25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >>


சமீபத்திய நிகழ்வுகள்

May 01, 2025

புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை பூக் குழி திருவிழா கொடியேற்றம்.

சித்திரை பூக் குழி திருவிழா, ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் கொடியேற்றத்துடன்  MAY 1 ல் துவங்கியது.அம்மனுக்கு அபிஷேகங்கள் நடந்த பின் கொடிமரத் திற்கு பால் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு நறு பலவேறு மண பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின் பலி பீடத்திற்கு மஞ்சள் காப்பு கட்டப்பட்டது. மகாதீபாராதனைக்கு பின் பிரசாதம்வழங்கப்பட்டது.  விழாஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் குழு ஜெய்குமார் ராஜா, கார்த்திக் ராஜா, உதயகுமார் ராஜா தலை மையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.11 நாட்கள் நடைபெறும் விழா காலங்களில் தினமும் அம்மன் பூத வாக னம்,, கண்ணாடி  தண்டியல், பூ, தட்டு உள்ளிட்ட சப்பரத்தில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு காட் சியளிப்பார். சிறப்பு நிகழ்வான பூக்குழி திருவிழா மே 10ல் நடைபெறும். 

Apr 28, 2025

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம்

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிரமப்படுகின்றனர். சத்திரப்பட்டி, அய்யனாபுரம், கீழ ராஜகுலராமன், கோபாலபுரம், சிவலிங்காபுரம், நரிக்குளம், கிழவி குளம், தளவாய்புரம், முகவூர், சேத்தூர், தேவதானம், சொக்கநாதன் புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் சுட்டெரித்தது.இதனால் தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வந்தனர். கடைவீதிகள், முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. வெயிலின் தாக்கத்தால் முதியவர்கள். கர்ப்பிணிகள், குழந்தைகள் பெரி தும் அவதிப்பட்டனர். ஒரு சில பகுதிகளில் அனல் காற்று வீசியது. வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் கம்பங்கூழ், இளநீர், நுங்கு, பதநீர், கரும்புச்சாறு மற்றும் குளிர்பான கடைகளை நாடி சென்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பயணிகள் நிழலகம், பஸ் நிலையம், கடைவீதிகள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Apr 24, 2025

ராஜபாளையம் ராம்கோ நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி ராமசாமி ராஜா பிறந்தநாள் விழா APRIL 24 கொண்டாடப்பட்டது.

ராஜபாளையம் ராம்கோ நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி ராமசாமி ராஜா பிறந்தநாள் விழா APRIL 24 ,காலை 6:00 மணிக்கு அவரது நினைவிடத்தில் புஷ்பாஞ்சலி, கீர்த்தனாஞ்சலி நடந்தது. ராம்கோ சேர்மன் பி.ஆர் வெங்கட்ராமராஜாதுவக்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து சொக்கர் கோயிலில் நிறுவனரின் திரு உருவ படத்திற்கும் நினைவு ஜோதிக்கும் பூஜைகள் நடத்தப்பட்டது.ஆர். ஆர் நகர் ராம்கோ சிமெண்ட் நிறுவ னத்திற்கு தொழிலாளர்கள் ,சொக்கர் கோயிலில்  தொடங்கிய ஜோதி ஓட்டம் தென்காசி மெயின் ரோடு வழியே ராம மந்திரம் வந்தடைந்து .ராம்கோ சமூக சேவை கழகம் சார்பில் ரத்ததான முகாம், அன்னதானம் ,நேற்று மாலை ராஜபாளையம் திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபத்தில் சந்தீப் நாரா யணனின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை ராம்கோ குழுமத்தினர் செய்திருந்தனர். 

Apr 18, 2025

ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறப்பு திட்ட முகாம் நிறைவு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறப்பு திட்டத்தின் கீழ் பிளஸ் ஒன் மாணவர்களுக்கான பத்து நாள் உண்டு ,உறைவிட பயிற்சி முகாம் ,ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் மாவட்டத்தின் பல் வேறு பள்ளிகளில் இருந்து 44 மாணவர்கள் கலந்து கொண்டனர். இயற்கை பற்றிய அறிவு, பட்டாம்பூச்சிகளின் வாழ்க்கை முறை, பறவைகளின் வாழ்க்கை நிலைத்தன்மை, கழிவு மேலாண்மை, புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சியும் நேரடியாக சென்றும் விளக்க பயிற்சி நடந்தது.ராம்கோ சுற்றுச்சூழல் சங்கம்,  மாவட்ட நிர்வாகம், ரோர் அசோசியேஷன், பசுமை அறக்கட்டளை, ராஜூக்கள் கல்லுாரி இயற்கை மன்றம், கார்பன் நடுநிலை சங்கங்கள் உள்ளிட்டவை பங்கேற்றன. கல்லூரி முதல்வர் கணேசன், துணை முதல்வர் ராஜ கருணாகரன் நிர்வாக பொது மேலாளர் செல்வராஜ் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Apr 13, 2025

ராஜபாளையம் கோயில்வழிபாடு, திருக்கல்யாண நிகழ்ச்சி.

ராஜபாளையம் சஞ்சீவிமலை முருகன், அம்பல புலி பஜார் சுப்பிரமணியர் கோயில், மழை முந்தல் விநாயகர் கோயில், சொக்கர் கோவில்  சேத்தூர் திருக்கண்ணீஸ்வரர் கோயில்,  தேவதானம் நச்சாடை தவிர்த்து அருளிய நாதர் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வழிபாடு  நடந்தது. மாயூரநாத சுவாமி கோயிலில் வள்ளி, முருகன், தெய்வானை சுவா மிகளுக்கு மாலை 6:30 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி தொடங்கியது. மூலவருக்கு அபிஷே கங்களுடன் யாக பூஜை நடந்தது.மணமகன், மணமகள் அழைப்புக்கு பின் அம்மன் சுவாமிக்கு மாலை மாற்றப்பட்டு கன்னிகாதானம் செய்யப்பட்டது. வேத விற்பன்னர்கள் மந்திரம்  வாசிக்க , திருக்கல்யாணம் நடந்தது.மகா தீபாராதனை ,அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Apr 03, 2025

ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண திருவிழா

ராஜபாளையம் கோதண்டராமர் கோவிலில் திருக்கல்யாணம்.பங்குனி பிரமோற்சவ விழாவினை முன்னிட்டு  ராஜபாளையம் கோதண்டராமர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. அப்போது கோதண்டராமர், அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண திருவிழா பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்  கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திரத்தன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக் கல்யாண திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு திருக்கல்யாண திருவிழா நேற்று காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டாள், ரெங்க மன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை திருக்கல்யாணம் நடைபெற்றது. அனைத்து பக்தர்களுக்கும் திருக்கல்யாண விருந்து வழங்கப்படுகிறது. 15-ந் தேதியன்று புஷ்பயாக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்

Apr 01, 2025

ஸ்ரீ ரமண வித்யாலயா பள்ளியில்  இலக்கிய மன்றம் நிறைவு விழா

ராஜபாளையம் ஸ்ரீ ரமண வித்யாலயா பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா நடந்தது.டாக்டர் கு. கணேசன்பள்ளி ஆலோசகர் தலைமையில். மாணவி சிவஸ்ரீ வரவேற்றார். புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து, மாணவி ஹரி விசாலினி பேசினார் "சிறகை விரிப்போம்" என்ற தலைப்பில் சாகித்திய அகாடமி விருதாளர் ஆயிஷா ஆர். நடராஜன்  சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். கலை நிகழ்ச்சிகள்  நடைபெற்றன. மாணவிகள் கவிசேனா, ஹன்சிகா தொகுத்து வழங்க,  ஏற்பாடுகளை முதல்வர் சுதா தலைமையில் விளையாட்டுத்துறை இயக்குனர் செந்தாமரைக் கண்ணன் நிர்வாகி ராமராஜ், ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்தனர். மாணவர் விஸ்வ ரோஹித் நன்றி கூறினார். 

Mar 30, 2025

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண் டாள் கோயிலில் யுகாதி விழா .

நேற்று காலை வெள்ளிக்குறடு மண்டபத்தில் ஆண்டாள் கோயிலில் யுகாதி விழா ஸ்ரீவில்லிபுத்துார் ஆண் டாள் கோயிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டுயுகாதிதிருவிழாநடந்தது.பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் மற்றும் 12 ஆழ்வார்கள், எழுந்தருளினர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட் ராமராஜா தலைமையில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

Mar 28, 2025

கோதண்டராமர் கோவிலில் பிரமோற்சவ விழா.

 ராஜபாளையம் புதுப்பாளையம் சிங்கராஜா கோட்டை பகுதியில் அமைந்துள்ள கோதண்டராமர் கோவிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான  பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி தினமும் சிம்மம், கருட, சேஷ, குதிரை உள்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. வருகிற 3-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சிங்கராஜா  கோட்டை தலைவர் ராம் சிங், கோவில் தர்மகர்த்தா  சீனிவாசராஜா மற்றும் நிர்வாகிகள் செய்தனர். 

Mar 24, 2025

ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி

 விருதுநகர் மாவட்ட டேக்வாண்டோ சங்கம் சார்பில் ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற டேக்வாண்டோ போட்டி நடந்தது.சர்வதேச நடுவர் ராமலிங்க பாரதி பங்கேற்றார் . விருதுநகர் அருப்புக்கோட்டை சிவகாசி உள்ளிட்ட மாவட்டத்தில் 19 பள்ளி கல்லுாரிகளில் இருந்து 230 மாணவர்கள் கலந்து கொண்டு, 6, 9, 12, 17 அதற்கும் மேற்பட்டோர் என ஐந்து பிரிவுகளில் நடந்த போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும்,முதல் 4 இடங்களை பெறுபவர்கள், விருதுநகர் மாவட்டம் சார்பில் கோவையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பர். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ராஜபாளையம் யுனைடெட் மெயின் கிளப், இரண்டாம் இடத்தை ரமணா சி.பி. எஸ்.இ., பள்ளி, ஏ.கே.டி தர்மராஜா சக்கனி அம்மாள் பள்ளி மூன்றாம் இடம் பெற்றது. ஏற்பாடுகளை மாவட்ட டேக்வாண்டோ செயலாளர் பாஸ்கர் செய்திருந்தார். 

1 2 ... 7 8 9 10 11 12 13 ... 19 20

AD's



More News