அறக்கட்டளை,  ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்து மற்றும் குத்துவிளக்கு ஏற்றுதலுடன் தொடங்கியது.வரவேற்புரையை முனைவர் திருமதி உமா சங்கரேஸ்வரி, உதவிப் பேராசிரியர், வேதியியல் துறை, ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வழங்கினார்.நிகழ்ச்சிக்கு முனைவர் திரு.  ராமகிருஷ்ணன், முதல்வர், ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அவர் தனது உரையில், குழந்தை திருமணம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக உள்ளதாகவும், இளைஞர்கள் இதை எதிர்க்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.இதனைத் தொடர்ந்து “குழந்தை திருமணத்தை எதிர்த்து நிற்போம்” என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டு, விழிப்புணர்வு போஸ்டர் வெளியிடப்பட்டது.டாக்டர் திருமதி இ. ராதா, ராதா மருத்துவமனை, ராஜபாளையம் மற்றும் துணை ஆளுநர், ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் அவர்கள், “குழந்தை திருமணத்தை தடுத்திட சமூகத்தின் பங்கு” என்ற தலைப்பில் உரையாற்றி, குழந்தை திருமணத்தின் உடல், மனநல பாதிப்புகள் குறித்து விளக்கினார்.திரு. செல்வ அழகு, உறுப்பினர், குழந்தைகள் நலக்குழு (CWC), விருதுநகர் அவர்கள், குழந்தை திருமண சம்பவங்களில் புகார் அளிக்கும் வழிமுறைகள், சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் உதவி எண்கள் குறித்து விளக்கினார்.இதனைத் தொடர்ந்து திருமதி கயல்விழி, தலைமைக் காவலர், ராஜபாளையம் தெற்கு காவல் நிலையம் அவர்கள் காவல்துறையின் பங்கு குறித்து எடுத்துரைத்தார்.வழக்கறிஞர் பக்கத்சிங், இராஜபாளையம் நீதிமன்றம் அவர்கள், குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் அதன் சட்ட விளைவுகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்.வழக்கறிஞர் பா. ராஜகோபால், இயக்குனர், சைமா அறக்கட்டளை, ஸ்ரீவில்லிபுத்தூர் அவர்கள், குழந்தை திருமண தடுப்பு யுக்திகள் மற்றும் தொடர் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டினார்.நிகழ்ச்சியின் நன்றியுரையை செல்வி மு. வேல்மயில், இளங்கலைத் தமிழ் இலக்கியம் மாணவி வழங்கினார்.இந்நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.இக்கருத்தரங்கத்தில் 600 க்கும் அதிகமான கல்லூரி மாணவிகள் பங்கேற்று, குழந்தை திருமணத்தை தடுப்பதில் தங்களது பங்கை உறுதியாக ஏற்கும் வகையில் விழிப்புணர்வு பெற்றனர்.

Jan 12, 2026

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்ற பாசுரப்படி ஆண்டு தோறும் மார்கழி மாதம் 27ஆம் நாள் அன்று ராமானுஜர் சார்பில் பெருமாளுக்கு அக்கார அடிசில் சமர்ப்பித்து ஆண்டாளின் பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையில் கூடாரவல்லி உற்ஸவம் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜையின்போது 100 வெள்ளி கிண்ணங்களில் அக்கார அடிசில் சமர்ப்பிக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர். கூடாரவல்லி உற்ஸவத்தை முன்னிட்டு திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் 100 கிண்ணங்களில் அக்கார அடிசில் பெருமாளுக்கு படைக்கப்பட்டது.ராஜபாளையம் ரோட்டரி சங்கம், சக்தி கண் மருத்துவமனை சார்பில் போலீசார், அவர்களது குடும்பத்தினருக்கு பொது மருத்துவ முகாம் நடந்தது.டி.எஸ்.பி., பஸினா பீவி ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் நடந்த முகாமினை பரிசோதனை செய்து துவக்கினார். டாக்டர்கள் ராஜேஷ், ராதா தலைமையிலான மருத்துவ குழுவினர் போலீசார், குடும்பத்தினருக்கு பொது, கண், நுரையீரல், குடல் சம்பந்தமான அடிப்படை பரிசோதனைகள் செய்து மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை மருந்துகள் வழங்கினர்.இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், போலீசார் என 500க்கும் அதிகமானோர் முகாமில் பங் கேற்றனர். ரோட்டரி சங்கதலைவர் ஸ்ரீமன் ராமச்சந்திர ராஜா, செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Jan 05, 2026

இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர்.

 மனிதனின்  உயிர்வாழ்வதற்கு ஆக்சிஜன் தேவை . நமக்கு துாய்மையான ஆக்சிஜனை தருவதுடன் நம்மால் கழிவாக வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடை கிரகித்து பாதுகாக்கும்  என்பது தெரிந்தும், இயற்கையை மீறி ,மரங்களை பல்வேறு தேவைகளுக்காக அழித்து வருகிறோம்.மனிதனுக்கு மட்டுமின்றி, அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு, இருப்பிடமாக மரங்கள் பாதுகாக்கிறது .இயற்கை சம நிலை , நோயற்ற வாழ்விற்கு, சுற்றுச்சூழலை பாதுகாக்க ,பெருகிவரும் நவீன தொழிற்சாலைகள், புதுப் புது வாகனங்கள், வெளியேற்றப்படும் குப்பைகளால் உருவாகும் நச்சு கழிவுகள் காற்று மாசுகள் அனைத்தையும் பசுமையான மரங்கள் கட்டுப்படுத்தி வருகிறது. வரும் சந்ததியினருக்கு காற்று மாசுகளை குறைத்து நுரையீரல்சம்பந்தமான நோயிலிருந்து பாதுகாக்க வேண்டும் எனில் நம்மால் ஆன சுலபமான காரியம் மரக்கன்று நட்டு பராமரிப்பது மட்டுமே. கண்மாய் கரைகளில் பனை விதைகளை தொடர் நடவு செய்வதும், மெயின் ரோட்டின் ஓரம் உள்ள ஊராட்சி தரிசு நிலங்கள் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து சோலையாக மாற்றியும், கீழக்கு ளம் கண்மாய், ராம்கோ நகர் உள்ள ஐந்து தெருக்களிலும்மரங்களைவளர்த்துபாதுகாத்துபசுமையானபகுதியாகவைத்திருக்கின்றனர். ராஜபாளையம் அருகே எஸ். ராமலிங்காபுரத்தில் மத்திய அரசின் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள் ஏற்படுத்தி முன்மாதிரி -யாக இருந்து வருவதால் இப்பகுதியே பசுமையான - மரங்கள் சூழ்ந்த பகுதியாக மாறி உள்ளது.

Jan 02, 2026

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது.

 17 ஆண்டுக்கு பிறகு, உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி, ஆகஸ்டு, செப்டம்பரில் இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. மேலும் டாப்-8 வீரர், வீராங்கனைகள், ஜோடிகள் மட்டுமே பங்கேற்கும் உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் டிசம்பர் 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை சீனாவில் நடக்கிறது.பெண்களுக்கான 20-வது உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் செப்.4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடக்கிறது

Dec 29, 2025

அழகான ஓவிய வகுப்பு

அழகான ஓவிய வகுப்பு (Beautiful Drawing Class)*  இலவச  அறிமுக வகுப்பு : இந்த வகுப்பில்  கலந்து கொள்ள விரும்புவோர் இந்த  *Whatsapp*   குரூப்பில் Join செய்து   https://chat.whatsapp.com/Jyv9gTxb7EeJKy8so79QYH *88259 73094 (Santhiya)*  நம்பருக்கு *Whatsapp* மூலம் உங்கள் பெயர், ஊர் பெயரை அனுப்பி  முன் பதிவு செய்து கொள்ளுங்கள்..ஆர்வம் இருந்தால் போதும். அனைத்து வயதினரும் வகுப்பில் சேரலாம்  .

Dec 27, 2025

கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்.

சிவகாசி, அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரியில் விருதுநகர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சைமா அறக்கட்டளை   இணைந்து மத்திய, மாநில அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டமான "பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்!! "  மூலம்"குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்" ஏற்பாடு செய்திருந்தனர்.கல்லூரியின் முதல்வர் முனைவர்.  அசோக் அவர்கள் துவங்கி வைத்து வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி. திலகம், அவர்கள் சிறப்புரையாற்றினார். மேலும் இந்த கருத்துரங்கில் அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியைச் சார்ந்த 1400 மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களை கல்லூரியின் விரிவுரையாளர் திரு.  சேவர்கொடியோன் அவர்கள் வரவேற்று பேசினார். குழந்தை திருமணத்தை தடுத்திட சமூகத்தின் பங்கு என்ற தலைப்பில் மதுரை மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் திரு.  ரவிச்சந்திரன் அவர்களும், குழந்தை திருமணங்கள், புகார்கள் அளிக்கும் வழிமுறைகள் உதவி எண்கள் என்ற தலைப்பில் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு, உறுப்பினர்திரு. ராஜா சக்திவேல், அவர்களும், குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் சட்ட விளைவுகள் என்ற தலைப்பில் வழக்கறிஞர். திருமதி. பாண்டீஸ்வரி அவர்களும்,குழந்தை திருமண தடுப்பு யுக்திகள் மற்றும் தொடர் செயல்பாடு என்ற தலைப்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் சைமா அறக்கட்டளையின் இயக்குனர்வழக்கறிஞர். ராஜகோபால் அவர்களும் குழந்தை திருமணத்தின் சமூக, கல்வி மற்றும் சட்டப் பாதிப்புகளை விளக்கி, தடுப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்தினர். மேலும் குழந்தை திருமணங்களை தடுக்கும் அரசு நடவடிக்கைகள், புகார் முறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்தும்,  குழந்தை திருமணத்தை தடுத்திட உளவியல் தலையீடுகள் மற்றும் குடும்ப ஆலோசனையின் முக்கியத்துவம்,  குழந்தை திருமணம் தடுத்திட  சட்டப்பூர்வ விளக்கங்களையும்,  தடுப்பதில் மாணவ, மாணவிகளின் பங்கு குறித்தும் எடுத்துரைத்தார்கள். இறுதியாக குழந்தை திருமண தடுப்பு யுக்திகள் மற்றும் தொடர் செயல்பாடுகள் குறித்து விளக்கி, மாணவர்களை சமூக மாற்றத்திற்கான தூதர்களாக உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள். நிகழ்ச்சியில் வந்து கொண்ட அனைவரும் “குழந்தை திருமணத்தை எதிர்த்து நிற்போம்” என்ற உறுதிமொழியை  இணைந்து ஏற்றனர். இறுதியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களையும்,  மாணவ மாணவிகளுக்கும் கல்லூரியில் விரிவுரையாளர் திருமதி நளினா அவர்கள் நன்றி கூறினார்.

Dec 26, 2025

ராஜபாளையத்தில் சீனாவின் அமுர் வல்லுாறு பறவை . பறவை ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள நீர் நிலைகள், ஏரி, குளங்களில் பல கட்டங்களாக பல்வேறு நாடுகளில் இருந்து அரிய வகை பறவைகள், காட்டு பறவைகள் உணவிற்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் முகாமிடும்.ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி, ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் நேச்சர்கிளப் உறுப்பினர்கள், பறவை ஆர்வலர்கள் இச்செயல்களில் ஈடுபட்டு கண்டறிந்து ,அவற்றைப் பதிவு செய்து வருகின்றனர்.சைபீரியா மற்றும் சீனாவில் அதிகம் உள்ளன. கூட்டம் கூட் டமாக இந்தியா மற்றும் அரேபியா கடலை தாண்டி தெற்கு ஆப்பிரிக்காவில் குளிர்காலத்தை கழிக்கின் றன வல்லுாறு குடும்பத்தைச் சேர்ந்த கொன்றுண்ணி பறவை ராஜபாளையத்தில் 10 ஆண் டுகளுக்கு பின் நேச்சர் கிளப்பை சேர்ந்தபறவை ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர்.ஆண் அடர் சாம்பல் நிறத்திலும் தொடைகள் மற்றும் அடிவால் பகுதியில் சிவந்த பழுப்பு நிறத்திலும் கண் வளையம் அழகு பூ மற்றும் பாதங்கள்  சிவந்த ஆரஞ்சு நிலத்திலும் காணப்படும். பெண் இனத்தில் மேல்புறம் அங்கே நிறத்திலும் அடிப் பகுதியில்வெண்மையாக வும் காணப்படும்.அரிய வகையான வல்லுாறு வர்தா புயலுக்குபின்தென்பட்டுள்ளது.நீண்டஆண்டுகளுக்குப்பின் ராஜபாளையத்தில் தென்பட்டுள்ளதற்கு காரணம் ,கடந்த சில ஆண்டுகளாக தொடர் குளிர்ச்சி உள்ளிட்ட கால நிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என்றார். 

Dec 24, 2025

குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்.

சிவகாசி, ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் விருதுநகர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சைமா அறக்கட்டளை   இணைந்து மத்திய, மாநில அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டமான "பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்!! "  மூலம்"குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்" ஏற்பாடு செய்திருந்தனர். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர். முத்துலட்சுமி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.சிறப்புரையில்,திருமதி கி. திலகம், மாவட்ட சமூக நல அலுவலர்,கல்லூரிமுதல்வர், முனைவர். பாலமுருகன் அவர்கள் துவங்கி வைத்து உரையாற்றினாரகள். மேலும் இந்த கருத்துரங்கில் மனநல ஆலோசகர், திருமதி. கெங்கா விஜயராகவன், குழந்தைகள் நலக்குழு, உறுப்பினர் .திருமதி ஜெபா கிறிஸ்டினா,குழந்தை ஆலோசனை உளவியலாளர், திருமதி. ராதிகா ராமன், சிவகாசி ரோட்டரி கிளப் ஆப் ஸ்பார்க்ளர் அமைப்பின் தலைவர் திரு.  ஞானப்பிரகாசம், ஸ்ரீவில்லிபுத்தூர் சைமா அறக்கட்டளையின் இயக்குனர்  வழக்கறிஞர் ராஜகோபால், ஆகியோர் கலந்துகொண்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு கருத்துக்கள் மூலம்  விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். சிறப்பு அழைப்பாளர்கள்  ,குழந்தை திருமணத்தின் சமூக, கல்வி மற்றும் சட்டப் பாதிப்புகளை விளக்கி, தடுப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்தினர். மேலும்குழந்தை திருமணங்களை தடுக்கும் அரசு நடவடிக்கைகள், புகார் முறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்தும்,   குழந்தை திருமணத்தை தடுத்திட உளவியல் தலையீடுகள் மற்றும் குடும்ப ஆலோசனையின் முக்கியத்துவம்,  குழந்தை திருமணம் தடுத்திட  சட்டப்பூர்வ விளக்கங்களையும்,   தடுப்பதில் மாணவ, மாணவிகளின் பங்கு குறித்தும் எடுத்துரைத்தார்கள்.  இறுதியாக குழந்தை திருமண தடுப்பு யுக்திகள் மற்றும் தொடர் செயல்பாடுகள் குறித்து விளக்கி, மாணவர்களை சமூக மாற்றத்திற்கான தூதர்களாக உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள். நிகழ்ச்சியில் வந்து கொண்ட அனைவரும் “குழந்தை திருமணத்தை எதிர்த்து நிற்போம்” என்ற உறுதிமொழியை  இணைந்து ஏற்றனர். 

Dec 23, 2025

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருப்பாவை முற்றோதல் விழா.

முப்பதும் தப்பாமே என்ற திருப்பாவை முற்றோதல் விழாவில் ,ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் திரளான பெண்கள் பங்கேற்று ஆண்டாளுக்கு பல்வேறுமங்கல பொருட்கள் கொண்ட சீர்வரிசை தட்டினை பெண்கள் ஏந்தி நான்கு ரதவீதிகளில், திருப்பாவை பாடல்கள் பாடி வலம் வந்து ஆண்டாள் சன்னதியில் சமர்ப்பித்து சுவாமி தரிசனம் செய்தனர். ஆண்டாள் வேடம் அணிந்த பரதநாட்டிய குழுவினரின் நாட்டியம், திருப்பாவை பாடல்கள் முற்றோதலும்ஆண்டாள் ஆடிப்பூர பந்தலில், நடந்தது. இதில்குலசேகரமடம் வீரவநல்லூர் ராமபிர மேய ராமானுஜ ஜீயர் உட்பட பல்வேறு மடங்களின் ஜியர்கள், சாதுக்கள் பங்கேற்றனர்.. 

Dec 23, 2025

மார்கழி மாதம் துவங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் பனங்கிழங்கு சீசன்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவார நகரில்திருவண்ணாமலை, செண்பகத்தோப்பு, மம்சாபுரம் தோப்புகளில் ஆண்டு தோறும் பனங்கிழங்குகள் விளைச்சல் .பனை விவசாயிகள் மண்ணில் இருந்து தோண்டி எடுத்து சுத்தம் செய்து சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை  செய்வார்கள். மார்கழி மாதம் துவங்கும் பனங்கிழங்கு விற்பனை மாசி, பங்குனி மாதம் வரை நடக்கும். ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள பல்வேறு பஜார் வீதிகளில் வியாபாரிகள் 25 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 100 முதல் 200 வரை விற்கின்றனர்.மனிதர்களின் உடல் நலனுக்கு மிகவும் உகந்தது என்பதால் , வேலைக்குசென்று திரும்பும் பெண்கள் ஆர்வத்துடன் பனங்கிழங்குகளை வாங்கி செல்கின்றனர் 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 20 21

AD's



More News