25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


சமீபத்திய நிகழ்வுகள்

Nov 05, 2025

ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்காக ஆதுரி கண்மாயில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் சப்ளையாகிறது. கடந்த மாதத்திற்கு முன் பெய்த கன மழைக்கு பின் சப்ளை ஆகும் குடிநீர் கலங்கலாக வருவதால் நோய் வந்து விடுமோ என்ற ஒரு அச்சத்தில் அந்த தண்ணீரை பயன்படுத்துவதில்லை.இங்குள்ள மேல் நிலை நீர் தேக்க தொட்டி குறிப்பிட்ட இடைவெளிகளில் சுத்தப்படுத்துவதில்லை. சுத்தம் செய்தநாள் குறித்து தகவல் பலகையில்எழுதுவதில்லை. குடி நீர் தொடர்ந்து கலங்கலாக வருவதால் குடங்களை தூக்கி மற்றபகுதிகளுக்கு அலைந்து வருகின்றனர். 

Nov 04, 2025

ந்திய பருத்தி கழகம் (சிசிஐ) கோயம்புத்துார் கிளை சார்பில் 2025-26 நிதியாண்டில் ஒன்பது இடங்களில் பருத்தி கொள்முதல் மையம் அமைக்கப்படும்.

ராஜபாளையம்  ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் இந்திய பருத்தி கழகம் விவசாயிகளிடம் நேரடியாக பருத்தியை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக பருத்தி விவசாயிகள் கிஷான் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்திய பருத்தி கழகம் (சிசிஐ) கோயம்புத்துார் கிளை சார்பில் 2025-26 நிதியாண்டில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், அருப்புக்கோட்டை உட்பட தமிழகத்தில் ஒன்பது இடங்களில் பருத்தி கொள்முதல் மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் பருத்தி கொள்முதல் செய்யப்பட உள்ளதை அடுத்து விவசாயிகள் ஆதார் எண், அடங்கல் மூலம் கிஷான் செயலியில் பதிவு செய்ய வேண்டும் என வேளாண் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் விவரங்களுக்கு அந்தந்த பகுதி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளனர். 

Oct 29, 2025

ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு முருகன் சுவாமிக்கு திருக்கல்யாணம். 

விருதுநகர் மாவட்டத்தில் முருகன் கோயில் களில் கந்த சஷ்டி சூரசம் ஹாரத்தை அடுத்துநேற்று திருக்கல்யாணம் நடந்தது. ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயி லில் நேற்று மாலை 6:00 மணிக்கு வள்ளி, தெய்வானை, முருகன் சுவா மிக்கு அபிஷேகம் வழிபாடு நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு, வேத மந்திரங்கள் முழங்க திருமணம் நடந்தது. திரளானோர்கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. 

Oct 27, 2025

ராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் தொடர்மழையால்  ஊருணிகள் நிரம்பின .

ராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் அனைத்து கண்மாய்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. சில கண்மாய்கள் நிரம்பி மதகு வழியாக மறுகால் பாய்ந்து மற்ற கண்மாய்களுக்கு செல்கின்றன. ராஜபாளையம் தாலுகாவில் உள்ள அலப்பச்சேரி கண்மாய், புதுக்குளம் கண்மாய், புளியங்குளம் கண்மாய், கிருஷ்ணபேரி கண்மாய், செட்டிகுளம், கடம்பன்குளம், கொத்தங்குளம், செங் குளம் கண்மாய், மேல இழுப்பன் குளம் கண்மாய், வாண்டையார் குளம் கண்மாய், - பிரண்டைகுளம், ஆதியூர் கண்மாய், சீவலப்பேரி கண்மாய், சத்திரப்பட்டி வாகைகுளம் கண்மாய், தேவதானம் நகரிகுளம் கண்மாய், பெரியகுளம், சேத்தூர் பிராவடி  கண்மாய், முகவூர் கண்மாய், வடகரை கண்மாய்கள் நிரம்பின. இதனால்சுற்றுப்பகுதியில் உள்ள 15 ஆயிரம் ஏக்கர்நிலம் பாசன வசதி பெறும்.தற்போதுபெய்துள்ள மழையால் நெற்பயிர்கள், வாழை, கரும்பு, தென்னை, மா,பலா மரங்கள் அதிகமாக சாகுபடி செய்ய விவசாயிகள் உழவு பணிகளை செய்து வருகின்றனர். மேலும் ராஜபாளையம் தாலுகாவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட ஊருணிகளும் நிரம்பின.இந்த பகுதியில் உள்ள கிணறுகளில் அதிக அளவில் நீர் உள்ளது. விவசாயிகள் இதனால் மகிழ்ச்சியில் உள்ளனர். 

Oct 18, 2025

குளிர்ந்தது ராஜபாளையம் .6வது மைல் நீர் தேக்கத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து வருகிறது .

ராஜபாளையம் மலை அடிவார நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் மாவரசி அம்மன், முள்ளிக்கடவு, அய்யனார் கோயில் போன்ற பகுதிகளில் நீர்வரத்துஅதிகரித்துள்ளது.குடிநீர் தேவை கருதி , அய்யனார் கோயில் ஆற்றில் பெருகிய நீரை ,ராஜபாளையம் நகராட்சி குடிநீர் ஆதாரமாக உள்ள 6வது மைல் நீர் தேக்கத்திற்கு தடுப்பணை மூலம் திருப்பி விடப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக சில நேரம் தடுப்பணையைத் தாண்டி ஆற்றில் நீர் வழிந்து செல்கிறது. மழை தொடர்ந்தால் நகராட்சியின் 42 வார்டுகளுக்கும் குடிநீர் சப்ளைக்கு பிரச்னை இருக்காது, என நகராட்சி குடிநீர் சப்ளை அதிகாரிகள் மகிழ்ச்சி.

Oct 07, 2025

"குறிஞ்சிச் செல்வர்" டாக்டர்.கொ.மா.கோதண்டம்அவர்களுக்கு இதயபூர்வமான அஞ்சலி .

நம் மொழி மற்றும் கலாச்சார பெருமையை இளம்தலைமுறையினருக்கு தன் இலக்கிய படைப்புகளால் கொண்டு சென்று “சாகித்ய அகாடமி", "கலைமாமணி" என உயரிய விருதுகளை பெற்று இராஜபாளையத்திற்கு பெருமை சேர்த்த அன்னாரின் மறைவிற்கு ராஜபாளையம் டைம்ஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக் கொள்கிறோம்.

Sep 29, 2025

நான்கு வழிச் சாலை ரயில்வே ஸ்டீல் ஆர்க் பிரிட்ஜ் பணிகள் வேகம் .

நான்கு வழிச்சாலையின் ராஜபாளையம் வழியே செல்லும் ரயில்வே மேம்பால பணிகளின் ஸ்டீல் ஆர்க் பணிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.முதல் கட்டமாக ராஜபாளையம் வரைதிருமங்கலம் கொல்லம் நான்கு வழிச்சாலை பணிகள் முடிந்துள்ளது. இதில் ஸ்ரீவில்லிபுத்துார் சித்தாலம்புத்துார், ராஜபாளையம் முதுகுடி ரயில்வே லைனை கடக்கும் மேம்பால பணிகள் தாமதமாக தொடங்கியதால் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டது.ரயில்வே மேம்பாலத்திற்கான கான்கிரீட் பணிகள் ராஜபாளையம் புது ஸ்டாண்ட் அடுத்துள்ள முதுகுடியில் முடிந்துள்ளது. தற்போது ரயில்வே லைன் இணைப்பிற்கு ஸ்டீல் ஆர்க் வெல்டு பணிகள் வேகமாக  ஓரிரு மாதங்களில் பணிகள் முடிவடையும். கிருஷ்ணன் கோவிலில் இருந்து ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் ,அடுத்து முதுகுடி வரையிலான நான்கு வழிச்சாலையில் தடையின்றி பயணிக்க முடியும். இதன் மூலம் இரண்டு  நகர்ப்பகுதிகளிலும் ஏற்படும் நெரிசல் பெருமளவு குறையும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. 

Sep 24, 2025

இரு மாதங்களாக கடும் வெயில் பாதிப்பினால் வற்றும் சாஸ்தா கோயில் நீர்த்தேக்கம்:

இரு மாதங்களாக கடும் வெயில் பாதிப்பினால் சுற்றியுள்ள நகரக்குளம், பெரியகுளம், வாண்டையார்குளம் உள்ளிட்ட கண்மாய்கள்நீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. 33 அடி உயரம் உள்ள சாஸ்தா கோயில் நீர் தேக்கம் தற்போது பாதி அளவை எட்டி உள்ளது. இந்நிலையில் இதை நம்பியுள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய பகுதிகளில் நெல் நடவு பணிக்காக வயல்களில் நாற்று தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ராஜபாளையம் அடுத்த தேவதானம், சேத்துார் பகுதி விவசாயிகளுக்கு சாஸ்தா கோயில் நீர் தேக்கம் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.கண்மாய்களில் நீர் இருப்பு இல்லாத நிலையில் கிணற்று பாசன விவசாயிகளும் அருகிலுள்ள விவசாயிகள் நீரை வாடகைக்கு வாங்கியும் நெல் நாற்று உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கோடை வெயில் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் பருவ மழையைஎதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

Sep 15, 2025

ஆக்கிரமிப்புகளை அகற்ற ,புது பஸ் ஸ்டாண்ட் ரோடு விரிவாக்கத்திற்கு நெடுஞ்சாலை துறை சார்பில் நோட்டீஸ்.

ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் சங்கரன்கோவில் மாநில நெடுஞ்சாலையில் சங்கரன்கோவில் முக்கில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் வரை வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, தேவையற்ற விபத்தும் உயிர் பலிகளும் ஏற்பட்டு வந்தது. மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலை திட்டம் ரயில்வே பணிகள் தவிர மீதம் முடிவடையும் நிலையை எட்டி உள்ளது. ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் சங்கரன்கோவில் மாநில நெடுஞ்சாலையில் சங்கரன்கோவில் முக்கில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் வரை வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, தேவையற்ற விபத்தும் உயிர் பலிகளும் ஏற்பட்டு வந்தது. அவ்வழியே வரும் வாகனங்கள் ஊருக்குள் நுழைய இந்த ரோட்டையே பயன் படுத்த வேண்டும். இதை  கருத்தில் கொண்டு சங்கரன்கோவில் முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரையி லான 1.4 கிலோ மீட்டர் துார ரோட்டை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராகவிரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஓடை மீது அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள பாலங்களை அகற்ற வருவாய் துறை சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப் பட்டது.இந் நிலையில் சங்கரன் கோவில் ரோட்டில் நீர்வழி ஓடையில் உள்ள பொதுத்துறை வங்கி, திருமண மண்டபம், வணிக கட்டடங்கள் உள்ளிட்ட 45 அனுமதியற்ற பாலங்களை 15 நாட்களுக்குள் அகற்ற ,தவறும்பட்சத்தில் அரசு சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அதற்குரிய தொகை ஆக்கிரமிப்பாளர்களிடம், வசூல் செய்யப்படும் எனநெடுஞ்சாலைதுறைசார்பில் நோட்டீஸ்வழங்கப்பட்டுள்ளது.

Sep 12, 2025

ராஜபாளையத்தில் தெரு நாய்களின் தொல்லை.

ராஜபாளையத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது.நேற்று முன்தினம் மாலை முதல் ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, சங்கரன்கோவில் முக்கு, மாரியம்மன் கோயில்பஸ்ஸ்டாப்உள்ளிட்டபகுதிகளில்முதியோர், சிறுவர்கள், பெண்கள் என 40க்கும் மேற்பட்டோர் நாய் கடிக்கு உள்ளாகினர். 22 JAN மட்டும் 39 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்துள்ளனர்.கடிபட்ட 32 நபர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசியும், பாதிப்பு அதிகம் உள்ள ஏழு பேருக்கு இமினோ குளோபிலின் மருந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.ஒரே நாளில் பாதிப்பு அதிகமானவுடன் மாவட்ட மருத்துவ துறைக்கு தகவல் அளித்து சுகாதார துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 19 20

AD's



More News